Tuesday, November 18, 2008

நாடி ஜோதிடம் ஒரு அப்டேட்

நாடி ஜோதிடம் ஒரு அப்டேட்.

நேற்று நான் பார்த்த நாடி ஜோதிடர் பற்றி, இந்த பதிவில் எழுத்யிருந்தேன்...

ஜோதிடம்

என் அம்மாவின் ஆசைக்காக அங்கு சென்றேன். அவ்வளவுதான். இன்று பேரூர் சென்று வந்தோம். இது ஒரு பிளாசிபோ எப்பக்ட். அப்பாவும் பாதி நம்புகிறார்... அம்மாவின் கண்களில் கண்ணீர் வருவது நிற்கும், என்னை பார்த்து. தங்கை குழந்தைகள் வரும் போது, பாதி நேரம் எங்கள் வீட்டில் தான் இருக்கிறார்கள், ரொம்பவும் என்னை நினைத்து கவலை படுகிறாராம்.

முக்கிய குறிப்பு - நான் அந்த நாடி ஜோதிடரை நம்பவில்லை... எதோ ஒரு வித்தை நம் மனதில் இருந்து படிக்கிறார் போல... மேலும் அப்பா அம்மா அங்கு சென்று பார்த்திருக்கிறார்கள், விவரங்கள் எழுதி வைத்திருக்கலாம்... நான் எஞ்சிநீரிங்கில் படித்த பாட்டேர்ன் மாச்சிங்...அவர் கையில் இருந்த பனை ஓலை ஏடுகள், புதியதாக இருந்தன!

கடந்த காலம் பற்றி, நீங்கள் சொல்லும் ஆம் இல்லை போன்றவற்றை வைத்து, கிட்டத்தட்ட சொல்ல முடிகிறது.... எதிர்காலம் பற்றி நான் நம்பவில்லை.

உங்கள் ஜாதகம் இருந்தால்... அதை வைத்து, அதன் படி பலன் சொல்லி விடுகிறார்கள்.

அப்புறம் வசதி பார்த்து கட்டாயம், பரிகாரம் செய்ய வைக்கிறார். அவருக்கு தெரிந்த குருக்கள் இருக்கிறார்கள். சில ஆயிரங்கள் செலவு நிச்சயம்!

கமண்ட்ஸ் மூலம்... நிறைய கோவைக்காரர்கள் கேட்டதால்... விவரம் இங்கே..

அந்த நாடி ஜோதிடர் இருப்பது, போன் நம்பர் இல்லை... கிராஸ் கட் ரோடு அருகில், கமலா ஸ்டோர்ஸ் தாண்டி லக்ஷ்மி காம்ப்ளெக்ஸ் போவதற்கு முன்னாள் எதிரே உள்ளே ரோட்டில் இடது புறம், நூறு அடி ரோடு கனக்ட் செய்யும் இடம். விளம்பரம் இல்லை. பாதி நேரம் ஆள் இருப்பதில்லை. சேலம் அருகில், இருக்கும் ஓமலூர் சென்று விடுவாராம். அங்கு அவர் குரு இருக்கிறார்.

அப்பா என்னிடம் கூறியது... சென்னையில் கருணாகரன் என்று ஒருவர் இருக்கிறார், தி.நகர் பஸ் ஸ்டாப் எதிரில். குமுதம், இண்டர்நெட்டில் விளம்பரம் வருதாம்.

நாடி ஜோதிடம் பார்ப்பவர்கள் ஊருக்கு ஊர் இருப்பார்கள். என்ன சார்ஜ் தான் வேறுபடும்.

ஜெனெரலாக சில கமண்ட்ஸ் அடிப்பார்கள். பெண்கள் மீது வெறுப்பு கொண்டவர்களுக்கு பெண்கள் தான் பிறக்குது, என் அப்பா பற்றி சொல்லி, தாத்தா செய்த சாதி கொடுமை தான் என்னை வெளிநாட்டு மாப்பிள்ளை அடைய செய்தது என்ற உடான்ஸ்... இப்போதெல்லாம், பெண்கள் வேண்டாம் என்று உலகம் சொல்லுது, அதனால் தான், எல்லோருக்கும் பெண்களாக பிறக்குது என்றார்! எனக்கு ஐந்து பெண்கள் பிறந்தாலும் பரவாயில்லை என்றேன்.

ப்ராப்தம்.

ஜோவிடம் சொன்னேன்... டேக் இட் அஸ் சொம் பன் என்றார்.

வார்னிங்... அப்பா சொன்னது.... அவர் நண்பர் ஒரு டாக்டர், இந்த நாடி ஜோடிதரை நம்பி, பங்களா வாழ்க்கை (விற்று விட்டு) சிறு வீட்டில் போய் இருக்கிறார். இருக்கும் பணத்தை, நிலம் / இடத்தில் போட்டு லாஸ். மகளும் பாதி பணம் பிடுங்கி போய் விட்டாள். இந்த ஜோதிடரை கேட்டு வயது அதிகமான ஆளை கல்யாணம் செய்து வைத்திருக்கிறார்கள். இன்னும் குழந்தை இல்லை, மூன்று வருடம் ஆகிறது. மகன் எப்படியோ சொந்த முயற்சியில் அமெரிக்காவில் இருக்கிறான். யாரோ பெண்ணை அங்கு லவ் செய்கிறானாம், என்னை ஒரு முறை அழைத்திருந்தான்.

ரமேஷ் நாடி ஜோதிடம் பற்றி எழுதிய குறிப்பு ஒன்று...

NADI ASTROLOGY AND ASTROLOGERS

5 comments:

Indian said...

//நான் எஞ்சிநீரிங்கில் படித்த பாட்டேர்ன் மாச்சிங்...அவர் கையில் இருந்த பனை ஓலை ஏடுகள், புதியதாக இருந்தன!
//

Divya,

You are spot on!

Is it located on the 3rd floor on one of the cross streets of Cross-cut road? I too went there on compulsion of my parents.

It is like expert systems querying the user and providing a diagnosis. Spotting the right 'aedu' happens when they could more or less guess your family history from the yes/no question sessions. Until then, they keep continuing with their queries.

For me, I was born in Tanjore in previous birth and abused a Brahmin girl. Hence the delay in marriage. :(

I insisted on listening to all the kaandams. Guess he must've exhausted. Claimed that he don't have scripts for remaining kaandams.

Have you observed that for past history, agastiyar will be crystal clear (well more or less), but vague for future? Further agastiyar will put a disclaimer in the beginning of each Kaandam that unless pariharam is performed, these predictions cannot be guaranteed.

For me, knowing i'm from IT field, agastiyar suggested a pariharam with 48days of salary! That too only through the naadi guy there. Not by ourselves.

Had a good laugh at this hogwash.

Anonymous said...

எனக்கும் இந்த நாடி ஜோதிடம் பாத்த அனுபவம் இருக்கு. ஆனா முழுசா நம்ப முடியலைங்க.

சின்மயி said...

நாடி ஜோதிடம் முழுசா நம்ப முடியலை!

கடைசி பக்கம் said...

hi divya,

I had experience on Tambaram chennai. After asking few questions they exactly said all my family members name and details.

Actually my indention is to ask about my marriage. What they said is happened till now in general section.

I don't know it is coincidence or something.

I haven't see detailed section. I saw only general.

I told them to see my marriage section but they refused because I have to pray navagraha for six weeks after that only they'll tell.

Then I offered money for say marriage section. But they got angry said " We are not working for money"

But I have experience in Salem is very bad and they move towards money only.

K.Ravishankar said...

திவ்யா,
நான் நம்புவதில்லை .

கிழ் வருவது உண்மையாக நடந்தது .
(1980). பார்க்க வேண்டியவர் வர முடியாததால் அவருடைய விரல் ரேகையை காட்டினார்கள் ."ஓகோ " என்று சொன்னார்ர்.

அது இறந்தவருடைய கை ரேகை.
அந்த ஜோசியரின் முகம் வெளிறி விட்டது. நான்கு இளைஞ்சர்கள் இந்த நாடி ஜோசியத்தின் போலித்தனத்தை வெளி கொண்டு வர செய்த ஒரு plot..

உண்மை ஜோசியர்கள் இருந்தார்கள். நூறு வருடத்திற்கு முன்பு.அது....

கணித சாஸ்திரத்தில் "Permutation and Combination"

படிக்க.

http://www.visvacomplex.com/nadi_jothidam1.html