Wednesday, January 21, 2009

வேலை கேட்டு தேடும் வேலை

இப்போது தான் வாஷிங்க்டன் டிசியிலிரிந்து நியூ யார்க் திரும்பினோம். அலைச்சல்.

ஆப்ரிக்கன் அமெரிக்கன்ஸ் கண்களில் கண்ணீர், வாழ்வு மலர்ந்துவிட்ட திருப்தி.

குறைந்த பட்சம் இருபது லட்சம் மக்கள், அங்கு ஓபாமா பதவி ஏற்ப்பு நிகழ்ச்சிக்கு வந்திருப்பார்கள். கேபிடல் ஹில் அருகில் மூத்திர வாடை, மூக்கை கொன்றது. இருந்தாலும், நிகழ்வினை பொருட்டு பொறுத்து கொள்ள வேண்டும்.

செவ்வாய் இரவு, அப்பா அம்மாவும் டேமாக்ரேடிக் பால் விருந்துக்கு வந்தார்கள். நல்ல வேலை கூட்டத்தில், சிக்கவில்லை. எதோ ஒரு காரநிதிர்க்காக அப்பா அழுதார், ஒபமாவின் பதவி ஏற்ப்பு பற்றி பேசும் போது. ஸ்லேவ் சமுகம், விடியலுக்கு வந்தது.

குடும்பத்தோடு, ஒபாமா குடும்பத்துடன், படம் பிடித்தோம். அப்பாவிற்கு ஒரே ஆனந்தம். ஒபமாவின் புத்தகம் ஒன்றில் ஆட்டோக்ராப் வாங்கினார் அப்பா.

இந்த மாதிரி செக்கூரிட்டி, நான் பார்த்ததில்லை. விழாவிற்கு வந்த ஜோவின் சொந்தம் ஒருவர், ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனார்.

ஒபாமாவின் தனிப்பட்ட பேச்சில், சிறிது நேரம் ஜோவின் குடும்பம், மற்றும், அவர் நண்பர்களோடு... அமெரிக்காவில் குழந்தைகள் தங்கள் உறவினர்கள், அப்பா, அம்மாவை அழைக்க கண்மூடித்தனமாக வெறுக்கும், ரெட் டேப் ஊழியர்களை திருத்தும் ( விசிட்டர் விசா வாங்கும் ஒவ்வொருவரும், அமேரிக்காவில் செட்டில் ஆகும் எண்ணம் இருக்கும் என்ற மூட நம்பிக்கை ரிஜக்ட் விஷயம் - சுமார் நூற்றிற்கு ஐம்பது பேர் இப்படி ....) விசயம் குறித்து, சட்டம் இயற்றுவதை பற்றி பேசினார். அருமை.... என்ன மக்கள் திருட்டுத்தனமாக அமெரிக்காவில் தங்க முயல்வார்கள் என்றார். நானும் அவரிடம் சொன்னேன், சென்னை கண்செலேட்டில், கண்மூடித்தனமாக விசா கொடுக்காமல், மறுக்கப்படும், அழும் காட்சி... கொடியது. அமெரிக்காவிற்கு அழைப்பவர், தான் முழு பொறுப்பு ஏற்கவேண்டும் என்ற சட்டம் வந்தால் (யு.ஏ.ஈ யில் இது உண்டு) நல்லது என்றேன்... நடக்கும் என்றார்... இப்போதைய கவலை எகனாமி... அவரும், தன் சொந்தங்களை, 2004 தான் செனட்டில் பதவி ஏற்கும் போது கென்யா மற்றும் இந்தோனேசியாவில் இருந்து அழைத்து வந்தார். அதற்கு முன் இல்லினாய் காங்கிரஸ் / செனட் பதவி ஏற்புக்கு விசா கொடுக்கவில்லை... இப்போது அவர்களுக்கு, வீடு தேடி விசா செல்கிறது, அமெரிக்கன் பாதுகாப்பு. இது தான் மாற்றம்.

**************

நிறைய கமண்ட்ஸ் சிலவற்றை மற்றும் பதித்துள்ளேன்.

ஆமாம், தலைப்பு? வேலை கேட்டு தேடும் வேலை ...

இங்கு படிக்கும் நிறைய பேர், வேலை கேட்டு எழுதுகிறார்கள், அல்லது காண்டேக்ட்ஸ் உதவி.

தனிப்பட்ட முறையில் எழுதாமல், ப்லோக் மூலம் பதில் தான் கொடுக்க முடியும், நிறைய பேருக்கு இது பொருந்தும்.

என்னால், வேலை வாங்கி கொடுக்க முடியாது. அமேரிக்காவில் இன்ப்ளுயன்ஸ் என்ற இடத்திற்கே இடம் இல்லை. என் கம்பனி என்றாலும், திறமை தான் முக்கியம். ( அப்படி இருந்திருந்தால், எங்கள் சொந்தக்காரர்கள், பல நூறு பேர் இங்கு வந்திருப்பார்கள்! )

மேலும், அமெரிக்காவில் தனியாளாக, அவர்களே வேலை தேட முடியாதவர்கள், நிலைக்க முடியாது.

திறமை இருந்தால் வெற்றி உங்கள் பக்கம் தான். Yes you can!

2 comments:

செந்தழல் ரவி said...

அப்படியே தமிழ் ஈழ பிரச்சினையை ஒபாமாவின் காதில் போட்டு வைக்கவும்

tamil24.blogspot.com said...

தொடர்ந்து எழுதுங்கள் திவ்யா. பாராட்டுக்கள்.


செந்தழல் ரவி said...
அப்படியே தமிழ் ஈழ பிரச்சினையை ஒபாமாவின் காதில் போட்டு வைக்கவும்""

செந்தழல் ரவி நீங்கள் ஈழப்பிரச்சனையில் கொண்டுள்ள அக்கறை ஈழத்தமிழர்களுக்கு பெரும்மாற்றத்தைத் தரும்தானே பிறகெதற்கு ஒபாமா ?

சாந்தி