Saturday, November 22, 2008

மைகேல் ஜேக்சன் மதம் மாறினார்

மைகேல் ஜேக்சன் மதம் மாறினார்... இப்போது அவர் பெயர், மிக்காஈல். தேவரின் தூதர் என்ற பொருளாம்.

நல்ல பெயர்.

வாழ்க வளமுடன்.

ஸ்கூல் படிக்கும் போது பீட் இட், என்ற பாடலுக்கு ஆடியது நினைவிற்கு வருகிறது.

அப்பா அவனை அது அல்லது அவள் என்று சொல்லுவார். பெண் குரல் வேறு இல்லையா? கல்யாணம் ஆகி குழந்தையும் இருக்கிறது!

சரி எதற்கு மதம் மாறினாராம்? அவர் தான் திவால் கேசு ஆயிற்றே? முஸ்லீம் இளவரசு ஒருவருக்கு, காண்ட்ராக்ட் கொடுத்து, பாடும் பாடல் எல்லாம், இனிமேல் அவருக்கு தான் சொந்தம் என்று... கடன் எல்லாம் தீர்த்திவிட்டு... இப்போது டிமுக்கி. மதம் மாறிவிட்டால், பேராவது நாறாது... ஒரே மதத்து காரர்கள், அடித்து கொள்ளமாட்டார்கள்.

******

ரமேஷ் குடும்பத்தோடு வந்துவிட்டார்.

காலையில் பிரன்ச், சாம்பார் இட்லி... இப்போது வெஜிடபிள் புலாவ்.

மழை தூருகிறது. அம்மா பருப்பு வடை செய்கிறார்.

சாப்பிட்டு விட்டு, ஷாபிங், மற்றும் எங்கள் தோட்டம் வரை சென்று வர வேண்டும், அப்படியே ஈஷா மயம் செல்ல வேண்டும்.

சாயந்திரம், அர்ச்சனாவில் வாரணம் ஆயிரம் செல்கிறோம். அறுவை என்று கேள்வி. டிக்கட் கிடைக்குமா தெரியவில்லை.... எப்போதும் போல படம் முடித்தவுடன், அன்னபூர்னாவில் டிபன்.

Friday, November 21, 2008

உமர் கயாமின் ருபையட்

உமர் கயாமின் ருபையட் ஒரு அற்புத காவியம்...

அந்த புத்தகத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பு எட்வர்ட் பிட்ஜெரால்ட் என்பவர் எழுதியது... இன்னும் எனக்கு பிடிக்கும். யு.எஸில் இருக்கும் போது நண்பர் ரமேஷ் எனக்கு பிறந்த நாள் பரிசாக கொடுத்தது!

ஒரு வாரத்திற்கு மேல், எங்காவது பயணம் கிளம்பினால்... கண்டிப்பாக கூட எடுத்து செல்வேன். அதில் வரும் வேர்ஷ்கள் அருமை. சந்தோசம், கவலை அனைத்தும் தரும்... உலக நினைவுகள் மறந்து போகும்...

உமர் கயாமின் ருபையட் , அந்த அந்த கணத்தில் வாழுங்கள், மற்றவர்களுக்கு என்று வாழ்க்கை அமைக்க வேண்டாம் மற்றும் ஜாதி மதத்தால், கட்டுண்டு இருக்க வேண்டாம் என்கிறார்...

என் தமிழ் வாத்தியாரை குடும்பத்தோடு இன்று மதியம் உணவிற்கு அழைத்து வந்தேன். கீரை அவருக்கு பிடிக்கும் என்பதால், அம்மா மூன்று வகை கீரை துவையல், பருப்பு மற்றும் காய் செய்தார். சாதத்தில் நெய் போட்டு, கீரை குழம்பு ஊற்றி சாபிடுவது அருமை. சேமியா பாயாசம், செய்தேன்.

அப்புறம் நண்பி வினிதாவின் ப்ளோகில் பார்த்த பாலக் சப்பாத்தி செய்தோம்.

சாப்பிட பிறகு, பழங்கள் தான்... ஊர் பழக்கம். மூன்று மணி ஆகிவிட்டது.

அப்போது தான் உமர் கயாமின் ருபையட் பற்றி பேசினோம்.

இப்போது தமிழ்நாட்டில் , ஏன் இந்தியாவில் நிலைமை பாருங்கள்...

எல்லோரும் எதிர்காலம் என்று ஓடுகிறார்கள்... நாளைக்கு இது வேண்டும் அது வேண்டும்... அவர்கள் குறைபட்டு கொள்வார்கள், இவர்கள் குறை பட்டு கொள்வார்கள் என... அப்புறம் என் ஜாதி உன் ஜாதி என ஓடுகிறது (வெளிநாடுக்காரனை கட்டினால், அது தனி மரியாதை!)...

எங்கள் கோவை வீட்டில் இரண்டு வேலைக்காரர்கள், ஒரு முஸ்லீம் அம்மா, மற்றும் ஒரு தலித் பெண். சாமி ரூம் வரை சென்று வேலை செய்வார்கள். ப்ராப்ளம் இல்லை. நல்ல மரியாதை கொடுக்கிறோம்.

நான் இந்தியாவிற்கு வந்து சென்று ஒன்றரை மாதங்கள் தான் ஆனது. இந்த முறை வரும் போதும், மறக்காமல் அவர்களுக்கென்று சிறு பொருள் வாங்கி வந்தேன். ஒரு பாசம் தான்.

வீட்டிற்கு வந்த பிறகு, எல்லோருக்கும் கிப்ட்ஸ் கொடுக்கும் போது, அவர்கள் ஒரு மாதிரி பார்ப்பார்கள் அல்லவா?

உமர் கய்யாமின் ஒரு வரி தான் ஞாபகமா வருகிறது...

Fill the cup and fill the can
Have a rouse before the morn
Every moment dies a man
Every moment one is born!

****

நாளை காலை ரமேஷ் குடும்பம் வருகிறார்கள். இரண்டு நாட்களுக்கு பெரிய பிளான்.

Wednesday, November 19, 2008

சம்பவங்களும் மன அமைதியும்

அடிக்கடி இந்தியா வருவதால், மனதிற்கு ஒரு வித அமைதி கிடைக்கிறது. அமைதி சூழல்.

அடுத்த வருடம், அனேகமாக மூன்று மாதம் ஒரு முறை இந்தியா வர வேண்டும். இது ஜோவிடம் நேரில் பேசி முடிவு செய்ய வேண்டிய ஒன்று... அவர் பெற்றோர் என்ன சொல்வார்களோ. பழைய ஐரிஷ் கல்சுர் இன்னும் மாறாது இருப்பவர்கள்.

நியூ யார்க்கில் எல்லாம் ஒரு வித பட படப்பு. வேலை வேலை என்று ஓட வேண்டும்.

இந்த டிப்ரெசன் எல்லாம், ஒரு வித மன அமைதி கொண்டு வர.... இல்லையா?

காசு பணம் என்று அலைவது... கஷ்டம் தான்..

மதியம் உணவிற்கு என்று உட்கார்ந்தேன். யாரோ சொந்தம் வந்துவிட்டார்கள், டிப்ளோமா படித்த மகனுக்கு அமேரிக்காவில் வேலை வேண்டுமாம்... கொஞ்ச நாள் நியூ யார்க்கில் என் வீட்டில் தங்கி கொள்ளட்டும் என்கிறார்கள்.

விசா பற்றி, அங்கு உள்ள நிலைமை பற்றி... படிப்பு தேவை பற்றி, ஆங்கில அறிவு பற்றி, எல்லாம் சொன்னேன்.

நான் எல்லா விவரமும் சொல்லி, முடிபதற்க்குள், அப்பா வந்துவிட்டார்.

"முடிஞ்சதை பார்த்து மக பண்ணுவா", என்று அனுப்பி வைத்தார்.

ஒரு சில வரிகளில் முடிகின்ற விஷயம். எதற்கு நான் குழப்பிக்கொண்டேன்?

Heaven will direct it.

Tuesday, November 18, 2008

நாடி ஜோதிடம் ஒரு அப்டேட்

நாடி ஜோதிடம் ஒரு அப்டேட்.

நேற்று நான் பார்த்த நாடி ஜோதிடர் பற்றி, இந்த பதிவில் எழுத்யிருந்தேன்...

ஜோதிடம்

என் அம்மாவின் ஆசைக்காக அங்கு சென்றேன். அவ்வளவுதான். இன்று பேரூர் சென்று வந்தோம். இது ஒரு பிளாசிபோ எப்பக்ட். அப்பாவும் பாதி நம்புகிறார்... அம்மாவின் கண்களில் கண்ணீர் வருவது நிற்கும், என்னை பார்த்து. தங்கை குழந்தைகள் வரும் போது, பாதி நேரம் எங்கள் வீட்டில் தான் இருக்கிறார்கள், ரொம்பவும் என்னை நினைத்து கவலை படுகிறாராம்.

முக்கிய குறிப்பு - நான் அந்த நாடி ஜோதிடரை நம்பவில்லை... எதோ ஒரு வித்தை நம் மனதில் இருந்து படிக்கிறார் போல... மேலும் அப்பா அம்மா அங்கு சென்று பார்த்திருக்கிறார்கள், விவரங்கள் எழுதி வைத்திருக்கலாம்... நான் எஞ்சிநீரிங்கில் படித்த பாட்டேர்ன் மாச்சிங்...அவர் கையில் இருந்த பனை ஓலை ஏடுகள், புதியதாக இருந்தன!

கடந்த காலம் பற்றி, நீங்கள் சொல்லும் ஆம் இல்லை போன்றவற்றை வைத்து, கிட்டத்தட்ட சொல்ல முடிகிறது.... எதிர்காலம் பற்றி நான் நம்பவில்லை.

உங்கள் ஜாதகம் இருந்தால்... அதை வைத்து, அதன் படி பலன் சொல்லி விடுகிறார்கள்.

அப்புறம் வசதி பார்த்து கட்டாயம், பரிகாரம் செய்ய வைக்கிறார். அவருக்கு தெரிந்த குருக்கள் இருக்கிறார்கள். சில ஆயிரங்கள் செலவு நிச்சயம்!

கமண்ட்ஸ் மூலம்... நிறைய கோவைக்காரர்கள் கேட்டதால்... விவரம் இங்கே..

அந்த நாடி ஜோதிடர் இருப்பது, போன் நம்பர் இல்லை... கிராஸ் கட் ரோடு அருகில், கமலா ஸ்டோர்ஸ் தாண்டி லக்ஷ்மி காம்ப்ளெக்ஸ் போவதற்கு முன்னாள் எதிரே உள்ளே ரோட்டில் இடது புறம், நூறு அடி ரோடு கனக்ட் செய்யும் இடம். விளம்பரம் இல்லை. பாதி நேரம் ஆள் இருப்பதில்லை. சேலம் அருகில், இருக்கும் ஓமலூர் சென்று விடுவாராம். அங்கு அவர் குரு இருக்கிறார்.

அப்பா என்னிடம் கூறியது... சென்னையில் கருணாகரன் என்று ஒருவர் இருக்கிறார், தி.நகர் பஸ் ஸ்டாப் எதிரில். குமுதம், இண்டர்நெட்டில் விளம்பரம் வருதாம்.

நாடி ஜோதிடம் பார்ப்பவர்கள் ஊருக்கு ஊர் இருப்பார்கள். என்ன சார்ஜ் தான் வேறுபடும்.

ஜெனெரலாக சில கமண்ட்ஸ் அடிப்பார்கள். பெண்கள் மீது வெறுப்பு கொண்டவர்களுக்கு பெண்கள் தான் பிறக்குது, என் அப்பா பற்றி சொல்லி, தாத்தா செய்த சாதி கொடுமை தான் என்னை வெளிநாட்டு மாப்பிள்ளை அடைய செய்தது என்ற உடான்ஸ்... இப்போதெல்லாம், பெண்கள் வேண்டாம் என்று உலகம் சொல்லுது, அதனால் தான், எல்லோருக்கும் பெண்களாக பிறக்குது என்றார்! எனக்கு ஐந்து பெண்கள் பிறந்தாலும் பரவாயில்லை என்றேன்.

ப்ராப்தம்.

ஜோவிடம் சொன்னேன்... டேக் இட் அஸ் சொம் பன் என்றார்.

வார்னிங்... அப்பா சொன்னது.... அவர் நண்பர் ஒரு டாக்டர், இந்த நாடி ஜோடிதரை நம்பி, பங்களா வாழ்க்கை (விற்று விட்டு) சிறு வீட்டில் போய் இருக்கிறார். இருக்கும் பணத்தை, நிலம் / இடத்தில் போட்டு லாஸ். மகளும் பாதி பணம் பிடுங்கி போய் விட்டாள். இந்த ஜோதிடரை கேட்டு வயது அதிகமான ஆளை கல்யாணம் செய்து வைத்திருக்கிறார்கள். இன்னும் குழந்தை இல்லை, மூன்று வருடம் ஆகிறது. மகன் எப்படியோ சொந்த முயற்சியில் அமெரிக்காவில் இருக்கிறான். யாரோ பெண்ணை அங்கு லவ் செய்கிறானாம், என்னை ஒரு முறை அழைத்திருந்தான்.

ரமேஷ் நாடி ஜோதிடம் பற்றி எழுதிய குறிப்பு ஒன்று...

NADI ASTROLOGY AND ASTROLOGERS

சாதிக்கொடுமை

சில பதிவுகள்... முன்னால் எழுதியிருந்தேன்...

என்ன கொடுமை இது

சாதிக்கொடுமை கொஞ்சம் ஜாஸ்தி உள்ளது என்று காட்டுகிறது... தமிழ்நாட்டில். ஒழிய வேண்டும்!

சென்னையில் எங்கள் ஜாதி ஆட்கள் செய்த கொடுமை என்று அப்பா கூறினார். அடிக்கு அடி. ரத்தத்திற்கு ரத்தம். அதுவும் ரவுடி கும்பல் வைத்தாம்! ஆமாம் பெண்கள் எல்லாம் வன்முறையில் ஈடுபடவில்லையே? ஏன்? அம்மா சொல்றாங்க, நல்ல கார சாரமாக சமைத்துபோட்டு புருசன்களை வழி அனுப்பி வைப்பாளுக சண்டாளிகள்.

இந்த கொடுமை நரகம் பற்றி வரும் நியூஸ் எல்லாம் கரக்ட் இல்லை.. அதனுடைய அப்டேட் இங்கே நண்பர் எழுதுகிறார்.

நூறாவது நாள் பதிவு: சாதீயம்

நூறாவது நாள் பதிவு வாழ்த்துக்கள் ரமேஷ்!

Monday, November 17, 2008

ஜோதிடம்

ஜோதிடம் என்றால் எனக்கு குறைவான நம்பிக்கை தான்.

நேற்று அம்மாவும் நானும் நூறு அடி ரோட்டில் இருக்கும் ஒரு நாடி ஜோதிடரை பார்க்க போனோம்.

டிரைவர் எங்களை இறக்கி விட்டு விட்டு சென்று விட்டார்... ஒரு மணி நேரம் ஆகும் என்றார்கள்.

சரி, எப்படி பார்கிறார்கள்?

என் வலது கட்டை விரல் ரேகை எடுத்து, கட்டு தேடுகிறார்கள். ஆண்களுக்கு இடது கை கட்டை விரல் ரேகை.

பல காம்பிநேசனில் பெயர் முதல் எழுத்து வைத்து, என் அப்பா அம்மா பெயர், தங்கை பெயர் கரக்டாக வந்தது. கணவர் பெயர் "ஜா" என்ற எழுத்தில் வரும், வெளிநாட்டவர் என்றார். கல்யாண தேதி கிட்டத்தட்ட கரக்டாக சொன்னார்... "புது" என்று பேர் கொண்ட ஊரில் என்றார்.. நியூ யார்க்கில் ரேஜிச்டேர் மேரைஜ் டேட் குறிப்பாக சரி வரவில்லை. யு.எஸ்.கோவில் கல்யாணம் டேட், மருதமலை கல்யாணம் டேட் ஒன்று சரியில்லை. நாற்பது வயது முடியும் முன், இரண்டாம் கல்யாணம் நிச்சயம் உண்டு என்றார்... டெக்னிகலாக நடக்காது! சரி அடுத்து கணவர் எங்கிருந்து, பெயர் என்றேன்... இந்தியாவில் சொந்த ஊருக்கு அருகில், மலை பிரதேசம் ஆள், பெயர் 'வி'யில் தொடங்கும் என்றார். அவருக்கும் இரண்டாம் கல்யாணம் இது....

படிப்பு பற்றி ஒன்றும் டிகிரி பெயர் எல்லாம் சொல்லவில்லை. மேற்படிப்பு 1991 மட்டும் கரக்ட். வீட்டிற்கு வெளிய இருந்து படிப்பேன் என்றார்.

ஒவ்வொரு குறிப்பும் சரியா தவறா என்று சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.

என் ஜாதகமும் கொண்டு போய் இருந்தோம். சனி கிரகத்தை வைத்து பலன் சொல்வோம் என்றார். பெயர்ச்சி பலன்?

சொத்து, வெளிநாட்டு வாழ்க்கை, தானம் செய்வது, குழந்தை பாக்கியம் உண்டு போன்றவை சொன்னார். நிச்சயம் சில மாதங்களில் இந்தியாவில் தான் வேலை செய்வீர் என்றார்... ஒளி ஒலி துறை...வெளிநாட்டு தொடர்பு முடிந்துவிடும் என்றார்! என்ன ஆக போகிறதோ! நடப்பது நடக்கட்டும். மூன்று வயது குழந்தை ஒன்று தத்து எடுப்பீர்கள் என்றார்.

எதோ பரிகாரம், இன்று பேரூர் கோவில் செல்ல வேணும்.

கடைசி வரை ஜோதிடரிடம் ஒரு நம்பிக்கையும் நான் வைக்கவில்லை!

கவிதை ஒன்று

சிறு வாழ்க்கை நடைமுறைகள் வைத்து, வார்த்தை விளையாட்டு செய்தல்... கவிதை. என் தமிழ் கவிதைக்கு இன்னும் செல்லவில்லை.

நண்பி வினிதா எழுதிய இந்த கவிதை... ரசிக்க வைத்து. அதுவும், கமண்ட்ஸ் இன்னும் ஒரு படி மேலே செல்கிறது. You are a good writer, if you can make someone talk about it!

காதலும் பாடலும்

அருமை வினிதா!

ஜாதி மற்றும் தனி மனித சுதந்திரம்

என் ஜாதி பிறப்பால்.... பற்றி பேசுவது ஒன்றும்... வேறு மதத்தவரை கல்யாணம் செய்வதால், ஜாதி விட்டு போன மாதிரி இல்லை...

சிலர் வெறி பிடித்த நாய்கள் மாதிரி.. ஜாதி பிடித்து அலைகிறார்கள்.

என்னை பொறுத்த வரையில் ஜாதி ஒரு பழக்க வழக்கம் மிகுந்த சமூகம்... ஒரு குரூப்.

அவ்வளவு தான்.

காவல் தெய்வங்கள், தனி தனி. எங்களுக்கும் மூன்று பிரிவுகள். உள் பிரிவிகள் ஆயிரம் இருக்கும் என்கிறார் அப்பா. டாய்லெட் சுமக்கும் தொழில் செய்த ஆட்களும் நம்மில் இருக்கிறார்கள் என்கிறார் அப்பா. தேவையானால் எல்லாம் செய்ய வேண்டும்.

எனக்கு தெரிந்து என் சொந்தக்காரன் பசங்கள்...அமெரிக்காவில் கக்கூஸ் கழுவி கிடைக்கும் சம்பளத்தில் படித்தார்கள். ஜெனிடர்ஸ்.

செய்யும் தொழில் தர்மம். அவ்வளவு தான்.

இதில் ஜாதி பார்க்கும் போது தனி மனித சுதந்திரம் அடிபட கூடாது.

*******

அம்மா சொல்கிறார். முட்டையோ, சினையோ இரவல் வாங்கி குழந்தை பெறுபவர்கள் ஜாதியா பார்கிறார்கள்.

நானும் முயற்சி செய்ய வேண்டும்.


It is all a matter of Individual Choice!

Sunday, November 16, 2008

கோவையில் மழைக்காலம்

தூறல், அதிகம் மழை விட்டு விட்டு... மந்தாரம்? கோவையில் மழைக்காலம்

மொட்டை மாடியில் ஆடிய காலம் எல்லாம் இப்போது நினைவில் இருக்கு. அம்மாவிடம் திட்டு அடி என்று ... விக்ஸ் போட்டு தூங்குவது... சூடான சூப்
குடிக்கவேண்டும். . சிக்கன் சூப் கிடைக்கும்.

இப்போது வெஜிடேரியன் ஆனதால்.... எதாவது ஒரு
சூப்.

ரசம் தான் அருமை.

***

வாசகர் கம்ன்ட்சுக்கு நன்றி.