Tuesday, October 14, 2008

கேரக்டர்

ஒருவருடைய கேரக்டர் எப்போதும் ஒரே மாதிரி இருக்கும் என்று சொல்லமுடியாது. நிரந்தரம் இல்லை. அது மாதிரி தான் இந்தியர்களின் நிலைமை.இந்தியர்கள் அமேரிக்காவில் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துபார்த்ததில்லை. என்னிடம் ஷாப்பிங் மால்களில் வந்து ஆம்வே பிசினஸ்செய்ய கெட்ட ஆட்கள் அதிகம். வேண்டாம் விட்டுவிடு என்றால், ஒருஇந்தியன் இன்னொருவருக்கு உதவி செய்ய மாடீர்கள என்று கேட்பார்கள். ஐயர்னி.

என் வாழ்வில் எப்போதும் சோகம் இல்லை. குலைண்டை ஒன்று கவலை. நான்தேடிய விரும்பிய வாழ்க்கை என்று போகிறது. அமெரிக்கா வந்து பதினேழுவருடங்கள் ஆகிவிட்டது. இங்கு வாழும் முக்கால் வாசி, இந்தியர்களை விட, நான் பரவாயில்லை என்று தோன்றுகிறது.

What is my diary about? My Thoughts. OK. Then why does it have the sorrow? Well sorrows are meant to be penned, to get it out of your system!

2007.

வீட்டு கடன் தொல்லை வருடம். அனைத்து இந்தியர்களும் கிடைத்த பணம் லாபம் என்றுவீடு விற்று விட்டு, அவர்களுடைய சொந்த ஈகுவிடி போர்சன் மட்டம் வாங்கிவிட்டு, வாடகை வீட்டில் இருந்தார்கள். சொந்த வீடு என்பது, ஒரு கனவு. சொந்தங்கள் வரும் போது ஒரு கிக். ஷோ ஆப்.

நீங்கள் விரும்பும் வாழ்க்கை அமையாவிட்டால், ஊருக்காக வாழ்வது வேறு.

என் தோழி ஒருத்தி, ஒரே பெண், இரண்டு அண்ணன்கள், மூன்று கோடி ருபாய்சொத்து கொடுத்து கல்யாணம் செய்து வந்தவள், அமெரிக்கா என்ற ஒரேஆசைக்காக. இங்கே அவள் இருந்த ருதெர்பொர்ட் வீடு, கோவையில் அவள்வேலைக்காரர்கள் இருந்த வீட்டைவிட மோசம். இந்தியாவில் கொடுத்தவரதட்சனை பணம், ஒரு வீடாக ஆகியிருந்தது. மாப்பிள்ளை சம்பளம், அவர்வீடிற்கு போய் கொண்டு இருந்தது. ஸ்மார்டான ஆள். விவரம் இல்லாதமனிதர். மனைவிக்கு ஒரு பிசு வாங்கி கொடுக்க தெரியாதவர்.

சம்பளம் எல்லாம், கூட பிறந்த இரண்டு தங்கைகள் வீடிற்கு போய் கொண்டுஇருந்தது. அவர் அப்பா அம்மா, சொந்த வீடு. அண்ணன் எதோ பிசினச்ஸ்செய்தார்.

நல்ல வேலை அவள் கொண்டு வந்த நகை, கோவையில் ஒரு லாக்கரில். இன்னும் அதை எடுத்து யாருக்கும் ஒடுக்கவில்லை. வைரமோடு அதுவே ஒருகோடி வரும் என்று தெரிகிறது.

என்னிடம் ஒரு நாள் அவள் வந்தாள். அழுதால். குழந்தை இல்லை. ஒருவருக்குஒருவர் ஆறுதல். வேறு ஒருவனை கல்யாணம் செய்ய வேண்டும் என்றுகேட்டாள்...

இருவருக்கும் எதாவது பிரச்சனை? தொட்டால் தானே வரும்? கல்யாணம்செய்த பிறகு, ஒரு முறை கூட, இல்லை! அமெரிக்கா வாழ்க்கை மட்டும் தானேகேட்கிறாய். ஐந்து வருடங்களில் அவள் பட்ட வேதனை... இப்போது அவள்சித்ஜன்ஷிப் வாங்கிவிட்டாள்.

நேரில் பார்த்தால் அப்படி தெரியவில்லை. ஆள் பார்த்தல், நல்லா தான் உள்ளார்.

அவரை ஒரு டாக்டரிடம் அழைத்து செல்ல சொன்னேன். முடியாது, வாளுண்டரி என்றாள். அதாவது, வேண்டாம் என்று அவரே இருக்கிறார்.

என் நண்பி ஒருத்தியை கேட்டேன். லாயர். டிவோர்ஸ். காஞ்சுகல் இன்கொம்பெடன்ஸ். உடல் உறவிற்கு ஒத்துழைக்கவில்லை. ஈசி.

நான் அழைத்து பேசினேன். ஒரு நோட்டீஸ் அவள் கணவனுக்குகொடுக்கப்பட்டது. வேறு ஒருவர் வீட்டில் தங்கினால்.

கோர்ட்டில் சொன்னார், இனிமேல் வாழ்கிறேன் நல்லபடியாக. இவள்பிடிவாதமாக வேண்டாம் என்று சொல்லி விட்டால்.

மனைவி இழந்த ஒருவர், இவளை இரண்டாம் தாரமாக கட்டி, இப்போது ஒருகுழந்தை. அழகாக வாழ்கிறார்கள். அவளுக்கு இரண்டு கோடி ரூபாய்கள் என்ன கொடுத்தது?

அப்புறம் அந்த கணவன்? இவள் மீது ச்டாழ்க் செய்த வழக்கு. இரண்டு வருடம் உள்ளே. அடிக்கடி அவள் புது வீடிற்கு பொன் செய்தானாம்.

என் டைம் சென்ற வருடம் அவள் பிரச்சனை மூலம், வேலை மூலம் கழிந்தது.

குழந்தைக்கு மீண்டும் முயற்சி. இன்னும் டைம் உள்ளது. பார்ப்போம்.

சோகங்கள் மனதில் வைத்தால், கஷ்டம். வெளியே கொட்டி விட வேண்டும்.

இந்த ப்லோக் படிப்பவர், அதுவும் ஒரு பெண், அமெரிக்கா மோகம் என்பது கூடாது என்பதற்காக தான். அவர் முயற்சியில் வாழ்வது வேறு, அமெரிக்கா வாழ்க்கை தான் வேண்டும் என நினைப்பது தவறு, என்னவென்று தெரியாமல்.

அப்புறம், இந்த ப்லோக் படிக்கும் ஆண்கள், கல்யாணம் ஆனா, ஆகப்போகிறவர்கள், நல்ல மனது வைத்து, மனதை பார்த்து (உடல் அழகும் பாருங்கள், ஸ்டாடஸ் பாருங்கள் தப்பில்லை) பெண்களை நன்றாக நடத்த வேண்டும். அது என் விருப்பம்.

மீண்டும் சந்திக்கிறேன்.3 comments:

Ramesh said...

I hope others find it interesting. For me OK.

தங்கவேல் மாணிக்கம் said...

திவ்யா, அக்கரையின் பிரச்சினைகளை சுவாரசியமான சம்பவங்களோடு இணைத்து வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றீர்கள். இது தான் ஒரு இந்திய மகளின் கடமை. மக்களின் மீதான உங்களின் அன்புள்ளம் வெளிப்படுகிறது ஒவ்வொரு பதிவிலும். சமூகத்திற்கு எவர் ஒருவர் பிரதிபலன் பாராது சேவை செய்கிறார்களோ அவர்கள் தான் மஹாத்மா. இந்தியத் தாயின் மக்கள்களுக்காக தாங்கள் எழுதும் ஒவ்வொன்றும் உபயோகப்படும் , படுகிறது...

எனது வாழ்த்துக்கள்...

divya said...

Thanks All.