அப்பா, அம்மா, தங்கை மற்றும் மச்சான் அப்புறம் குழந்தைகள் வந்திருந்தார்கள். முதலில் அவர்கள் கையில் சாக்கலேட்டு..
காரிலேயே லாகின் செய்து மெயில் செக் .... வயர்லெஸ் கார்ட். நன்றி!
ஜெட்லைட் ப்ளைட். என்ன லுக்கேஜ் அதிகம் என்பதால், கொஞ்சம் காசு அதிகம் கொடுத்தோம். இருபது கிலோ, பிளஸ் ஹேண்ட் பெக் மட்டும் அல்லொவ் செய்வார்கள். அதற்க்கு மேல், ௨000 கறந்துவிட்டார்கள். ப்ளைட் கூட்டம். புல்.
ஞாயிறு இரவு இதே ப்ளைட்டில், இடம் கிடைத்து விட்டது! ரிடர்ன் சென்னை வழி இல்லை. நேர் வழி. ரஜினி சொல்ற மாதிரி தனிவழி. அதை அடுத்த வாரத்திற்கு மாற்றி விட்டேன். 1500 பிடுங்கி கொண்டார்கள். ஜோ டிக்கட் மாற்றியதில்... இரண்டு டிக்கட் ஒன்றானதால், ஒன்றுமில்லை... கேன்சல் சார்ஜ் போக, பரவாயில்லை.
அமெரிக்காவில், பாயிண்ட் டு பாயிண்ட் செல்ல, எக்ஸ்ட்ரா வாங்கமாட்டார்கள். எந்த வழி வேண்டுமானாலும். மாற்றலாம். அதே ஜெட் கம்பனி தான். கொடுமைங்க இது.
****
பதினோரு மணி மீட்டிங், லன்ச் தூக்க கலக்கத்தில் போனது... இரண்டு மணி வரை. ஜோ ஹோட்டலில் சாப்பிட்டு விட்டார்.
நேராக நரிமன் பாயிண்டில் இருக்கும் ஆபிஸ், சிறிது மீட்டிங், அப்புறம், சாப்பிட கிளம்பினோம். எர்லி... 12 நூன்.
லன்ச் என்ன? எங்கே? டெண்டுல்கர்ஸ் கியுசைன். சிவாஜி மார்க், அபோல்லோ பந்தர் என்ற இடத்தில் உள்ளது... காப்பே பரேட்?
அங்கிருந்து அடித்து பிடித்து, ஒரு மணி நேரத்தில் ஹோட்டல் வந்து, செச்கவுட் ஜோ செய்திருந்தார்... என்ன ஏர்போர்டில், இரண்டு மணி நேரம் உட்கார்ந்திருந்தோம், லவுஞ்சில். சரியான வேலை நடக்கிறது, ஏர்போர்ட் மாற்றங்கள். இந்திய முன்னேறுகிறது! எங்கு பார்த்தாலும் ஒபாமா பேச்சு!
****
இப்போது இரண்டு நாட்கள் நன்றாக என்ஜாய் செய்ய வேண்டும். தங்கச்சி பொடிபசங்கள் .. சாக்கலேட்டுக்கு அடி போடுவது அருமை!
அம்மா சமையல் கொஞ்ச நேரத்தில். வாழை இலையில் ஜோவிர்ற்கு பரிமாறுவது, விரும்புவார்! கையில் வேறு சாப்பிட வேண்டும்... பார்க்கலாம்!
முடிந்தால் ஒரு வீடியோ பதிவு போடுகிறேன்.
There is nothing like, resting on the lap of your mother, at whatever age!
கோடீஸ்வர யோகம்
11 years ago

1 comment:
கோவை வந்தாச்சா. உங்க சாப்பாட்டு மெனுவைப் படித்ததும் வயிற்றில் புகை வருது..
ஆனால் நானும் சாப்பிட்ட மாதிரி திருப்தியாத்தான் இருக்கு.
தினமும் படிக்கனும் போல. டைரி போல எழுதுறீங்க..
Post a Comment