Thursday, November 6, 2008

மும்பை கஸ்டம்ஸ்

இந்திய வந்து இறங்கி ஒரு மணி நேரம் போல் ஆனது! மும்பையின் பெரிய ஹோட்டல், கிரேன்ட் மராத்தா.. ஐந்து நிமிடம் தூரத்தில் தான்... என்ன ப்ளைட் சத்தம் காதை அடைக்கிறது! ஒரு நாளைக்கு 13,000/-. சென்ற வருடம் 8,000/- விலைவாசி ரொம்ப ஜாஸ்தி! என்ன சாப்பாடு கொடுக்கிறார்கள், லேட் செக் அவுட் செய்யலாம். 12 PM செக் இன் செய்தால், 11 AM செக் அவுட். நாங்கள், இன்று மூன்று மணிக்கே செக் அவுட் செய்வதால், ஒரு நாள் வாடகை.

இதை நான் எழுதியே ஆக வேண்டும்.

உலகத்திலேயே மிகவும் கேவலமான மனிதர்கள், மும்பை கஸ்டம்ஸ் அதிகாரிகள். சென்னை மற்றும் பெங்களூர் அதிகாரிகள் பரவாயில்லை.

வெளிநாட்டு ஆள் என்றால், எப்படி எல்லாம்....

காசு வேண்டுமென்றால், எதற்கு வேலை செய்கிறாய்.... :-(> எதற்கு பிறந்தவர்களோ...

அதுவும், ஒரு வெள்ளைக்காரன், ஒரு இந்திய பெண்ணோடு வந்தால், எங்கள் லுக்கேஜ் அனைத்தும் சோதனை போட்டு, போட்டிருக்கும் நகைக்கும் கணக்கு கேட்டு... அப்பப்பா...

நான் ஒரு லேப்டாப், ஜோவும் ஒன்று, வைத்துள்ளோம், எதற்கு இரண்டு என்று கேள்வி... கேடுகெட்டவர்கள்! ரூல்ஸ் தெரியாதவர்கள்.

அதிலும் ஒரு தமிழன் இருந்தான், மதுரைக்காரன்... இருநூறு டாலர் வேண்டுமாம்... பிச்சைக்காரன்! கெட்ட வார்த்தையில் திட்டியதால், தமிழன் ஸாரி மேடம் என்றான்.

முப்பது லட்சம் கொடுத்து போஸ்டிங் வாங்கினானாம்... அதற்காக!

கொடுத்தால் என்ன என்றான்!

என்ன செய்ய முடியும், கூப்பிடு , கூப்பிடு கஸ்டம்ஸ் பெரிய ஆபிசரை என்றேன்... சமாதானம் ஆனது... இந்தியாவில், எதிர்த்து பேசினால் தான் வேலை ஆகிறது!

கடைசியில்... ஒரு சாகலேட் கொடுத்து விட்டு வந்தோம்.

பதினோரு மணிக்கு ஆபிஸ் செல்ல வேண்டும். லன்ச் மீட்டிங். மூன்று மணிக்கு செக் அவுட் செய்து விட்டு, ஏர்போர்ட்... ஆறு மணி ப்ளைட் கோவைக்கு.

நாளைக்கு கோவில், ஞாயிறு ஜக்கி வாசுதேவ் இருந்தால், ஒரு நாள் பயிற்சி.

இரவு சென்னை வழியாக, மும்பை.

ஜோ அடுத்த சனி காலை (நவம்பர் 15) கிளம்பியவுடன், நான் சென்னைக்கு ஒரு நாள் ட்ரிப், நவம்பர் 15, நியூ யார்க் வேலைக்கு இன்டர்வியு, அப்படியாக இரவு கோவைக்கு சென்று பத்து நாட்கள். பெங்களூர் நண்பர் குடும்பம் இரண்டு நாட்கள் கோவை வருகிறார்கள். நவம்பர் 22, 23. சனி , ஞாயிறு.

நான் கோவையிலிருந்து, பெங்களூர் வழியாக, திங்கள் நவம்பர் 24 காலை கிளம்பி மும்பையில் இரு நாட்கள் வேலை... நவம்பர் 25 இரவு ப்ளைட், துபையில் தனியாக ஒரு பத்து மணி நேரம், நண்பர் குடும்பத்துடன் இருப்பேன், பிறகு நவம்பர் 26 மதியம் நியூ யார்க் சென்று சேருவேன். சாயந்திரம் ஐந்து மணிக்கு, ஜோவோடு, பாஸ்டன் பயணம். தாங்க்ஸ்கிவிங் எப்போதும் அவர்கள் பெற்றோர் வீட்டில் தான். நவம்பர் 30 இரவு தான் நியூ யார்க் திரும்புவோம்.

அனேகமாக, ஜோவிற்கு எதாவது வேலை வாஷிங்டன்னில் கிடைக்கும். ;-)

டிசம்பர் 12, என் கடைசி வேலை நாள், பதினேழு வருடம் ஆறு மாதம்....

************

ரூம் வந்து சேர்ந்தவுடன், இதை டைப் செய்ததால் தான் நிம்மதி!

4 comments:

வேளராசி said...

ஈஸா தியான மையம் தொடர்பு எண்
0422 - 2515345

வேளராசி said...

சூலூரில் புதிதாக ஆறுபடை கோவில் மற்றும் திருப்பதி கோவில் கட்டியுள்ளனர்.

Indian said...

Oh, you put down your papers?
Desi big 3 beckons? :)

தங்கவேல் மாணிக்கம் said...

இந்தியாவின் நிலைமை உங்களுக்கு தெரியாததா என்ன ? லஞ்சத்தில் குளிக்கும் நாடு அல்லவா. இருப்போர் கொடுக்கலாம். இல்லாதவர்களை நினைத்துப் பார்த்தால் வேதனைதான் மிஞ்சும்.

பொண்டாட்டி பிள்ளைகளை விட்டு விட்டு, வெளி நாடுகளில் நாயாய் பேயாய் அலைந்து திரிந்து வேலை செய்து பிள்ளைகளுக்கும், மனைவிக்கும் ஆசை ஆசையாய் வாங்கிக் கொண்டு வரும் பொருட்களை மனச்சாட்சியின்றி பறிக்கும் கஸ்டம்ஸ் அதிகாரிகளைப் பற்றிய கதைகளை என் நண்பர்கள் சொல்ல கேட்டு இருக்கிறேன்.

ஆனால் நல்லவர்களும் இருக்கிறார்கள்.

உப்பு - தண்ணியின் அர்த்தம் தெரியாமல் வாழ்வில் துன்பப்பட அச்சாரம் போடுகிறோம் என்பது தெரியாமலே கிடக்கும் அறிவிலிகள் இவர்கள்