Saturday, November 8, 2008

விஜய் டிவி ஜோடி நம்பர் 1

ஒன்று கவனித்தேன், ஊரே அடங்கிவிடுகிறது. விஜய் டிவி ஜோடி நம்பர் 1 பார்க்க. ஜோ பார்த்துவிட்டு, சிரி சிரி என்ற சிரிக்கிறார். பாதி இங்கலிஷ் பேசுகிறார்கள்... சோ நோ ப்ரோப்ளம். ஜோவிற்கு கொஞ்சம் தமிழ் தெரியும். ரஜின்காந்த் பொண்ணு is so matured, அவர் போய் தனுஷை கல்யாணம் செய்தது.. புரியவில்லை. இதெல்லாம் சினிமா உலகில் சகஜம்! அம்மா சொல்றாங்க, அவ தங்கச்சி சிம்புவை கட்டினால் ஜோடி நல்லா இருக்கும்.

ரோட்டில் சத்தம் இல்லே.

எங்கள் குடும்பமும் தான். டிவி அடிமை.

அம்மா கேட்டார்கள், ஒன்பது மணிக்கு டின்னெர் போதுமல்லவா? பாருங்கள், மாப்பிள்ளை இரண்டு நாட்கள் தான் இந்தியாவில், அதற்குள் .... பசி வயிற்றை கிள்ளுது. இது தான் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் வித்தியாசம். அங்கு பசியே தெரியாது... ஜூஸ் இருக்கும். கேண்டி. இங்கே அது அதிசயம்.. வழக்கம் இல்லைங்க.

டிவி முன்னால், தோசை சட்னி சாம்பார் வரும். மாப்பிள்ளைக்காக ஸ்பெசல் குழி பணியாரம்...

***

நான்கு மணிக்கு தான் ஆர்.எஸ்.புரம் சென்று வந்தோம். கேக், சட் போன்ற வகைகள்... ஜோவிர்ற்கு வயிற்றில் கடா முடா. பயம்!

தங்கை குழந்தைகள் அழைத்துக்கொண்டு, பக்கத்தில் இருக்கும் சிறு fun சென்டருக்கு சென்றேன். ஜோவும் வந்தார். ஒரு கேம் விளையாட இருபது ருபாய். பணம் தண்ணீராக செலவழிக்கிறார்கள். மாச்டேர்கார்ட் மொமன்ட்ஸ்.

அமெரிக்காவில், பார்த்து பார்த்து செலவு செய்வோம். ஹோட்டலில் சாப்பாடு மீந்தினால், கவரில் போட்டு கொண்டு வருவோம். செல்லமாக, டாகி பேக்.

***

காலையில் மருதமலை கோவிலுக்கு, நிறைய பாரினர்ஸ் வருகிறார்கள். ஜோடி ஜோடியாக மக்கள் ... மலைகளில்... காதல் பறவைகள். அளவு மீராமல், புனிதமாக இருந்தால் சரி!

மதியம் சாப்பாடு அருமை... சிம்பிள். சாதம். பருப்பு. நெய். ரசம். காய் கூட்டு. கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மய்சூர் பா. பால் பாயசம், மற்றும் சட்டி தயிர்.

சிறு குழந்தை போல, பாயசம் கிளாசில் ஊற்றி, ஸ்பூன் போட்டு சாப்பிட்டேன்.

மூன்று மணிக்கு தேவி டெக்ஸ்டைல்ஸ் கடைக்கு சென்றேன்... அப்பா மக்கள் எப்படி செலவு செய்கிறார்கள்! கோவை மாறி விட்டது, ஒவ்வொரு முறையும் வித்தியாசம்.

என் நண்பி திருப்பூர்க்காரி ஒரு சுடிதார் செட் பரிசளித்தாள். ஜோவிற்கு சில டி- ஷர்ட்ஸ். நன்றி. சூப்பர்.

௨000 ருபாய் இல்லாமல் நல்ல சுடிதார் இல்லை. சிலது எடுத்தேன். நியூ ஜெர்சியில் ஒரு மாமி அட்டகாசமாக வீட்டில் போட்டிக் (ருதர்போர்ட்) வைத்துள்ளார்... நூறு டாலருக்கு, நாம் கேட்கும் ஸ்டைலில் தைத்து கொடுப்பார்! ஹும்...

ஜோவிற்கு அப்பா ஒரு சூட் பரிசளித்தார். டெய்லர்கள் ஓடி ஓடி பிட்டிங் செய்த விதம்... அர்மானி செவேந்த் அவனூ நியூ யார்க் ஷோவ்ரூம் தோற்றது! அங்கு இரண்டாயிரம் டாலர்கள். இங்கு நாற்பதாயிரம் ருபாய். கம்ப்ளீட் செட்.

****
கிரிக்கேட் மோகம் , டிவி ஷோ ரூம்கள் வாசல்கள் கூட்டம்.. கஷ்டகாலம்..

அப்புறம் கவனித்த ஒன்று கரண்ட் கட்.. எப்போது வேண்டுமானாலும், சிறிய ஜென்செட் மற்றும் இன்வர்டார் இருப்பதால் ஓகே.

அப்பா ஜோக்கடித்தார், ஆற்காடு வீராசாமி பவர் கட் ஆகிறது!

Friday, November 7, 2008

என்ன விஷயம்

முதல் நண்பருக்கு நன்றி. தேங்க்ஸ். இங்கே பாருங்கள். படித்ததில் பிடித்தது...

முதலில் கமண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி, சிலது மட்டும் தான் அனுமதித்து உள்ளேன்... எல்லாம் பர்சனல் கேள்விகள் ... அது தான்.

முதலில், என் போட்டோ ஒரு இரண்டு நாள் தான் ப்ளோகில் இருந்தது, எடுத்து விட்டேன், just being personal!

நான் என் வேலை விட்டது ஒரு முஸுஅல் அண்டேர்ஷ்டண்டிங் படி. ;-)

இந்த வருடம் போனஸ் இல்லை. பரவாயில்லை. வேலை விட்டாக வேண்டிய கட்டாயம். டிசம்பர் 31 அபிசியல் கடைசி வேலை நாள், ஆபீஸில் கடைசி நாள் டிசம்பர் 12. இருக்கும் லீவு...

ஜோ, வாஷிங்கடனில் நான்கு வருடம் இருக்கும் வாய்ப்பு அதிகம். ரொம்ப பிஸியாக இருப்பார், வெளி நாடு ட்ராவெல் என்று... சோனல் ஷா பற்றி இப்போது படித்துக்கொண்டு இருப்பீர்கள், ஜோவின் நெருங்கிய நண்பர். அதனால், நான் ஒரு ஐடி சம்பந்தப்பட்ட வேலை எடுக்க வேண்டும். ஈசி.

சென்னை கம்பனி வாய்ப்பு... இப்பொது வாங்கும் அதே சம்பளம், போனஸ் குறைவா என்பது சத்யா தான் சொல்ல வேண்டும். பெங்களூர் புது ஆபீஸில் இருக்கலாம், நிறைய காலம். பாதி நாள் இந்தியாவில், மிச்சம் அமெரிக்காவில். நியூ யார்க் அல்லது வாசிங்க்டன் டிசி. அதை விரும்புகிறேன். கைதர்ஸ்பார்கில் எங்கள் காண்டோ வீடு ஒன்று உள்ளது. அங்கு இருப்போம், சென்றால்!

It might work out! I will keep you guys posted!

*****

கோவையில் என்ன விஷயம்?

தலை வாழை இலை சாப்பாடு.. ஜோ விரும்பி சாபிட்டார். அட பிரதமன் அம்மா செய்திருந்தார்கள். கேட்டு கேட்டு சாப்பிட்டார். :-0

காலை ஆறு மணிக்கு குளிர் காற்றில் ஜாகிங் சென்றோம், எல்லோரும் வேடிக்கை பார்த்தார்கள்! ஜோ நல்ல டேன் ஆன ஆள், சற்று தூரத்தில் நார்த் இந்தியன் போல தான் தெரிவார்... கோவையில் நிறைய பாரினர்ஸ், ஜோ அவுட் ஆப் பிளேஸ் ஆக இருக்கமாட்டார்!

ஜக்கி வாசுதேவ் அமெரிக்கவில் இருப்பதாக செய்தி. அதனால், ஒரு விசிட் மட்டும் அங்கு நாளைக்கு, இப்போது கொஞ்ச நேரத்தில் மருதமலைக்கு.

இட்லி, தோசை, அரிசி புட்டு, சந்தவை + தேங்காய் பால், இனிப்பு வடை (கஜ்ஜாயம்) என டோடல் சவுத் இந்தியன் சாப்பாடு. நாங்கள் இருவர் இப்போது வெஜிடேரியன் ஆனதால், இங்கே நாளைக்கு நான் வெஜ் கட்.

முடிந்தவரை வெளியே இங்கே சாப்பிடமாடோம்! அம்மா கை வாகு அப்படி!

என்னோடு படித்த பெண், திருப்பூர்காரி, வருகிறாள் சற்று நேரத்தில் பார்க்க, சென்ற முறை பார்க்கவில்லை. தனி ஒருவளாக அமெரிக்கா, யுரோப் எல்லாம் சென்று ஆர்டர் பிடிக்கிறாள்... அவளும் அவள் கதைகளும் எழுத வேண்டும்! பெயர் சொல்லவில்லை.

கோவை வந்தாச்சு

அப்பா, அம்மா, தங்கை மற்றும் மச்சான் அப்புறம் குழந்தைகள் வந்திருந்தார்கள். முதலில் அவர்கள் கையில் சாக்கலேட்டு..

காரிலேயே லாகின் செய்து மெயில் செக் .... வயர்லெஸ் கார்ட். நன்றி!

ஜெட்லைட் ப்ளைட். என்ன லுக்கேஜ் அதிகம் என்பதால், கொஞ்சம் காசு அதிகம் கொடுத்தோம். இருபது கிலோ, பிளஸ் ஹேண்ட் பெக் மட்டும் அல்லொவ் செய்வார்கள். அதற்க்கு மேல், ௨000 கறந்துவிட்டார்கள். ப்ளைட் கூட்டம். புல்.

ஞாயிறு இரவு இதே ப்ளைட்டில், இடம் கிடைத்து விட்டது! ரிடர்ன் சென்னை வழி இல்லை. நேர் வழி. ரஜினி சொல்ற மாதிரி தனிவழி. அதை அடுத்த வாரத்திற்கு மாற்றி விட்டேன். 1500 பிடுங்கி கொண்டார்கள். ஜோ டிக்கட் மாற்றியதில்... இரண்டு டிக்கட் ஒன்றானதால், ஒன்றுமில்லை... கேன்சல் சார்ஜ் போக, பரவாயில்லை.

அமெரிக்காவில், பாயிண்ட் டு பாயிண்ட் செல்ல, எக்ஸ்ட்ரா வாங்கமாட்டார்கள். எந்த வழி வேண்டுமானாலும். மாற்றலாம். அதே ஜெட் கம்பனி தான். கொடுமைங்க இது.

****

பதினோரு மணி மீட்டிங், லன்ச் தூக்க கலக்கத்தில் போனது... இரண்டு மணி வரை. ஜோ ஹோட்டலில் சாப்பிட்டு விட்டார்.

நேராக நரிமன் பாயிண்டில் இருக்கும் ஆபிஸ், சிறிது மீட்டிங், அப்புறம், சாப்பிட கிளம்பினோம். எர்லி... 12 நூன்.

லன்ச் என்ன? எங்கே? டெண்டுல்கர்ஸ் கியுசைன். சிவாஜி மார்க், அபோல்லோ பந்தர் என்ற இடத்தில் உள்ளது... காப்பே பரேட்?

அங்கிருந்து அடித்து பிடித்து, ஒரு மணி நேரத்தில் ஹோட்டல் வந்து, செச்கவுட் ஜோ செய்திருந்தார்... என்ன ஏர்போர்டில், இரண்டு மணி நேரம் உட்கார்ந்திருந்தோம், லவுஞ்சில். சரியான வேலை நடக்கிறது, ஏர்போர்ட் மாற்றங்கள். இந்திய முன்னேறுகிறது! எங்கு பார்த்தாலும் ஒபாமா பேச்சு!

****

இப்போது இரண்டு நாட்கள் நன்றாக என்ஜாய் செய்ய வேண்டும். தங்கச்சி பொடிபசங்கள் .. சாக்கலேட்டுக்கு அடி போடுவது அருமை!

அம்மா சமையல் கொஞ்ச நேரத்தில். வாழை இலையில் ஜோவிர்ற்கு பரிமாறுவது, விரும்புவார்! கையில் வேறு சாப்பிட வேண்டும்... பார்க்கலாம்!

முடிந்தால் ஒரு வீடியோ பதிவு போடுகிறேன்.

There is nothing like, resting on the lap of your mother, at whatever age!

Thursday, November 6, 2008

மும்பை கஸ்டம்ஸ்

இந்திய வந்து இறங்கி ஒரு மணி நேரம் போல் ஆனது! மும்பையின் பெரிய ஹோட்டல், கிரேன்ட் மராத்தா.. ஐந்து நிமிடம் தூரத்தில் தான்... என்ன ப்ளைட் சத்தம் காதை அடைக்கிறது! ஒரு நாளைக்கு 13,000/-. சென்ற வருடம் 8,000/- விலைவாசி ரொம்ப ஜாஸ்தி! என்ன சாப்பாடு கொடுக்கிறார்கள், லேட் செக் அவுட் செய்யலாம். 12 PM செக் இன் செய்தால், 11 AM செக் அவுட். நாங்கள், இன்று மூன்று மணிக்கே செக் அவுட் செய்வதால், ஒரு நாள் வாடகை.

இதை நான் எழுதியே ஆக வேண்டும்.

உலகத்திலேயே மிகவும் கேவலமான மனிதர்கள், மும்பை கஸ்டம்ஸ் அதிகாரிகள். சென்னை மற்றும் பெங்களூர் அதிகாரிகள் பரவாயில்லை.

வெளிநாட்டு ஆள் என்றால், எப்படி எல்லாம்....

காசு வேண்டுமென்றால், எதற்கு வேலை செய்கிறாய்.... :-(> எதற்கு பிறந்தவர்களோ...

அதுவும், ஒரு வெள்ளைக்காரன், ஒரு இந்திய பெண்ணோடு வந்தால், எங்கள் லுக்கேஜ் அனைத்தும் சோதனை போட்டு, போட்டிருக்கும் நகைக்கும் கணக்கு கேட்டு... அப்பப்பா...

நான் ஒரு லேப்டாப், ஜோவும் ஒன்று, வைத்துள்ளோம், எதற்கு இரண்டு என்று கேள்வி... கேடுகெட்டவர்கள்! ரூல்ஸ் தெரியாதவர்கள்.

அதிலும் ஒரு தமிழன் இருந்தான், மதுரைக்காரன்... இருநூறு டாலர் வேண்டுமாம்... பிச்சைக்காரன்! கெட்ட வார்த்தையில் திட்டியதால், தமிழன் ஸாரி மேடம் என்றான்.

முப்பது லட்சம் கொடுத்து போஸ்டிங் வாங்கினானாம்... அதற்காக!

கொடுத்தால் என்ன என்றான்!

என்ன செய்ய முடியும், கூப்பிடு , கூப்பிடு கஸ்டம்ஸ் பெரிய ஆபிசரை என்றேன்... சமாதானம் ஆனது... இந்தியாவில், எதிர்த்து பேசினால் தான் வேலை ஆகிறது!

கடைசியில்... ஒரு சாகலேட் கொடுத்து விட்டு வந்தோம்.

பதினோரு மணிக்கு ஆபிஸ் செல்ல வேண்டும். லன்ச் மீட்டிங். மூன்று மணிக்கு செக் அவுட் செய்து விட்டு, ஏர்போர்ட்... ஆறு மணி ப்ளைட் கோவைக்கு.

நாளைக்கு கோவில், ஞாயிறு ஜக்கி வாசுதேவ் இருந்தால், ஒரு நாள் பயிற்சி.

இரவு சென்னை வழியாக, மும்பை.

ஜோ அடுத்த சனி காலை (நவம்பர் 15) கிளம்பியவுடன், நான் சென்னைக்கு ஒரு நாள் ட்ரிப், நவம்பர் 15, நியூ யார்க் வேலைக்கு இன்டர்வியு, அப்படியாக இரவு கோவைக்கு சென்று பத்து நாட்கள். பெங்களூர் நண்பர் குடும்பம் இரண்டு நாட்கள் கோவை வருகிறார்கள். நவம்பர் 22, 23. சனி , ஞாயிறு.

நான் கோவையிலிருந்து, பெங்களூர் வழியாக, திங்கள் நவம்பர் 24 காலை கிளம்பி மும்பையில் இரு நாட்கள் வேலை... நவம்பர் 25 இரவு ப்ளைட், துபையில் தனியாக ஒரு பத்து மணி நேரம், நண்பர் குடும்பத்துடன் இருப்பேன், பிறகு நவம்பர் 26 மதியம் நியூ யார்க் சென்று சேருவேன். சாயந்திரம் ஐந்து மணிக்கு, ஜோவோடு, பாஸ்டன் பயணம். தாங்க்ஸ்கிவிங் எப்போதும் அவர்கள் பெற்றோர் வீட்டில் தான். நவம்பர் 30 இரவு தான் நியூ யார்க் திரும்புவோம்.

அனேகமாக, ஜோவிற்கு எதாவது வேலை வாஷிங்டன்னில் கிடைக்கும். ;-)

டிசம்பர் 12, என் கடைசி வேலை நாள், பதினேழு வருடம் ஆறு மாதம்....

************

ரூம் வந்து சேர்ந்தவுடன், இதை டைப் செய்ததால் தான் நிம்மதி!

துபாயிலிருந்து

நல்ல பிளைட். வீடு போல தூங்கினோம். நல்ல கவனிப்பு. துபாய் வந்து ஒரு மணி நேரம் ஆகிறது.

A 380 பற்றி ஒரு தனி பதிவு போட வேண்டும்.

பதினோரு மணி இரவு ப்ளைட் எடுத்தார்கள். ஒரு மணி நேரத்திற்குள், சிறு டின்னர் சாப்பிட்டு விட்டு தூக்கம். துபாய் வரும் ஒரு மணி நேரம் முன்பு கட்டாயம் எழுப்பி உணவு கொடுக்கிறார்கள். இடையில் எழுந்து, வேண்டும் ஸ்நாக்ஸ் கிடைக்கும்!

காலார நடக்கலாம். பார் வசதி உண்டு. எல்லா சீட்டுக்களும் விற்று இருந்தன.

ஒரு ஆறு மணி நேரம் கழித்து, மும்பைக்கு விமானம். என்னமோ தெரியவில்லை பசி கொல்கிறது! இரண்டு சமோசா காலி இப்போது!

ஏர்போர்ட்டிலேயே ஒரு சிறு அறை கொடுத்தார்கள். குளிக்க, ரெஸ்ட் செய்ய.

இன்னும் மூன்று மணி நேரம் தூங்கலாம். ஷாப்பிங் கிடையாது! மும்பையில் கஸ்டம்ஸ்!

நாளை வெள்ளி மதியம் சில மீட்டிங்க்ஸ். பிறகு கோவைக்கு ... ஆறு மணி ப்ளைட். கல்யாண நாள் மருதமலையில் கொண்டாட வேண்டும். இரவே மும்பைக்கு கிளம்ப வேண்டும். நேர் ப்ளைட் இல்லை. சென்னை வழி.

Wednesday, November 5, 2008

இந்தியாவிற்கு பயணம்

இன்னும் சிறிது நேரத்தில், ஏர்போர்ட் கிளம்ப வேண்டும். எல்லாம் ரெடி. இந்திய பயணம்.

எமிரடேஸ் புது A 380 விமானம். 11 மணிக்கு. வெள்ளி காலை மும்பையில் 8 மணிக்கு இருப்போம்.

பிசிநேச்ஸ் கிளாசில் படுக்கை வசதி. அருமை.

துபாய் வழி. சிறிது நேர கனக்சன். ஏர்போர்டில் இருப்போம்.

திரும்பும் வழியில், நவம்பர் 25 தனியாக இருப்பேன், ஜோ நவம்பர் 15 கிளம்புகிறார். நான் நவம்பர் 26 மதியம் நியூ யார்க் வருவேன், வந்தவுடன் பாஸ்டன் கிளம்ப வேண்டும்.

துபாயில் ஒரு இரவு இருக்க வேண்டும். நண்பர் குடும்பம் ஒன்று மீட் செய்ய வேண்டும். ஏர்போர்டில் ஹோட்டல்.

ப்ளைனில் இன்டர்நெட் உள்ளது. பார்க்கலாம்.

இந்தியாவில் இருந்து முடிந்தால், பதிவுகள்.

அமெரிக்கா தேர்தலும், டோனட்ஸ் கிப்டும்

ஜோ கடைசியாக ஒபாமாவோடு பேசினார். சரியான செகுரிட்டி செக் தொல்லை, போனில்... ஒரு நிமிடம் மட்டும்!

தேர்தலில் போட்டி போட்டு வேலை செய்தால் உற்சாகம். இந்தியாவும், அமெரிக்காவும் இந்த வகையில் ஒரு மாதிரி தான்.

சில மணி நேரமே மட்டும் தூங்கினோம். அளவு கடந்த ஆனந்தம், கொஞ்சம் பயத்துடன்.

காலை, ஆறு மணிக்கு ஜோ ஆர்டர் செய்தார்... ஆயிரம் டாலர்கள், அனைத்து அபார்த்மண்டுகளுக்கும்... டோனட்ஸ் பாக்ஸ். சூப்பர் கிப்ட்.

வெற்றி பார்டிகள், இரவெல்லாம் நடந்துள்ளன!

ஜோவின் நெருங்கிய நண்பர் ஒருவர், ஒபாமாவின் காபினேட்டில் வரலாம்.

எனக்கு ஒரு வேலை அப்படி கிடைக்குமா? தேட வேண்டும்!

இந்தியாவில் இருந்து, தாங்க்ஸ்கிவிங் சமயம் ரிடர்ன். பாஸ்டன் செல்ல வேண்டும். நவம்பர் 26 திரும்புவேன். ஜோ நவம்பர் பதினைந்து இங்கு வருவார். துபாய் வழியில்... எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்.

இந்திரா நூயி காமர்ஸ் செகரட்டரி (மினிஸ்டர்) ஆக வாய்ப்பு அதிகம்! வாழ்க.

Tuesday, November 4, 2008

ஒபாமாவிற்கு வெற்றி சந்தோசம்

நிச்சயம் இது ஒரு அருமையான வெற்றி, என்னை பொறுத்தளவில், ஜோவின் வேலை, செயல் எல்லாம் நிறைந்தது! வெற்றிகள் திருப்தி.

ஒபாமாவிற்கு வெற்றி சந்தோசம் .... ஜோவோடு போனில் கூட ஒபாமா பேசவில்லை. இன்னும் பத்து நிமிடங்களில் டிவியில் வருவார். நாங்கள் நொவெம்பர் கடைசியில் மீட் செய்யேலாம்....

370 - 168. நல்ல ஸ்கோர்.

எதிர்பாராதது, வேர்ஜினியா, நியூ மெக்சிகோ, மற்றும் ப்ளோரிடா. ஒஹையோ தெரிந்த மாதிரி தான்...

ஒபாமாவிற்கு விக்டோரி நிச்சயம்

அமெரிக்கா பிரேசிடண்ட் தேர்தலில் வோட்டு போட்ட அனுபவம் புதுமை. ஒரு சிறிய ஸ்டோரில், ஒரு ஓரத்தில்...உலகம் எதிர்பார்க்கும் தேர்தல். இதுவரை 25% போஸ்டல் மூலம் வோட்டு போட்டுவிட்டார்கள். அமெரிக்காவில் 300 மில்லியன் மக்கள். அதில் நூற்றி நாற்பது மில்லியன் தான் வோட்டு போட செய்வார்கள். நூறு மில்லியன் வோட்டுக்கள் விழுகும். இந்த முறை லைன்கள் பார்த்தால், நிச்சயம், நிறைய வாக்காளர்கள்.

காலை 5.30 AM கிளம்பினோம். அறை மணி நேரம் லைனில் நின்றோம்.

நல்ல வேலை, வோட்டர் லிஸ்டில் பேர் இருந்தது!

எல்லோரும் ஒபாமா தான் வெற்றி பெறுவார் என்று பேசிக்கொண்டது கேட்பது நன்றாக தான் இருந்தது!

இருந்தாலும், கடைசி வோட்டு என்னும் வரை, சைலன்ஸ்.

இந்த ஆறு மாநிலங்கள் தான், ரேபப்ளிகன்ஸ் மீண்டும் வெற்றி பெரும் வாய்ப்பு.

ஒஹயோ, ஜோர்ஜியா , இந்தியானா, நோர்த் கரோலினா, வேர்ஜினியா மற்றும் வெஸ்ட் வேர்ஜினியா. இங்கு தான் அதிகம் ரேசிசம் உண்டு.

காலை மூன்று அல்லது நான்கு மணிக்கு தெரியும்.

இப்போதைய நிலை 77 - 38 ஒபாமாவிற்கு. இன்னும் பாதி மாநிலங்கள் வோட்டு போடுகிறார்கள்.

ஒபாமாவிற்கு விக்டோரி நிச்சயம்!எலெக்சன் நாள்: ஒபாமாவின் வெற்றிப்பாதையில்

ஒபாமாவின் வெற்றிப்பாதையில் பயணம் செய்ய, அதிகாலையில் எழுந்திருக்கிறேன். அபர்த்மன்ட் எல்லாம், லைட் போட்டு எல்லோரும், ஒரு திருவிழா மாதிரி இருக்குது!

எங்கள் வீடிற்கு அருகில் எலெக்சன் பூத்து ஆறு மணிக்கு ஓபன் செய்வார்கள். முதலில் சென்று வோட்டு போட வேண்டும். இந்திய மாதிரி எலேக்ட்ரோனிக் வோட்டு (வேறு ஸ்டைல்).

அப்புறம்... ஒபாமாவின் வெற்றிப்படி, முதல் வெற்றி பற்றி இங்கே பார்க்கலாம்!

பாரக் ஒபாமாவின் முதல் வெற்றி


****

கார்ல் ராவ் என்பவர், புஷ்ஷின் வெற்றிக்கு உழைத்தவர்!

அவர் கூறுகிறார்... ஒபாமா தான் வெற்றி பெறுவர் என்று (நான் சொன்ன எலெக்டோரல் ஸ்கோர் தான்)!

Please vote for Obama!

Obama is going to give the best for USA and the peace in the world!

Think about this and please vote for Obama!

Thanks.

--
Ciao'

Luv
Divya
:-)
"ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாம் துயரம் தரும். " - குறள் எண் : 792

Monday, November 3, 2008

ஒபாமாவின் கடைசி பிரச்சார நேரம்

ஒபாமாவின் கடைசி பிரச்சார நேரம் ... சூடு பறக்கிறது.

இன்றோடு விளம்பரங்கள் வராது.

ஒபாமா கடைசி பைசா வரை டிவி நிலையங்களுக்கு கொடுத்துவிட்டார்!

அருமை! வெற்றி நிச்சயம்!

இப்போதைய காலப் நிலவரம். ப்ளோரிடாவில் டை. அதனால், சுமார் 320 எலெக்டோரல் வோட்டுக்கள் நிச்சயம். 270 வேண்டும் வெற்றிக்கு.


Sunday, November 2, 2008

ஒபாமாவின் வெற்றி பாதை

ஒபாமாவின் வெற்றி பாதை சில தடைகற்களை தாண்டி வருகிறது...

ஹலோவீன் என்ற அக்டோபர் 31 தேதி பார்டியில், நிருபர்கள், தொந்தரவு செய்தது, அவருக்கு, மிகவும் வருத்தம் அளித்தது.

இந்தியர்கள் 90% ஒபாமாவிற்கு தான், வோட்டு அளிப்பார்கள்.

கடைசி நேர ரெஜிஸ்திரேசன் செய்து வோட்டு போடுபவர்கள் அதிகம்.

http://www.google.com/2008election/

ஹிலாரி வந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தவர்கள், இப்போது ஒபாமா ஆதரவாளர்கள்.

வோட்டு போட ஆபீஸில், சில மணி நேரம் லீவு கொடுப்பார்கள்!

நான் இந்தியாவில் கடைசியாக வோட்டு போட்டது, 1991.

இங்கு நியூ யார்க்கில் இரண்டு வருடம் முன்பு தான்..

டேலைட் சேவிங்க்ஸ் டைம்

டேலைட் சேவிங்க்ஸ் டைம் இன்று அதிகாலை முதல் ஆரம்பம்.

இன்று அதிகாலை 2 AM முதல் 1 AM ஆனது. ஒரு மணி நேரம் எக்ஸ்ட்ரா தூங்கலாம்! இது தான் ஸ்டாண்டர்ட் டைம். நான் இருப்பது ஈஸ்டர்ன். ஏப்ரல் முதல் வாரத்தில் மாறும்!

சில சமயம் கொடுமைங்க. எழுந்து ஒரு மணி நேரம் ஆனது. கிர்க்கெட், அணில் கும்ப்ளே ஓய்வு.... பல நியூஸ். அஸ்ஸாம் கொடுமை ... கஷ்டம்.

பயர் அலாரம் எங்களை ஆறு மணிக்கு எழுப்பியது! டெஸ்ட் செய்கிறார்கள், புகை போட்டு.

வீட்டிற்க்குள் பயர் அலாரம், பேட்டரிகள் மாற்ற வேண்டும்.

எலெக்சன் நவம்பர் நான்கு, செவ்வாய். ஒபமாவின் வெற்றி நிச்சயம்!

அடுத்த நாள், இரவு இந்திய கிளம்புகிறோம். மும்பை, கோவை, பெங்களூர் என்று ட்ரிப் பிளான்.

சென்னையில் ஒரு மிக பிரபலம் ஆன இன்டர்நெட் கம்பனியில் , கம்பனி தலைவர் இருப்பது இந்தியாவில். நியூ யார்க்கில் தான் வேலை, சிறிய ஆபிஸ், இந்தியா வருவதால், அங்கேயே... பார்க்கலாம். என்னை இந்த ப்லோக் மூலம் கண்டு பிடித்தாராம். நன்றி சத்யா. சில சமயம் நினைத்தால், உலகம் எவ்வளவு சிறியது!

பனி விழும் காலம் இன்னும் ஒரு வாரத்தில்.

கோக் மற்றும் சிப்ஸ் குறைந்து... காபி அதிகம் ஆகும்.

சுட சுட இட்லி சாம்பாருக்கு மனம் ஏங்குது!