Saturday, November 15, 2008

சென்னை மற்றும் கோவை

என் நெடிய பயணம் மும்பையில் இருந்து... சென்னை வழியாக கோவைக்கு.

நேற்று இரவு பன்னிரெண்டு மணிக்கு ஜோ எழுந்து கிளம்பினார். நானும் ஏர்போர்ட் வரை சென்று, வழி அனுப்பிவிட்டு வந்தேன். அரை தூக்கம், சரியாக தூங்கவில்லை, பிரிவு என்ற நிலை... இரண்டு மணிக்கு தூங்கியிருப்பேன், ஒரு முறை ப்ளைட் கிளம்பும் முன் ஜோ அழைத்தார்.... காலை ஐந்து மணிக்கு அலாரம். எழுந்து குளித்து ரெடி ஆகி, அவசரமாக செக் அவுட் செய்து... ஏர்போர்ட் வந்து சேரும் போது ஆறு மணி.

ஒரு லக்கேஜ் மட்டும், சீக்கிரம் செக் இன் செய்துவிட்டு... ப்ளைட் 6.45 am சரியாக கிளம்பியது. இட்லி வடை கிடைத்தது.... ஒரு மணி நேரம் தூக்கம். எட்டரை மணிக்கு சென்னை லேண்டிங். செல் ஆண் செய்தவுடன், ஜோவின் கால் துபாயிலிருந்து.... இரண்டரை மணி நேரத்திற்கு அப்புறம் அவருக்கு நியூ யார்க் ப்ளைட். ஒன்பது மணிக்கு வெளியே வந்தேன். பத்து மணிக்கு எனக்கு சத்யாவோடு இன்டர்வியு மீட்டிங்...

நண்பர் ரவி விசுவநாதன், மற்றும் அவர் மனைவி சித்ரா வந்திருந்தார்கள். ராஜா அண்ணாமலைபுரத்தில் வீடு. இப்போது கத்திபாரா பளை ஓவர் இருப்பதால், ட்ராபிக் பரவாயில்லை. சத்யா ஆபிஸ் அங்கிருந்து ஐந்து நிமிட தூரம்... அவருக்கு போன் கால் செய்துவிட்டு கிளம்பினேன்.

ரவி அவர்கள் வீட்டில் லக்கேஜ் வைத்து விட்டு, ஒரு பத்து நிமிடம் லேட். சத்யாவும் லேட் தான்.. ஒரு மணி நேரம் பேசினோம்.... பெங்களூர் ஆபிஸ் நிர்வாகம், எம்.ஜி ரோட்டில் இடம் பார்த்திருக்கிறார். பாதி நேரம் யு.எஸ். மார்கெடிங் வேலை. ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒரு முறை இந்தியாவில் இருக்க வேண்டும். சில வாரம்... யோசிக்க வேண்டும். இந்தியாவில் ஒரு வீடு கிடைக்கும் அல்லது ஐம்பதாயிரம் வரை வாடகை. சம்பளம் பற்றி கவலை இல்லை.

பெங்களூரில் எங்கள் வீடு ஒன்று செயின்ட் மார்க்ஸ் ரோட்டில் உள்ளது. இப்போது வாடகைக்கு இருக்கிறார் ஒரு யுரோபியன். ஒரு இரண்டு பெட்ரூம் விலைக்கு வருகிறது நல்ல விலைக்கு அருகில். 1450 ஸ்குயர் பீட் ஒரு கோடி ரூபாய்கள் என்கிறார்கள். அங்கு வாடகை ஐம்பதாயிரம் என்று போகிறது.

இந்த வேலை எடுத்தால், அந்த வீடு பார்க்கலாம்... வாங்கலாம்... அப்பா அம்மாவும், பெங்களூரில் தங்குவது பிடிக்கும் என்றார்கள்.

***

ரவி வந்து பிக்கப் செய்து கொண்டார். அவர்கள் குழந்தைகள், பெரிய பிள்ளைகள். சரவணா பவன் அவர்களுக்கும் பிடித்த இடம். பீட்டர்ஸ் ரோடு நல்ல இடம். ஒரு மணி அளவில் அங்கு சென்றோம், நல்ல சாப்பாடு, வெஜிடேரியன் பப்பே. மூன்று மணிக்கு அமதீஷ்ட் என்ற இடம், இரண்டு நிமிட நடை தூரத்தில் இருக்கிறது. பதிவுகள் மூலம் சந்தித்த இரு நண்பிகள், வினிதா, சாந்தி ஜெயகுமார் மற்றும் ரமேஷ் மற்றும் குடும்பத்தினர்...

நிறைய பேசினோம். ஒரு மணி நேரம் போனது தெரியவில்லை. சந்தோசமாக கிளம்பினோம். என்ன ப்ளோகில் போட்டோ கூடாது என்ற நிபந்தனை, இருந்தாலும் சில போட்டோஸ் எடுக்கப்பட்டன. ப்ளோகில் போடமாட்டார்கள்!

சில பணக்கார பயன்கள் பெண்களோடு லூட்டி அடித்துக்கொண்டு இருந்தார்கள். வெளிநாட்டு கல்சர். ஓரத்தில் அமைதியாக வெளிநாட்டு ஆள், புத்தகம் படித்துக்கொண்டு இருந்தார்!

சென்னை ட்ராபிக் நம்ப முடியாது... அதனால், கொஞ்சம் சீக்கிரம் ஏர்போர்ட் செல்ல வேண்டும். ரவி வீட்டிற்க்கு சென்று லக்கேஜ் எடுத்துக்கொண்டு ....

அந்த மீட்டிங் பற்றி வினிதா ஒரு பதிவு போட்டுவிட்டார்....

சென்னையில் பதிவர் சந்திப்பு

Very nicely written, and it churned my heart on the inequalities!

****

கோவைக்கு பாரமவுன்ட் ப்ளைட், நல்ல க்வாலிட்டி... சரியான நேரத்தில் வந்து சேர்ந்தார்கள்... சென்னையில் ஆறு பத்து டிபார்சர். கோவை வந்து சேர்ந்தது... ஏழு மணி, லக்கேஜ் எடுத்து வெளியில் வரும் போது, ஏழே கால். இருபது நிமிடத்தில் வீடு வந்து சேர்ந்தவுடன்... டைப் செய்ய ஆரம்பித்தேன்... எல்லாம் விரைவாக போகிறது... சிறு ஸ்நாக்ஸ் கொடுக்கிறார்கள்... அருமை ... லக்கேஜ் வெயிட் பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

தங்கை குடும்பம் எதோ கோவில் சென்றுள்ளார்கள், நாளை காலை வருவார்கள்.

இப்போது டின்னர் சாப்பிடும் எண்ணம் வரவில்லை. அம்மா ரசம் சாதம் கொடுப்பார்கள். திருப்பூர் நண்பி நாளை காலை, இங்கிருப்பாள். அவளோடு ஒரு டாகடர் பார்க்க வேண்டும்.

வரும் சனி காலை ரமேஷ் மற்றும் தி, அவர்கள் குழந்தைகள் மஞ்சு மற்றும் ராஜா வருகிறார்கள். இரண்டு நாட்கள் இருப்பார்கள், ஞாயிறு இரவு கிளம்புகிறார்கள்.

இன்னும் இரண்டு மணி நேரத்தில் ஜோ நியூ யார்க் சென்று சேருகிறார்...

I miss him already!

*******

நான் யாரையும் சந்திக்கும் மனநிலையில் இல்லை. சென்னையின் சந்திப்பு ஒரு வித அன் ஈசினஸ் செய்தது... சிலருக்கு மனசு கஷ்டம் ஆகிறது. ப்ளோகில் கமன்ட் போடுவது வேறு, நேரில் பார்த்து பேசுவது வேறு...

இந்த ப்லோக் எழுதுவது போன்றவை பிடிக்கவில்லை என் குடும்பத்து அங்கத்தினர்களுக்கு.... எனக்கும் சில இடைவெளி வேண்டும்.... குறிப்பாக புது நண்பர்கள். ஸாரி!

உங்களுக்கு புரிந்திருக்கும்.

நிச்சயம் சமயம் வரும் போது பார்போம்.

Friday, November 14, 2008

அமெரிக்காவிற்கு ஜோ பிரயாணம்

இன்று காலை ஒரு மீட்டிங் முடித்து விட்டு, 1௨ மணிக்கு ஹோட்டல் செக் அவுட் செய்துவிட்டு... லன்ச் செய்வதற்கு முன்னால்...இரண்டு மணிக்கு கிரேன்ட் மராத்தாவில் ... நண்பர்கள் மீட்டிங். ஐ.ஐ.எம் மில் படித்தவர்கள். அப்படியே அங்கு ரெஸ்ட், ரி-பாக்கிங். இந்த தடவை ஜோ கிப்த்ஸ் நிறைய எடுத்து செல்கிறார். எலெக்சன் சமயம் உதவியவர்கள் மற்றும் தாங்க்ஸ்கிவிங் வருது.

என் கையில் ஒரு லேப்டாப் பேக் மற்றும் செக்கின் ஒன்று. ஜோ இரண்டு பெரிய லுக்கேஜ் எடுத்து செல்வார்.

ஜோவிற்கு நாளை காலை 4.15 AM ப்ளைட். எனக்கு 6.45 AM ப்ளைட்.

அதனால் சீக்கிரம் தூங்க வேண்டும். நான்கு மணி நேரம் ரெஸ்ட் வேண்டும். சாண்ட்விட்ச். ஜூஸ். டின்னெர் (சுப்பர்) ஓவர். 12.30 AM டாக்சி வரும். 12 மணிக்கு எழுந்து, குளித்து ரெடி ஆகி ஏர்போர்ட் சென்று வர வேண்டும்.

ஜோ மூன்று மணி நேரம் முன்னால் ஏர்போர்டில் இருக்க வேண்டும், அதனால் ஒரு மணிக்கு சென்று அவரை வழி அனுப்பி விட்டு, ஹோட்டல் திரும்பி, மீண்டும் நான்கு மணி நேரம் தூங்கி, 5 மணிக்கு எழுந்து ரெடி ஆகி, சென்னைக்கு கிளம்ப வேண்டும். ஒரு மணி நேரம் முன்னால் சென்றால் தான், லுக்கேஜ் செக் இன் செய்ய முடியும். சரியான கூட்டம் மிகுந்த ஏர்போர்ட் மும்பை.

இடையில் எதாவது இருந்தால், ஜோ கூப்பிடுவார்! அல்லது துபாய் சேர்ந்தவுடன் அங்கு ஒரு எழு மணிக்கு, நான் சென்னையில் அப்போது இருப்பேன். நியூ யார்க் சென்று சேர்ந்தவுடன், கால் செய்வார்!

****

எனக்கு இப்போது இரண்டு வேலைகள்.. கையில். நாளை சத்யாவின் கம்பனி வேலை ஒக்கே செய்தால்... அவர் மட்டும், நான் சொன்ன அந்த மும்பை இந்திய சாப்ட்வேர் கம்பனி டிரக்டார் ஆக இருக்க (முழு நேர வேலை இல்லை) ஒத்துக்கொண்டால்... அது ஒக்கே தான்!

எது எடுக்கலாம்?

நன்றாக யோசிக்க வேண்டும்.

****

நாளைக்கு சென்னையில். ரமேஷும் அங்கு வருகிறார். இன்று அவர் சென்னைக்கு செல்வதாக சொல்லியிருந்தார். 3 மணி மீட்டிங் இடம் அண்ணா சாலையில்... எங்கு என்று தெரியவில்லை. இது வரை மொத்தம் நான்கு பேர். நான், வினிதா, சாந்தி ஜெய்குமார் மற்றும் ரமேஷ்.

நாளை சென்னையில் எப்போதும் போல காந்தி சிலை அருகில் இன்னொரு ப்லாகர் மீட்டிங் நடைபெருது என்று ரமேஷ் சொன்னார்!

ஆகா சரவணா பவன் சாப்பாடு நாளை மதியம்.... இன்னொரு நண்பரோடு.

நாளை இரவு கோவையிலிருந்து பதிவு போடுறேன்.

Thursday, November 13, 2008

தோஸ்தானா

நேற்று இரவு அருமையான ப்ரிவியு! தோஸ்தானா!

எல்லா ஸ்டார்களும் ஆஜர்... அதை பற்றி நம்மகென்ன கவலை...

கையில் இருந்த காமிராவில், சில ஸ்தார்ஸொடு போட்டோஸ்... சில சானல்கள் என்னையும் ஜோவையும் கேள்வி கேட்டது, நோ கமண்ட்ஸ் என்றோம்.

********

கதை இரு நண்பர்கள் பற்றியது...

ஓரின சேர்க்கையா என்று தோன்ற வைக்கும் நட்பு, சீன்ஸ் எல்லாம் வைத்து.. வீட்டு ஓனர் மகள் காதல் வயப்படும் ஒரு முக்கோண காதல் கதை. மசாலா.

அபிசேக் பச்சன் மற்றும் ஜான் ஆப்ரிஹாம் ஹீரோஸ். பிரியங்கா சோப்ரா ஹீரோயின்.
dostana2.jpg
மியாமி போடோக்ராபி அருமை... வேறு என்ன சொல்ல.

ஷில்பா செட்டி ஒரு குத்து பாட்டு ஆடுகிறார். பாபி தியோல் வந்து போகிறார்.

Too much of skin show in the movie. It was like an English movie.

எதற்கு அமெரிக்கவில் எடுக்கிறார்கள்? மயக்கம் தான் காரணம்... அங்கு போக முடியாதவர்கள், சினிமாவில் பார்த்து எஞ்சி பண்ணுவார்கள் இல்லையா?

பார்க்கலாம் ஒரு முறை. வசூல் செய்துவிடுவார்கள். பெரிய பட்ஜெட்.

இந்தியாவில் கிராமங்களில் ஓடாது. இது ஒரு லாஸ்.

டைரக்டர் தருண் மன்சுக்ராணி கரன் ஜோஹர் நிறுவனத்திற்காக சூட் செய்தார்.
"கே" வரிசை படம் அல்ல இது!

என்ன கொடுமை இது

சென்னையில் லா காலேஜ் ஸ்டுடண்ட்ஸ் அட்டகாசம்... கொடுமை.

வினிதா எழுதிய இந்த பதிவு பாருங்கள்... கொடுமைக்கார பாவிகள்

போலிஸ் பார்த்துக்கொண்டு இருந்தது, அதை விட கொடுமை.

மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கு.

தண்டிக்கப்பட வேண்டியவர்கள், தண்டிக்கப்பட்டால் நன்று.

கோவையிலும் இந்த கலாட்டா ஒரு முறை நடந்தது... எங்க வீட்டு அருகில் தான்... வாகிங் போனால் கிண்டல் செய்யும் கூட்டம்... என்னை ஒரு முறை போலிஸ் இருக்கும் போது கிண்டல் செய்தவர்களை, அடித்து துவைத்தார்கள், கோவை போலிஸ் நல்ல போலிஸ்.

*****

வேலை ரொம்ப ஜாஸ்தி. குரு நானக் ஜெயந்தி லீவு. இருந்தாலும், வேலை செய்து ஆக வேண்டிய கட்டாயம். ஜோவிற்கு வயிறு சரி இல்லை. மருந்து, தயிர் சாப்பாடு என்று போகிறது.

இன்னும் கொஞ்ச நேரத்தில் தோஸ்தானா ப்ரிவியு... அப்புறம் எழுதுகிறேன்.

Wednesday, November 12, 2008

கலங்கும் கண்கள்

வாழ்க்கை எவ்வளவு விசித்திரமானவை?

இப்போது ஒரு உதவி என்ற போஸ்ட் போட்டேன். மனம் கலங்குகிறது.

காலையில் தான் கவ்வாலி பாடகர் பற்றி எழுதினேன். கலங்கும் கண்கள் ...

கடவுள் எல்லோருக்கும் ஒவ்வொன்று நன்மை தீமை என படைத்திருக்கிறார் இல்லையா?

இன்றும் மும்பை ஆபிஸ் வேலை.... இப்போது ரூமிர்ற்கு வந்து பத்து நிமிடம் தான் ஆகிறது... ஜோ எதோ சேனலில் நியூஸ் பார்த்துக்கொண்டு இருக்கிறார். இன்னொரு நண்பர் வருகிறார்... எட்டரை மணிக்கு டின்னெர் ...

பார்பகியூ நேசன் என்ற ஹோட்டல் சென்றோம் மத்தியானம் .... ஐஸ்வர்யா ராய் வீட்டு அருகில். கார் (வெஸ்ட்) என்ற இடத்தில் உள்ளது. வித்தியாசமான ஹோட்டல். வெஜிடேரியன் சுமார் தான். உங்கள் மேஜை மீது பார்பகியூ சமைத்து சாப்பிடலாம். என்ன சாப்பிட்ட பிறகு, வேலை எல்லாம் செய்ய முடியாது. உறக்கம் வந்து விடும்! கொர்... கொர்... ;-)

காரில் (ஏரியா), கார் பார்கிங் கொடுமை. என் டிரைவர், மொபையில் வைத்திருந்தார். அதனால், கிளம்பும் சமயம் கூப்பிடவுடன், எங்கிருந்தோ வந்து ஹோட்டல் முன் நின்றார்... காரில் உள்ளே எல்லா கொசு மையம். எனக்கு இப்ப ஜுரம் பயம். வண்டி நிறுத்துபவர், கொஞ்சம் கண்ணாடி மூடி நிறுத்தலாம் இல்லையா? எந்த குப்பை கூளத்தில் நிருத்தினாரோ? ஆபீஸில் சொரிந்து கொண்டு இருக்க முடியவில்லை.

மும்பை ஆபீஸில் எல்லோருக்கும் கவலை. சென்ற வருடம் போனஸ் கோடிகளில் அள்ளியவர்கள், இந்த வருடம் திவால் நிலைமையால் ஒன்றும் இல்லாமல் போகப்போகிறது! சமபளம் பரவாயில்லை.... ஆனாலும் வேலை பற்றி கலங்கும் கண்கள்...

நூற்றி ஐம்பது பேர் இருந்த ஆபிஸ், இப்போது நாற்பது பேர் மட்டும். எல்லோரும், இந்தியாவின் தனியார் நிறுவங்கள் மூலம் வேலை வாங்கிவிட்டார்கள்.

மும்பையில் கொஞ்சம் வெளி மாநிலத்தவர்களுக்கு கவலை என்று தான் தோன்றுகிறது... மேல் மட்டம் பரவாயில்லை. ஜோவின் கன் மேன் கூட பிஹார் மாநிலத்தவர் தான். மூளை இல்லாத மனிதர்கள் என்று திட்டுகிறார். என் அருகில் ராஜ் தாக்ரே வரட்டும், எனக்கு சுட லைசன்ஸ் இருக்குது என்கிறார்!

பஸ்ஸில் ஒருவர் சுட்டு விட்டதற்கு மாநில முதல் அமைச்சர் சப்பை பதில் கொடுப்பது... கேவலம்! கலங்கும் கண்கள் ...

இப்போதெல்லாம், நார்த் இந்தியன்ஸ் எல்லாம் கண் வைத்துள்ளார்கள், கண்ணீர் இல்லாமல் இருக்க.

*****

வியாழன் இரவு அபிஷேக் பச்சன் படம் ப்ரிவியு உண்டு. தோஸ்தானா. சிறப்பு அழைப்பு. சிலருக்கு மட்டும்! வெள்ளி சினிமா ரிலீஸ். நடிகர்கள் ஐஸ்வர்யா ராய், ஜான் ஏப்ரகாம், பிபாஷா பாசு மற்றும் பிரியங்கா சோப்ரா சந்திக்கும் வாய்ப்பு. அமிதாப் வருவார் என்று நினைக்கிறேன்.

உதவி

நிச்சயம் நீங்கள் ஹெல்ப் பண்ணுங்கள்.

வினிதா அவர்கள் ப்ளோகில் இப்போ தான் பார்த்தேன்.


ஷங்கரை மருதமலை ஆண்டவன் காப்பாற்றுவார்!

Tuesday, November 11, 2008

பாடல்கள்

மும்பையில் பாடல்கள் ஒரு வித மயக்கம் தரும் விஷயம்.

நேற்று ஸ்டாக் மார்கட் வீழ்ச்சி, வேலை பிசி என போயிற்று.

நேற்று இங்கே தாஜில் ஒரு பெரிய விருந்து. ஜோவின் நண்பர்கள் ..... பார்டி.

அப்போது வயோலின், பாரதனாட்யம் மற்றும் கவ்வாலி கலைஞர்களின் பாட்டு என்று போனது....

ஐந்நூறு ருபாய் நோட்டு மலையில்... (சுமார் லட்ச ருபாய் பரிசு) அந்த கவ்வாலி கலைஞர்களுக்கு நான்கு பேருக்கும் வந்திருக்கும். ஐம்பது பேர் தான் இருக்கும் வந்திருந்தவர்கள், எல்லாம் பர்சிலிருந்து இரண்டு மூன்று ஐந்நூறு ருபாய் நோட்டுக்கள் எடுத்து வீசியதை பார்த்தேன்.

அதில் கண் தெரியாத ஒருவர், பாகிஸ்தானியர் என்று ஒரு கேள்வி... பாடியதை கேட்டு மனம் நொறிங்கியது! லியாகத் கான்.. பெரிய ஸ்டார் ஹோட்டல்களில் மட்டும் வருகிறார்! சென்னையிலும் பாடியுள்ளாராம்...

ஜோதா அக்பர் சினிமா பாடலும் பாடினார்கள்...

சாலா (மச்சான்) என்று ஒரு பாடல்... ஹிந்தியில் கெட்டவார்த்தையாக உபயோகப்படுத்தும் ஒவ்வொருவருக்கும் சாட்டையடி... அப்பாடல், எப்படி மச்சான்கள் மற்றொவருக்கு உதவி செய்து அன்பை வளர்க்கிர்றார்கள் என்று கண்ணீர் மல்க பாடியது அருமை.

இப்படி பணக்காரர்கள் பார்டிகளை நம்பி நிறைய பேர் வாழ்கிறார்கள். ஸ்டாக் மார்கட் வீழ்ச்சியால், அவர்களுக்கு தொழில் சரி இல்லை என்கிறார்கள்.

Monday, November 10, 2008

சொவ்பாட்டி பீச்

நேற்று நாங்கள் சொவ்பாட்டி பீச் சென்று வந்தோம். மிக பெரிய பீச். மெரைன் டிரைவ் என்ற ரோடு அதை சுற்றி வளைந்து செல்க்ரியாது.

மும்பை என்று போட்டோ காட்டும் போது காட்டப்படும் ரோடு மற்றும் பீச் அது.

நல்ல வளைவு.

சூரியன் மறையும் போது, அழகு.

பேல் பூரி மற்றும் பாவ் பாஜி சாபிட்டோம்.
அப்புறம் மாதுங்கா சென்றோம். கோவில் ஒன்று உள்ளது. பார்த்தோம்.

அப்படியே, உலக புகழ் பெற்ற தாராவி ஸ்லம் ஏரியா.

ஜோ அவர்கள் உதவி செய்யும் சில இடங்களை பார்வை இட்டார். கஷ்டமாக இருந்தது!

இப்போது, கவர்மென்ட் இடத்தை எடுத்து, அந்த பழைய ஏரி தாராவியை, சுற்றி ஏழைகள் குடியிருப்பு காம்ப்ளெக்ஸ் செய்யபோகிறார்கள்.

ஒரு பகுதி ... டெவலப் செய்யும் கம்பனிகளுக்கு ஸ்டார் ஹோட்டல் மற்றும் ஷாபிங் காம்ப்ளெக்ஸ் கட்டி கொள்ள அனுமதி.

இரவு டின்னெர், நண்பர் குடும்பத்துடன் அந்தேரி ரெஸ்டாரன்ட் ஒன்றில் பேசிக்கொண்டு உணவு. மாடி ... காற்று.. குழந்தைகள் சத்தம்... அமைதி அருமை. சைனீஸ் சாபிட்டோம். எல்லாம் கிடைக்கிறது. ஒரு குழந்தை, பிஸ்தா நான் என்ற ரொட்டி இனிப்பு ஐடம் .... சாப்பிட்டது அழகு. மெடிடரேனியன் பிட்டா ப்ரெட் போல இருந்தது.

ஹோட்டல் வந்து படுக்கும் போது பதினோரு மணி.

பம்பாய் மும்பை

பம்பாய் , இப்போது மும்பை ... பாம்பே என்றார்கள் ஆங்கிலத்தில். இன்னும் பம்பாய் என்று தான் சொல்லிக்கொள்கிறார்கள்!

நான் ஐ.ஐ.எம். படித்த காலத்தில், தனியாக வந்து, அஹமெடாபாத் செல்வேன், ஆறு மாதம் ஒரு முறை. அப்புறம், இப்போது வேலை செய்யும் கம்பனியில் சம்மர் ப்ராஜெக்ட். கொலாபாவில் ஒரு அபார்ட்மென்டில் தங்கினோம். 1990. எட்டு வாரங்கள், ஜூன், ஜூலை ...அனலிஸ்ட் என்றால் என்ன என திரிந்த காலம். நான்கு பேர், எல்லாம் பெண்கள். பாதுகாப்பான இடம். அப்பா வந்து பார்த்துவிட்டு சென்றார்.

என்னோடு தங்கியிருந்த பெண்கள், பீர் சாப்பிடுவார்கள், ஜாலியாக ஆண்களோடு சுற்றினார்கள். நான் மட்டும் வெகு கவனமாக இருந்தேன்.

அப்போது எல்லாம் இன்டர்நெட், ஈமெயில் இல்லை! இரண்டு வருடம் கழித்து வந்தது!

அப்புறம் இரண்டாம் வருடம் ..எம். தான் வாழ்வில் மறக்க முடியாத வருடம்!

அப்போது ரோட்டில் விற்கும் உணவு என்றால், ரொம்ப பிடிக்கும். தட்டுகுச்சி என்ற பட்டப்பெயர் மாறிய காலம். மகேஸ்வரி என்ற இடத்தில் காமத் ஹோட்டல் ஒன்று, இப்போதும் உள்ளது என நினைக்கிறேன். அங்கு சென்று மீல்ஸ் சாப்பிடுவோம். சோர் பஜார் என்ற இடத்தில் மலையாள ஆட்கள் நிறைய வகை தோசைகள் விற்பார்கள். இன்று அந்த ஏரியா செல்ல வேண்டும். ஜோ வரமாட்டார்! பிடிக்காது! வயிறும் ஒத்துக்காது!

*****

இன்று மதியம் ஹாஜி அலி ஸ்ஹெரிப் சென்று வந்தேன். தலையில் முக்காடு போட்டு! ஒரு தீவில் உள்ளது, நான்கு மணிக்கு மேல், அந்த பாலத்தை, தண்ணீர் மூழ்கி விடும்...ஜோ ஒரு ஹோட்டலில் இருந்தார்... பாதுகாப்புக்கு வந்தவர், வெளியே நின்று பார்த்துக்கொண்டு இருந்தார்.

http://www.pilgrimageindia.net/muslim_pilgrimage/haji_ali.html

லன்ச், நானும் ஜோவும் தாஜ் ஹோட்டலிலேயே சாப்பிட்டோம். கிழே உள்ள படம் பாருங்கள், கேட்வே ஆப் இந்தியா இடதுபுறம் உள்ள அந்த பழைய கால ஸ்டைல் கட்டிடத்தில் (தாஜ் கேட்வே) தங்கி இருக்கிறோம்!
வெஜ் தாளி மீல்ஸ்... மேங்கோ லஸ்ஸி...இரண்டு பேருக்கு 1500 ருபாய்! அம்மா நல்ல அரிசி மூட்டை 50 கிலோ ரூ 1500 ஆகிவிட்டது என்று சொன்னது ஞாபகத்திற்கு வந்தது!

எனக்கு இரண்டு மணி நேரம் தான் வேலை இருந்தது. ஜோ அவருடைய மீடிங்க்ஸ், முடித்துவிட்டார். இரண்டு இன்வேச்டர்கள், பாதி ஷேர்ஸ் விற்கிறார்கள், நான் சொன்ன கம்பனியில். ஜோ அதை ஸ்டாக் மார்கெட் மூலம் தான், தன்னுடைய எப்.ஐ.ஐ. அக்கவுண்ட் மூலம் வாங்கினார்! இருவருக்கும் சந்தோசம்...

அப்புறம் பவர்சோப்ட் குளோபல் சலுசன்ஸ் என்ற கம்பனியில் 4% பங்குகள் வாங்கியுள்ளார் அவர் கம்பனிக்கு, ஒரு வருடத்தில் டபுள் ஆகுமாம்.

இப்போது நண்பர்கள் பார்க்க செல்ல வேண்டும். பிறகு சொவ்பாட்டி பீச்சில் நடக்க வேண்டும். சாட் சாப்பிடவேண்டும்!

ஜோ ஒரு இங்க்லாந்து நிறுவனம் மூலம், தாராவி ஏரியாவில் உதவி செய்கிறார்! அங்கு கொஞ்ச நேரத்தில் சென்று வர வேண்டும். மாத்துங்கா கோவிலுக்கு அப்படியே சென்றுவிட்டு, திரும்பி வந்து... பரேலில் குழந்தைகள் துணி கடை ஒன்றில் துணி வாங்கிக்கொண்டு டின்னெர்....

நாளை எழுதுகிறேன்.

Sunday, November 9, 2008

மும்பையில் இருந்து

தாஜ் மும்பை அருமை. எவ்வளவு ஹிந்தி சினிமா ஸ்டார்கள். காலையில் வெளியே ஜாகிங் சென்று வருவது அருமை. என்ன ஜோவிற்கு கன்-மேன் ப்ரொடக்சன், இங்கே வேண்டும்! கூடவே ஓடி வருவார்கள்! பாவம்.

அடுத்த ஐந்து நாள், நான் பிசி. ஜோவும் பிசி.

அபிசேக் பச்சன் மீட்டிங் கொஞ்சம் நேரம் இருக்கும். உடம்பு சரியில்லை என்றார். அவர் தங்கை புருஷன் நந்தா வருகிறார். சில பழைய டீல்ஸ்.

அப்புறம் ஜோ நவம்பர் 15 அதிகாலை 4.15 am துபாய் வழியாக கிளம்புகிறார். எனக்கும் சென்னைக்கு காலை 6.45 AM ப்ளைட்.

வெள்ளி மதியம் வரை தாஜில் தான இருப்போம். இரவு, கிரேன்ட் மராத்தாவில் செக்கின், ஒரு நாளுக்கு.

ஜோ ஒரு சாப்ட்வேர் கம்பனியில் இன்வேச்டார். சி.ஈ.ஒ. வருகிறார். 2 மில்லியன் போட்டது இப்போது லாக் இன் பீரியட் முடிந்தது. இன்வேச்டோர்ஸ் பணம் கேட்கிறார்கள். மார்கட் டவ்ன்! ஷேர் 300 ருபாய் என்று போட்டது இப்போது 50 ருபாய். கொடுமைங்க இது. மூன்று வருடத்தில் இவ்வளவு நஷ்டம் தாங்கும் தையிரியம்? ஜோ தான் அந்த 2 மில்லியன் கொடுக்க வேண்டி இருக்கும். சரி, கம்பனியில் ஓனர்ஷிப் ஜாஸ்தி ஆகும்.

அப்படி செய்தால், நான் தான் இந்திய அடிக்கடி பெங்களூர் வர வேண்டிய கட்டாயம் ஆகும். அதுவும் நல்லது தான்! மற்றவர்களுக்கு வேலை செய்வதை விட, சொந்த தொழில் நல்லது தான். ஆனால் வருமானம் நிச்சயம் வராது.

நான்கு மணிக்கு வேலை முடிந்துவிடும்! மும்பை சுற்றல்....

இன்று சாயந்திரம் ஹாஜா அலி ஸ்ஹெரிப் தர்கா, கேட்வே ஆப் இந்தியா போட் ரைட். இரவு கூகூன் என்ற ரேச்டாரன்டில் டின்னர். நண்பர் குடும்பம் ஈடிங் மீட்டிங்... தெலுகு நண்பர். அதிசயம், அமெரிக்காவில் இருந்து திரும்பியவர்கள். என் முந்தய பதிவுகளில் சிறிது எழுதி உள்ளேன், அவர்கள் பற்றி. இரண்டு சிறு குழந்தைகள். நண்பிக்கு நாற்பதாவது வயதில் இரண்டாவது குழந்தை!

உறவுகளும் மனித உடலும்

நண்பர் மனைவி பெங்களூரில் எல்ஜிசாப்ட் என்ற கம்பனியில் எச்.ஆர். தலைவராக இருந்தவர், இரண்டு மூன்று வருடம் முன்னால் இருக்கும். அவர் மூலம் ஒரு வேலை வரும் வாய்ப்பு. நாளை இரவு பேச வேண்டும்.

விரைவாய் சென்ற மணித்துளிகள்

எப்படி போகிறது டைம்! கோவையில் இரண்டு நைட் மட மடவென்று பறந்தது!

ஜெட்லைட் ப்ளைட் கூட்டம் தான். கோவை எப்போதும் போல பிசி...

ஒருவர் ஏர்போர்டில் இருந்தார். He was in a wheelchair. I asked him whether he was a Tamil blogger, without asking the name. He said, he is Kirtilal Kalidas Jewellery shop owners family! I felt bad about certain rich people in such state. Don't know whether I should!

என் பள்ளி மணி சார் வீட்டிற்க்கு சென்றேன். என் தமிழ் மாறாதது கண்டு ஆச்சிரியம் அடைந்தார். என் ப்லோக் பற்றி சொன்னேன், தெரியும் என்று சொன்னார்! ;-)

மதியம், எங்கள் எட்டிமடை தோப்பு (தோட்டத்தில்) சாப்பாடு. அம்மா சமையல் அருமை. வெஜ் பிரயாணி, சோயா ப்ரை. பைனாப்பிள் பாயசம்... இளநீர்.

நம்ம ஊர் போல வருமா? ஜோவும் இந்தியாவில் ரிடையர் ஆக வேண்டும் என்றார்!

நல்ல காற்று நல்ல நடை. அப்பாவும் ஜோவும் அப்படி என்னதான் பேசினார்கள் என்று தெரியவில்லை. ஜோ என்னிடம் பிறகு சொன்னார், யூர் டாட் இஸ் கிரேடேர் தன் மைன்! கொடுத்து வைத்தவர் அவர் தான்!

மூன்று மணிக்கு இஷா மையம் சென்றோம். ஒரு மணி நேரத்தில் சுற்றி பார்த்தோம். அருமையான இடம். ஒரு இரண்டு நாள் தங்க வேண்டும். ரிசார்ட் மாதிரி உள்ளது. லிங்க கோவில் அருமை. இருவருக்கு பத்தாயிரம் ஆகும்.

நல்ல கோவில். தியான மண்டபம் என்கிறார்கள். ஒரு வித அனுமாஷ்யம்!

***

இரவு டின்னெர் ஒன்றும் இல்லை. அம்மா பேக் செய்த தயிர் சாதம். ஜோவிற்கு வெஜ் சாண்ட்விட்ச். ஜூஸ் ப்ளைட்டில். காசு கொடுத்து வாங்க வேண்டும்!

இரண்டு நாளில் ஒரு கிலோ வெயிட் ஏறி விட்டது. ஜோ பாவம், இரண்டு கிலோ போல இறங்கி விட்டார். வயிறு ஆட்டம் கண்டது!

இப்போது ஹோட்டல் வந்து விட்டோம். தாஜ். கேட்வே ஆப் இந்தியா எதிரில். அருமையான வியு. ஜோ கம்பனி செலவு, அதனால், நல்ல ரூம். 400 டாலர் ஒரு இரவுக்கு. ஹோட்டலில் பிசினஸ் சென்டர் கொடுப்பார்கள். ஸ்டாடஸ் என்று ஒன்று உள்ளது. அது முக்கியம்.

நாளை விரிவான பதிவு போடுகிறேன். ஜோ போட்டோ கூடாது என்று சொல்லிவிட்டார்.

குழி பணியாரம்

அமெரிக்காவிலும் வாழை இலை கிடைக்கிறது. வேக வைத்த இலை, ப்ரிஜ்ஜில் வைத்து இருப்பார்கள். ஜமைக்கன் மற்றும் ஜாபனீஸ் சாப்பாடு சமைக்க உதவும் பொருள் அது.

குழி பணியாரம் ஜோ விரும்பி சாப்பிட்டார். அம்மா இரு வகை செய்வார். இட்லி மாவு தான். அந்த பதம். வெல்லம் போட்டு இனிப்பு வகை - செட்டிநாடு. அப்புறம் பால் பணியாரம், இட்லி மாவில், பால் அல்லது வெண்ணை சேர்த்து, கொஞ்சம் வெங்காயம், தாளித்து போட்டு, அருமை! மாப்பிள்ளை என்பதால், எப்போதும், வாழை இல்லை விருந்து தான்... வீட்டின் பின்புறம் மரம் உள்ளது!

தேங்காய் சட்டினியோடு சாப்பிடுவது அருமை. ஜோவிற்கு மெக்சிகன் சாப்பாடு பிடிக்கும். இந்தியன் உணவு வகை, எப்போதும் நான் செய்வதால்... நோ ப்ராப்ளம். சப்புகொட்டி சாப்பிட்டார். என்ன கொஞ்சம் குறைவாக சாப்பிடுவார். வேறு எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. பத்து பணியாரம் உள்ளே போனது, எனக்கும் தான்!

இன்று எட்டிமடை தோட்டம் சென்று சாப்பிடுகிறோம். சமைத்து எல்லாம் ரெடி. தங்கை வீட்டின் பின்புறம் ஒரு சிறு ஸ்விம்மிங் பூல் கட்டுகிறார்கள். பார்த்துவிட்டு ... அப்படியாக இஷா மைய்யம் சென்று பார்த்து வர வேண்டும். ஜோவுக்கு அப்படி ஒரு வியப்பு...

லிங்க கோவில் ஒன்று அமெரிக்கவில் நிஷ்டை செய்கிறார்கள் என்று கேள்விபட்டேன், நியூ ஜெர்சியில்.

ஜக்கி வாசுதேவ் அமெரிக்கவில் இருக்கிறார். நன்றாக மார்க்கடிங் செய்கிறார். எங்கள் நண்பர் சாந்தி ஜெய்குமார் சொல்லி இருந்தார், அவர் இந்தியாவில் தான் இருப்பார் என்று. இப்போது, அமெரிக்கா எலெக்சன் டைம், பணக்காரர்கள் அழைப்பு என்று சென்று விட்டாராம். பணம் தான் பேசுகிறது!

ஜனவரியில் ஒரு இரண்டு வாரம் இந்திய வரும் பிளான் உண்டு. அப்போது செல்ல வேண்டும். என் வேலை பொறுத்து எல்லாம் அமையும்.

***

எங்கள் தோட்டத்தில் கொஞ்சம் சோளம் உண்டு.

சோளம் சுட்டு விற்கிறார்கள் ரோட்டில். நியூ யார்க்கும் கிடைக்கிறது, வேறு வகை, இங்கு கொஞ்சம் கரடு முரடாக, பல் நன்றாக டெஸ்ட் செய்யும் வகை.

சீக்கிரம் நான்கு மணி அளவில் வர வேண்டும்.

சாயந்திரம், ஆறு மணிக்கு ஏர்போர்ட் கிளம்ப வேண்டும். நான் அடுத்த வாரம் வருவதால், லக்கேஜ் கம்மி தான் எடுத்து செல்கிறேன். ஜோ பேக்கிங் முடிந்தது! கொஞ்சம் மசாலா அம்மா ரெடி செய்து விட்டார். வருடம் முழுதும் இந்தியன் சமையில் மசாலா அம்மா தயாரிப்பு தான். ஜோ அதை, அம்மாஸ் மசாலா என்று பிராண்ட் செய்வார், கிண்டலாக!

சொல்ல மறந்து விட்டேன், இன்று காலை குட்டி வெந்தய இட்லி வெங்காய சாம்பார். கப்பில் கப்பல் போல இட்லி மிதக்க விட்டு, சாப்பிடுங்கள். அட்டகாசம்!