ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம், சீக்கிரம் சோர்ந்து விடுவது என்று சென்ற பதிவில் எழுதினேன்.
இன்று உடம்பிற்கு முடியவில்லை. வீட்டிலயே இருக்கிறேன். நல்ல வேலை ஆபிஸ் அருகில் இருப்பதால், பரவாயில்லை, கான்பரன்ஸ் கால் மூலம் வேலை ஓடுது. வேண்டுமென்றால், யாரவது வந்து கையெழுத்து வாங்கி செல்வார்கள்.
ப்ளு போல...
***********
ஜி.எம். எனது க்ளையண்ட் ... தலைவர் தெரியும்... இப்போ ராஜினாமா. டெப்ட் ப்ராடக்ட்ஸ் சிலவற்றை நல்ல விலையில் வாங்கி விற்று கொடுத்துள்ளது எங்கள் நிறுவனம். இருந்தாலும் பிசினஸ் குறைவு என்பதால்... ஒபாமா தூக்கிவிட்டார். எவ்வளவு பணம் ( எழு பில்லியன்) கொடுப்பது?
என்ன காரணம்? எப்படி கம்பனி தலை நிமிரும் என்று கேட்க, அவர் ஒபாமாவிடம், உங்களுக்கு பிசினஸ் தெரியாது என்று சொல்ல, உடனடி பனி நீக்கம். கேள்விப்பட்டேன். என்ன உலகம் இது...
**********
வரும் வெள்ளி வாஷிங்க்டன் டி.சி. செல்கிறோம். ஒபாமாவை பார்க்க முடியாது, அவர் யுரோப்பில் ஜி ௨0 மாநாடு அட்டன்ட் செய்கிறார்....
வேறு பிசினஸ்.
ஜோவிற்கு எதாவது, ஒரு துறையில் கன்சல்டன்ட் வேலை இருக்கும் என எதிர்பார்க்கிறோம்... (பெயர் வெளியில் வராது!)
எப்போது வரும்?
**********
அப்புறம், எங்கள் குடும்பம் மீண்டும் ஞாயிறு நியூ யார்க்கில் சந்திக்கிறது. தங்கை குடும்பம் இங்கு செட்டில் ஆக (ஒரு வருடம் ட்ரையல்) வருகிறார்கள். அப்பா அம்மாவுடன் அவர்களும்... பிரயாணம், துபாய் வழியாக... இந்த வருடத்தில் இரண்டாம் முறை... நல்ல வேலை மயில்ஸ் சேர்க்கிறார்கள். ஒரு ட்ரிப் இலவசம் வரும்...
*********
தோசை இப்போது நியூ யார்க் பேட்டரி பார்க் அருகில் சுட்டு விற்பதாக கேள்வி. யாரோ இரண்டு இந்தியர்கள், அந்த தொழில் செய்கிறார்கள். நல்லது... பாபுலர்.
*********
ஆண் செய்யும் வேலை, வீட்டில் பெண் செய்ய முடியாது அல்லவா? நான் இன்று ஒரு பெயிண்டிங் டரில் செய்து ஹாலில் ஹேங் செய்ய வேண்டும். எப்படி ஆகிறது என்று சொல்கிறேன்....
*********
அப்புறம் நிறைய பேர் வேலை /பணம் உதவி கேட்டு எழுதுகிறார்கள். முடிந்தவரை உதவிகள் செய்வேன், வேலை நான் சொல்கிற மாதிரி, திறமை இருந்தால் தேடி வரும்!
கோடீஸ்வர யோகம்
11 years ago

No comments:
Post a Comment