Thursday, December 11, 2008

நூடில் ஹவுஸ்

நேற்று இரவு வீடு திரும்பும் போது சரியாக நடு இரவு.

ஜோவின் பெற்றோர், அப்படியே கிளம்பிவிட்டார்கள். இவ்வளவு மாடி ஏறி இறங்க தேவையில்லை என்று, போகும் வழியில் போய்க்கொள்வார்கள். இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை பெரியவர்கள் கட்டாயம் செல்ல வேண்டும். அதிகாலை மூன்று மணிக்கு வீடு சென்று சேர்ந்துவிட்டார்கள். சொப்பர் ஸ்பீட். தேர்ந்த டிரைவர் என்பதால், நல்ல லிமோ கூட, அதனால் பயம் இல்லை.

நூறு மையில்கள் தூரம் என்றாலும், இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது. வழியெல்லாம் கொஞ்சம் மழை மற்றும் ஸ்நொவ். பத்து மணி ஆகிவிட்டது ஹோட்டலில் இருந்து கிளம்ப. இரண்டு மணி நேரம். சந்தோசம்.

வில்மிங்க்டனில் நூடில் ஹவுஸ் சென்றது மிகவும் மகிழ்ச்சி.

செப் தன் கையாலே மாவு பிணைந்து, திரி திரியாக, நூடில்ஸ் செய்தது, அருமை. கண் முன்னாள் சமையல். நானும் ஜோவும் ச்டிக்ட் வெஜிடேரியன் என்பதால், இரண்டு வகை நூடில்ஸ், ப்ளைன் மற்றும் கீரை (ஸ்பினாச்) வகை. இந்திய ஸ்டைலில் தாளித்து... இன்னும் நினைத்தால் நாக்கில் எச்சில் ஊருது...

மே பி நான் வெஜ் ஆட்கள் என்ஜாய் செய்யலாம்.

ஒரு பெரிய டப்பாவில், எங்களுக்கு கொடுத்து அனுப்பினார் அந்த சைனீஸ் செப். ஐந்து பேர், அந்த அரசியல்வாதி நண்பர் மட்டும் வந்திருந்தார். சில நூறு டாலர்கள். நல்ல கவனிப்பு.

நிறைய இந்தியன்ஸ் பார்த்தேன். நூடில்ஸ் என்றால் குழந்தைகள் கொண்டாடுவார்கள். தங்கை குழந்தைகள் இங்கு ஒரு முறை அழைத்து வர வேண்டும். நியூ யார்க்கில் கொஞ்சம் இடம் குறைவு, கூட்டம்.

ஜோ டிரைவரை, மெக்டோனல்ட்ஸ் சென்று சாப்பிட்டு வர அனுப்பி விட்டார், கையில் இருபத்து டாலர் கொடுத்து. வாயெல்லாம் பல். இன்றைய நிலையில், அங்கு ஒரு மீல்ஸ் ஐந்து டாலர்கள் தான் ஆகும்.

பேச்செல்லாம், ஜோவின் சொந்தக்கார அக்கா நியூ யார்க் செனட்டில் போக ஆசை பற்றி... ஹில்லரி க்ளின்டன் தான் செக்ரெடரி ஆப் ஸ்டேட் ஆகிறார்.

இன்று லாண்டரி செய்ய துணி மெயிடுக்கு கொடுத்துவிட்டு, ஆபிஸ். வெள்ளி ட்ரிப்.

நாளைக்கு வீட்டில் ஒரு விருந்து. ஜோவின் அக்கா வருகிறார். மூன்று மணிக்கு ஆபீஸில் இருந்து வந்தால் தான் ரெடி செய்து, ரெடி ஆக முடியும்.

***********

ஒரு கமன்ட் - ஜோவுடைய வீடு (எங்கள்) என்று எழுதினேன்.

அதற்கு அர்த்தம் இருக்கிறது...

அமெரிக்காவை பொறுத்த வரை, ஏன் உலகெங்கும், இது தான் நடைமுறை...

என் அம்மா, என் அப்பாவுடைய சொத்து பற்றி ஒன்றும் கேட்கவில்லை, கல்யாணம் செய்து வரும் போது. அதன் பிறகு ஈட்டியது தான், கணக்கு வழக்கு.

ஜோ சம்பாரித்து வாங்கிய வீடு, குடும்ப சொத்து, இன்னும் அவர் அப்பா அம்மா மற்றும் அக்கா உயிரோடு இருக்கும் போது, அதை பற்றி பேச கூடாது.

ப்ரி - நுப்சியல் அக்ரீமென்ட் என்று ஒன்று உண்டு. நியூ யார்க் பொறுத்த வரை, கணவனின் உழைப்பு சொத்து, பாதி மனைவிக்கு... பிரிந்தாலும் (இங்கு நடக்காது!) மாதம் மேயிண்டைனன்ஸ் கொடுக்க வேண்டும்...

எவ்வளவு பேர் பார்த்துள்ளேன்.

நான் மனத்தால் இந்தியன். கொஞ்சம் உசார் தான்.

2 comments:

Vinitha said...

அவுங்க நாட்டு கலாச்சாரம்...

அவர்கள் இப்படி என்று நான் எதிர்பார்க்கவில்லை.

Indian said...

I do know about pre-nup and other practices. All along, it has been read in the divorce cases of hollywood couples. In that context, your comment made me to think how real it is in the Western(American) culture. Hence the smiley. It is not meant to be offensive or derogatory.

Your response is sort of an eye opener for many bloggers from India.