Friday, December 19, 2008

ஆறு நாட்களில் விழாக்கோலம்

இன்னும் ஆறு நாட்களில் விழாக்கோலம்! கிறிஸ்தமஸ், ஹனுக்கா, நியூ இயர்...

நிறைய கிப்த்ஸ் கொடுத்து... சில சமயம் வாங்கவும் வேண்டும்.

என் டிபார்ட்மன்ட்டுக்கு நான் கொடுத்து.. ஒரு குடையும், ஒரு பேக்கட் சகலேட்டும்... மேட் இன் சைனா. நிறைய பேர் இன்று மதியமே லீவிற்கு செல்கிறார்கள். திக்னால் செவ்வாய், நான் மட்டும் வெகு சில ஆட்கள் மட்டும்.

அப்புறம் லீவு... ஜனவரி 2 தான் செல்ல வேண்டும். எல்லாம் க்ளோஸ்.

ஜனவரி 5 தான், எனக்கு என்ன பெரிய பொறுப்பு வரும் என்று தெரியும். தியாகு விலகுகிறார்... அதனால், கொஞ்ச நாட்கள் இங்கேயே ட்ரை செய்யலாம் என்று இருக்கிறேன்... முடிந்தால் வாஷிங்க்டன் டி.சி. மாறிவிடுவோம். ஜோவிற்கு, அங்கு சென்று இருக்க வேண்டிய நிலை. அடிக்கடி நியூ யார்க் வர வேண்டும்.

அதனால், அனேகமாக, வில்மிங்க்டன், டிலாவேர் சென்று இருப்போம். இருவருக்கும் நல்லது... நடு வழி.

எனது இந்திய ஆப்சன்ஸ் இன்னும் ஓபன் தான்... ஜோவின் நண்பர் ஒருவர் இந்திய செல்ல ஆசை பட்டார், அதனால் அந்த பெங்களூர் கம்பனிக்கு அவர் டைரக்டர் ஆவார். எனக்கு தெரிந்த ஒருவர், அமெரிக்கா வர ஆசைபடுகிறார். அவருக்கு அந்த சென்னை கம்பனி வேலை கிடைத்தால், நலம். என்ன விசா கிடைக்க கஷ்டம்.... ஈ 2 என்ற இன்வேச்டார் விசா உள்ளது. இரண்டரை கோடிகள், இங்கு யு.எஸ்.ஏவில் இன்வெஸ்ட் செய்ய வேண்டும். நல்ல வழியில் வந்த சம்பாரித்த பணம்... கடனும் இருக்கலாம்... மூன்று மாதங்கள் ஆகும்.

பிலேதேல்ப்பியாவில், ஒரு கம்முனிட்டி சென்டர் செய்ய இன்வெஸ்ட் செய்தால் போதும். மாதம், ஒரு குறிப்பிட்ட, அளவு, வருமானம் வரும். வாழ்க்கை ஓடும்... வேலை செய்ய தனி விசா. அது தான் பிரச்சனை.

ஸ்னோ வரும் வழி காணவில்லை.

எல்லாம்... க்ளோபல் வார்மிங் எப்பெக்ட்?

*************

மீண்டும் வினிதாவின் பதிவுகள்... நான் ரசித்த கம்பனி லோகோஸ் மற்றும்... ஒரு சுட்டிக்காட்டல்... ஒரு பதிவு பற்றி

நல்லது.

இந்தியாவில் மதவாதம் ஒழிய ஒரு யோசனை.

பாபர் மசூதியை இந்துக்களுக்காக விட்டுக்கொடுத்தால் என்ன?

Thursday, December 18, 2008

சத்யமும் வியாபாரமும் திருட்டுத்தனமும்

இந்தியாவில் நடக்கும் கார்பரேட் கேலிகூத்து, சத்யம் வியாபார தந்திரம் என்றால், கொடுமைங்க. 2500 கோடி ரூபாய்களை சுருட்ட நடந்த நாடகம்.

வினிதாவின் போஸ்ட் பார்த்தேன் சத்யம் தவறிய சத்யம அது சத்யம்!

ராமலிங்க ராஜு பற்றி நினைத்தால் வயிறு எரிகிறது. லக்கி பாச்டார்ட்! ( I am protected by the free speech as governed by US Constitution!)

இங்கு சத்யம் ஏ.டி.ஆர். லிஸ்ட் பண்ண வந்த போது, சந்தித்துள்ளேன். நல்ல குடிபோதை மனிதன்... என்ன பேசுவது என்று தெரியாது.. ஆங்கிலமும் சரியாக வரவில்லை, தெலுகர் என்று தெரிந்துவிடும் பேசுவதை வைத்து...

ஹைதராபாத் என்றாலே தகிடு தத்தம் என்பார் அப்பா. எல்லோரும் சாப்ட்வேர் தொழிலில் அங்கு பிசினஸ் வைப்பதில்லை. பெங்களூர் அல்லது சென்னை ஆபிஸ் மூலம் தான் பிசினஸ் செய்கிறார்கள்... அப்படி ஒரு பெயர்! :-0(

ராமலிங்க ராஜு பொறுத்த வரை ஐ.டி. பிசினஸ் ஒரு சூதாட்டம். அவரை ஆப்கானிஸ்தானுக்கு பேக் ஆப் செய்யுங்கள், குடும்பத்தோடு.

பணம் கொடுத்து வேலை வாங்கிக்கொள்ளும் பலர் வளர்த்த கம்பனி அது. 1991 முதல் எச் 1 விசாவிற்காக இரண்டு லட்சம் என்று வேலை விலை போனது. என் நண்பர்கள் சிலர் அந்த வழியில் அமெரிக்கக் வந்தார்கள். சரியான சம்பளம் கிடையாது... எப்படியோ அமெரிக்கா என்ற மோகம் வைத்து... அவர்கள் நன்றாக வேலை செய்து பிழைத்துக்கொள்வார்கள்.

எங்கள் வீட்டு அருகில் ஒரு கேஸ் ஸ்டேசன் அட்டென்டன்ட், ஒரு தெலுகர். நல்ல சம்பளம் என்றார்... எஞ்சினீர் ஆக சத்யம் மூலம் காசு கொடுத்து அமெரிக்கா வந்தவர்.

சில நாட்கள் முன் ஒருவரை சந்தித்தேன், மார்கடிங் ஹெட் என்றார். இது நாள் வரை எச்.ஆர். வேலை செய்தவர். தெலுகுக்காரர் என்பதால் ஒரு இது போல அந்த கம்பனிக்கு, இந்த மாதிரி உள் ஆட்களை வைத்து பிசினஸ் நடத்துவது ... சரி வராது. அதுவும், காசு கொடுத்து, எதிர் கம்பனி ஆட்கள் மூலம் டீல் பிடிக்கிறார்கள் என்று கேள்வி! (இன்போசிஸ், எச்.சி.எல்., போன்றவை...)

கெடுவான் கேடு நினைப்பான் என்று அப்பா அடிக்கடி சொல்வார். சத்யம் கேசில் நடந்து விட்டது.

************

இந்த பதிவு பிடித்து... தமிழ் மறக்காமல் இருக்க படிக்க வேண்டியது... என்னுடைய முந்தைய பதிவில் ஒரு லிங்க் செய்துவிட்டார்...

Writer Dilip Kumar Meet « Snap Judgment

Tuesday, December 16, 2008

ஸ்னோ விழுகிறதா

ஸ்னோ விழுகிறதா என்று பார்த்துக்கொண்டே இருந்தேன்.. நிறைய வந்தது.. வானிலை எச்சரிக்கை... அப்போ வராது என்று விட்டு விட்டோம். ஒரு நண்பர் வீட்டுக்கு சென்று வந்தோம். அவர் வீட்டு வெளியே கார் நிறுத்தினோம்.

டின்னர் முடித்து விட்டு வெளியே வந்து பார்த்தால், நல்ல ஸ்நொவ்.

ஸ்க்ரெப்பர் வைத்து க்ளீன் செய்யும் அளவு விழுந்து விட்டது.

அடுத்த வாரம் தங்கை குழந்தைகள் வருகிறார்கள்... நன்றாக இருக்கும். சென்ட்ரல் பார்க்கில், சென்று விளையாடலாம்...

ச்விச்சில் இருந்து கொண்டு வந்த அதனை சாக்கலேட்டும் முடிந்துவிட்டது. எல்லோருக்கும் கொடுத்தோம். இன்னும் ஒரு பாக்ஸ் மட்டும் உள்ளது, வைக்க வேண்டும்.

நியூ யார்க் ரோடு நன்றாக மெயின்டைன் பண்ணுகிறார்கள். எங்கள் வீட்டு அருகில் ஒரு சிறு பாட் ஹோல். குழி, மழை தான் காரணம். இரவு இருந்தது, காலை சரியாகிவிட்டது.

கோவை செல்லும் போது இதை தான் நினைந்துக்கொல்வேன்.

நியூ யார்க் சிடி பட்ஜெட் அளவு தான், கோவை மாநகாரட்சி பட்ஜெட் என்று எங்கு படித்த ஞாபகம். கோவை ஊர் நியூ யார்க் சிடியை விட நூறு மடங்கு பெரியது... இருந்தாலும்.... அரசியல்வாதிகள் சாப்பிட்ட பிறகு மிச்சம்.

குப்பை காசு ஆகும், என்பது தெரிந்தும், அங்கு வேஸ்ட் செய்கிறார்கள். சில முறை பல கோடிகளுக்கு ஏலம் விட்டு, தோழர்கள் கெடுத்துவிட்டார்கள் என்று அப்பா கூறினார்.

ராக்கேபெல்ளர் சென்டெரில் ஐஸ் ஸ்கேடிங் ஆரம்பமாகி கொஞ்ச நாள் ஆகியிருக்கும், சென்று பார்க்கவில்லை. குழந்தைகள் இருப்பவர்கள் செல்வார்கள்...

இன்று என்ன எழுதுவது

சீக்கிரம் எழுந்தாகிவிட்டது.. ஜெட் லாக், ஜூரிக் சென்று மாறியது ... இன்னும் மாறவில்லை...

இன்று என்ன எழுதுவது?

வினிதா சென்சுரி அடித்தார்... ப்லோக் எழுதி. வாழ்த்துக்கள்.

இரவு மட்டும் பனி கொட்டுகிறது... காலையில் மாயம்... குளிர் தான்... இரவு எழுதுகிறேன்.... இந்த வாரம் சதிங்க்டன், கனக்டிகட் செல்வோம் ஸ்கி பண்ண. 400 அடி ஸ்லோப் இருக்கு... யெல்மில் செய்த ஸ்கி இன்னும் காலை குடைகிறது. இப்போது ஸ்கியர்களுக்கு வசதியாக, சாக்ஸில் காட்டன் மற்றும் அதற்க்கு வெளியில் பிளாஸ்டிக்/லெதர் உரை. ஈரம் ஆகாது.... ஜெல் வைத்ததும் உண்டு.ரோடு ரொம்ப க்ளீன் தான், அவ்வளவு ட்ராபிக். கிறிஸ்தமஸ் ஒயிட் தான்.

Monday, December 15, 2008

மீண்டும் நியூ யார்க்

எழுந்து கொஞ்ச நேரம் ஆனது. சச்சினின் வெற்றி சென்சுரி... இந்தியாவின் வெற்றி.. சூப்பர். வாழ்த்துக்கள். 19 வருடங்கள், பெருமை... இந்தியாவிற்கு. எங்கள் கனக்டிகட் வீடு அருகில் தான் அவரும் வீடு வைத்துள்ளார். அவர் எஜன்ட் வாங்கி கொடுத்தது. (இப்போது மஸ்கரந்ஹஸ் உயிரோடு இல்லை, 48 வயதில் ஹார்ட் அட்டாக்). ஜோவின் ப்ளைட் கம்பனியில் வாடகை லிமோ மாதிரி ஜெட் எடுப்பார்.

நெட்டில் பார்த்து... இங்கே லோகல் சேனல்கள் கிரிக்கேட் என்றால் பேசுவதில்லை. ஐ.பி.என். என்று ஒன்று வருது, மக்கு பண்டாரங்கள் - ஜமைக்கன் ஆட்கள்... அப்பவும் கிரிக்கேட் இல்லை. இந்தியன் சினிமா, தமிழும் வரும். எப்போதாவது பார்த்தால் உண்டு.

ஆபீஸில் நண்பர் ஒருவர், ஹைலைட்ஸ் ரெகார்ட் செய்து கொடுப்பார்...

தமிழ் சீரியல்கள் பார்ப்பதில்லை, அதனால் இன்னும் சேனல்கள் வாங்கவில்லை. தேவையில்லை. அது தான் டி.வி.டி வருதே! நான் கடைசியாக பார்த்து.. சிதம்பர ரகசியம் டி.வி.டி.

நெட்டில், பார்ப்பேன். திரைவிருந்து, டெக்சதீஷ்.

ரோஸ், நீயா நானா, நடந்தது என்ன மற்றும் ஜோடி நம்பர் ஒன்.

சூடான தீர்ப்பால், ராகினிஸ்ரீ என்ற பெண் மூலம் அறிமுகம் ஆன, ஏர்டெல் சுபர் சிங்கர். இதெல்லாம், ஆபீஸில் பார்ப்பது... வேலை இல்லாத போது... இப்போது தான் தலை போகிற வேலை.

*************

நேற்று இரவு, பன்னிரண்டு மணி அளவில் வீடு வந்தோம். ப்ளைட் சீக்கிரம் வந்தது. அரை மணி நேரம்... ஹெட் விண்ட்ஸ் குறைவு என்றார்கள்.

உடனே டாக்சி கிடைத்தது... ஸ்பெசல் சர்வீஸ்... இரவு நேரம் என்பதால், எல்லோ கேப்ஸ் இல்லை... அரை மணியில் வீடு. என்பது டாலர் என்பது அதிகமாக தோன்றியது! இருபது டாலர் டிப் வேறு! ஆப்கானிஸ்தான் டிரைவர். என்னை பார்த்து ஆர் யு ஜமைக்கன் என்றார்... நோ இந்தியன் என்றேன்.. பிறகு ஒன்றும் பேசவில்லை.

வீடு சுத்தமாக இருந்தது. களைப்பு தூக்கம் .... ப்ரான்க்பர்ட்டில் ஏறும் போது சாப்பிட்டு விட்டு தூக்கம்... ஏழு மணி நேரம்... இறங்குவதற்கு முன், ஒரு சிறு ஸ்நாக்... டின்னராம் அது... கோல்ட் சீஸ் சான்ட்விச்! அத்தை வீட்டு சமையல் என்பார்கள் அம்மா கேலியாக அது தான் அது...

அங்கு டின்னர், ஹிந்து மீல் என்று சொல்லியிருந்தோம்
..... வாழை இலையில் வைத்திருந்த புலாவ் சாதம்.... பன்னீர் கறி... நான் சூடாக... மற்றும் காரட் ஹல்வா.. அருமை...

பிராங்க்பர்ட் வரை எங்களோடு லண்டன்காரர் சிவகுமார் என்பவர் வந்தார். ஐ.டி. கம்பனியில் தலைவர். கோவையில் படித்தவர். படிப்பு முடிந்து, ஒரு சாதரண ட்ரைனிங் இன்ச்டிடூடில் வேலை செய்து, என்.ஐ.ஐ.டி ஜாயின் செய்து, பிறகு டெல்லி சென்று டெவலபர் வேலை பார்த்து... அமெரிக்கா செல்ல முடியாமல், லண்டன் ஆப்சன் வந்து... பெர்மனன்ட் ரெசிடன்சி... இப்போ சிடிசன். இன்னும் இந்தியர் மாதிரி தான் இங்கிலீஷ் பேசுகிறார்... என்னை உற்று உற்று பார்த்தார், கடித்து தின்பதை போல. என் வயது இருக்கும். வைட் ஆளை கட்டியிருப்பதால்?

அவர் ஒரு பெரிய பொறுப்பில் உள்ளார்.

அதை பற்றி ... கம்பனி ரிசர்வ்ஸ் ௨0 மில்லியன் பவுண்ட்ஸ்... டர்ன் ஓவர் இந்த வருடம் ௨0 மில்லியன் பவுண்ட்ஸ்... profit குறைவு.. கடன் வாங்கி தான் சம்பளம் கொடுக்கிறார்கள். சுவிஸில் ப்ரோஜக்ட் கிடைத்தால் சரி, இல்லாவிட்டால், இந்திய திரும்புகிராராம. கொடுமைங்க.

எப்படியோ பிரேக்பாஸ்ட் சாப்பிட்டு கொண்டு ஒரு ப்லோக் என்ட்ரி.

Sunday, December 14, 2008

ஜூரிக்கிலிருந்து கிளம்புகிறோம்

காலை ... எழு மணிக்கு கிளம்பி... ஸ்கி ரிசார்ட்... யெல்ம்...

என்ன ஒரு மணி நேரம் சகி பண்ணலாம். அவ்வளவு டைம் தான்... இருந்தது.

பசி மூன்று முறை சாப்பிட்டேன், காலையில் இருந்து. ஜோ கண்ணடித்து சிரிக்கிறார். நல்லதாக இருந்தால் சரி.

அரை நாள் ட்ரிப்... அங்கேயே லன்ச்... பொடேடோ பர்கர். போதுமா? ச்பிநேச் பரோத் சூப்.

ஒரு மணிக்கி அங்கிருந்து ரிடர்ன்...

**********

நேற்று நலல் பயணம்... வழியெல்லாம் எப்படி ஸ்நொவ் எடுத்து போடுகிறார்கள். தடை இல்லை. நோ ப்ராப்ளம்.

ஜோவின் பிரண்ட் பேர்னில் ஒரு ஹோட்டல் ரிசார்ட் வைத்துள்ளார். அமெரிக்கன். பாஸ்டன்காரர். மனைவி சுவிஸ். குடும்ப பிசினஸ்.

நான் கேட்டுவிட்டேன், எப்படி இந்த கடுங்குளிரில்...? வாழ்க்கை என்றார்...

அப்புறம், இங்கே குழந்தை பிறப்பு கம்மி.

நிறைய ஸ்ரீலங்கன்ஸ் வந்து அருமையாக வேலை செய்கிறார்களாம்...

தேனிக்காரர்கள், நல்ல கவனிப்பு. வெண்டக்காய் கார குழம்பு, எங்க ஊரு ஸ்பெசல். வற்றல்... அருமை. அவல் பாயாசம்...

குழந்தைகள் எல்லாம் இந்தியாவில் எஞ்சினீரிங் படிக்கிறார்கள், இங்கு பிறந்தவர்கள்... நெக்ஸ்ட் ஸ்டாப், அமெரிக்கா.

----------------

மீண்டும் ஹோட்டல் வந்து ரெடி ஆகி, இன்னும் ஒரு மணி நேரத்தில் ஏர்போர்ட்... கிளம்ப வேண்டும்...

இரவு பிராங்க்பர்ட், ஒரு மணி நேரம் ப்ளைட். இப்படி தான் டிக்கட் கிடைத்தது.... கடைசி நிமிடம் என்றால்...

ஆறு மணிக்கு தான் அங்கிருந்து நியூ யார்க் ப்ளைட். இரவு பதினோரு மணி லோகல் டைம் இறங்குவோம்.

ஒரு மணி ஆகும் தூங்குவதற்கு... ப்ளைட்டில் நன்றாக தூங்க வேண்டும்...

மெயிட் வந்து நியூ யார்க் வீடு சுத்தம் செய்திருப்பார்...

தூங்கி எழுந்து... காலை எட்டரை மணிக்கு அடுத்த நாள் வேலை என்று ஓட்டம்...

-------------------

அவசரமாக படித்த விஷயம்... கொடுமை... ஆந்திராவில் மக்கள் தீர்ப்பு!

மீண்டும் சந்திக்கிறேன்...