Wednesday, March 11, 2009

காலையில் சீக்கிரம் எழுவது

காலையில் சீக்கிரம் எழுவது எப்பவும் கஷ்டமான விஷயம் தான். டேலைட் சேவிங்க்ஸ் டைம் மாற்றி மூன்று நாட்கள் ஓடிவிட்டது. இன்று தான், அலாரம் அடிக்கும் முன் எழுந்தேன்.

இப்போது நிறைய நாட்களுக்கு பிறகு ப்லோக் போஸ்ட்.

குளிர் இன்னும் உண்டு. காற்று ஆதிக்கம் செலுத்துகிறது.

இன்னும் இளம் வெயில் காலம் (அதாவது ஸ்ப்ரிங், இங்கே) வரவில்லை. நிஜமான ஸம்மர் ஜூனில் தான்.

***********

நான் கடவுள் தமிழ் சினிமா பற்றி கேள்விப்பட்டு, வரும் சனியன்று நியூ ஜெர்சி சென்று பார்க்கலாம் என்று இருக்கிறோம்.

**********

தங்கை குடும்பம் இங்கு வந்து ஒரு வருடம் இருந்து பார்க்க முடிவு செய்துள்ளனர். இடையில் மச்சான் அங்கு (இந்தியா) சென்று பிசினஸ் பார்த்து வருவார்.... பல ட்ரிப்புகள்.

தங்கை குழந்தைகளுக்கு ப்ரைவேட் ஸ்கூல் அட்மிச்சன் வாங்கினோம். ஏற்கனவே, சில ஆண்டிகள் மூலம் பழக்கமான இடம். கஷ்டமில்லை.

ஏப்ரில் இரண்டாம் வாரம் முதல், அதே கிரேடை மீண்டும் இருவரும் படிக்க, ஆகஸ்டில் அடுத்த கிரேட் போவர்கள். நல்லது தான். பழக்கமாகும்....

**********

தமிழ்நாட்டில் / இந்தியாவில் தேர்தல். கட்டாய வசூல் நடக்கிறது.

அப்பாவிடம் தமிழ்நாட்டு எதிர்க்கட்சி ஆள் ஒருவர், இருபத்தி ஐந்து லட்சம் கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். பேரத்தில், ஐந்து லட்சம் என்று ஒத்துழைப்பு... எவன் வீட்டு சொத்து யாருக்கு. நான் சொன்ன மாதிரி அரசியலிலே இதெல்லாம் சகஜமுங்க. இப்போ கொடுத்தால் தான், நாளை திரும்ப வரும் (காண்ட்ராக்ட் மூலம் - உங்கள் பெயரில் அவர்கள் வேலை செய்து பங்கு கொடுப்பார்கள்).

இதையும் படித்து பாருங்கள். அரசியலும் அதிர்வும் சில பாயிண்டுகள் தமிழாக்கம் செய்கிறேன். (நன்றி ஷோபா வாரியர், மற்றும் ரிடிப்)

இந்தியா ஒரு சுதந்திரமானு நாடு என்று கண்டுப்பிடித்தீர்கள்?

சில காலம் நினைத்துள்ளேன். அனுமானமா? அரசியல் வாரிசுகள் ஆட்சி செய்யும் போது அது இல்லை என்று தோன்றுது.. உதாரணம் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, (மறைமுகமாக சஞ்சய் காந்தி)...

ஒரு ஆட்சியாளர் (பிரிட்டிஷ்) சென்றுவிட்டார், உள்நாட்டில் மீண்டும் ஒருவர் ஆள்கிறார். அதே போல. என்ன கொடுமை இது.

பிரிட்டிஷ் நல்ல ஆட்சி கொடுத்திருக்கலாம்! இப்போது இங்கு நடக்கும் கூத்தை (அரசியல், கூட்டணி, பதவி வெறி போன்றவை) பார்த்து சொல்லுகிறார்.

எப்போதும் பாபுகிரி (ஐ.ஏ.எஸ்) ஆட்சி தான்... சில திட்டங்கள் மக்களை கவர்ந்து (பெர்டிலைசெருக்கு சப்சிடி, பம்ப் செட் இலவசம் , கரண்ட் இலவசம், அப்புறம் விளையும் பயிருக்கு விலை நிர்ணயம்)...

இந்தியா ஒரு பின் தங்கிய நாடு ( 800 வருடங்கள் வளர்ச்சி இல்லை) சூறையாடப்பட்டுள்ளது..

இந்திய பாகிஸ்தான் மேட்சுகள் (கிரிக்கெட்) தேவையில்லாமல் அரசியலாக்கி... இப்போது ஸ்ரீலங்கன் டீமும் அடிபட்டு நிற்கிறது. நல்ல வேலை உயிர் சேதம் ஏதுமில்லை.

.....

- அப்பப்பா... எவ்வளவு நயமான கருத்துக்கள்.

மனதில் இந்தியராய் வாழும் எனக்கு (சொல்லில் இல்லை, நிஜம்) இது ஒரு படிப்பினை.

5 comments:

Ramesh said...

Divy, btw, you started translating too? long time... nice post. ;-)

வேளராசி said...

Akka, nice post.

Saravanan said...

hi,
nice.this particular message is very clear to understand..i guess may be you were in a rush when you wrote your previous blog...
From your message i understand your father is going to give bribe!!!

dont you advice your father to not to do such things for the welfare of our coutry!!

i do agree with you that right now india in dirty politics...but for every WRONG thing one day you will face a judgement day..so we dont need to worry about that..coz nature will take care by itself..like this current recession! who expected this!!!

anyway your writings are intresting to read..you have a very big archive.....to go through all your posts!!!..

வேளராசி said...

தமிழாக்கம் இங்கே

http://www.writercsk.com/2009/03/blog-post_11.html

இன்னும்...

http://specials.rediff.com/movies/2009/mar/10slde2-bala-on-naan-kadavul-god-and-faith.htm

DIVYA said...

Thanks for the comments and links.

My dad is not giving BRIBE, it is forced protection fee. Suggest you watch Mafia movies like Godfather... That is how the TN politicians are. Who is there to do good things for people? If they invest Rs 2 crores for an MP seat (plus 15 crores exp.), they will ensure they earn few times like that.