Friday, January 30, 2009

சிங்கப்பூர் பயணம்

இன்று இரவு சிங்கப்பூர் பயணம் ஆரம்பிக்கிறோம், நானும் ஜோவும். எனக்கும், ஜோவிர்க்கும் வேலை ஒரு வாரம்.... சிங்கப்பூரில் வெள்ளி இரவு கிளம்பி ....நடுநிசியில் கோவையில் இறங்கி, பிறகு, ஞாயிறு காலை ஒரு கல்யாணம் பார்த்துவிட்டு, இரவு கிளம்பி திங்கள் அமெரிக்கா திரும்புகிறோம்.

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மூலம் பயணம். துபாய் வழி. நியூ யார்க் டு துபாய். துபாய் டு சிங்கப்பூர். சிங்கப்பூர் டு கோவை (சில்க் ஏர்). கோவை டு மும்பை (ஜெட் லைட்) . மும்பை டு துபாய். துபாய் டு நியூ யார்க். பிசினஸ் க்ளாசில் நியூ யார்க் டு சிங்கபூர் ரவுண்ட் ட்ரிப் விலை தான், கோவை உட்பட. நான்காயிரம் டாலர்கள் ஒருவருக்கு.

அப்பா அம்மாவும் இந்திய திரும்புகிறார்கள், எங்களோடு. துபாய் வரை எங்களோடு இருப்பார்கள், பிறகு மும்பை சென்று அங்கிருந்து கோவைக்கு பயணம். சந்தோசமான ட்ரிப் அவர்களுக்கு. ஒரு கல்யாணம், என் தங்கை குடும்பத்துடன் இரு வாரம் குதுகுலம். பிட்ட்ச்பர்கில் ஒரு கல்யாணம்... பிறகு ஒபாமா பதவியேற்ப்பு... அப்பப்பா, என்ன விஷயங்கள் நடந்துள்ளன!

அந்த கல்யாணம் பற்றி பெரிய விஷயம் எழுத வேண்டும். இப்போது நேரம் இல்லை, மதியம் ஆபீஸில் இருந்து வந்த பிறகு, ரெடி ஆகி, ஏர்போர்ட் ஆறு மணிக்கு கிளம்ப வேண்டும். ப்ளைட்டில் எழுதுகிறேன். மாலினியின் இரண்டாம் காதலரின் கதை வேறு எழுத வேண்டும்.

அப்பா, அம்மா அமெரிக்கன் கிரீன் கார்ட் அடுத்த வாரம் சென்னையில் வாங்குகிறார்கள்! ஆதம்பாக்கம் கெஸ்ட் ஹவுசில் தங்குவார்கள். கத்திபாரா ரோடு பளை ஓவர் நன்றாக உள்ளதாம், என் சொந்தம் ஒருவர் சொன்னார். என்ன வழித்தடம் (டைரக்சன்ஸ்) பற்றிய விவரம் ஏதுமில்லையாம்... என் ப்லோகை படிப்பதாய் எழுதிய அரசாங்க அதிகாரி, அந்த துறையில் உள்ளார், அந்த வேலை செய்வாரா?

ஏப்ரில் மாதம் முதல் இங்கு வருடத்திற்கு ஆறு மாதம் குறைந்த பட்சம் இருப்பார்கள். என் தங்கை குடும்பம் நியூ யார்க்கில் வாங்கிய வீட்டில் இருப்பார்கள்... தங்கை குடும்பமும் ஏப்ரில் மாதம், இங்கு வருகிறார்கள். இன்வேச்டார் விசா வருவதால், அவர்களும், சில வருடங்கள், இங்கேயே இருக்க முடிவு செய்யலாம்... தெரியவில்லை, எல்லாம், மச்சானின் தம்பி கையில் இருக்கு, வியாபாரம் இந்தியாவில் பார்த்துக்கொள்ள.

தங்கை குழந்தைகளும், இங்கு ஒரு ப்ரைவேட் ஸ்கூலில், படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். என்ன ஹிந்தி தான், தனி டூடர் வைக்க வேண்டும். வீட்டில் வந்து சொல்லிக்கொடுக்க மாதம் மூன்றாயிரம் டாலர்கள் கேட்கிறார்கள், டில்லி ஆண்டிகள்.

***********

அப்புறம், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் கம்பெனியில் ஜோவின் குடும்பம் ஒரு பர்சன்ட் ஸ்டாக் வங்கியுள்ளது. லாபம் வரும் என்று நம்புகிறார்கள்.

2 comments:

Raju said...

Dear Akka, Have a nice and safe trip. It was nice of you to post, Muthukumar's last post, before he sacrificed himself. God bless you!

Regards
Raju

singainathan said...

Welcome :)


//வீட்டில் வந்து சொல்லிக்கொடுக்க மாதம் மூன்றாயிரம் டாலர்கள் கேட்கிறார்கள், டில்லி ஆண்டிகள்.//
:)


Anputan
Singai Nathan