Saturday, March 21, 2009

மீண்டும் கோவை

நேற்று நடு இரவில், சுமார் ஒரு மணிக்கு கோவை வீட்டிற்க்கு வந்தேன். இப்போது தான், கொஞ்சம் நேரம் முன் எழுந்தேன்.

டோகியோ டு சிங்கப்பூர் ஏழு மணி நேரம். மூன்று மணி நேரம் வெயிட்டிங். வெளியே வந்து தான் செக்கின் செய்தேன். சில்க் ஏர் டெர்மினல் வேறே.

எங்கள் சொந்தக்காரர் சுதீஷ் வந்திருந்தார். அவரோடு டின்னர். பிறகு அவர் பெண் பார்க்கும் படலம் பற்றி பேசினோம். சில கிப்ட்ஸ் வீட்டிற்க்கு அனுப்பினார்.

நானும் லிண்டிட் சாகலேட்ஸ் கொஞ்சம், தங்கை குழந்தைகளுக்காக (மற்றும் குடும்பத்திற்கு) வாங்கினேன். எப்படியும், கோவை ஏர்போர்டில் கஸ்டம்ஸ் ஆட்கள் ஒரு பேக்கட் கேட்பார்கள்.

ஒன்பது மணிக்கு சரியாக ப்ளைட் கிளம்பியது. பாதி தான் கூட்டம். தமிழ் பேசும் ஏர் ஹோஸ்டஸ்கள்.

நடு இரவு சுமார் பன்னிரண்டு மணிக்கு, கோவையில் இறங்கினோம். குடும்பம் எல்லோரும் வந்திருந்தார்கள்.... சந்தோசம். குழந்தைகள் அந்த நேரத்தில் எழுந்திருந்திருப்பது ஆச்சிரியம். அவர்களுக்கு எக்சாம் நடக்கிறது. அடுத்த வெள்ளி முடிகிறதாம்.

இன்று மருதமலை கோவில் சென்று விட்டு, கோவையில் சிலரை பார்க்க வேண்டி உள்ளது. அப்புறம் என்ன குடும்பத்தோடு கொஞ்சம் நேரம் செலவு....

தங்கை குடும்பம் ஒரு துணி சூட்கேஸ் அனுப்புவார்கள்... இரண்டு வாரத்தில் அவர்களும் நியூ யார்க் வருகிறார்கள். இனி லக்கேஜ் படலம் தான்... ஒரு வருடம் இருந்து பார்த்து விட்டு அங்கேயே இருப்பதா முடிவு செய்வார்கள்.

*********

அமெரிக்கா நண்பர் ஒருவர், திங்கள் காலை கல்யாணம் செய்கிறார். நாளை காலை சென்று பார்த்துவிட்டு, வர வேனும்.

நாளை இரவு எட்டு மணிக்கு, மும்பை சென்று, அங்கிருந்து டெல் அவிவ் பயணம்.

மீண்டும் நேரம் கிடைத்தால் எழுதுகிறேன்.


********

33 வருடங்களுக்கு பிறகு இந்திய நியூஜீலாண்டில் வெற்றி. சச்சின் 160 ரன்ஸ். ஹர்பஜன் ஏழு விகேட்ஸ். வாழ்த்துக்கள்.

Thursday, March 19, 2009

டோக்கியோவில் நான்

டோக்கியோவில் நான் - ஒரு நாள் வேலை தான்...

நேற்று இரவு இங்கு டோக்கியோ வந்தேன். ராக் கார்டென்ஸ் அருகே ஒரு இன். பத்துக்கு பத்தில் ஒரு ரூம்... அதில் நான்குக்கு நான்கில் ஒரு ஷவர் மற்றும் டாய்லட்...

காலை எழுந்தவுடன், ஒரு ஜபானீஸ் மஸ்ஸாஜ் ஒன்று, பெண்கள் கொடுத்தார்கள். கூச்சம் தான், துணி இல்லாமல்.... கை கால் நகம் எல்லாம் வெட்டி.... சுகம் தான்.... ஒன்பது மணி மீட்டிங்கிக்கு பிரெஷ்.

காலையில் மீன் ப்ரேக்பாஸ்ட் கொடுக்கிறார்கள்... நல்ல வேலை, tofu ஐட்டம் ஒன்று கிடைத்தது. மேலும் இருக்கவே இருக்கு ரொட்டி.

காலையில் இருந்து லன்ச் வரை மீட்டிங். அப்பப்பா, ட்ரான்ஸ்லேட்டர்கள் இல்லாமல், வாழ்க்கை கஷ்டம் தான். (மொழி பெயர்ப்பாளர்கள் மிக மிக அவசியம்!)

லன்ச் ஒரு மேடிடேரேனியான் ரெச்டரான்டில்...

வேலை செய்துக்கொண்டே ஊர் சுற்றுதல், பெரிய விஷயம் தான்... இது ஒரு மரியாதையை நிமித்தமான சந்திப்பு என்பதால், தப்பித்தேன்.

சில இடங்களை சுற்றி பார்த்தேன்.... டோக்கியோ பேலஸ் மற்றும் க்யோடோ கார்டன்ஸ்... டைஜோ ராக் கார்டன்ஸ்...

காலையில் குளித்து விட்டு இரண்டு நாட்கள் அழுக்கு துணியெல்லாம் அங்கிருந்த லாண்டரி பேகில் வைத்திருந்தேன். பெட்டி உள்ளே வைத்து மூடவில்லை. மறந்துவிட்டேன். இப்போ, சாயந்திரம் வந்து பார்க்கும் போது, உள்ளாடைகள் உட்பட, துவைத்து அழகாக அயர்ன் செய்து வைத்திருந்தார்கள். ரூம் வாடகையில் சேர்ந்தது... யு.எஸ். நானூறு டாலர்கள் ஒரு நாளைக்கு.
இன்று வேலை எல்லாம் ஓவர். நாளை காலையில் ஒரு சிறு ப்ரேக்பாஸ்ட் மீட்டிங் முடிந்து விடும். அப்படியே ப்ளைட் 11.30 மணிக்கு, சிங்கபூரில் சாயந்திரம் ஆறு மணிக்கு இறங்கி, கோவை ப்ளைட் ஒன்பது மணிக்கு பிடிக்க வேண்டும். வெள்ளி நடு இரவில் அங்கு இந்தியாவில்... கோவை... பரவாயில்லை, இரண்டு மாதத்திற்குள் மீண்டும் ஒரு முறை... ஞாயிறு இரவு மும்பை , துபாய் வழியாக, டெல் அவிவ். (இந்த ட்ரிப் எல்லாம் சேர்த்து முப்பதாயிரம் மைல்கள் என்றார் ட்ராவெல் எஜன்ட்) அடுத்த புதன் மதியம் தான் நியூ யார்க். ப்ளைட்டில் தான் தூங்கனும்.

Tuesday, March 17, 2009

தைவானில் நான்

தைவானில் நான் இரண்டு நாட்கள் வேலையாக வந்துள்ளேன். இது தானா முதல் முறை... சனி இரவு கிளம்பினேன். வரும் வாரம் பிசி. டோக்கியோவில் வியாழன் மற்றும் வெள்ளி வேலை முடித்து விட்டு, இரண்டு நாள் இந்தியாவில் இருந்து விட்டு இஸ்ரேல் டெல் அவிவ் அடுத்த திங்கள் செவ்வாய் வேலை முடித்து விட்டு, புதன் மதியம் நியூ யார்க் திரும்பறேன். பத்து நாட்கள்....

சில படங்கள்... நான் க்ளிக்கியவை அல்ல. இன்டெர்நெட்டில் இருந்தது.(இங்கே இப்போது நடு இரவு ஒரு மணி.... தூக்கம் இல்லை... ஜெட் லாக்)