Thursday, October 15, 2009

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
http://jemima.files.wordpress.com/2006/10/deepavali.jpg

நாளைக்கு எல்லோரும் பத்திரமா கொண்டாடுங்க!

இருபது வருடமாக வெள்ளை மாளிகையில் நடந்த தீபாவளி கொண்டாட்டம், பணம் கஷ்டத்தால் ( ரிசெசன் ) இந்த வருடம் இல்லை. எல்லோருக்கும் இலவச மெடிக்கல் கேர் கொடுக்கணும் அல்லவா?

இங்கு அமேரிக்காவில் பதினோரு லட்சத்திற்கு மேல், சிடிசன்ஸ் மற்றும் கிரீன் கார்டு இந்தியர்கள் உள்ளனர். இதை தவிர, ஒரு ஐந்து லட்சம் குடும்பங்கள் தொழில் ரீதியில் இருக்கும்!

Wednesday, October 14, 2009

நோபல் ஒபாமா வாழ்க

நோபல் ஒபாமா வாழ்க!
Barack Obama standing in front of the American flag: Nobel Prize: Ten famous peace prize winners


எல்லோரும் அமேரிக்காவில் ( ஏன் உலகில் ) ஆச்சிரியமாக கொண்டாடுகிறார்கள் ). இனி தான் ஒபாமாவிற்கு இருக்கு - நடந்து கொள்ளும் விதம்!

ஒரு ஹோப் கொடுத்ததற்காக என்றால், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொடுத்திருக்கலாம்! என் மனமார்ந்த விருப்பம் இது! பாகிஸ்தான் வார் இல்லாமல் ஆறு வருடம் என்ன சமாளிப்பு! நினைத்துப்பாருங்கள்! ( மும்பை டேரரிச்டு அட்டேக் - ஒரு பாடம்! ( நான் அந்த சமயம், ஒரு நாள் முன் அமெரிக்கா கிளம்பிவிட்டேன்! )

***

நிறைய டைம் இருப்பதால், தமிழ் தேடி படிக்கிறேன்!

நேசமித்ரன் என்ற கவிதை மன்னருக்கு நமஸ்காரங்கள்! ( வினிதாவின் நல்தருணங்கள் ப்ளாக் வழியாக சென்றேன் )

ட்விட்டரில் பார்கிறேன், தமிழிலும் அடித்து துவைக்கிறார்கள்! சின்மயி கூட ட்விட்டரில் எழுதுறாங்க போல. எனக்கும் சில கமண்ட்ஸ் போட்டாங்க அல்லவா?

என்னை பற்றி கூட ஒருவன், கேட்டுக்கோ, கேட்டுக்கோ... திவ்யா ஆண்டி ஹில்லாரிகிட்ட பேசிப்புட்டாங்கோ... இனி எல்லா இஷ்யூவும் SOLVED! http://is.gd/zOlU ரணகளமா இருக்குப்பா! என்று ட்விட்டரில் எழுதியிருந்தான்!
( ஸ்ரீலங்காவில் இப்போ கொஞ்சம் என்ன பிரபாகரன் தமிழ் புலி பிரச்சனை குறைந்ததா இல்லையா? ) பெயர் கூட சொல்லாமல், டுபாக்கூர் பெயரில் எழுதும் அவனுக்கும் ஒரு "நோ பல்" பரிசு கொடுங்கள்! அமெரிக்காவை வீடு அவன் வெளியேறும் நாள் வெகு தொலைவில் இல்லை!

அப்புறம் ஒரு தமிழ் ப்ளாக் போயட்டுக்கு அடி உதை கிடைத்ததாமே? தமிழ் ப்ளாகர்ஸ் ஏன் இப்படி! ஒரு வருடம் சும்மா இருந்தால் ( இந்த மாதிரி இல்லாமல் ) உங்களுக்கும் எல்லாரும் சேர்ந்து 'நோ பல் பரிசு கொடுக்கலாம்!

இனிமேல் கமண்ட்ஸ் ஆப்சன் வைக்கபோவது இல்லை. ரொம்போ ரொம்போ கேவலமாக கமண்ட்ஸ் வருது. எல்லோருக்கும் இப்படியா?

***

சரி கோவையில் ஸௌடாம்பிகா காலேஜ் ( தொண்டாமுத்தூர் வழி ) அருகில் ஒரு பெரிய ரியல் எஸ்டேட் ப்ராஜக்ட் வருதாமே? நல்ல ப்ராஜக்ட் என்று கேள்விபட்டேன், அடுத்த வருடம் வாங்கலாம்....

அப்பா அம்மா அடுத்த வருடம் தான் இந்தியா பயணம் செய்வார்கள்.

தங்கை குடும்பம் கிறிஸ்தமஸ் சமயத்தில் இந்தியா வருகிறார்கள். இங்கு ஒரு மாதம் குழந்தைகளுக்கு லீவு! பொங்கல் அங்கு கொண்டாடலாம்!

எல்லாம் என் டெலிவரி டைம் பொருது தான் நடக்கும்.