Monday, November 24, 2008

மீண்டும் மும்பை

காலையில் கோவையிலிருந்து பத்தரை மணிக்கு கிளம்பி, பதினொன்றரை மணி பெங்களூர் ப்ளைட். பிறகு, ஒரு மணி நேரம் கழித்து பாம்பே ப்ளைட். இரண்டாரைக்கு ஏர்போர்ட். மூன்று மணிக்கு ஹோட்டல் செக்கின்.

இன்று பார்த்து வெதர் நன்றாக உள்ளது. என் கம்பனி நபர்களோடு ஜுஹு பீச் செல்கிறேன், சில ட்ரைனிங் முடித்து விட்டு. டின்னர் எங்கே தெரியவில்லை. ஹோட்டல் திரும்ப பத்து மணி ஆகி விடும், அதனால், கார் நான்கு மணிக்கு தான் வரும் என தெரிகிறது, அது வரை ப்லோக்கிங். நாளையும் வேலை அவசரம் ... மதியம் வரை, லஞ்சுக்கு பிறகு, மூன்று மணிக்கு ஹோட்டல் வந்து செக் அவுட் செய்து... இந்தியாவை விட்டு பயணம்... கரக்டாக பேக் செய்ய வேண்டும்.

பெங்களூர் ப்ளைட்டில் தண்ணீர் மட்டும் கொடுத்தார்கள்.
மும்பை ப்ளைட்டில் லன்ச். பாலக் பன்னீர். பரவாயில்லை பசி அடங்கியது.

கையில் ஒரு கிலோ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா உள்ளது. ;-) (நண்பர்களுக்கு!)

மும்பையில் நாளை இரவு ஏழு மணிக்கு ப்ளைட். எமிரேட்ஸ். மூன்று மணி நேரம் ப்ளைட். அங்கு லோகல் டைம் ஒன்பதற்கு வெளியே இருப்பேன். பிசினஸ் கிளாஸ் ஆதலால் கொஞ்சம் சீக்கிரம் .... அடுத்த நாள் காலை எட்டரைக்கு தான் ப்ளைட். துபையில் சுமார் பத்து மணி நேரம் வெளியே. ஒரு ஆறு மணி நேரம் தூங்கலாம்! ஏர்போர்டில், சில கிப்ட்ஸ் வாங்க வேண்டும்.

அமெரிக்கன் பாஸ்போர்ட் இருப்பதால், விசா இல்லாமல், வெளியே செல்ல முடியும்! ;-) நண்பர் வீட்டில் போய் இருக்க போகிறேன். அவர் அட்ரஸ் கொடுக்க வேண்டும். எமிரேட்ஸ் கார் கொடுப்பார்கள், காலையில் பிக்கப் கூட. பர் துபையில் அவர் வீட்டில் காலை வரை இருந்து விட்டு, ஐந்து மணிக்கு எழுந்து, ஆறு மணிக்கு ஏர்போர்ட் வந்து, நியூ யார்க் ப்ளைட் எட்டரைக்கு ஏர்பஸ் A 380 ஏற வேண்டும். பதினான்கு மணி நேரம், மேகங்கள் மீது பயணம்... நல்ல ரெஷ்டோடு ஊர் போய் சேரலாம். ப்ரேக்பாஸ்ட் லன்ச், ஸ்நாக்ஸ்... அருமையாக இருக்கும்.

யாராவது தொன தொன பார்டி அருகில் உட்கார கூடாது.

அங்கிருந்து வரும் போதும் நிறைய என்ஜாய் செய்தோம். டின்னர் சாப்பிட்டு தூங்கியவர்கள், ஆறு மணி நேரம் கழித்து எழுப்பி, ஸ்நாக்ஸ்... ப்ரேக்பாஸ்ட். டின்னருக்கு துபாய்.... ஒருவருக்கு டிக்கட் நான்காயிரம் டாலர்கள், கம்பனி கொடுக்கும். ஜோவுடையது அவர் கம்பனி...

புதன் மதியம் வீடு சென்று இரண்டு மணி நேரத்தில் பாஸ்டனுக்கு கார் ட்ரிப். தாங்க்ஸ்கிவிங்! அங்கு கிப்ட் கொடுக்க, மாமனார், மாமியாருக்கு இரண்டு இந்தியன் வைன் பாட்டில்.

ஏர்போர்டுக்கு ஜோ வருகிறார்.

வரும் ஞாயிறுக்குள் ஒரு முடிவு தெரிவிக்க வேண்டும் இந்திய வேலைக்கு. ஜோவிடம் பேசிவிட்டு முடிவு எடுக்க வேண்டியது...

No comments: