மும்பை என்று போட்டோ காட்டும் போது காட்டப்படும் ரோடு மற்றும் பீச் அது.
நல்ல வளைவு.
சூரியன் மறையும் போது, அழகு.
பேல் பூரி மற்றும் பாவ் பாஜி சாபிட்டோம்.

அப்புறம் மாதுங்கா சென்றோம். கோவில் ஒன்று உள்ளது. பார்த்தோம்.
அப்படியே, உலக புகழ் பெற்ற தாராவி ஸ்லம் ஏரியா.
ஜோ அவர்கள் உதவி செய்யும் சில இடங்களை பார்வை இட்டார். கஷ்டமாக இருந்தது!
இப்போது, கவர்மென்ட் இடத்தை எடுத்து, அந்த பழைய ஏரி தாராவியை, சுற்றி ஏழைகள் குடியிருப்பு காம்ப்ளெக்ஸ் செய்யபோகிறார்கள்.
ஒரு பகுதி ... டெவலப் செய்யும் கம்பனிகளுக்கு ஸ்டார் ஹோட்டல் மற்றும் ஷாபிங் காம்ப்ளெக்ஸ் கட்டி கொள்ள அனுமதி.
இரவு டின்னெர், நண்பர் குடும்பத்துடன் அந்தேரி ரெஸ்டாரன்ட் ஒன்றில் பேசிக்கொண்டு உணவு. மாடி ... காற்று.. குழந்தைகள் சத்தம்... அமைதி அருமை. சைனீஸ் சாபிட்டோம். எல்லாம் கிடைக்கிறது. ஒரு குழந்தை, பிஸ்தா நான் என்ற ரொட்டி இனிப்பு ஐடம் .... சாப்பிட்டது அழகு. மெடிடரேனியன் பிட்டா ப்ரெட் போல இருந்தது.
ஹோட்டல் வந்து படுக்கும் போது பதினோரு மணி.

No comments:
Post a Comment