Monday, November 10, 2008

பம்பாய் மும்பை

பம்பாய் , இப்போது மும்பை ... பாம்பே என்றார்கள் ஆங்கிலத்தில். இன்னும் பம்பாய் என்று தான் சொல்லிக்கொள்கிறார்கள்!

நான் ஐ.ஐ.எம். படித்த காலத்தில், தனியாக வந்து, அஹமெடாபாத் செல்வேன், ஆறு மாதம் ஒரு முறை. அப்புறம், இப்போது வேலை செய்யும் கம்பனியில் சம்மர் ப்ராஜெக்ட். கொலாபாவில் ஒரு அபார்ட்மென்டில் தங்கினோம். 1990. எட்டு வாரங்கள், ஜூன், ஜூலை ...அனலிஸ்ட் என்றால் என்ன என திரிந்த காலம். நான்கு பேர், எல்லாம் பெண்கள். பாதுகாப்பான இடம். அப்பா வந்து பார்த்துவிட்டு சென்றார்.

என்னோடு தங்கியிருந்த பெண்கள், பீர் சாப்பிடுவார்கள், ஜாலியாக ஆண்களோடு சுற்றினார்கள். நான் மட்டும் வெகு கவனமாக இருந்தேன்.

அப்போது எல்லாம் இன்டர்நெட், ஈமெயில் இல்லை! இரண்டு வருடம் கழித்து வந்தது!

அப்புறம் இரண்டாம் வருடம் ..எம். தான் வாழ்வில் மறக்க முடியாத வருடம்!

அப்போது ரோட்டில் விற்கும் உணவு என்றால், ரொம்ப பிடிக்கும். தட்டுகுச்சி என்ற பட்டப்பெயர் மாறிய காலம். மகேஸ்வரி என்ற இடத்தில் காமத் ஹோட்டல் ஒன்று, இப்போதும் உள்ளது என நினைக்கிறேன். அங்கு சென்று மீல்ஸ் சாப்பிடுவோம். சோர் பஜார் என்ற இடத்தில் மலையாள ஆட்கள் நிறைய வகை தோசைகள் விற்பார்கள். இன்று அந்த ஏரியா செல்ல வேண்டும். ஜோ வரமாட்டார்! பிடிக்காது! வயிறும் ஒத்துக்காது!

*****

இன்று மதியம் ஹாஜி அலி ஸ்ஹெரிப் சென்று வந்தேன். தலையில் முக்காடு போட்டு! ஒரு தீவில் உள்ளது, நான்கு மணிக்கு மேல், அந்த பாலத்தை, தண்ணீர் மூழ்கி விடும்...ஜோ ஒரு ஹோட்டலில் இருந்தார்... பாதுகாப்புக்கு வந்தவர், வெளியே நின்று பார்த்துக்கொண்டு இருந்தார்.

http://www.pilgrimageindia.net/muslim_pilgrimage/haji_ali.html

லன்ச், நானும் ஜோவும் தாஜ் ஹோட்டலிலேயே சாப்பிட்டோம். கிழே உள்ள படம் பாருங்கள், கேட்வே ஆப் இந்தியா இடதுபுறம் உள்ள அந்த பழைய கால ஸ்டைல் கட்டிடத்தில் (தாஜ் கேட்வே) தங்கி இருக்கிறோம்!
வெஜ் தாளி மீல்ஸ்... மேங்கோ லஸ்ஸி...இரண்டு பேருக்கு 1500 ருபாய்! அம்மா நல்ல அரிசி மூட்டை 50 கிலோ ரூ 1500 ஆகிவிட்டது என்று சொன்னது ஞாபகத்திற்கு வந்தது!

எனக்கு இரண்டு மணி நேரம் தான் வேலை இருந்தது. ஜோ அவருடைய மீடிங்க்ஸ், முடித்துவிட்டார். இரண்டு இன்வேச்டர்கள், பாதி ஷேர்ஸ் விற்கிறார்கள், நான் சொன்ன கம்பனியில். ஜோ அதை ஸ்டாக் மார்கெட் மூலம் தான், தன்னுடைய எப்.ஐ.ஐ. அக்கவுண்ட் மூலம் வாங்கினார்! இருவருக்கும் சந்தோசம்...

அப்புறம் பவர்சோப்ட் குளோபல் சலுசன்ஸ் என்ற கம்பனியில் 4% பங்குகள் வாங்கியுள்ளார் அவர் கம்பனிக்கு, ஒரு வருடத்தில் டபுள் ஆகுமாம்.

இப்போது நண்பர்கள் பார்க்க செல்ல வேண்டும். பிறகு சொவ்பாட்டி பீச்சில் நடக்க வேண்டும். சாட் சாப்பிடவேண்டும்!

ஜோ ஒரு இங்க்லாந்து நிறுவனம் மூலம், தாராவி ஏரியாவில் உதவி செய்கிறார்! அங்கு கொஞ்ச நேரத்தில் சென்று வர வேண்டும். மாத்துங்கா கோவிலுக்கு அப்படியே சென்றுவிட்டு, திரும்பி வந்து... பரேலில் குழந்தைகள் துணி கடை ஒன்றில் துணி வாங்கிக்கொண்டு டின்னெர்....

நாளை எழுதுகிறேன்.

No comments: