Thursday, May 14, 2009

ஒபாமாவும் ஸ்ரீலங்காவும்

ஒபாமா முழித்துக்கொன்டார். ஆயுதம் விற்க, நாட்டாமை செய்ய ஒரு வழி ...
நல்ல வேலை. ஸ்ரீலங்கா தமிழர்களுக்கு இனி விடிவு காலம் தான்.
நல்ல வேலை ஸ்ரீலங்காவில் பெட்ரோல் இல்லை. ;-)

சைனா தான ஸ்ரீலங்கா டேரரிஸ்டுகளுக்கு ஆயுதம் கொடுக்கிறது என்று தெரிந்து விட்டது. இது வரை இஸ்ரேல் தான் கொடுத்தார்கள். இரண்டு விமானங்களும் இஸ்ரேல் வடிவமைத்தது தான். வேடிக்கை என்னவென்றால், ஸ்ரீலங்கன் கவர்மண்டும் இஸ்ரேலிடம் தான் ஆயுதம் வாங்குது... இது தான் போட்டுக்கொடுப்பது என்பதா?

ஒபாமாவும் ஒரு சராசரி அரசியல்வாதி என தெரிகிறது. அவருடைய புத்தகங்கள், லாபியிஸ்டுகள் வாங்கு வாங்கென்று வாங்கி பழைய புத்தகம் எடைக்கு விற்கிறாங்க வெளிநாட்டில். அப்படி தான் இரண்டு மில்லியன் வருடம் வருகிறது. நெட்டில் அவருடைய டேக்ஸ் ரிடர்ன் பாருங்கள். நிறைய இடத்தில் ஓசி சாப்பாடு ( $ 250 இக்கு மேல் சாப்பிட்டது, கணக்கு காட்டவில்லை என்கிறார்கள், எதிர்கட்சியினர் )... பேச்சு தான் அதிகம். செயலில் ஒன்றும் இல்லை. இந்தியர்களின் ஐ.டி. தொழிலை நசித்து விடுவார் போல உள்ளது.

ஜோவிற்கு பழக்கம். இருந்தாலும் இப்போது விலகி சென்றுவிட்டார். அது தான் அமெரிக்கர்களின் விதி. ஜோவின் அக்காவும் நியூ யார்க் செனட் சீட் பெற்றுவிடுவார் என இருந்தோம். அதை பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன்!

சில தினங்களுக்கு முன் க்ளின்டன் குடும்பம் சந்திப்பு... நியூ யார்க்கில் தனி பட்ட முறையில் ஒரு விருந்தில் பார்த்தோம். ஸ்ரீ லங்கா இஸ்ஸு பற்றி சொன்னேன். பார்ப்போம் என்றார் ஹில்லரி. சந்தோஷம்...இனி எல்லா இஸ்ஸுவும் SOLVED! பரவாயில்லை இப்போது எதோ நடக்கிறது. ஒபாமா ஹில்லரியை நம்பி, கேம்ப் டேவிடில் இருந்து பேசினார்...தனி மாநிலம் கிடைக்கலாம்... (தமிழ்நாட்டுடன் அவர்கள் வந்து செல்ல - விசா இல்லாமல், ஒரு ஒப்பந்தம் போடப்பட வேண்டும் ) அது தான் நல் வழி... அகதி வழி தனி வழி. யாழ்பாணத்தில் தமிழ் பேசும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டு ஆட்சி செய்ய வேண்டும்.... தமிழ் டேரரிச்டுக்கள் கண்டிப்பாக ஒழிக்கப்படுவார்கள். அவர்களுக்கு சப்போர்ட் செய்யும் அமெரிக்கா - கேனடா வாழ் தமிழர்கள், இனி நிரந்தரமாக, ஒழிந்தார்கள் ;-) ஓடுங்கடா அவங்க அவங்க சொந்த நாட்டுக்கு... என சொல்லப்போகிறார்கள், வெள்ளைக்கார துரைசாமிகள். இப்போவா, பாதி ஆட்கள் காலி... வேலை இல்லாக்கொடுமை. பசி பட்டினி பஞ்சம் என அலைவது, நியூ யார்க் பேட்டரி பார்க் ஏரியாவில் தெரியுது. எவ்வளவு பேருக்கு தான் ஐந்து, பத்து என்று கொடுப்பது?

என்ன இருந்தாலும் ராஜபக்சே உள்நாட்டு விஷயம் என்கிறார். நேபால் நாட்டில் நடந்தது என்ன? தீவிரவாதிகள், அரசாளவில்லையா? ( எல்லாம் ஆயுதமும் விட்ட பிறகு...) பிரச்சண்டா செய்தது சரியோ தப்போ, அவ்வழி நல் வழி.

இது வரை சோமாலிய நாட்டில் நடக்கும் கொள்ளைகளும், கானாவில் நடக்கும் இனப்படுகொலையும், ஜிம்பாப்வேயில் நடக்கும் சர்வாதிகாரமும்... அமெரிக்காவினால் ஒன்றும் கூட புடுங்க முடியவில்லை. விதிவசம் கிரீன்பேக்சுக்காக, இந்த நாட்டு சிடிசன் ஆனேன் நான். இன்னும் கொஞ்சம் வருடம், காசு பண்ணிக்கொண்டு, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் செட்டில் ஆக வேண்டியது தான். ( ஸ்ரீலங்காவில் இருந்து ஒரு குழந்தை தத்து எடுக்க ஆசை! ) இப்போ ஜப்பான் நாடு ( நார்வே போதுமடா சாமி என்று ஓடிவிட்டது ) முயற்சி செய்கிறது, ஸ்ரீ லங்காவை காப்பாற்ற. யு.என். செக்கூரிட்டி உறுப்பினர்கள் அவர்கள்!

படுத்து தின்று கொழுத்து இருக்கும் ஆயில் ஷேக்குகளை தான், போட்டு தாக்குகிறது! ஒ.ஜெ.சிம்ப்சன் போன்றவர்களை விடுவித்த நாடு இது! நீரில் மூழ்கி கொல்லும் நிலைக்கு ஆளாகி குற்றம் சாட்டப்பட்டவர்களை அதிகாரப்பூர்வமாக கொடுமைகளை செய்து குற்றங்களை ஒத்துக்கொள்ள வைக்கும் நாடு இது! ஒரே ரணகளமா இருக்குப்பா!

என்ன நானே இன்டர்நெட் மூலம் தொந்தரவு செய்த மூவரை, சிறைக்கம்பி என்ன வைத்தேன்! நியாயம் என் பக்கம். ( ஒருவர் - வேலை செய்யும் நேரத்தில் இன்டர்நெட் உபயோகம் செய்ததால், வேலையை விட்டே துரத்தியடிக்கப்பட்டார்! )

*************

இந்திய அரசியலில் மீண்டும் மாற்றம். தி.மு.க அதிகம் சீட்டுக்கள் ( எம்.பி. ) பெறாவிட்டால், அரசு களையும். மீண்டும் சில மாதங்களில் தேர்தல்.

இப்போது அமெரிக்கா இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனையில் தலை இடுகிறது. ஆந்த்ராவின் சந்த்ரபாபு நாயுடு மற்றும் சிரஞ்சீவியை சந்திக்கின்றனர் அமெரிக்கா கேபினட் அந்தஸ்து உள்ள அம்பெசடர்! ( பாவம் விஜயகாந்த்! டோன்ட் கேர் என்பார் ஆங்...) எல்லாம் சி.ஐ.எ மற்றும் எப்.பி.யைக்கு உதவி செய்யும் நோக்கில் தான்! அப்போ இந்த எலெக்ட்ரானிக் வோட்டு மெசின்கள் எல்லாம், வைரசால் பாதிக்க வைத்து, ரிசல்ட்டை மாற்றவைப்பார்களோ என்ற அச்சமும் இருக்குது. ( இதை வடிவமைத்த சுஜாதா தான் "அங்கிருந்து" சொல்ல வேண்டும்! )

என்னப்பா இது? மருதமலை முருகா காப்பாற்று!

2 comments:

Vinitha said...

தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று அமேரிக்காவில் இருக்கும் உங்களுக்கு இண்டரஸ்ட் வரும் போது எங்களுக்கு எப்படி இருக்கும். ;-)

சிறு துரும்பும் உதுவம் என்கிற மாதிரி நீங்கள், ஸ்ரீலங்கா பிரச்சனைக்கு ஒரு வழி செய்துள்ளீர்கள்.

தங்கவேல் மாணிக்கம் said...

திவ்யா, படிக்கப் படிக்க கிறுகிறுன்னு வருகிறது....