நேற்று எங்கள் வீட்டில் இன்னும் ஒரு பார்டி...
ஜோவின் அக்கா வந்தார்கள். சில அரசியல் பிரபலங்கள் அழைத்து வந்திருந்தார். அறை மணியில் சென்று விட்டார்கள். அவர்கள் குடும்பம் மட்டும் தான் இருந்தார்கள்.
அவசரமாக ஆபிசிலிருந்து நான்கு மணிக்கு வீடு வந்தேன். ஐந்து மணி வரை ஒரே கால்ஸ்.
சாம்பாரும் இட்லியும் செய்தேன். நாத்தனார் கொடுமை இல்லைங்க. ;-) கிட்ஸ் ரெடி மிக்ஸ். அப்புறம் எம்.டி.ஆர். ரவ இட்லி மிக்ஸ்.
அவர்கள் வரும்போது இந்தியன் ஐடம்ஸ் கண்டிப்பாக. புளியோதரை அல்லது புளியோகரே மற்றும் தயிர் பச்சிடி நிச்சயம். செய்வது ஈசி. எம்.டி.ஆர். பொடி ஜாக்சன் ஹைட்சில் (இந்த முறை அம்மா கொடுத் அனுப்பியது..) சாதம் வைத்து தாளித்து விட்டால் போதும்...
சமோசா ஆர்டர் நிச்சயம். இரண்டாம் முறை இந்தியன் ஹோட்டலை கூப்பிட்ட போது, எக்ஸ்ட்ரா டிஸ்கவுண்ட் வேறு கொடுத்தார்...
சேமியா பாயாசம் செய்தேன். அதுவும் ஈசி. நல்ல புல் க்ரீம் பால், சக்கரை, வருத்த சேமியா, மற்றும் வெனில்லா எசன்ஸ்... நட்ஸ் ( கேஷூ, கிஸ்-மிஸ் , ஏலக்காய் ) போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க வைத்தால் ரெடி! என்ன டின்னர் சாப்பிட பிறகு ஒரு முறை சூடு மைக்ரோவேவில் செய்ய வேண்டும். முடிந்த வரை தண்ணீராக கொடுக்க வேண்டும்.
இது தான் இந்தியன் ஸ்டைல் டின்னர். எல்லாம் ரெடி செய்ய ஒரு மணி நேரம்.
ஆறு மணிக்கு டின்னெர் டேபிள் ரெடி.
சரியான நேரத்திற்கு வந்து விட்டார்கள்.
பேசிக்கொண்டே சாப்பிட வேண்டியது தான். இந்த மாதிரி சமயத்தில் மெயிட் இருப்பார், கிச்சனில், எல்லாம் எடுத்து கொடுக்க. எக்ஸ்ட்ரா கொடுப்பேன், இரவு வீட்டிற்க்கு போகும் போது ஒரு பத்து டாலர், கொஞ்சம் டப்பாவில் இந்தியன் சாப்பாடும்... கண்களில் ஒரு தேங்க்ஸ் சொல்லுவார்.. ரோசா, என்னை விட இரண்டு வயது பெரியவர்.
இந்த மாதிரி அக்காவை அழைப்பது ஜோவின் அக்கறை... எல்லாம் நல்லது தான்.
என்ன இருந்தாலும் டின்னருக்கு முன், ஒரு சூப் வைக்க வேண்டும். கட்டாயம். இருக்கவே இருக்குது, ரெடி மிக்ஸ் ரசம். அதுவும் எம்.டி.ஆர். தான்.
*****
இரண்டு நாள் ட்ரிப்பிற்கு ரெடி.
இன்று மீண்டும் லன்ச் சமயத்தில் வீடு வந்து, வீட்டிலிருந்தே வேலை. மூன்று மணிக்கெல்லாம் கிளம்பினால் தான் சுவிஸ் ப்ளைட் பிடிக்க முடியும்.
கோடீஸ்வர யோகம்
11 years ago

No comments:
Post a Comment