இந்தியர்களும், தமிழர்களும், சீனர்களும், மலாய்களும் இருக்கும் சிங்கப்பூருக்கு, ஞாயிறு மதியம் வந்து சேர்ந்தோம்.
துபாயில் சனிக்கிழமை இரவு எட்டரை மணிக்கு சென்று சேர்ந்தோம். அம்மா நகை கொஞ்சம் வாங்கினார்கள். எங்களுக்கு அதிகாலை 2.45 இக்கு சிங்கப்பூர் ப்ளைட், மதியம் 1.45 இக்கு வந்தடைதோம். இந்திய மீது (பெங்களூர், சென்னை) பறந்து, பே ஆப் பெங்கால் மீது ஆட்டங்களுடன் பறந்து...
அப்பா அம்மாவிற்கு அதிகாலை நான்கு மணிக்கு ப்ளைட், மும்பைக்கு. அங்கு லோகல் டைம் 8.15 இறங்கினார்கள். டொமஸ்டிக் ஏர்போர்ட் சென்று, ஜெட் ஏர்வேஸ் ப்ளைட் மூலம், இரண்டரைக்கு கோவை சென்றடைதார்கள். மூன்று மணிக்கு வீட்டில் இருந்தார்கள்.
நாங்கள் ஹோட்டலில் செக்கின் செய்துவிட்டு, கால் செய்தோம்.
***
இன்று ஜோவின் வேலைகள் சில மணி நேரம் தான். அவர் கிளம்பிவிட்டார். எனக்கு இரண்டு மீடிங்க்ஸ் இன்று. இன்னும் ஒரு மணி நேரத்தில்....
சிரங்கூன் ரோடு சென்று இந்திய வகை உணவு உண்டோம். தமிழ்நாட்டில் இருப்பதை போல இருந்தது. ரொம்ப நாள் ஆகிவிட்டது சிங்கப்பூர் வந்து. நிறைய மாற்றங்கள்!
எகனாமி வீல்திருப்பதால், செலவு குறைக்கிறார்கள். உதாரணம், நாங்கள் தங்கி இருக்கும், ஹாலிடே இன் ஹோட்டலில், ஷேம்பூ சைஸ் பாதி ஆக உள்ளது...
புதன் அன்று கோலாலம்பூர் சென்று வர வேண்டி இருக்கும். அரை நாள் வேலை. மதியம், அங்கு கொஞ்சம் சுற்றி விட்டு, இரவு திரும்ப வேண்டும்.
களைப்பு தான்.
*************
தமிழ்நாட்டில் கலவரம் இருக்கும் அபாயம், இருந்தாலும், வியாழன் இரவு சென்னைக்கு செல்கிறார்கள், வெள்ளி அன்று கண்செலேட் சென்று கிரீன் கார்ட் வாங்குகிறார்கள். இரவே கோவை திரும்புகிறார்கள்.
நாங்களும் சனி அதிகாலை கோவை சென்றடைகிறோம்.
**************
தமிழ்நாட்டை நினைத்தால் பயமாக இருக்கு, என்ன கலவரம் நடக்குமோ!
இரண்டு நாட்கள் தான், இருக்கிறோம்.
மருதமலை முருகா காப்பாற்று!
கோடீஸ்வர யோகம்
11 years ago

2 comments:
அன்பு திவ்யா,
நீங்கள் சிங்கை வந்திருப்பதாக அறிகிறோம். உங்களை எங்கள் சிறிய சிங்கார நாட்டிற்கு வருக வருக என வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறோம்.
தமிழுக்கும் தமிழனுக்கும் அனைத்து அங்கிகாரமும் தந்து அவனை முழு மனதோடு ஏற்றுக் கொண்ட இந்நாட்டிற்கு வருகையளித்தற்கு நன்றி.
உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமாயின் தயக்கமின்றி எம்மை அழைக்கலாம் என தாழ்மையுடன் கூறிக் கொள்கிறேன்.
நன்றி
சு.அரசு
+65 98765464
Divy, Congrats on 200 posts.
Have a blast in Singapore.
Post a Comment