Monday, March 23, 2009

இஸ்ரேலில் நான்

இஸ்ரேலில் நான்...

கோவையிலிருந்து மும்பைக்கு இரண்டு மணி நேரம். அங்கு ப்ளைட் மாறி (ஏர்போர்ட்டும் மாற்றி) துபாய் அடைய ஆறு மணி நேரம். துபாயில் ஒரு மணி நேரம் கூட இல்லை, இரண்டு சூட்கேஸ், கூட வர வேண்டும் என்ற பயம்...

யு.ஏ.ஈ இஸ்ரேலோடு தொடர்பு இல்லாததால், டர்கிஷ் ஏர்லைன்ஸ் மூலம் இஸ்தான்புல், டர்கி (துருக்கி) சென்று, அங்கிருந்து இரண்டு மணி நேரம் பயணம்.

இடையில் இஸ்தான்புல் ஏர்போர்டில் ஒரு மணி நேரம்... நல்ல ஆர்கிடேக்சூர்.. காபி, மற்றும் உணவும் அருமை... அருமையான, பீட்டா ப்ரெட் சாப்பிட்டேன். காய் வைத்த ஸ்டப்பிங். நான் ப்ரெட் மாதிரி. அப்புறம், நம்ம ஊர் அல்வா மாதிரி ஒரு ஐட்டம், ஹல்வா தான் பேர். டர்கிஷ் ஹல்வா. ஒரு வித பிங்க் நிறம். வெள்ளை பூசணியில் செய்தது போல இருந்தது. பிஸ்தா வாசனை. ஆஹா அருமை!
ஒரு ஊர் வர, நான்கு ப்ளைட்டுகள். இருபது மணி நேரம் பிரயாணம். நேர் வழி ப்ளைட் இருந்திருந்தால், பாதி தூரம் மிச்சம். டெல் அவிவ் வந்து கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துவிட்டு, ஊர் சுற்றும் வேலையெல்லாம் முடிந்தது... ப்ளைட்டில் ரொம்ப நல்ல தூக்கம். மும்பையில் கிளம்பியவுடன், அதிகாலையில் சாப்பிட்டது, பிறகு இஸ்தான்புலில் தான். ப்ளைட்டில் ஜூஸ் குடித்துவிட்டு, தூக்கம்.

இங்கு வந்து இறங்கி (அமெரிக்கன் பாஸ்போர்ட் ஹோல்டர் என்றால், அப்படியே வெளியில் நடக்க வேண்டியது தான், ரொம்ப மரியாதை!) அரை மணி நேரத்தில் ஹோட்டலில் செக்கின் செய்தவுடன், குளித்துவிட்டு, அங்கு ஆபீஸில் இருந்து வந்த ஒரு டீமுடன் சில ட்ரிப்புகள்... (ஒக்கே என்றால் போகலாம் என்றார்கள்) அப்படியே என்னுடைய வேலை மூலம், என்னோடு போனில் பேசும் ஆட்களுடன் மரியாதை நிமித்த சந்திப்பு முடிந்தது. ஊர் சுற்றிக்கொண்டே வேலை. டீமில் ஒருவர் முஸ்லீம். பலர் ஜூஸ் மற்றும் கிறிஸ்டியன்கள். எல்லாம் அரசியில் என்றார்கள். இருந்தாலும் பாலஸ்தின் பற்றி கேட்ட போது ஒருவரும் ஒன்றும் சொல்லவில்லை. சொந்த நாடு ஆசை, யாரை விட்டது. இஸ்ரேலும் அப்படி உருவானது தான். இல்லையா?

சில படங்கள் கிழே.

லெபனான் பார்டர் அருகில் ஒரு ட்ரிப்... இரண்டு மணி நேரம் காரில்...கும்லா என்ற இடம், மூன்றாயிரம் ஜூஸ் (யூதர்கள்) கொல்லப்பட்ட இடம்... டெல் அவிவிர்க்கு, ஒரு மணி நேரம்.
மேலும் சில இடங்கள் பார்த்தேன்... முக்கியமாக பஹாய் (ஹைப்பா) கார்டன்ஸ்... மவுண்ட் கார்மல்... ஒரு மணி நேரம் செலவு செய்யலாம்....


அடுத்த முறை ஜெருசலம் பார்க்க வேண்டும் - ஒரு மணி நேரம் தூரம், வெள்ளி, சனி தவிர பார்க்கலாம், அதுவும் நன்றாக நிலைமை இருந்தால், இப்போது நான் கலர் கம்மி என்பதால் சுடப்படலாம்... பயம் தான் வாழ்க்கை.

***********

நாளைக்கு காலை சில மணி நேரம் ஆபீஸில் மீட்டிங்.... லன்ச் முடித்த பிறகு, சாயந்திரம் நன்கே முக்காலுக்கு லண்டனுக்கு டைரக்ட் ப்ளைட். மூன்று மணிக்கு அங்கு இருக்க வேண்டும். இரண்டு சூட்கேஸகளும், ஏர்போர்டில் வைத்துவிட்டேன்... எட்டு மணி அளவில், லண்டன் சென்றவுடன், இரவு ஏர்போர்டின் அருகில் இருக்கும் ஒரு ஹோட்டலில் தங்க வேண்டும். தூங்கி எழுந்து கலை எட்டு மணிக்கு டைரக்ட் ப்ளைட் டு நியூ யார்க்... புதன் மதியம் மீண்டும் நியூ யார்க் வீடு...

டெல் அவிவில் பிரிட்டிஷ் ஏர்வேஸ், சரி என்றால், மூன்று மணி ப்ளைட் மதியத்திற்கு மாற்றி கேட்டுள்ளேன், கொடுப்பார்கள் என நினைக்கிறேன். இரவு ஒன்பது மணிக்கு நியூ யார்க் வீடு போய் சேரலாம். எட்டு மணி நேரம் ப்ளைட்.

என்னோடு படித்த இரண்டு கோவை நண்பர்கள் அங்கு இருக்கிறார்கள், அவர்கள் குடும்பத்தோடு லேட் டின்னருக்கு அழைத்துள்ளேன், வருவார்கள்... இல்லாவிட்டால், காலையில் பாதி நாள், லண்டன் ட்ரிப். மேலும் சில நண்பர்களை சந்திக்கலாம்...

மொத்தம் எழு நாடுகள், பத்து நாட்களில்... யு.ஏ.ஈ, சிங்கப்பூர், தைவான், ஜப்பான், இண்டியா, டர்கி, இங்கிலாந்து ..... (மேலே பறந்தது, இன்னும் மூன்று இருக்கும்)

இவை தான் நான் சொன்ன சந்தோசங்கள்.

2 comments:

Ramesh said...

how was the London stay? this post is so cool...

more expected from u

தங்கவேல் மாணிக்கம் said...

அருமையான புகைப்படங்கள். வேலைக்கும் இடையில் சற்று இயற்கையோடு சுவாசித்த அனுபவத்தையும் எழுதுங்களேன்..