Sunday, August 30, 2009

நெடு நாட்களுக்கு பிறகு

இன்று தான் கொஞ்சம் நேரம் கிடைத்தது. ஒரு மகிழ்ச்சியான மற்றும் குடும்பத்தில் சோகமான விஷயம்.

வேலையை விட்டு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகிறது. ஜூன் 30 கடைசி நாள் சம்பளத்தோடு! ஜோவின் கம்பெனியில் இன்வேச்ட்மேண்டுகளை பார்க்கிறேன். அடுத்த வருடம் செப்டம்பரில் சிறு இந்திய பிரான்ச் ஒன்று பெங்களூரில் ஓபன் செய்ய திட்டம். பணம் புழக்கம், பெரிய சம்பளம் இல்லாதது கொஞ்சம் கஷ்டம் தான். ( வேலை இல்லா திண்டாட்டம் )

தங்கையின் குடும்பம் இங்கு இருப்பதால் கொஞ்சம் உதவி - மகிழ்ச்சி. அப்பாவும் அம்மாவும், இந்த வருடத்தில் இனி இந்திய ட்ரிப் போகவில்லை. என்னோடு இருக்க வேண்டும்! நான் குடும்ப வழியில் இருக்கிறேன். நல்ல செய்தி டிசம்பர் கடைசிக்குள்!

***

சென்ற வாரம் ஜோவின் மாமா ( அரசியல்வாதி ) பாஸ்டனில் காலமானார். எழுபத்தி ஏழு வயது. ப்ரெயின் கேன்சர். :-(

***

இங்கு ஷாருக் கானுக்கு நடந்த அவமானம் குறித்து மிகவும் அதிகம் பேசியது அமெரிக்கர்கள் தான்.

ஏற்கனவே எழுதியிருக்கிறேன், அமெரிக்கவில் நுழையும் போது, அமெரிக்கன் சிடிசன் ஆன எனக்கே, ஜோவை அனுப்பி விட்டு, நான்கில் ஒரு முறை, என் திருமணம் , வேலை முதலியனவற்றை பற்றி கேட்பார்கள். கலர் வித்தியாசம்! என்ன செய்வது, இங்கு அனைவரும் பயந்தாங்கொள்ளிகள். அதுவும் செப்டம்பர் பதினொன்று பயம் இன்னும் பீதியை கிளப்புது!

***

இந்த வருடம் நவராத்ரி பெஸ்டிவலுக்கு நியூ ஜெர்சி செல்லபோவதில்லை. உடல் நிலை காரணம். அப்புறம், பழைய கலை இருக்காது, வேலை , சம்பளம் திண்டாட்டம்...

***

எனக்கு நிறைய கமன்ட்சுகள். அத்தனையும், ஏன் இத்தனை நாள் எழுதவில்லை என்று. ரொம்ப தான் பேன்ஸ் போல.

இப்போ எழுதிட்டேன். :-)

7 comments:

Vinitha said...

Welcome back!

sriram said...

welcome back Divya
I kept looking for new posts all the time.
கறுவுற்று இருப்பதுக்கு வாழ்த்துக்கள், சுகப் பிரசவம் ஆக பிரார்த்தனைகள்.

Ted இன் எங்களுக்கும் மிகப் பெரிய இழப்பு, Airport க்கு பேர் மாற்றம் செஞ்சு அவர் பெயரையும் வைக்க யோசிக்கிறார்கள். Logan Kennedy என்று வைத்தால், Massachusetts மக்களைத் தவிர அனைவருக்கும் JFK இன் நினைப்பு தான் வரும் Tedஇன் நினைப்பு வராது, ஒரு முக்கிய கட்டிடத்திற்கு Ted Kennedy Building என பெயரிடலாம். முடிந்தால் இதை Joe மூலம் தெரியப்படுத்தவும்.
என்றும் அன்புடன்
பாஸ்டன்ஸ்ரீராம்
bostonsriram.blogspot.com

Parthasarathy said...

Keep going

Raju said...

Hi Divya

I am at New York on work. Is there a possibility that we can meet?

I am here for a week only.

Best Regards

DIVYA said...

Raju, As a policy I don't not meet outsiders in USA. Sorry. I will give you a call.

Good luck in your trip.

நிகழ்காலத்தில்... said...

\\நல்ல செய்தி டிசம்பர் கடைசிக்குள்!\\

வாழ்த்துக்கள் சகோதரி :))

butterfly Surya said...

குடும்ப வழியில் இருக்கிறேன்.///

வாழ்த்துகள் திவ்யா.

Take care..