Sunday, April 12, 2009

குடும்பமும் கோலாகலமும்

ஒரு வாரமாக பதிவுகள் பக்கம் வாரம் முடியவில்லை.

அமெரிக்காவில் செட்டில் ஆக (ஒரு வருடம் ட்ரையல்) செய்ய தங்கை குடும்பம் வந்துள்ளனர்.

அப்பாவும் அம்மாவும் இப்போது கிரீன் கார்ட் ஹோல்டர்ஸ். சென்ற ஞாயிறு மதியம் நியூ யார்க் வந்தனர். அதன் பிறகு எல்லாம் அலைச்சல் தான். குழந்தைகள் இந்த வருடத்தில் இரண்டாம் முறை அமெரிக்கா பயணம்.... (ரிசசென் வேறு) வரும் திங்கள் முதல் அவர்கள் பள்ளி செல்கிறார்கள். ஆறு மாதம் வேலிடிட்டி டிக்கட் இன்னும் ௨0% அதிகம் என்பதால், வாங்கியுள்ளனர். தீபாவளி சமயம் ஊரில் கொஞ்சம் விசேசம் இருப்பதால் செல்லுவார்கள். இடையில், ரப்பர் வூட் இம்போர்ட் செய்ய மச்சான் சென்று வருவார். அங்கு அவர் அண்ணன் தம்பிகள், வியாபாரம் செய்வார்கள்.

தங்கை வாங்கிய ஒரு வீட்டை, மரமாத்து செய்து வைத்திருந்தோம்... அதில் அப்பா அம்மாவோடு செட்டில் ஆகி விட்டனர். இன்னும் குழந்தைகள் என்னோடு தான் உள்ளனர். அங்கு இடம் அதிகம், மற்றும் ஒரு மாடி தான், அதனால் வாக்கிங் செல்ல ஈசி. சனி ஞாயிறு என்னோடு வந்து இருப்பார்கள்.

மேலும், என் வேலை ஈஸ்டர் என்பதால், கொஞ்சம் குறைவு. வியாழனும் லீவ் தான், வெள்ளியோடு சேர்ந்து நான்கு நாட்கள் ஜாலி தான்.

இன்று சென்ட்ரல் பார்க்கில் ஈஸ்டர் எக் ஹன்டிங் உண்டு. சாகலேட் முட்டைகளின் தேடுதல்.

நேற்று ப்லுஷிங் கோவில் மற்றும் ஒக் ட்ரீ ரோடு நியூ ஜெர்சி சென்று வந்தோம். சாட் சாப்பிட்டோம். எங்கு பார்த்தாலும் ரிசசென். கவலை முகங்கள். அதற்காக படேல் பிரதர்ஸ் கூட்டம் குறைவில்லை. எப்போதும் போல வியாபாரம் தான்.

அயன் படம் வந்துள்ளது. இரண்டு வாரத்தில் டிவிடி கிடைக்கும் என்பதால், வெயிட்டிங்.

ஜோவின் அப்பா அம்மா மதியம் வருகிறார்கள். எங்கள் எல்லோருக்கும் இரவு டின்னர் அவர்கள் அக்கா வீட்டில்.

ஜோ கம்பனியில் இப்போது சில இன்வேஸ்ட்மண்டுக்கள் இந்தியாவில் செய்கிறார்கள். விஜயா பாங் ஸ்டாக் விரைவில் அதிமாகும் என்கிறார்கள்.

**********

இப்போதே கோவையை மிஸ் செய்கிறார் அப்பா. பனி காலத்தில் நான்கு மாதம் கோவையில் தான் இருக்க ஆசை அவருக்கு. எலெக்சனில் அவர் நண்பர் பிரபு நிற்பார் போல. காங்கிரஸ் சார்பில். நிச்சயம் வெற்றி பெறுவார். நீலகிரி இப்போது தனி (செடியுலுடு ) தொகுதி அதனால் இந்த மாற்றம். பணம் தநீறாய் செலவழிக்கும் திறன் உடையவர் அவர். மக்களுக்கு நன்மைகள் பல செய்துள்ளார். எங்கள் எட்டிமடை இடத்தை ஒரு கட்சிக்காரர், ஆகுப்பை செய்ய முயற்சித்தபோது, அவர் மூலம் நல்ல பலன் கிடைத்தது.

2 comments:

சுரேஷ் குமார் said...

//
எங்கள் எட்டிமடை இடத்தை ஒரு கட்சிக்காரர், ஆகுப்பை செய்ய முயற்சித்தபோது, அவர் மூலம் நல்ல பலன் கிடைத்தது.
//
அட.. நான் எட்டிமடை அம்ரிதா தயாரிபுங்கோ.. :)

கடேசி ஒரு சில பதிவுகள படிச்சேன்..
உங்க ப்ளாக்க ஒரு பயணியின் டயரிகுறிப்பு'னு சொல்லலாம்போல..?

Jay said...

As you rightly said vijayabank stocks went up more than 50%. whenever u get a time Please write something in financial areas. it would helpful for evereyone.