Saturday, November 8, 2008

விஜய் டிவி ஜோடி நம்பர் 1

ஒன்று கவனித்தேன், ஊரே அடங்கிவிடுகிறது. விஜய் டிவி ஜோடி நம்பர் 1 பார்க்க. ஜோ பார்த்துவிட்டு, சிரி சிரி என்ற சிரிக்கிறார். பாதி இங்கலிஷ் பேசுகிறார்கள்... சோ நோ ப்ரோப்ளம். ஜோவிற்கு கொஞ்சம் தமிழ் தெரியும். ரஜின்காந்த் பொண்ணு is so matured, அவர் போய் தனுஷை கல்யாணம் செய்தது.. புரியவில்லை. இதெல்லாம் சினிமா உலகில் சகஜம்! அம்மா சொல்றாங்க, அவ தங்கச்சி சிம்புவை கட்டினால் ஜோடி நல்லா இருக்கும்.

ரோட்டில் சத்தம் இல்லே.

எங்கள் குடும்பமும் தான். டிவி அடிமை.

அம்மா கேட்டார்கள், ஒன்பது மணிக்கு டின்னெர் போதுமல்லவா? பாருங்கள், மாப்பிள்ளை இரண்டு நாட்கள் தான் இந்தியாவில், அதற்குள் .... பசி வயிற்றை கிள்ளுது. இது தான் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் வித்தியாசம். அங்கு பசியே தெரியாது... ஜூஸ் இருக்கும். கேண்டி. இங்கே அது அதிசயம்.. வழக்கம் இல்லைங்க.

டிவி முன்னால், தோசை சட்னி சாம்பார் வரும். மாப்பிள்ளைக்காக ஸ்பெசல் குழி பணியாரம்...

***

நான்கு மணிக்கு தான் ஆர்.எஸ்.புரம் சென்று வந்தோம். கேக், சட் போன்ற வகைகள்... ஜோவிர்ற்கு வயிற்றில் கடா முடா. பயம்!

தங்கை குழந்தைகள் அழைத்துக்கொண்டு, பக்கத்தில் இருக்கும் சிறு fun சென்டருக்கு சென்றேன். ஜோவும் வந்தார். ஒரு கேம் விளையாட இருபது ருபாய். பணம் தண்ணீராக செலவழிக்கிறார்கள். மாச்டேர்கார்ட் மொமன்ட்ஸ்.

அமெரிக்காவில், பார்த்து பார்த்து செலவு செய்வோம். ஹோட்டலில் சாப்பாடு மீந்தினால், கவரில் போட்டு கொண்டு வருவோம். செல்லமாக, டாகி பேக்.

***

காலையில் மருதமலை கோவிலுக்கு, நிறைய பாரினர்ஸ் வருகிறார்கள். ஜோடி ஜோடியாக மக்கள் ... மலைகளில்... காதல் பறவைகள். அளவு மீராமல், புனிதமாக இருந்தால் சரி!

மதியம் சாப்பாடு அருமை... சிம்பிள். சாதம். பருப்பு. நெய். ரசம். காய் கூட்டு. கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மய்சூர் பா. பால் பாயசம், மற்றும் சட்டி தயிர்.

சிறு குழந்தை போல, பாயசம் கிளாசில் ஊற்றி, ஸ்பூன் போட்டு சாப்பிட்டேன்.

மூன்று மணிக்கு தேவி டெக்ஸ்டைல்ஸ் கடைக்கு சென்றேன்... அப்பா மக்கள் எப்படி செலவு செய்கிறார்கள்! கோவை மாறி விட்டது, ஒவ்வொரு முறையும் வித்தியாசம்.

என் நண்பி திருப்பூர்க்காரி ஒரு சுடிதார் செட் பரிசளித்தாள். ஜோவிற்கு சில டி- ஷர்ட்ஸ். நன்றி. சூப்பர்.

௨000 ருபாய் இல்லாமல் நல்ல சுடிதார் இல்லை. சிலது எடுத்தேன். நியூ ஜெர்சியில் ஒரு மாமி அட்டகாசமாக வீட்டில் போட்டிக் (ருதர்போர்ட்) வைத்துள்ளார்... நூறு டாலருக்கு, நாம் கேட்கும் ஸ்டைலில் தைத்து கொடுப்பார்! ஹும்...

ஜோவிற்கு அப்பா ஒரு சூட் பரிசளித்தார். டெய்லர்கள் ஓடி ஓடி பிட்டிங் செய்த விதம்... அர்மானி செவேந்த் அவனூ நியூ யார்க் ஷோவ்ரூம் தோற்றது! அங்கு இரண்டாயிரம் டாலர்கள். இங்கு நாற்பதாயிரம் ருபாய். கம்ப்ளீட் செட்.

****
கிரிக்கேட் மோகம் , டிவி ஷோ ரூம்கள் வாசல்கள் கூட்டம்.. கஷ்டகாலம்..

அப்புறம் கவனித்த ஒன்று கரண்ட் கட்.. எப்போது வேண்டுமானாலும், சிறிய ஜென்செட் மற்றும் இன்வர்டார் இருப்பதால் ஓகே.

அப்பா ஜோக்கடித்தார், ஆற்காடு வீராசாமி பவர் கட் ஆகிறது!

1 comment:

தங்கவேல் மாணிக்கம் said...

நறுக்கென்று நாலு வார்த்தை. இடையில் கொஞ்சம் ஜோக். ஸ்டார்ட் கேமரா ஆக்சன் கட் என்பது போல. எனக்கு பிடிக்கிறது உங்கள் பதிவுகள்.

ஆனால் நம்மவருக்கு வாழை இலை சாப்பாடு என்றால் பிரியம் அதிகம் அல்லவா. அதுபோல, இன்னும் கொஞ்சம் விளக்கம் சேருங்களேன். படிக்க வெகு சுவாரசியமாய் இருக்கும்.

ஜோ குழிப்பணியாரம் சாப்பிட்டு விட்டு என்ன சொன்னார் என்பதையும் எழுதினால் (ஹி...ஹி...) நன்றாக இருக்கும்...