Saturday, January 10, 2009

ஒரு கதை

நேற்று இரவு, தங்கை குடும்பம் இந்திய கிளம்பியது. இரவு நடுங்கும் குளிரில், ஏர்போர்டில் நின்றிருந்தோம் (நிச்சயம் வெளியே குளிர், அவர்கள் ப்ளைடுக்காக உள்ளே... சூடு ) பதினைந்து நாட்கள், போனது தெரியவில்லை.

மூச்சா போக கூட இடம் இல்லை. வேறு வழி? ரோட்டில் தான்....

தங்கை மகள் கிளம்புவதற்கு முன், ஆறு மணி இருக்கும், வீட்டில் குளித்து விட்டு, இரண்டு கமண்ட்ஸ் செய்தாள்.

(1) அடுத்த முறை வரும் போது, நியூ யார்க் இன்னும் கொஞ்சம் நீட்டாக இருக்கணும் என்றாள். எங்கேயும் குப்பையும் கூளமுமாக இருப்பது, அவளுக்கு பிடிக்கவில்லை. ஏப்ரல், மே மாதங்கள் இங்கு வருகிறார்கள். செவெந்த் அவனுவில், 84th ஸ்ட்ரீட்டில் ஒரு கம்முநிட்டி (2 பெட்ரூம் அபார்ட்மென்ட், பழையது) ஒரு லட்சம் டாலருக்கு வாங்குகிறார்கள், இங்கு வரும் போது தங்குவதற்கு. பெங்களூரில், இதே சைஸ் இதே விலை. கொடுமை.

(2) மேக்கப் இல்லாமல் இனி இந்தியாவில் வெளியில் போகக்கூடாது. எப்படி இந்த நாட்டு கலாசாரம் உள் புகுந்தது பார்த்தீர்களா?

அம்மா விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். தங்கை பயன் ரொம்ப சுட்டி, என்ன கொஞ்சம் வெயிட் போட்டுவிட்டான்! உனிபார்ம் பத்துமா?

*********

சிங்கபூர் செல்லும் ஒரு வேலை இருக்கிறது! ஜோவும் வருகிறார். பிப்ருவரி முதல் வாரம். அப்படியே, சில நாட்கள் இந்தியாவில், பிப்ருவரி ஏழு, எட்டு. சிங்கபூர் டு கோவை ப்ளைட் இருக்கிறதா, தேடவேண்டும். அங்கு ஒரு டிம்பர் மெர்ச்சண்டின் மகள் திருமணம், இருக்கிறது. நியூ யார்க்கில் எங்களுக்கு நேரில் அழைப்பு! (அப்பாவின் பிரண்ட்)

அப்பா அம்மா, ஜனவரி கடைசியில் இந்தியாவில் இருக்க வேண்டும். கிரீன் கார்ட் அங்கு தானா வாங்க வேண்டும். ஏப்ரில் மாதம் முதல் வாரம் இங்கு வருவார்கள்... ஆறு மாதம் இருப்பார்கள், எனக்கும் அந்த சமயம் அம்மாவின் அன்பும் துணையும் வேண்டும்.

ஜனவரி முப்பது, அதே எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் - மூலம், துபாய் வரை அப்பா அம்மாவுடன் பயணம். என்ன அவர்கள், எகனாமி க்ளாசில் இருப்பார்கள்!

அதை பற்றி விரிவாக எழுதுகிறேன்.

********

இன்று என்னவோ தெரியலே, ஒரு ஐந்நூறு ஆட்கள் என் ப்லோகை படித்துள்ளார்கள். என்ன விஷயம்? ;-)

சத்யம் பற்றி நான் கொடுத்த வார்நிங்கா? திருடன் இப்போது நெஞ்சு வலி, என்று ஆஸ்பத்திரி போக பார்க்கிறான்... அரசியல்வாதிகள் காப்பாற்றுவார்கள். அவனது எழுபதாவது வயதில் ஜெயில் கிடைக்கும். அதற்குள் செத்து விடுவான். இன்னொரு ஹர்ஷத் மேத்தா மற்றும் கேடன் பரேக்.

இன்னொரு ஜோக். ஆந்திர கவர்ன்மன்ட், போர்டில் சீட் வேண்டுமாம், அதிலும் குளறுபடி. ஆகா மொத்தம் எட்டாயிரம் கோடிகள் சுட்டிவிட்டார்கள்!

*********

அப்புறம் சில நாட்கள் முன் ஒரு பத்து பொத்தகங்கள் வெளியிட்ட ஒரு எழுத்தாளர் பற்றி கேவலமாக ஒரு கமன்ட் வந்திருந்தது. எதற்கு என் பதிவில்? ஆதவன் என்பவர், சென்னையிலிருந்து ஒரு மணிக்கு (இந்திய டைம்).

எப்போதும் போல, எனக்கு பிடித்த கமண்ட்ஸ் மட்டும் வெளியிடுகிறேன்.

*********

அப்புறம் internalize என்றால் கதையின் கருவை எடுத்து, மெருகேற்றுவது!

உலகின் ஏழு கதை கரு பற்றி நான் எழுதனும்.....

முதல் கரு, பொறாமை!

மீண்டும் சந்திக்கிறேன்.

2 comments:

DIVYA said...

I know why my blog had so many hits. I am not connected to any blogs aggregation.

Please read all the new posts from this date.

jan 11th, 2009 is so special for my writing ability!

Mahatma said...

Regarding the flight from Singapore to coimbatore, Yes, Silk Air which is managed by singapore airlines, weekly thrice flight is avilable from SIN/CJB/SIN. This CJB fligt service was started in last year deepavali.