Saturday, November 29, 2008

செக்சுவல் ஹராஷ்மன்ட்

கொஞ்ச நேரம் முன்னாள், நேற்று எனக்கு ஒரு மெயில் வந்தது. இந்த ப்லோக் படிக்கும் நண்பர் எழுதியது. சில காரணங்களுக்காக என் இமெயில் வெளியிடவில்லை. (என்னையும் இண்டர்நெட்டில் ஒருவன் ஹராஸ் செய்த காரணத்தினால்... மற்றும் ப்ரைவசிக்காக...)

முதலில் இந்த விஷயம் உண்மையா பொய்யா தெரியாது.

பொய் என்றால் மன்னித்துவிடுங்கள். கல்லூரி பெயர் குறிப்பிட்டர்தற்கு ஸாரி.

எந்த ஒரு செக்சுவல் ஹராஷ்மன்ட் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

************************************************************************************

திவ்யா, எனக்கு ஒரு உதவி வேண்டும். அவசியம் செய்வீர்கள் என்று நம்புகிறேன். இன்று காலையில் எனது நண்பரின் அழைப்பு வந்தது. அவர் சொன்னதை அப்படியே இங்கு எழுதுகிறேன்.

எனது அத்தை பெண் கோவை பிஎஸ்ஜியில் படிக்கிறாள். அவளின் பிசிக்ஸ் லெக்சரர் ஒருவர் அவளை பலமுறை புணர்ச்சிக்கு அழைத்து இருக்கிறார். இவள் தவிர்க்க பார்த்தாலும் அவர் பலவகைகளிலும் தொந்தரவு செய்கிறாராம். வீட்டில் சொன்னால் உடனடியாக படிப்பை நிறுத்தி விடுவார்களாம். ஏதாவது செய்து அந்தப் பெண்ணைக் காப்பாற்ற முடியுமா என்று கேட்டார்.

************************************************************************************

அந்த பெண் பெயர், என்ன டிபார்ட்மன்ட் போன்றவை, விவரம் தெரியவில்லை. மொட்டை கடுதாசி போன்றது இது... ஒரு நாள் எல்லாம் மூட் அவுட். நல்ல வேலை, இமெயில் ஐடி கொடுக்கவில்லை. ப்லோக் எழுதுவதை நிறுத்தி விடலாமா என்று தோன்றுகிறது.

இது வரை மேற்கூறிய விஷயம் குறித்து, ஆலோசனை செய்தேன். அப்பாவின் போலிஸ் நண்பர்கள் மூலம், என் பழைய கிளாஸ்மேட்ஸ் மூலம், இந்த விஷயம் பற்றி விசாரிக்கப்பட்டது. அப்பாவிடம் சொல்லி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏவிடமும், கோவை மேயரிடமும் தெரிவிக்கப்பட்டது.

இந்த விஷயம் நடந்தது, டிப்ளமா / எஞ்சினீரிங் காலேஜா, ஆர்ட்ஸ் காலேஜா தெரியவில்லை.

இருந்தாலும் ஒரு பெண் சொல்கிறாள் என்பதற்காக, சொன்ன லெக்சரர் பெயர் வைத்து எஞ்சினீரிங் காலேஜ் என்று கண்டுபிடித்தோம்.

இங்கே பாருங்கள்.

அந்த லெக்சரர் பற்றி விசாரிக்க செய்து, பல கிளாஸ்மேட்ஸ் மூலம் நல்லவர் என தெரிந்தது.

சிலர், லேப் மார்க்ஸ் குறைவதால், ஒரு சில இன்டர்னல் மார்க்ஸ் குறைவதால், சில செமஸ்டர் பேபர்களில் பெயில் ஆவதால், வேண்டும் என்றே தவறாக (ஆண்களும், பெண்கள் என்று மொட்டை கடுதாசி) இந்த செக்சுவல் ஹராஷ்மன்ட் கம்ப்ளைன்ட் செய்கிறார்களாம். தவறு என்று தெரிந்தால் மாணவர் டிஸ்மிஸ்.

கொஞ்ச நாட்களுக்கு நான் படித்த காலேஜில் முன் ஒரு பெண் ஒரு லெக்ஸரரிடம், லேப் / இன்டர்னல் மார்க் போடாவிட்டால் தவறாக நடந்ததாக கம்ப்ளைன்ட் செய்வேன் என்று சொல்லியிருக்கிறாள்.

அதனால் எல்லா மாஸ்டர்களும் ஒரு மீட்டிங்கில் எச்சரிக்கபட்டிருக்கிறார்கள், மத போதகர் டிரஸ்ட்டி மூலம்.

பொய்யோ உண்மையோ எதுவாக இருந்தாலும், கல்லூரி நிர்வாகம், கம்ப்ளைன்ட் இல்லாமல் ஒன்று செய்யாது. அதனால் நண்பரை, தயவாய், அந்த பெண்ணை, டிபார்ட்மன்ட் ஹெட்டுக்கு ஒரு ஈமெயில் மூலம், எழுத சொல்லவும்.

மறக்காமல் வீட்டில் சொல்ல சொல்லவும். அந்த அளவு தையிரியம் இல்லாத பெண், எதற்க்கு படிக்க வேண்டும்?

எங்கோ இடிக்கிறது. அத்தை பெண்ணுக்கு உதவி செய்கிறேன் என்று வருபவர், அந்த பெண்ணின் பெயர் ஏன் சொல்லவில்லை? ஏன் அவர் தான் ஒரு மாணவராக இருந்து அந்த மாஸ்டரை பழி வாங்க ஐடியா போடக்கூடாது? போலிஸ் போனால் இதெல்லாம் சிக்கல் வரும் அல்லவா? வரும் திங்கள் காலை அவரை, பிசிக்ஸ் டிபார்ட்மன்ட் தலைவர் எதிர்பார்த்து இருப்பார்.

எனக்கு இது தவறு என்று தோன்றுகிறது. தயவாய், ஒரு ஆணின் வாழ்க்கையை கெடுத்துவிடவேண்டாம்.

***

தூக்கம் கெட்டது. உடம்பில் ஸ்ட்ரெஸ். எனக்கு குழந்தை ஆகாத காரணம் ஸ்ட்ரெஸ்.

4 comments:

ramanian said...

வாழ்க வளமுடன்,யோகா பழகுங்கள்.
மனவிரிவு கிட்டும்.மன உளைச்சல்
குறையும்.
http://mkgthavamaiyam.blogspot.com/

http://vethathiri.org/Home/

DIVYA said...

Dear Friend,

Thanks for the information.

Action would be taken accordingly and confidentially.

I would not have made a post of it, but when I discussed with family, they said without naming you should, such that culprit(s) will learn. More than 100 have seen it.

Would make a difference.

;-)
Luv
Divya

Anonymous said...

நல்ல பதிவு. அந்த லெக்சரர் என் கதையில் (ரமேஷ் எழுதியது) வரும் போல சந்தான கோபாலகிருஷ்ணன் இருக்கிறான்(ர்).

திவ்யா சாந்தி கதைகள் (பாகம் 2)

யாரும் உங்களிடம் விளையாட வில்லையே?

நிஜமாக பாதித்த அந்த பெண், எனக்கு இமெயில் செய்ய சொல்லவும்.

shanthijaikumar@gmail.com

சின்மயி said...

Happy to know that the issue is solved soon. Great work Divyaji.

Thanks to the all the unknown faces who have helped a lady.