Monday, December 15, 2008

மீண்டும் நியூ யார்க்

எழுந்து கொஞ்ச நேரம் ஆனது. சச்சினின் வெற்றி சென்சுரி... இந்தியாவின் வெற்றி.. சூப்பர். வாழ்த்துக்கள். 19 வருடங்கள், பெருமை... இந்தியாவிற்கு. எங்கள் கனக்டிகட் வீடு அருகில் தான் அவரும் வீடு வைத்துள்ளார். அவர் எஜன்ட் வாங்கி கொடுத்தது. (இப்போது மஸ்கரந்ஹஸ் உயிரோடு இல்லை, 48 வயதில் ஹார்ட் அட்டாக்). ஜோவின் ப்ளைட் கம்பனியில் வாடகை லிமோ மாதிரி ஜெட் எடுப்பார்.

நெட்டில் பார்த்து... இங்கே லோகல் சேனல்கள் கிரிக்கேட் என்றால் பேசுவதில்லை. ஐ.பி.என். என்று ஒன்று வருது, மக்கு பண்டாரங்கள் - ஜமைக்கன் ஆட்கள்... அப்பவும் கிரிக்கேட் இல்லை. இந்தியன் சினிமா, தமிழும் வரும். எப்போதாவது பார்த்தால் உண்டு.

ஆபீஸில் நண்பர் ஒருவர், ஹைலைட்ஸ் ரெகார்ட் செய்து கொடுப்பார்...

தமிழ் சீரியல்கள் பார்ப்பதில்லை, அதனால் இன்னும் சேனல்கள் வாங்கவில்லை. தேவையில்லை. அது தான் டி.வி.டி வருதே! நான் கடைசியாக பார்த்து.. சிதம்பர ரகசியம் டி.வி.டி.

நெட்டில், பார்ப்பேன். திரைவிருந்து, டெக்சதீஷ்.

ரோஸ், நீயா நானா, நடந்தது என்ன மற்றும் ஜோடி நம்பர் ஒன்.

சூடான தீர்ப்பால், ராகினிஸ்ரீ என்ற பெண் மூலம் அறிமுகம் ஆன, ஏர்டெல் சுபர் சிங்கர். இதெல்லாம், ஆபீஸில் பார்ப்பது... வேலை இல்லாத போது... இப்போது தான் தலை போகிற வேலை.

*************

நேற்று இரவு, பன்னிரண்டு மணி அளவில் வீடு வந்தோம். ப்ளைட் சீக்கிரம் வந்தது. அரை மணி நேரம்... ஹெட் விண்ட்ஸ் குறைவு என்றார்கள்.

உடனே டாக்சி கிடைத்தது... ஸ்பெசல் சர்வீஸ்... இரவு நேரம் என்பதால், எல்லோ கேப்ஸ் இல்லை... அரை மணியில் வீடு. என்பது டாலர் என்பது அதிகமாக தோன்றியது! இருபது டாலர் டிப் வேறு! ஆப்கானிஸ்தான் டிரைவர். என்னை பார்த்து ஆர் யு ஜமைக்கன் என்றார்... நோ இந்தியன் என்றேன்.. பிறகு ஒன்றும் பேசவில்லை.

வீடு சுத்தமாக இருந்தது. களைப்பு தூக்கம் .... ப்ரான்க்பர்ட்டில் ஏறும் போது சாப்பிட்டு விட்டு தூக்கம்... ஏழு மணி நேரம்... இறங்குவதற்கு முன், ஒரு சிறு ஸ்நாக்... டின்னராம் அது... கோல்ட் சீஸ் சான்ட்விச்! அத்தை வீட்டு சமையல் என்பார்கள் அம்மா கேலியாக அது தான் அது...

அங்கு டின்னர், ஹிந்து மீல் என்று சொல்லியிருந்தோம்
..... வாழை இலையில் வைத்திருந்த புலாவ் சாதம்.... பன்னீர் கறி... நான் சூடாக... மற்றும் காரட் ஹல்வா.. அருமை...

பிராங்க்பர்ட் வரை எங்களோடு லண்டன்காரர் சிவகுமார் என்பவர் வந்தார். ஐ.டி. கம்பனியில் தலைவர். கோவையில் படித்தவர். படிப்பு முடிந்து, ஒரு சாதரண ட்ரைனிங் இன்ச்டிடூடில் வேலை செய்து, என்.ஐ.ஐ.டி ஜாயின் செய்து, பிறகு டெல்லி சென்று டெவலபர் வேலை பார்த்து... அமெரிக்கா செல்ல முடியாமல், லண்டன் ஆப்சன் வந்து... பெர்மனன்ட் ரெசிடன்சி... இப்போ சிடிசன். இன்னும் இந்தியர் மாதிரி தான் இங்கிலீஷ் பேசுகிறார்... என்னை உற்று உற்று பார்த்தார், கடித்து தின்பதை போல. என் வயது இருக்கும். வைட் ஆளை கட்டியிருப்பதால்?

அவர் ஒரு பெரிய பொறுப்பில் உள்ளார்.

அதை பற்றி ... கம்பனி ரிசர்வ்ஸ் ௨0 மில்லியன் பவுண்ட்ஸ்... டர்ன் ஓவர் இந்த வருடம் ௨0 மில்லியன் பவுண்ட்ஸ்... profit குறைவு.. கடன் வாங்கி தான் சம்பளம் கொடுக்கிறார்கள். சுவிஸில் ப்ரோஜக்ட் கிடைத்தால் சரி, இல்லாவிட்டால், இந்திய திரும்புகிராராம. கொடுமைங்க.

எப்படியோ பிரேக்பாஸ்ட் சாப்பிட்டு கொண்டு ஒரு ப்லோக் என்ட்ரி.

No comments: