நானும் ஜோவும், அம்மா அப்பா, தங்கை குடும்பத்துடன் நியூ யார்க் ஸ்டேட் சுற்றினோம். இரண்டு நாட்கள்... பெரிய பதிவு எழுத ஆசை. கொஞ்சம் வேலை. மெதுவாக எழுதுகிறேன். ஜனவரி ஐந்து தான் ஆபிஸ். மருதமலை முருகன் அருளால், எனக்கு பெரிய பதவி கிடைக்க வேண்டும். அப்படி என்றால், இங்கு தொடர்ந்து இருப்பேன்.
வெள்ளி அன்று மச்சான் ஆசினிங் அருகில் ஒரு மோட்டல் வாங்க ஒப்பந்தம் போட்டார்.
இன்னும் சிறிது நேரத்தில், நியூ ஜெர்சி சென்று சில நண்பர்களை பார்ப்போம். அப்படியே கோவில்...
நாளை ட்ரெயின் எடுத்து வாஷிங்க்டன் சென்று, சுற்றிவிட்டு, என் திருப்பூர் நண்பியின் சொந்தம் ஒன்று கேயிதர்ச்பர்கில் இருகிறார்கள். அவர்களை பார்த்துவிட்டு.... இரவு வில்மிங்க்டனில் எங்கள் வீட்டில் (;-)) தங்குகிறோம். புதன் காலை எழுந்து இரண்டு அவுட்லெட் ஷாபிங் மால் சென்று விட்டு...
மதியம் நியூ யார்க் வந்து விட வேண்டும்.... குளிர் எங்கும். இரவு டைம்ஸ் ஸ்கொயர் நியூ இயர் செலேப்ரேசன் - தீவிரவாதிகள் தாக்குதல் என்று பயம் காட்டுகிறார்கள்..., பதினோரு மணி அளவில் இருந்தால், வெளியில் நடந்து வர வழி இருக்கும்.
என்ன குழந்தைகள், குளிரில், தூக்கம் கெட்டு இருக்க வேண்டும். அவர்களுக்கு இது முதல் முறை...
ஸ்னோ விழுகிறது... இரவில் மட்டும்... பாஸ்டனில் தூக்கம் போகிறதாம்!
************
எனக்கு பிடித்த பதிவு ஒன்று - சிறியது... வினிதா அழகாக எழுதியுள்ளார்...
மைசூர் பயணம்
பாதி போட்டோ போட்டு தப்பித்துவிட்டார்.

No comments:
Post a Comment