Tuesday, November 25, 2008

முமபையிலிருந்து டாடா பை பை

வாழ்த்துக்களுக்கு நன்றி. கமண்ட்ஸ், படிக்கவில்லை. பார்த்து அப்டேட் செய்கிறேன், நன்றாக இருந்தால்...

எப்படி நேரம் விரைவாக செல்கிறது?

அப்பா அம்மா மற்றும் தங்கை குடும்பம், அடுத்த மாதம் யு.எஸ். வரும் திட்டம். தங்கை குடும்பம் இரு வாரம் இருக்கும். குழந்தைகளுக்கு ஹாப் எயர்லி எக்சாம் முடிந்தவுடன், டிசம்பர் 24 கிளம்ப ஏற்பாடு... பனி விழும் சமயம், அதற்க்கு தான்... ரிடர்ன் ..ஜனவரி 9 இரவு கிளம்ப எமிரேட்ஸ் டிக்கட் பார்க்கிறார்கள். குழந்தைகளுக்கு சரியாக 5 நாள் மட்டும் எக்ஸ்ட்ரா லீவு ஆகும். நல்லது. கடைசி எக்சாம் டிசம்பர் 23 செவ்வாய் அன்று முடிகிறது, ஆனால், அப்பா அன்று வெளியூர் டிராவல் செய்ய மாட்டார். அதனால், புதன் அதிகாலை ப்ளைட் இருக்குதா பார்க்க வேண்டும்.

நான் எடுக்கும் முடிவு படி, அப்பா அம்மா என்னோடு கொஞ்ச நாள் அதிகம் சேர்ந்து இருப்பார்கள். நான் ஜனவரி கடைசி வாரம், வேலை பொறுத்து வரலாம்...

காலையில் கம்பனி வேலை முடித்துவிட்டு... அதிகாலையில் என் பாஸ் தியாகு கால் செய்திருந்தார். வேலை விட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். இந்திய வேலை பற்றி சொன்னேன். பெங்களூரில் பிரான்ச் ஓபன் செய்தால் போயிற்று என்றார். ஒபாமா டீமிடம் பேசியுள்ளார், சி.ஈ.ஓவுடன். அவர் புதன் இரவு இந்திய பயணம், அதனால், ஒரு வாரத்திற்கு நான் தான் தலைவி... ஹா ஹா.. குழப்பம்...

********

இப்போது துபாய் ப்ளைட் ஏற, இம்மிக்ரேசன் முடித்துவிட்டு, லவுஞ்சில் உட்கார்ந்துள்ளேன். இப்போதே குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஷில்பா ஷெட்டி (?) இருக்கிறாள்.

இன்னும் அரை மணி நேரம் உள்ளது, போர்டிங் செய்ய. ஏழு மணிக்கு ப்ளைட். துபாய் நண்பருக்கு போன் செய்துவிட்டேன். இந்த டாடா இண்டிகாம் வயர்லெஸ் கார்ட் பில் அப்பா தலையில்... வீட்டிற்க்கு பில் போகும். யூஸ் செய்வது பொறுத்து... சார்ஜ்.

நிறைய தமிழர்கள். ஒரு வயதான அம்மா (கிழவி) தனியாக போகிறார். என்னோடு ஒட்டி வருகிறேன் என்கிறார். மகன் நியூ யார்க்கில் இருக்கிறாராம். வேறு யாரவதுடன் ஓட்ட வைக்க வேண்டும், எகனாமி க்ளாசில் உள்ளவரை. கொடுமைங்க.

நியூ யார்க்கில் இருந்து முடிந்தால், நாளை, அல்லது பாஷ்டனிலிருந்து பதிவு.

முடிந்தால் ப்ளைட்டில் கதை எழுதினால்... சிலது உள்ளது, வீடு சென்றவுடன் அப்லோட் செய்வேன்.

டாடா பை பை!

No comments: