Wednesday, May 6, 2009

சில கேள்விகளும் சில பதில்களும்

நேற்று எழுதிய பதிவில் குறிப்பிட்ட சில விசயங்களுக்கு சில கேள்விகள் வந்தன. என் பதில்கள் இதோ.... (நிறைய பேருக்கு இது போராக இருக்கும்...!)

சில கேள்விகளும் சில பதில்களும்

தனி ப்ளைட் எதற்கு, எத்தனை பேர் உட்காரலாம்?

பீச்க்ராப்ட் லாங் ரேஞ் கிங் ஏர் ப்ளைட்டில் மொத்தம் 12 பேர் பயணம் செய்யலாம். ஒன்பது பேசஞ்சர்ஸ் சீட்கள். ஸ்டூவார்ட் உட்காரும் இடம் அருகில், பிரிஜ் மற்றும் ஸ்தொவ். ப்ளைட் பின்னால் லக்கேஜ் ஸ்பேஸ் மற்றும் லூ. தடுப்பு . இடையில் எட்டு சீட்டுக்கள், பர்ஸ்ட் க்ளாஸ் ஏர்வேஸ் சீட் மாதிரி. சோபா நான்கு சீட்டுக்களை, இரண்டு முழு நீள பெட்டுக்கள் ஆக்கும் வசதி...

நேரம் காலம் கருதி, தனி ப்ளைட் எடுத்தோம். ஜோவின் கம்பெனி ஆதலால், வருடம் அவருக்கு நாற்பது மணி நேரம் ஒரு வருடம் பயணம் உபயோகம் உண்டு. அதை போக, அதிகம் பறந்த மணி நேரத்திற்கு தனி சார்ஜ் - நான்காயிரம் டாலர்கள், மினிமம் ஒரு வாரத்திற்கு நாற்பது மணி நேரம். ( நியூ யார்க் டு லண்டன் - 8, லண்டன் டு பாரிஸ் - 1, பாரிஸ் டு ரோம் - 3, ரோம் டு கோவை - 10, கோவை டு ப்ருசல்ஸ் - 10, ப்ருசல்ஸ் டு ஜே.எப்.கே. - 8 ). அப்புறம் ஹேங்கர் சார்ஜ் ( லண்டன், பாரிஸ், ரோம், கோவை, ப்ருசல்ஸ் ) ... தனி தனியாக எவ்வளவு தெரியவில்லை! கோவையில் மட்டும் இருநூறு டாலர்கள் கேஷ் சன்மானம் கொடுத்தார் ஜோ ;-).

மொத்தம் சுமார் இருபதாயிரம் டாலர்கள் அதிகம்... அதை எப்படி சரி செய்வது?

அப்பா, அம்மா ஒரு கல்யாணத்திற்கு செல்கிறார்கள் (நாளை ). எப்படியும் ப்ளைட்டுக்கு மூன்றாயிரம் டாலர்கள்.... ( இப்போது ஒரு 6 மாதம் ரவுண்ட் ட்ரிப் ஆளுக்கு 1200 டாலர்கள் தான்)

மச்சான் பிசினஸ் விசயமாக பயணம் செய்கிறார். அவருக்கு சுமார் இரண்டாயிரம் டாலர்கள் கணக்கு. யுரோப் டு கோவை, கோவை டு நியூ யார்க் தனியாக அவருக்கு செலவு, அதற்கு அவர் லக்கேஜ் கணக்கு....

மச்சான் கம்பெனி இருநூறு கிலோ கிரானைட் கட் ச்லேப்கள், அனுப்ப மூன்றாயிரம். ( அவ்வளவு தானா லோடு எடுத்தது? ) யாரோ ஒரு பெரிய ஆள் அர்ஜன்ட் ஆர்டர் போல. (தனி லக்கேஜாக... அது ஒரு கணக்கு!)

தங்கை குடும்பம் கோவையில் இருந்து திரும்பும் செலவு, மற்றும் இந்த லண்டன், பாரிஸ், ட்ரிப் சார்ஜுகள் எல்லாம் ஒரு வித கணக்கு தான்.

நானும் திங்கள் வரை யுரோபில் இருக்க வேண்டிய கட்டாயம். (வேலை). அதற்கும் சில டிக்கட் சார்ஜுகள். எனக்கு மட்டும் எட்டாயிரம் டாலர்கள் கம்பெனி கொடுக்கும்.

ஜோவிற்கு லண்டனிலும் ஐந்தொவனிலும் மீட்டிங்க்ஸ். அதற்கு ஒரு சார்ஜ் போடுவார். எழாயிரம்?

அப்புறம் என் கம்பெனி ஆட்கள் வந்து (சென்ற) லண்டன் ட்ரிப் இரண்டாயிரம்.

இந்த வருடம், இனி தனி ப்ளைட் எடுக்க காசு தான் தரனும். பிசினஸ் வேறு டல்.

இப்படி இந்த வருடத்தின் ட்ரிப்புகள் பலவிதம்.

தனி ப்ளைட்டால் என்ன லாபம்?

பர்ஸ்ட் க்ளாஸ் சீட்டுக்கள். தனி கவனிப்பு. அதிகம் கெடுபிடி ( இந்த ஸ்வைன் ப்ளு தொல்லை) இல்லாமல் செல்லும் தனி கேட். ப்ளைட் அருகில் வரும் கார்... பல ஊர்களுக்கு ப்ளைட் மாற்றாமல் செல்லும் வசதி ... நமது நேரத்திற்கு தகுந்த பயணம்...

அலைச்சல் குறைவு. குழந்தைகள் நன்றாக என்ஜாய் செய்வார்கள். முப்பதாயிரம் அடி உயரத்தில் ஆட்டம் இல்லாமல், மேகங்கள் மீது பறப்பது தனி சுகம். ஸ்பீட் கொஞ்சம் ஸ்லோ ஆனாலும், நன்றாக இருக்கும்!

இதெல்லாம், ஏ.டி.எப். விலை குறைவு என்பதால் தான். அப்புறம் பிசினஸ் டல் என்பதால், நிறைய சலுகைகள்....

அப்புறம், மற்ற பேசஞ்சர்களின் தொல்லை நிச்சயம் இல்லை.

**********

நார்மலாக இருபத்தி நான்கு மணி நேரத்தில் நியூ யார்க் டு கோவை பயண நேரம்.
நாங்கள் யு.கே. ட்ரிப் மற்றும் பாரிஸ், ரோம் சென்றதால் கொஞ்சம் அதிகம் நேரம், டைம் ஆனது. இடையில் லண்டன் டு நியூ யார்க் மூன்று நாட்கள் ரெகுலர் ட்ரிப் சென்று வந்தது தனி விமானம்.

நிச்சயம், 60,000 டாலர்கள் இருந்தால், ஒரு 12 பேர் குடும்பமே இந்திய சென்று திரும்பலாம், ஒரு வாரம் ட்ரிப் உட்பட. சில ஹை க்ளாஸ் கூரியர் ப்ளைடுக்கள் இருக்கின்றன. அவை பாதி சார்ஜ் செய்யலாம். என்ன நம் லக்கேஜ் குறைவாக தான் எடுத்துக்கொள்ள முடியும் மற்றும், நான்கு நாட்கள் போல தான் ட்ரிப் இருக்கும். (அவர்கள் திரும்ப வேண்டும் அல்லவா?) நாங்கள் ஜமைக்காவிர்க்கு ஒரு முறை இந்த மாதிரி கூரியர் ப்ளைட்டில் மொத்தம் எட்டு பேர் சென்று வந்தோம். பல ப்ளைடுக்கள் மாற்றும் தொந்தரவு இல்லை....

2 comments:

chennai said...

nallaa eluthureenga madam. I am the 20,000th visitor.

Congrats on your blog journey!

- Thambi

moe said...

நீங்க எழுதுவதில் இந்த பிரைவேட் விமானம் கதை ரொம்ப சுவரஸ்யமா இருக்கு. I think everyone who flew from US to India in any airline would have once thought of / dreamt of flying in first class (கொஞ்சம் ஓவரா dream panni பிரைவேட் விமானத்தில் போலாம்னு ஆசை பட்டு இருப்போம்.)

especially, when you start from US on friday evening and reach coimbatore on monday afternoon.

That dream starts all sorts of calculations after seeing some one who does that.

good read though