Tuesday, May 5, 2009

ஸ்வைன் ப்ளு என்ன செய்யும்? ட்ரிப் தான்

ஸ்வைன் ப்ளு ரொம்ப தான் படுத்துது... மெக்சிகோ நாட்டவரை ரொம்ப கேவலப்படுத்துது... சைனீஸ் செய்த அக்கிரமம் ப்ளைடோடு, கூண்டோடு, ஹாஸ்பிடல் அழைத்து சென்றனர்

இப்போது அமெரிக்காவின் மிக பிரபலமான சி.டி.சி. சொல்றாங்க.... அது சாதாரண விஷயம் என்று. செப்டம்பரில் தான் கலை கட்டுமாம். சோ பூர் ஜட்ஜ்மன்ட்ஸ் இடியட்ஸ்... மருந்து கம்பெனி விற்பனை ஏக போகம்... எல்லாம் ராபின் கூக் நாவல் மாதிரி திசை திருப்பும் வேலை அல்லவா?

*************

அப்பாவும் அம்மாவும் இந்தியாவில் இப்போது இருக்கிறார்கள். தங்கை குடும்பமும் கோவையில் தான். மே 17 இரவு தான் கிளம்புறாங்க....

நானும் ஜோவும், இரண்டு நாட்கள் கோவையில் இருந்தோம். ( ஞாயிறு, திங்கள்... மதியம் தான் கிளம்பினோம்...) ஒன்றும் செய்யவில்லை. அன்னபூர்ணாவில் சென்று இட்லி சாம்பார் சாப்பிட்டது தான் பெரிய விஷயம்.

இரண்டு பைலட்டுகள் (பீட்டர் மற்றும் சில்வெஸ்டர்) எப்போதும் போல, ஒரு வாரமென்றாலும், ஜாலியாக வருகிறார்கள். தயார் நிலை தான். ஜோவின் பார்ட்னர்ஷிப் கம்பனி ப்ளேன் தான். இந்த முறை, எங்களுக்கு நிறைய செலவு. அவர்கள் ப்ரேசிடன்ட் ஹோட்டலில் தங்க வைக்கலாம் என்பதை வேண்டாம் என்று சொல்லி, எங்கள் செல்வபுரம் கெஸ்ட் ஹவுசில் தங்கினார்கள். ஸ்டுவர்ட் ராப், கோவாக்காரர். ஒரு நாள் வீடு சென்று விட்டு சென்று விட்டு வந்தார்.

ஜோவிற்கும், சில நாள் ஜாலி ட்ரிப் தான். கஸ்டமர்கள், இன்வேச்டர்கள் சந்தித்த பிறகு வேறு என்ன செய்வது?

*************

சென்ற வெள்ளி மே தினம். பாரிசில் இருந்தோம். ஹில்டன் ஐப்பில் டவர்ஸ் அருகில்.... ப்ரெசிடென்டியல் சூட். மூன்று ரூம்கள். ஒரு நாள் தான்... இரண்டு நாள் இருந்த கவனிப்பு. அங்கு உற்சாகமான திருவிழா கலை கட்டியிருந்தது. கம்முனிச்டுகள் ஆட்சி செய்த இடம் அல்லவா? நிறைய தமிழர்கள் பார்த்தோம். (இலங்கை போல).

குடும்பமே லூவர் முஸியம் சென்று பார்த்தோம். ஐப்பில் டவர் சென்றோம்.

ஸீன் நதியில் காரிகேசூர் வரைந்துக்கொண்டோம். நல்ல வெதர். பத்து யுரோ ஒரு ஆளுக்கு. நம்மளை மாதிரி இருக்காது. இருக்கலாம்....****************
சனி ரோமில்... வாடிகன் மற்றும்... இரவு ஒரு வைனரியில் டின்னர். மூன்று மணி நேரம் டூர் போல அழைத்து செல்வார்கள். ஆறு மணிக்கு கிளம்பி, ஒன்பது மணிக்கு ஹோட்டல் வந்துவிட்டோம். நானும் ஜோவும் இலை தலை கொடிகள் என வெஜிடேரியன் பீட்சா சாபிட்டோம், மற்றவர்களுக்கு நன்றாக வறுத்த கோழி. சிறிது சாம்பெயின் சாப்பிட்டோம். குழந்தைகளுக்கு கிரேப் ஜூஸ். நான்கு பாட்டில் வைன் கிப்ட் கிடைத்தது... கோவை நண்பர்களுக்கு கொடுக்க வேண்டும்.

கோவை லேண்டிங் ஆர்டர் வாங்கினார்கள். அதனால், சனி இரவு பதினோரு மணிக்கு கிளம்பி, ஞாயிறு சுமார் பத்து மணிக்கு கோவையில் இறங்கினோம்.

வெனிஸ் ட்ரிப் கட். அடுத்த முறை பார்க்கலாம்..... ( அங்கு கொஞ்சம் தண்ணீர் உள்ளே புகுந்துள்ளதால், ஜோவின் சொந்தம் வீட்டில் இல்லை. அங்கு தான் தங்குவதாக ஏற்பாடு )

****************

திங்கள் ப்ருசல்சில் எட்டு மணி நேரம் தங்கல்... லுசியனோ என்ற ஹோட்டல், ஏர்போர்ட் அருகில். இரவு தூக்கம்....ஒரு பிசினஸ் டின்னர் மீட்டிங் எனக்கு. லோகல் டைம் ஐந்து இருக்கும் வந்து இறங்கும் போது. ஏழு மணிக்கு மீட்டிங்.

அந்த சமயம் ஜோ ஐந்தோவன் (ஹாலந்த்) சென்று அவர் கஸ்டமர் ஒருவரை பார்த்து வந்தார். ஆறு மணிக்கு கிளம்பியவர், பத்து மணிக்கு திரும்பினார்... நூறு கிலோமீட்டர்கள், ஒரு வழிப்பயணம் ஒரு மணி நேரம்... ஸாப்பரோடு டாக்சி லிமோ சர்வீஸ்.

காலை ஐந்து மணிக்கு கிளம்பி (அப்ரூவல் அப்படி தான் கிடைக்கும் ஜே.எப்.கேவில் இறங்க... லேண்டிங் ஸ்லாட் என்று சொல்லுவார்கள்) அதிகாலை ( ஏழு மணி அதிகாலையா?) தான் நியூ யார்க் வந்து சேர்ந்தோம்.

ப்ளைட்டில் ஒரே தூக்கம்..... இருவர் மட்டும் தான், அதனால், சீட் அட்ஜஸ்ட் செய்து (திருப்பும் வசதி... ) பெட் போல இருந்தது...

இந்த ட்ரிப் எதிர்பாராத நிகழ்வுகள் நிறைந்தது...

3 comments:

Vijay said...

Nice Thamizh writings from an NRI! Great!

I have heard about caricature artists in USA (particularly Fisherman's Wharf of SFO). They make sure in every picture the Golden Gate bridge is there in line form.

In yours they have made sure that the Eiffel Tower is there on the cheek. ;-)

BEST FUNDS ARUN said...

madam
i want to know about the cfp (certified financial planner)course. is this course ia approved in us and canada. i,m not a graduate . i,m a dip holder in electrical. but now i,m a mutual fund advisor(amfi certified) can i study cfp. if i clear this what will be the future aspects.

kindly send a mail to me regarding this. if possible call me whenever u come to india my num is 9994190773.
thanks madam

DIVYA said...

Not sure Arun.