Wednesday, November 26, 2008

நியூ யார்க் வந்தாச்சு

நியூ யார்க் வந்தாச்சு ...

ஜோ ஏர்போர்ட் வந்திருந்தார்.... சந்தோசம்.... பத்து நாள் பிரிவு. ப்ளேனில் இருந்து மூன்று மணி நேரம் முன் அட்லாண்டிக் ஓசியன் மேல பறந்தபடி ஒரு நிமிடம் பேசினேன். ஐந்து டாலருக்கு சாட்டிலைட் போன். நல்லது தான்.

வெளியில் காருக்கு, பார்க் செய்த இடத்தை அடையும் போது, அந்த வயதான அம்மா, ஏர்போர்டில் என்னை பார்த்தும் ஓடி வந்தார் ஆனால் இங்கே, அவர் மகன் முன் வெடுக்கென்று முகத்தை திருப்பி கொண்டு, ஸ்டைலாக, அந்த டாத்ஜில் ஏறிக்கொண்டு சென்றார். என்ன கொடுமைங்க இது...

அந்த அம்மா மகன் நியூ யார்க்கில் இருக்கிறான் என்றார். அவர் கார் நியூ ஜெர்சி நம்பர் ப்ளேட் இருந்தது. மகன் படித்தால் நன்று. அம்மா பற்றி தெரிந்து கொள்ளட்டும்!

ப்ளைடிலே, கிழே உள்ளவற்றை டைப் செய்தேன்.

அந்த அம்மா, நடக்க முடியாத நோயாளி போல நடித்து, என் பணத்தையும் துபாயில் செலவு செய்ய வைத்து... பிசினஸ் லவுஞ்சில் உட்கார்ந்து ...மும்பையில் என்னை ஒட்டி, பிசினஸ் க்ளாஸ் லவுஞ்சில் உட்கார்ந்து... இளைப்பாறி... அப்புறம் ப்ளைட்டில் ஏறிய பிறகு ... இடையில் அவ்வளவு பெரிய ப்ளைட்டில் என்னை தேடி பிடித்து, பெண் என்பதால், என் பக்கத்தில் சீட் எம்ப்டி, அதில் சில மணி நேரம் அமர்ந்து கொண்டார். சரியான அறுவை... மருமகள் மீது அவதூறு...உணவு சமயம் ஏர் ஹோஸ்டஸ், நான் கேட்டுகொண்டதர்க்காக, அவருக்கு அங்கேயே உணவு பரிமாறினார். எமிரேட்சில் தான் நடக்கும். மற்ற ஏர்லைன்சில் ஒட்டி விடுவார்கள் எகனாமி இடத்திற்கு. மரியாதை கிடையாது.

கடைசி வரை அந்த அம்மாவிடம், என் கணவர் பற்றியோ, அல்லாது, தொழில் பற்றியோ, போன் நம்பரோ கொடுக்கவில்லை. அவர் உட்கார்ந்த பிசினஸ் கிளாஸ் சீட்டில், பிசினஸ் க்ளாஸ் பாசெஞ்சர்களுக்கு மட்டும் கொடுப்பதற்காக வைத்திருந்த ஒரு டாய்லெட்டெரி பேகில், சோப், பெர்ப்யும் போன்றவை பிராண்ட் பிரபலமான ஒன்று, வைத்திருந்தார்கள், அதை நைசாக எடுத்து சென்று விட்டார்... டூட்டி ப்ரீ விற்று வந்தார்கள். மகன் குழந்தைகளுக்கு இரண்டு டால்ஸ் வாங்கி கொடு (என்பது டாலர்) பணம் ஊர் போனதும் மகனிடம் வாங்கி கொடுக்கிறேன் என்றார். நான் சிரித்துக்கொண்டு மறுத்துவிட்டேன். மகனுக்கு ஒரு கால் போட்டு கொடு என்றார், முடியாது என்று சொல்லிவிட்டேன்.

அந்த அம்மாவின் பெயர் விஜயலஷ்மி சுப்ரமணியம், சென்னைக்காரர், பாடகி அல்லது பாட்டு க்ளாஸ் எடுப்பவர், மைலாபூரில் இருக்கிறார். இரண்டு வருடத்திற்கு ஒரு முறை அமெரிக்கா வருகிறாராம். பத்து வருடங்களாக மகன் அமேரிக்காவில் இருக்கிறாராம்.

என் தங்கை ஜோக்கடிப்பாள், உன் மூஞ்சியில் ஒரு .வி. லேபில் இருக்கு என்று. உண்மை தான்!

சிலர் அப்படிதான், நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

(நான் சுடிதார் தான் போட்டிருந்தேன், அதனால் தானோ? மற்ற எல்லா இந்திய பெண்களும், ரொம்பவும் மாடர்னாக மிடி மாக்சி கவுன்ஸ்... ஆனால் சுடிதார் மாதிரி ப்ரீயாக இருக்காது...)

*****

இப்போது தான் வீடு வந்தோம். மெயில்ஸ் செக், அப்புறம், இந்த ப்லோக் ஒன்று பினிஷ் செய்ய வேண்டும். எங்கள் மெய்ட் சுத்தம் செய்து வைத்திருந்தார். சூடான, நூடில்ஸ்... ஜோ ரெடி செய்கிறார்...அப்புறம் தான் குளியல்...

ஏர்போர்டில் இருந்து வரும் போது, அப்பாவிற்கு கால் செய்தேன். அங்கு டைம் நடு இரவிற்கு அருகில் . அவர்களுக்கும் நிம்மதி, எனக்கும் தான்.

ஒரு மணி நேரம் தூங்கி எழுந்து பாஸ்டன் கிளம்ப வேண்டும் ... ட்ராப்பிக் இருக்கும்.

ஐந்து மணிக்கு கிளம்பினால்... பத்து மணிக்குள் அங்கு இருப்போம்.

போகும் வழியில் பேசி என் வாழ்க்கை பாதை பற்றி முடிவு ஒன்று எடுக்க வேண்டும். எந்த வேலை எடுப்பது?

2 comments:

Data said...

Thank God..... you just escaped !
Carnage in Mumbai

Indian said...

Divya,

You just escaped the gory things happening in Mumbai.