Saturday, November 15, 2008

சென்னை மற்றும் கோவை

என் நெடிய பயணம் மும்பையில் இருந்து... சென்னை வழியாக கோவைக்கு.

நேற்று இரவு பன்னிரெண்டு மணிக்கு ஜோ எழுந்து கிளம்பினார். நானும் ஏர்போர்ட் வரை சென்று, வழி அனுப்பிவிட்டு வந்தேன். அரை தூக்கம், சரியாக தூங்கவில்லை, பிரிவு என்ற நிலை... இரண்டு மணிக்கு தூங்கியிருப்பேன், ஒரு முறை ப்ளைட் கிளம்பும் முன் ஜோ அழைத்தார்.... காலை ஐந்து மணிக்கு அலாரம். எழுந்து குளித்து ரெடி ஆகி, அவசரமாக செக் அவுட் செய்து... ஏர்போர்ட் வந்து சேரும் போது ஆறு மணி.

ஒரு லக்கேஜ் மட்டும், சீக்கிரம் செக் இன் செய்துவிட்டு... ப்ளைட் 6.45 am சரியாக கிளம்பியது. இட்லி வடை கிடைத்தது.... ஒரு மணி நேரம் தூக்கம். எட்டரை மணிக்கு சென்னை லேண்டிங். செல் ஆண் செய்தவுடன், ஜோவின் கால் துபாயிலிருந்து.... இரண்டரை மணி நேரத்திற்கு அப்புறம் அவருக்கு நியூ யார்க் ப்ளைட். ஒன்பது மணிக்கு வெளியே வந்தேன். பத்து மணிக்கு எனக்கு சத்யாவோடு இன்டர்வியு மீட்டிங்...

நண்பர் ரவி விசுவநாதன், மற்றும் அவர் மனைவி சித்ரா வந்திருந்தார்கள். ராஜா அண்ணாமலைபுரத்தில் வீடு. இப்போது கத்திபாரா பளை ஓவர் இருப்பதால், ட்ராபிக் பரவாயில்லை. சத்யா ஆபிஸ் அங்கிருந்து ஐந்து நிமிட தூரம்... அவருக்கு போன் கால் செய்துவிட்டு கிளம்பினேன்.

ரவி அவர்கள் வீட்டில் லக்கேஜ் வைத்து விட்டு, ஒரு பத்து நிமிடம் லேட். சத்யாவும் லேட் தான்.. ஒரு மணி நேரம் பேசினோம்.... பெங்களூர் ஆபிஸ் நிர்வாகம், எம்.ஜி ரோட்டில் இடம் பார்த்திருக்கிறார். பாதி நேரம் யு.எஸ். மார்கெடிங் வேலை. ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒரு முறை இந்தியாவில் இருக்க வேண்டும். சில வாரம்... யோசிக்க வேண்டும். இந்தியாவில் ஒரு வீடு கிடைக்கும் அல்லது ஐம்பதாயிரம் வரை வாடகை. சம்பளம் பற்றி கவலை இல்லை.

பெங்களூரில் எங்கள் வீடு ஒன்று செயின்ட் மார்க்ஸ் ரோட்டில் உள்ளது. இப்போது வாடகைக்கு இருக்கிறார் ஒரு யுரோபியன். ஒரு இரண்டு பெட்ரூம் விலைக்கு வருகிறது நல்ல விலைக்கு அருகில். 1450 ஸ்குயர் பீட் ஒரு கோடி ரூபாய்கள் என்கிறார்கள். அங்கு வாடகை ஐம்பதாயிரம் என்று போகிறது.

இந்த வேலை எடுத்தால், அந்த வீடு பார்க்கலாம்... வாங்கலாம்... அப்பா அம்மாவும், பெங்களூரில் தங்குவது பிடிக்கும் என்றார்கள்.

***

ரவி வந்து பிக்கப் செய்து கொண்டார். அவர்கள் குழந்தைகள், பெரிய பிள்ளைகள். சரவணா பவன் அவர்களுக்கும் பிடித்த இடம். பீட்டர்ஸ் ரோடு நல்ல இடம். ஒரு மணி அளவில் அங்கு சென்றோம், நல்ல சாப்பாடு, வெஜிடேரியன் பப்பே. மூன்று மணிக்கு அமதீஷ்ட் என்ற இடம், இரண்டு நிமிட நடை தூரத்தில் இருக்கிறது. பதிவுகள் மூலம் சந்தித்த இரு நண்பிகள், வினிதா, சாந்தி ஜெயகுமார் மற்றும் ரமேஷ் மற்றும் குடும்பத்தினர்...

நிறைய பேசினோம். ஒரு மணி நேரம் போனது தெரியவில்லை. சந்தோசமாக கிளம்பினோம். என்ன ப்ளோகில் போட்டோ கூடாது என்ற நிபந்தனை, இருந்தாலும் சில போட்டோஸ் எடுக்கப்பட்டன. ப்ளோகில் போடமாட்டார்கள்!

சில பணக்கார பயன்கள் பெண்களோடு லூட்டி அடித்துக்கொண்டு இருந்தார்கள். வெளிநாட்டு கல்சர். ஓரத்தில் அமைதியாக வெளிநாட்டு ஆள், புத்தகம் படித்துக்கொண்டு இருந்தார்!

சென்னை ட்ராபிக் நம்ப முடியாது... அதனால், கொஞ்சம் சீக்கிரம் ஏர்போர்ட் செல்ல வேண்டும். ரவி வீட்டிற்க்கு சென்று லக்கேஜ் எடுத்துக்கொண்டு ....

அந்த மீட்டிங் பற்றி வினிதா ஒரு பதிவு போட்டுவிட்டார்....

சென்னையில் பதிவர் சந்திப்பு

Very nicely written, and it churned my heart on the inequalities!

****

கோவைக்கு பாரமவுன்ட் ப்ளைட், நல்ல க்வாலிட்டி... சரியான நேரத்தில் வந்து சேர்ந்தார்கள்... சென்னையில் ஆறு பத்து டிபார்சர். கோவை வந்து சேர்ந்தது... ஏழு மணி, லக்கேஜ் எடுத்து வெளியில் வரும் போது, ஏழே கால். இருபது நிமிடத்தில் வீடு வந்து சேர்ந்தவுடன்... டைப் செய்ய ஆரம்பித்தேன்... எல்லாம் விரைவாக போகிறது... சிறு ஸ்நாக்ஸ் கொடுக்கிறார்கள்... அருமை ... லக்கேஜ் வெயிட் பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

தங்கை குடும்பம் எதோ கோவில் சென்றுள்ளார்கள், நாளை காலை வருவார்கள்.

இப்போது டின்னர் சாப்பிடும் எண்ணம் வரவில்லை. அம்மா ரசம் சாதம் கொடுப்பார்கள். திருப்பூர் நண்பி நாளை காலை, இங்கிருப்பாள். அவளோடு ஒரு டாகடர் பார்க்க வேண்டும்.

வரும் சனி காலை ரமேஷ் மற்றும் தி, அவர்கள் குழந்தைகள் மஞ்சு மற்றும் ராஜா வருகிறார்கள். இரண்டு நாட்கள் இருப்பார்கள், ஞாயிறு இரவு கிளம்புகிறார்கள்.

இன்னும் இரண்டு மணி நேரத்தில் ஜோ நியூ யார்க் சென்று சேருகிறார்...

I miss him already!

*******

நான் யாரையும் சந்திக்கும் மனநிலையில் இல்லை. சென்னையின் சந்திப்பு ஒரு வித அன் ஈசினஸ் செய்தது... சிலருக்கு மனசு கஷ்டம் ஆகிறது. ப்ளோகில் கமன்ட் போடுவது வேறு, நேரில் பார்த்து பேசுவது வேறு...

இந்த ப்லோக் எழுதுவது போன்றவை பிடிக்கவில்லை என் குடும்பத்து அங்கத்தினர்களுக்கு.... எனக்கும் சில இடைவெளி வேண்டும்.... குறிப்பாக புது நண்பர்கள். ஸாரி!

உங்களுக்கு புரிந்திருக்கும்.

நிச்சயம் சமயம் வரும் போது பார்போம்.

1 comment:

குப்பன்_யாஹூ said...

தாய் தமிழ் நாட்டிற்க்கு வந்த பிறக்கும் ப்லோக் (blog), சாட் , மெயில் நினைப்புதானா

இரண்டு நாட்கள் இணையத்தை விட்டு விட்டு, கோவை, மருதமலை, மூனாறு, உடுமலைபேட்டை, பொள்ளாச்சி எல்லாம் சுற்றுங்கள், தமிழர்களோடு உறவாடுங்கள்.

குப்பன்_யாஹூ