Saturday, September 27, 2008

வாழ்த்துகளுக்கு நன்றி!

ஆதம் நண்பர் தோழர் ரமேஷ் அவரது ப்ளோகில் எழுதியதை பார்த்து (சில்மிசமாக தோன்றினாலும், இப்படியும் ஒரு பெண் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறாள் என தோன்றும்) யாரும் என்னை மோசம் என்று நினைத்து விடாதீர்கள். மறந்து விடாதீர்கள், நான் கல்யாணமானவள். உங்களுக்கு அமெரிக்காவின் கல்யாண வாழ்க்கை முறை தெரியாது என்று நினைக்கிறேன். சந்தேகம் என்று ஒன்று வந்துவிட்டால், காலி.

என் நண்பரிடம் வானதி, சாந்தி மற்றும் கௌரியின் கதைக்களை சொல்லிவிட்டேன். அதை அவர் நேரம் கிடைக்கும் பொது எழுதுவார். வயது வந்தவர்களுக்கு மட்டும். (குழந்தைகளுக்கு கிடையாது)

என் எழுத்து ஒரு பிசினஸ் பெண் எழுதுவது போல தான் இருக்கும். மசாலா எதிர்பார்க்க வேண்டாம். ஏன் என் பெயரில் ராஜ் நடராஜன் இன்னும்? ஒரு தமிழ் பிடிப்பு தாங்க. அப்பா பெயர் ஷோர்டா (சின்னதா) . அவரும் இதை படிக்க வாய்ப்பு உண்டு. வி ஷேர் எ லவ்லி ரிலேசன்.

இன்னும் ஜெட் லாக் மாறவில்லை. தூக்கம் வரவில்லை. மூன்று மணிக்கு பசி. சீரியல்ஸ் சாப்பிட்டு டிவியை ம்யுடில் வைத்து பார்த்தேன். ஒரு வாரம் ஆகும் செட்டில் ஆக.

வலைத்தளம் படித்து பார்த்தேன். கதை. கவிதை. அனுபவம். வருத்தம். கொடுமை.

எனக்கு வந்த பின்னூட்டங்கள் (கமண்ட்ஸ்) பல தர பட்டவை. ஒரு ஓபன் டியரி எழுதும் போது, இது எல்லாம் சகஜம் தான்.
இதுவரை பப்ளிஷ் செய்யும் வகையில் எழுதியவர் இருவர் தான் !
  1. என்னை கல்யாணம் செய்து கொள்ளுங்கள். (போட்டோவோடு பலஆண்கள்) இது என்ன கத்தரிக்காய் வியாபாரமா. வாழ்க்கைங்க.அமெரிக்கா மோகம் தீராது போல. மாடி வீட்டு ஏழை கேள்விப்பட்டு இருப்பீங்களா? நிச்சயம் என் அமெரிக்கா வாழ்க்கை பற்றி எழுதுகிறேன். வெளியில் இருந்து பார்ப்பது தான் வாழ்க்கை ரொம்ப பாலிஷ்.
  2. மன நல நோயாளிகள் போல பலர் திட்டி. :-) தேங்க்ஸ்.(பிரவீன்குமார், உன்னை விட நான் பதினெட்டு வயது மூத்தவள். அம்மா மாதிரி. அப்புறம் கல்யாணம் ஆனவள். ஒக்கே?)
  3. என் புகைப்படம் போடச்சொல்லி. ஸொர்ரி. பார்க்கலாம். (ஒருவர் வெப்காமில் பார்க்கவேண்டுமாம்)
  4. என் வீட்டை பற்றி விரிவாக. எழுதுகிறேன். இப்போதைக்கு - இரண்டு பெட்ரூம், ஒரு ஸ்டடி. பெரிய லிவிங் ரூம். கிட்சன். ரெண்டு பால்கனி. மதிப்பு - மூன்று மில்லியன் டாலர்கள். ருபாய் பதிமூன்று கோடி. இது விலைக்கு இரண்டு வருடம் முன்னால் ஐந்து மில்லியனுக்கு கேட்டார்கள். மயிண்டனன்ஸ் மட்டும் மாதம் ஆயிரம் டாலர்கள். பாங்கிற்கு மாதம் பத்தாயிரம் கட்டுகிறோம். வெள்ளி அல்லது சனி இரவு ஒரு பார்ட்டி இருக்கும்!
  5. என் வாழ்க்கை முறை பற்றி. எப்படீங்க இருக்கு அமெரிக்கா? நான் அங்கே வந்தால் என்னவெல்லாம் கத்துக்கணும், கேட்பது பெண்களும், ஆண்களும். எழுதுகிறேன்.
  6. நான் நியூ யார்க்கில்/நியூ ஜெர்சியில் இருக்கிறேன். சந்திக்க விருப்பம். முடியுமா? ஸாரி.
  7. நான் நாளை நியூ யார்க் வருகிறேன் வியாபார விசயமாக. ஒரு ஒன் டே ஸ்டே உங்க வீட்டில் இருக்க முடியுமா? ஹல்லோ... வீட்டு ஓனர்ஸ் நாங்களே, வீட்டுக்குள்ளே போறதுக்கு ஏகப்பட்ட செக்கூரிட்டி கெடுபிடி. எங்க அப்பா அம்மா தங்கை குடும்பம் சொந்தம் வந்தாலே, இங்கே தங்குவதற்கு ஏக கெடுபிடி. நான் லாட்ஜு நடத்தவில்லை. ஸாரி.
  8. போன் நம்பர் குடுக்க முடியுமா. போர் இலெவனில் தேடினேன் கிடைக்கலே. எழுதுங்கள். ஸாரி. இது எங்கோ போய் முடியும். ஈமெயில் கூட இப்போ நான் குடுக்கமாடேன்.
  9. உதவிகள் கேட்டு. இது நைஜீரியா ஸ்காமை விட கொடுமை. பணம் இருப்பது தெரிந்தால்... ஏற்கனவே சம்பாரிப்பதில் கால் வாசி ஏழைகளுக்கு இங்கே கொடுக்கிறோம். இந்தியாவிலும் கொடுக்கிறேன். ஆனால் மாத மாதம் கிடையாது. தொழில் துவங்க. சுய முன்னேற்ற திட்டம் போன்றவற்றிற்கு. ( வி டீச் டு பிஷ் தன் பீட்)
  10. எனது கணவர் ஜோ பற்றி நான் ஒன்றும் எழுதபோவதில்லை...
மிண்டும் சந்திக்கிறேன்.

Friday, September 26, 2008

வீடு திரும்பி வந்தது மகிழ்ச்சி!

வீடு திரும்பி வந்தது மகிழ்ச்சி! ரொம்ப ரொம்ப ....


உயரமான கட்டிடத்தில், அறுபத்தி ஒன்பதாவது மாடி. கார்னரில் இருப்பதால் சென்ட்ரல் பார்க் பார்க்க முடியும், ஹுட்சொன் ஆற்றையும் பார்க்கலாம். வீட்டுக்குள் போட்டோஸ் வெளியிட யோசிக்கிறேன்.


திங்கள்
அன்று தெரியும் எனது நிலைமை. ஜோ டோன்ட் போதர் என்கிறார்!

ஜெட் ஏர்வேய்ஸ் பிசினஸ் கிளாஸ் பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் பார்ஸ்ட் கிளாஸ் விட அருமை. எகாநோமி கிளாஸ் விட இரு மடங்கு பணம், ஆனால் நிம்மதி பல மடங்கு.


ப்ருசெல்ஸ் எல்லாம் சீஸ் மாயம். இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை.

மீண்டும்
எழுதுகிறேன்....

Thursday, September 25, 2008

அமெரிக்கா திரும்புகிறேன் இன்று

அமெரிக்கா திரும்புகிறேன் இன்று... இரண்டு வாரத்தில் ஒரு கல்யாணம், கச்சேரி.

ரமேஷ் மற்றும் தி. குடும்பம் சூப்பர். குழந்தைகள் மஞ்சுவும், ராஜும் அருமை.

I மிஸ் ஜோ.

எனக்கு பிடித்த வரிகள்

இன்று இருப்போர் நாளை வரமாட்டார்
நாளை வருவோர் இன்று இருக்கமாட்டார்!

- யாரோ

Welcome!

Welcome to Divya Raj Natarajan's weblog.

My married name is Divya Joe.

I work as a Director with one the major Investment Banks in the world!

I will try to blog in English and my native Tamil here...

Keep visiting, to see my thoughts...