Thursday, February 5, 2009

மீண்டும் சிங்கப்பூரில் சுற்றுலா

மீண்டும் சிங்கப்பூரில் சுற்றுலா முடித்துவிட்டு இப்போது தான் திரும்பி வந்தோம்.

காலை எழு மணிக்கு கிளம்பியவள், நான்கு மணிக்கு தான் ஜோ வர சொன்ன இடத்திற்கு சென்றேன். அது வரை தொண்டை வறண்ட நிலையில் ட்ரெயினிங், இடையில், பிட்சாவை சுவைத்துக்கொண்டே (மசாலா மெட்ராஸ் என்று சொன்னார், ஆர்டர் செய்தவர்...) பேசி முடித்தோம். அட்சரம் பிசகாமல், தொழில் எட்டு மணி நேரம் வேலை வாங்கி விடுகிறார்கள் சிங்கப்பூரில். நல்லது, இது தான் தேவை! (எனக்கு ட்ரேவல் டைம் கூட ஆபிஸ் வேலை தான்!)

நான்கரை மணிக்கு, மீண்டும் சிரங்கூன் சாலை சென்று, எங்கள் குடும்ப நண்பர் சுதீஷ்சை பார்த்துவிட்டு, ஆறு மணி அளவில் சபாரி இடத்தை அடைந்தோம். கோமலாசில் சாப்பிட்டோம். பீச் செல்லவில்லை. நாளை காலை கட்டாயம், ஆறு மணிக்கு எழுந்து சென்று வர வேண்டும். பதினோரு மணிக்கு தான் சில மணி நேரம் மீட்டிங். இரவு ஒன்பது மணி அளவில் சில்க் ஏர் கோவை ப்ளைட். ஆறு மணிக்கு ஹோட்டலை விட்டு கிளம்ப வேண்டும்.

சுதீஷ் எஸ்.ஏ.பி. தொழில் செய்கிறார், இது வரை டிகிரீ படித்து விட்டு ஐந்து வருடங்களாக கோவையில் மெகானிகல் எஞ்சினீர் ஆக இருந்தவர், பெங்களூரில் ஒரு நிறுவனத்தில் எஸ்..பி. படித்து விட்டு, ஆறு மாதம் கழித்து மாதம் மூன்றாயிரம் சிங்கப்பூர் டாலர்கள் வாங்கும் வேலை.... பத்து மடங்கு சம்பளம், ஐந்து மடங்கு மிச்சம் என்றார். சிங்கப்பூரில் இருப்பதால், பெண் வருகிறது... அடுத்த வருடம் கல்யாணம் செய்வார். இந்த சம்பளம் பத்துமா?

*********

சபாரியில் நாங்கள் சாப்பிட்ட விவரம்.... இங்கே...

Wednesday, February 4, 2009

மலேசியாவில் நான் (இருநூறாவது பதிவு)

என் வேலையும், ஜோவின் வேலையும் இன்று கோலாலம்பூர் சென்று வர ஏற்பாடு.

வி என்ற ஜெட் சார்ட்டர் கம்பனியில் எங்கள் இருவருக்கு இரண்டு சீட், போக வர ஆயிரம் டாலருக்கு கிடைத்தது. சுமார் 200 கிலோமீடேர்கள், ஒரு மணி நேரம் பயணம். சிங்கபூர் டு கோலாலம்பூர் . மொத்தம் எட்டு பிரயாணிகள். காலை எட்டுக்கு கிளம்பி, இரவு எட்டுக்கு திரும்புவோம். ஹோட்டலில் இருந்து பிக்கப், மற்றும் டிராப். அங்கு நாங்கள் செல்லும் பெட்டாலிங் ஜெயாவிற்கு (சைபர் ஜெயா) தனி லிமோ. எல்லாம் காசு, உட்பட. நாங்களே சில்க் ஏரில் புக் செய்திருந்தால், கார் உட்பட மொத்தம் இவ்வளவு ஆகியிருக்கும். ஏர்போர்ட் சென்று நிற்கும் வேலை இல்லை.

கோலாலம்பூர் இறங்கியவுடன் பாஸ்போர்ட் செக் செய்ய கூட இல்லை. எல்லாம், பூகிங் சமயம் காப்பி எடுத்துக்கொண்டார்கள். மலேசிய அரசாங்கம் பிசினஸ் ஆட்களை கவனிக்கும் விதம் அருமை.

ப்ளேன் அருகில் கார் நிற்கிறது... நல்ல கவனிப்பு.

காலை எட்டு மணிக்கு கிளம்பினோம். ப்ளேன் உள்ளே நல்ல கவனிப்பு. இறங்கியவுடன், ஒன்பது மணிக்கு கிளம்பி, ஹைவேயில், அரை மணிக்குள், சைபர் ஜெயாவில், ஒரு கம்பெனியில் இன்வேச்ட்மன்ட் குறித்து பேச, அமெரிக்கன் இன்வேச்டார், அங்கு இருந்தார். லோகல் ஆட்களும் ஷேர் ஹோல்டர்கள். ஜோ வேறு இடத்திற்கு சென்று, ஒரு எஸ்.எ.பி. / ஈ.ஆர்.பி சேவை வழங்கும் நிறுவனத்தில் முதலீடு செய்ய பேச்சு நடத்தினார். பன்னிரண்டு மணிக்கு வேலை முடிந்தது.

ஒரு மணிக்கு, பெட்ரோனாஸ் டவர் அருகில், ரோஸ் என்ற லோகல் ப்ளேவர் ரெஸ்டாரன்டில் உணவு.பெட்ரோனாஸ்
டவர் சுற்றி பார்த்தோம், ஏசியாவின் இரண்டாவது உயரமான கட்டிடம். கனக்டிங் ப்ரிஜ்ஜில் நடப்பது அருமை, கண்ணாடி வழியே கீழே தெரியும் ஆட்கள் , கார்கள், குட்டி குட்டி. அது ஒரு அனுபவம். என்னோடு வந்த ஒரு தமிழர், பார்கலேய்ஸ் ஆள், எல்லாம் செலவும் செய்தார். பரவாயில்லை. நல்லவர். (கம்பனி செலவு தான்...)

ராஜா கிளாங் (?) என்ற வீதியில், நடந்தோம். நிறைய சினிமாக்களில் வரும் தெரு, பார்க், மாஸ்க் அருகில் உள்ளது. எங்கு பார்த்தாலும், ஏசியர்கள், தமிழர்கள்... இரண்டு மூன்று பேர் என்னிடம் வந்து காசு கேட்டார்கள். இது இங்கும் உண்டா?

ஏர்போர்டில் தனி லவுஞ். மாற்ற பிரயாணிகள் வர வேண்டும். அது வரை, ஸ்நாக்ஸ் சாப்பிட்டு இன்டர்நெட் பிரவ்சிங் செய்தபடி வெயிடிங். ஜோவிற்கு, முறுக்கு ரொம்ப பிடிக்கிறது.

அங்கிருந்து, இந்தியாவிற்கு இலவசமாக, இன்டர்நெட் மூலம், பேசினேன். தமிழ்நாட்டில் பந்தாம், அமைதி வழி விரும்பும் ஸ்ரீலங்கன் தமிழர்களுக்கு ஆதரவு....

நாளை, சிறிது வேலை உண்டு சிங்கப்பூரில். பார்கலேய்ஸ் ஆட்களுக்கு ட்ரெயினிங். காலை எட்டு மணி முதல், தொடர்ந்து ஐந்து மணி நேரம். மேலும் ஒரு மணி நேரம் வேலை உண்டு. ஜோ ஹோட்டலில் தான் இருப்பார். பிறகு, மூன்று மணி முதல், நன்றாக சுற்றி பார்க்க வேண்டும். பீச் செல்ல வேண்டும். இரவு சபாரி செல்ல வேண்டும், டின்னரோடு.

வெள்ளி இரவு இந்திய பயணம், இரண்டு நாட்கள், பிறகு மீண்டும் நியூ யார்க். பனி கொட்டு கொட்டுகிறதாம்.

***********

ஆச்சிரியம், சுமார் ஐந்து மாதங்களில் 200 பதிவுகள். எனக்கு தமிழை மறக்காமல் இருக்க உதவும் வழி இது. வாசிப்பவர்களுக்கு நன்றி.

எனக்கு தமிழ் ப்லோக் உலகை அறிமுகப்படுத்திய ரமேஷுக்கு நன்றி.

மீண்டும் சிந்திப்போம்.

Sunday, February 1, 2009

சிங்கப்பூரில் நான்

இந்தியர்களும், தமிழர்களும், சீனர்களும், மலாய்களும் இருக்கும் சிங்கப்பூருக்கு, ஞாயிறு மதியம் வந்து சேர்ந்தோம்.

துபாயில் சனிக்கிழமை இரவு எட்டரை மணிக்கு சென்று சேர்ந்தோம். அம்மா நகை கொஞ்சம் வாங்கினார்கள். எங்களுக்கு அதிகாலை 2.45 இக்கு சிங்கப்பூர் ப்ளைட், மதியம் 1.45 இக்கு வந்தடைதோம். இந்திய மீது (பெங்களூர், சென்னை) பறந்து, பே ஆப் பெங்கால் மீது ஆட்டங்களுடன் பறந்து...

அப்பா அம்மாவிற்கு அதிகாலை நான்கு மணிக்கு ப்ளைட், மும்பைக்கு. அங்கு லோகல் டைம் 8.15 இறங்கினார்கள். டொமஸ்டிக் ஏர்போர்ட் சென்று, ஜெட் ஏர்வேஸ் ப்ளைட் மூலம், இரண்டரைக்கு கோவை சென்றடைதார்கள். மூன்று மணிக்கு வீட்டில் இருந்தார்கள்.

நாங்கள் ஹோட்டலில் செக்கின் செய்துவிட்டு, கால் செய்தோம்.

***

இன்று ஜோவின் வேலைகள் சில மணி நேரம் தான். அவர் கிளம்பிவிட்டார். எனக்கு இரண்டு மீடிங்க்ஸ் இன்று. இன்னும் ஒரு மணி நேரத்தில்....

சிரங்கூன் ரோடு சென்று இந்திய வகை உணவு உண்டோம். தமிழ்நாட்டில் இருப்பதை போல இருந்தது. ரொம்ப நாள் ஆகிவிட்டது சிங்கப்பூர் வந்து. நிறைய மாற்றங்கள்!

எகனாமி வீல்திருப்பதால், செலவு குறைக்கிறார்கள். உதாரணம், நாங்கள் தங்கி இருக்கும், ஹாலிடே இன் ஹோட்டலில், ஷேம்பூ சைஸ் பாதி ஆக உள்ளது...

புதன் அன்று கோலாலம்பூர் சென்று வர வேண்டி இருக்கும். அரை நாள் வேலை. மதியம், அங்கு கொஞ்சம் சுற்றி விட்டு, இரவு திரும்ப வேண்டும்.

களைப்பு தான்.

*************

தமிழ்நாட்டில் கலவரம் இருக்கும் அபாயம், இருந்தாலும், வியாழன் இரவு சென்னைக்கு செல்கிறார்கள், வெள்ளி அன்று கண்செலேட் சென்று கிரீன் கார்ட் வாங்குகிறார்கள். இரவே கோவை திரும்புகிறார்கள்.

நாங்களும் சனி அதிகாலை கோவை சென்றடைகிறோம்.

**************

தமிழ்நாட்டை நினைத்தால் பயமாக இருக்கு, என்ன கலவரம் நடக்குமோ!

இரண்டு நாட்கள் தான், இருக்கிறோம்.

மருதமலை முருகா காப்பாற்று!