Friday, October 31, 2008

நான் தான் அடுத்த அமெரிக்கா அதிபர்

Click and watch this video ;-) .

Thanks Joe.

இந்திரா காந்தி

இன்று இந்திரா காந்தி நினைவு நாள். அயர்ன் லேடி.

http://yfred.wordpress.com/2008/02/27/famous-women-leaders/

நான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த சமயம். கால் பரீட்சை முடிந்து, முதன் முதலில் நான் தான் மேத்ஸ், பிசிக்ஸ் மற்றும் கெமிஸ்ட்ரியில்.. 100%.

கடைசி பரிட்சையில் வாங்கியது சற்று குறைவு.

என் நினைவில் எப்போதும் இருக்கும். அன்று நண்பர்கள் சாந்தி, பிரகாஷ் விடாமல் அழுதது இன்னும் நினைவில் உள்ளது.

விஷயம் கேள்விப்பட்டவுடன், நானும் அழுதேன். மேம்பாலம் அருகே இருந்து ஒரு சீக்கியர் டயர் கடை எரிக்கப்பட்டது. அது முன் நின்று நடத்தியவர் ஒரு கோவை எம்.பி. இன்சூர் செய்திருந்தார், இருந்தாலும், வாழ்க்கை? அந்த எம்.பி. பெற்ற ஒரே மகன் ஒரு நாள், விபத்தில் இறந்தான். தெய்வம் பார்த்தால் சும்மா விடாது!
அபபா தான், எங்கள் செல்வபுரம் கெஸ்ட் ஹவுசில், சீக்கியர் குடும்பத்தை தங்க வைத்தார் சில காலம். இன்றும் அவர்கள் அங்கு இருக்கிறார்கள்... ஒரு வாரம் கழித்து, கடையை நானும் சென்று பார்த்தேன். கஷ்டம்.

Thursday, October 30, 2008

அமெரிக்காவில் கொலைகள்

மீண்டும் ஒரு தெலுங்கு குடும்பம் ....

அமெரிக்காவில் கொலைகள் ... சாப்ட்வேர்... தனியாக இருப்பவர்களுக்கு பிரச்சனை! அதுவும் பெண்களுக்கு பாதுகாப்பு... குறைவு!

ஆமாம், அவர் இந்தியாவிற்கு அக்டோபர் 14 சென்றுவிட்டார். இந்தியாவில் இருக்கிறார். எப்படி? சந்தேகம் என்று சொலும் சி.என்.என் கேனையர்கள்!

பொறுத்திருந்து பார்ப்போம்.

டெட்ரோய்டில் கறுப்பர்கள் தொல்லை அதிகம். பேஸ்பால் பேட் வைத்து அடிப்பார்கள். விலைவாசி குறைவு. அதனால், நிறைய பேர் அங்கு செல்கிறார்கள்.

என்னை பொறுத்த வரை, அதிக காசு வரும் தொழில்கள் மன நோய்களுக்கு வலி வகுக்கும்.

என்னோடு வேலை செய்த ஒருவர், ஒரு வயது பெரியவர்... இந்தியன் இப்போது வெள்ளைத்தோல் அமெரிக்கா மனைவி விட்டு தனியாக ... காரணம்... வேலை இல்லை! குழந்தை இல்லை.

நேற்று தான் ஒரு கம்பனியில் டெஸ்ட் எஞ்சினீர் ஆக வெலைக்கு சேர்ந்தார். பாதி சம்பளம். பத்து வருடம் முதலில் செய்த தொழில் சோறு போடும்.

அனேம்ப்லாய்மன்ட் இன்சூரன்ஸ், 66% வந்திருக்கும், 18 மாதங்கள், ஏன் என்றேன். தன்மானம் என்றார். அதற்குள் மீண்டும் இன்வேச்ட்மன்ட் பாங்கிங் மேலே வராது?

பசும்பொன் நினைவு நாள்

இன்று பசும்பொன் தேவர் நினைவு நாள் ...

அப்பா பத்தாயிரம் பேருக்கு அன்னதானம் செய்கிறார். நல்ல விஷயம். சம பந்தி. எல்லா ஜாதி, மதத்தினர், அமர்ந்து உண்ணுவது அழகு.

அரசியல் கட்சிகள், பெரிய விசயமாக்கும்.

போலிஸ் சுற்றி சுற்றி நிற்கும்.

எப்போதும் போல் சங்கரன்கோவில் ஏரியாவில் அட்டகாசம் இருக்கும்.

சில ஜாதி, சில கோட்பாடுகள், சில ஆசைகள்.

Wednesday, October 29, 2008

உறவின் உச்சகட்டம்

மனிதன் என்ன தேடுகிறான்.... உறவின் உச்சகட்டம் .. எல்லோரும் நன்றாக இருப்பது இல்லையா?

தினம் ஒரு புதுமை.

பணம் வரவு.

அன்பில் திளைப்பது என்று போகிறது வாழ்கை.

கடவுள் நம்பிக்கை.

மத கோட்பாடுகள்.

சிலர் தீபாவளி வாழ்த்து சொல்வதற்கு கூட யோசிக்கிறார்கள்.

ஒபமாவின் நான்கு மாநிலங்கள், கஷ்டம் கொடுப்பது... அதிகம் உழைக்கிறார்கள்... பென்சில்வேனியா, ஒஹைஒ, ப்ளோரிடா மற்றும் டெக்சாஸ்? ஸ்விங் ச்டடேஸ் என்று சொல்கிறது சி.என்.என். பாக்கலாம். எலாம், புஷ்ஷின் மாயம். இல்லிகல் ஏலியன்ஸ் இருக்கும் மாநிலங்கள். புரிகிறதா?

ஷம்பைன்

எங்கள் ஆபீஸில் வெள்ளி இரவு எதாவது பார்டி இருக்கும். ஷம்பைன் என்பது ஆறாக ஓடும். பாதி பாட்டில்கள் முடிக்காமல் குப்பையில் வீசுவார்கள்...

இப்போது திவால் நிலைமை.

எல்லோரும் வேலை தேடுகிறார்கள். சம்பளம் வரும். கவர்ன்மன்ட் ஆட்கள் வந்து கேள்வி கேட்கிறார்கள்.

நூறு ருபாய் போட்டது, இருபது ஆகிவிட்டது!

உண்மையான நண்பர்கள் யார் என தெரிகிறது.

நான் வேலை தேடுகிறேன்.

அடுத்த பதிவு நூறாவது பதிவு, என்ன எழுத வேண்டும் என்று தோன்றவில்லை.

நீங்கள் படிக்க வேண்டிய புத்தகம்

வாழ்க்கையில் மென்மேலும் வளர்ச்சி பெற, நீங்கள் படிக்க வேண்டிய புத்தகம், ராபின் ஷர்மாவின் , விஸ்டம்.

Read Here...

அருமை. அழகு.

இரண்டு நாள் இடைவெளி போஸ்ட் பக்கம் வந்து. தமிழ்மணத்தில் இருந்து எடுத்துவிட்டேன். ப்லோக் ஹிட்ஸ் போஸ்ட்ஸ் போடுவது நியாயம் இல்லை!

சீக்கிரம் இருட்டு ஆகும் டைம் வேறு வந்துவிட்டது....

Monday, October 27, 2008

மரியோ பூசோ

மரியோ பூசோ (Mario Puso) எழுதிய மாபியா தொடர்கள் உலகெங்கும் பிரபலம்.

உங்களுக்கு தெரியுமா, அவர் ஜாக் என்ற காங்கில் கொஞ்ச நாள் மருந்து கடத்தினார் என்று இப்போது தெரிய வருகிறது.

அது தான் அவர் அருமை எழுத்துக்கு, அனுபவப்பட்டு எழுதினார்! அது ஒரு சவால்...

சில இன்வெஸ்ட்மண்ட கம்பனிகள் அப்படிதான் இப்போது!

காசு தப்பான வழியில் சம்பாரித்து, தொலைத்து திவால் ஆகி, வேலை செய்ய ஆட்கள் இல்லாமல்... அறிந்து புரிந்து தெரிந்து கொள்கிறார்கள்!

Sunday, October 26, 2008

தீபாவளி ஒரு பார்வை

http://tvmalaionline.blogspot.com/2008/10/blog-post_23.html

ஒரு வித்தியாசமான நாத்திகர்களின் பார்வை!

Diwali Greetings to All!