Wednesday, October 15, 2008

இரண்டு ருபாய் கதை


கோவையில் இன்று அவர்கள் குடும்பம் ஒருபெரிய குரூப்.

ஒரு கல்யாண மண்டபம் வேண்டும் அவர்கள் வீட்டு சிறு விஷேசத்திற்கு.

மனிதனின் எல்லா தொழில் சம்பந்தப்பட்டவிஷயங்கள் அவர்கள் செய்கிறார்கள்.

எல்லாவற்றிற்கும் மூலம் ஒரு இரண்டுருபாய்.

இன்று அவர்களால் முடியாதது எதுவுமில்லை.

எழுபதுகளிளில் நாசிக்கில் ஒரு இரண்டு ருபாய் பிரிண்ட் செய்யும் பிளாக்கட்டை காணாமல் போயிற்று. எப்படி என்று இது வரை யாருக்கும் தெரியாது. ஒரே ப்லொக்கில், மூன்றி வித இனக் வரும். மூன்று ஸ்டாம்ப். ருபாய் ஒருசைட் ரெடி. அதே ப்லோகின் திருப்பிய பகுதி, ருபாய் நோட்டின் அடுத்த பகுதிபிரிண்ட் செய்யும். நம்பர் சீரீஸ் மட்டும் சீக்ரட் ஆக இருந்தது, அதுவும் ரெகுலர்அப்செட் மூலம் அடிக்க உத்தி இருந்தது.

நான் சொன்ன அந்த கிரௌபின் ஒரு சொந்தம் தான் அந்த கட்டையை திருடி வந்ததாக சொல்கிறார்கள். அங்கு வேலை செய்தவரா, இல்லை வீட்டை விட்டு ஓடி போன மாமனா என்று தெரியவில்லை.

பெரியவர், ஒரு பீளமேடு மில்லின் வாட்ச்மன். இரவு வீடிற்கு வந்ததும், தம்பி நடத்தும் பிரிண்டிங் ப்ரெஸ்ஸில் வேலை. நோட்டு அடிக்க பட்டது. காய வைத்து, சிறுக சிறுக செலவு செய்தார்கள். ஒரு நாளைக்கு இருநூறு ருபாய் மட்டும், நூறு நோட்டுக்கள். பத்திரம்.

வீட்டு சாமான், எல்லா விசயங்கலம் அதில் தான். கொஞ்சம் சில்லறை செய்து கொள்வார்கள். யாருக்கும் தெரியவில்லை. அப்போது எல்லோருக்கும், சம்பளம் இரண்டு ருபாய் கட்டில் இருந்து தான் பிரித்து கொடுப்பார்கள். வாட்ச்மன் கூலி வாரம் முப்பது ருபாய். அரிசி கிலோ மூன்று ருபாய் விற்ற காலம் அது.


மொத்த குடும்பமே அதில் விளையாடியது...
கொஞ்சம் கொஞ்சமாக தங்கம் சேர்த்தார்கள். தோட்டம் வந்தது. ஐந்து வருடத்தில், ஒரு மகனை டாக்டர் தொழிலுக்கு செல்ல வசதி வாய்ப்பு. சில மகன்கள், படித்தார்கள். மில் வெலைக்கு தான் சென்றார்கள்.

அந்த சமயம், பெரியவர் வேலை செய்த மில், திவாலாகும் நிலைமை. சம்பளம் கொடுக்க கூட பணம் இருக்காது. நூறு பேர் வேலை செய்த மில். கூலி மட்டும் வாரம் நாற்பதாயிரம் கொடுக்க வேண்டும். எமெர்ஜென்சி வேறு வந்து விட்டது. பேங்க் லோன் கெடுபிடி.

காதும் காதும் வைத்தாற்போல், மில் ஓனருக்கு பெரியவர் விஷயம் கொஞ்சம் தெரிந்தது.

வீட்டிற்க்கு தெரியாமல், ஒரு சொத்து எழுதி கொடுத்தார். இன்று அதன் மதிப்பு நூறு கோடி. அப்போது வெறும் இரண்டு லட்சம் என்று பதிவு. நல்ல நோட்டுக்கள் கொடுத்தார்கள் அதற்க்கு. இன்னொரு வாட்ச்மன் வந்தார். வேளையில் இருந்தும் அவருக்கு ப்ரெஸ்ஸில் இரண்டு வேலை.

சொந்தங்கள் வேலை செய்ததால், வெளியில் விஷயம் போகவில்லை.

மில் ஓனரின் மானம் காபற்றியதால், மகிழ்ச்சி. ஒரு வேஸ்ட் கோடோவ்ன் பெரியவருக்கு வைத்து கொடுத்தார், மில்லில் கிழே விழும் பஞ்சை எடுத்து சுத்தம் செய்து விற்கும் வேலை. சொத்து சேர ஆரம்பித்தது.

மகனும் டாக்டர் ஆகிவிட்டார். இருந்தாலும் தினம் நோட்டுக்கள் பிரிண்ட் ஆகி கொண்டு தான் இருந்தன. டாக்டர் தொழில் படித்திருந்தாலும், அவரால் ஒரு நல்ல மனைவி பிடிக்க முடிந்தது. மில் ஓனர் மூலம் வந்தது.

நோட்டு அடிப்பது நின்று போனது. அந்த கட்டையை, மில்லில் புதைத்து வைத்தார். யாருக்கும் தெரியாது.

அடித்து வைத்த நோட்டோடு பெரியவரை போலிஸ், ஒரு நாள் பிடித்து விட்டார்கள்.

எவ்வளவு டார்சர் செய்தும், பெரியவர் சொல்லவில்லை. போலீசிடம் அடி தாங்க முடியாமல், கட்டை மில்லில் உள்ளது என்று சொல்லிவிட்டார்.

எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை.

பெரியவர் இறந்து விட்டார்.

குடும்பம் நல்ல நிலைமையில் வந்ததால், அவருக்கு கவலை இல்லாமல் இறைவனடி சேர்ந்தார்.

குடும்பம், சரியாக சொத்து பிரித்து, இன்று உட்கார்ந்து சாப்பிடும் நிலைமை, நூறு ஜென்மங்களுக்கு...

அவர்கள் குடும்பத்துக்கும் இன்றும் யாரும் பெண் கொடுப்பதில்லை. வசதி குறைவான வீட்டில் தான் பெண் எடுக்கிறார்கள்.

சந்தோசம், எதாவது ஒரு வழியில் வருகிறது.

இருந்தாலும், ஒரு நாள் பெரியவர், மகனின் கனவில் வந்து, ஏழைகளுக்கு இரண்டு ருபாய் கொடுக்குமாறும், எழையாக தான் அவரை சாமி கும்பிடுமாரும் சொல்லியிருக்கிறார்.

அவர் நினைவாக, அவருக்கு புரட்டாசி மாதம் சாமி கும்பிடும் போது ஏழைகளுக்கு இரண்டு ருபாய் நோட்டுக்கள் விநியோகிக்கிறார்கள். அவர்கள் சாமி கும்பிடும் போது, தங்கம் அணியாமல், பழைய துணி தான் கட்டுகிறார்கள்!

வாரம் ஒரு நாள், பழையது தான் சாப்பிடுகிறார்கள். சாபம்.

இன்றும் கோவையில், அந்த மில் கதவு மூடப்பட்ட நிலையில் பார்க்கலாம். சீல் செய்தது.

அந்த நோட்டு கட்டை, கோவை அருகே உள்ள ஒரு ஊரில் இன்னும் வேலை செய்வதாக கேள்வி.

***

மேலே உள்ள கதை ஒரு புனைவு.

3 comments:

Vinitha said...

Interesting katha.

Indian said...

கிருஷ்னா... கிருஷ்னா... !
ஏனிந்த சோதனை?

Ramesh said...

Govinda! Mugunda! Kovai vaasa!

Nalla irukku, this edited story!