Wednesday, November 26, 2008

பாஸ்டனில் நான்

இந்திய மும்பையில் நடந்ததை விடாமல் டிவியில் காட்டினார்கள்... எ.டி.எஸ் ஆட்கள் ஹிந்து டேரரிச்டுகளை (ப்ராக்யா, புரொஹித்) தேடி பிடிக்கிறார்கள். அதனால் அவர்களை திருப்பி அடிக்கிறார்கள் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உதவியோடு. கொடுமையான உலகம். எதிரிக்கு எதிரி நண்பன்.

என் நண்பர்கள் அங்கே எல்லோரும் safe... அடிபட்டவர்கள் ஆத்மா சாந்தி அடையட்டும். அவர்கள் குடும்பத்திற்கு அனுதாபங்கள்.

Like one person said, thank God I escaped.

எல்லாம் மருதமலை முருகன் அருள்.

இதையும் படியுங்கள், நண்பி வினிதா எழுதியது...

ஹிந்துக்களும் மதவாதமும்

இலங்கையும் போரும்

********

இன்று மத்தியானம் ஐந்து மணிக்கு சார்பாக கிளம்பி, ஷா மில் பார்க்வே வழியாக, ஹார்ட்போர்ட், கேம்ப்ரிஜ், பாஸ்டன். வழியில் ஒரு 10 நிமிடம் ரெஸ்ட் ஸ்டாப். அவ்வளவு தான். ஒன்பது மணிக்கு வீடு.

இந்த முறை தான் சூப்பர் ஸ்பீட். ஸ்னோ விழுகிறது. இந்த முறை குறைவு தான். குளோபல் வார்மிங்? வழுக்கும். அதனால், யாரும் ஒட்டுவதில்லை. பனி மீது தான்... மான்கள் ஓடிக்கொண்டு இருக்கும், ஜாக்கிரதை! அடிபட்டால், நின்று அவற்றை அப்புறப்படுத்தி, போலிசுக்கு கால் செய்து, பிறகு தான் செல்ல வேண்டும்.

எல்லோரும், தாங்க்ஸ்கிவிங் மூடில் இருந்தார்கள். ஜோ சிறு குழந்தை ஆகிவிடுவார் இந்த சமயம். பாஸ்டன் குடும்ப நபர்கள் கூட்டம், கொஞ்சம் இனிமையானது. அமெரிக்கன் உறவு ஒரு தனி சுவை. அதை பற்றி நிறைய பதிவுகள் போடலாம். ஏன்டா வம்பு.. குடும்ப பேர் சொன்னால், பிரச்சனை.

ஜோவின் சித்தப்பாவும் இருந்தார். அவர் நியூ யார்க் பிசினஸ் ஆள். அரசியலிலும் இருக்கிறார். கேன்சரோடு போராடுகிறார், தொண்டையில். அறுபது வயதில் கொடுமை.

மாமியார், மாமனார், உச்சி முகர்ந்தார். ரொம்ப நன்றாக பார்த்துக்கொள்கிறார்கள். சில சமயம் அம்மா நினைவு வரும் போது, அவரிடம் சென்று பேசினால்.. மனம் அமைதி ஆகும்.

நாளை காலை எழுந்தவுடன், நிறைய நண்பர்களுக்கு கால் செய்து வாழ்த்து தெரிவிக்க வேண்டும். இப்போது ரெஸ்ட். தூக்கம் வரவில்லை. ப்லோக் டைபிங். ஜோ டிவி பார்க்கிறார். நல்ல ப்ரோக்ராம்ஸ். பேஸ்பால்.

ஹாப்பி தாங்க்ஸ்கிவிங். (இந்தியாவில்?)

*****

நான் வழியெங்கும் தூங்கி எழுந்தேன். சிறிது நேரம் இந்த ப்லோக் டைப் செய்தேன். ஜோவிடம் வேலை பற்றி பேசினேன். இன்னும் ஒன்றும் முடிவு செய்யவில்லை. பணமும் முக்கியம் என்று தோன்றுகிறது.

தியாகுவும் (என் பாஸ்) செல்லும் எண்ணத்தில் இருக்கிறார். மதுரைக்காரர். அங்கு மீண்டும் செட்டில் ஆகலாம். மனைவி ஒரு டாக்டர். ஒரு க்ளினிக் வைத்து ரிடயர் ஆகிவிடலாம்.

அதனால் இங்கேயே இருந்தால், கவர்மன்ட் கண்ட்ரோல் கம்பனி... ஆகிவிட்டது.

நியூ யார்க்கில் வீடு, பெங்களூரில் வீடு என்றால், இன்னும் ஒரு கோடி முடங்கிவிடும்... ஜோவின் ஆசியும் இந்தியாவில் இன்னும் பத்து வருடங்களில் செட்டில் ஆக வேண்டும் என்பது.

ஒரு வருடம் ட்ரை செய்து பார்க்கலாமா? சொல்லுங்கள்.

வேலை என்பது ஒரு கணவன் போல. ஒன்றை பிடித்தால் பிடித்து கொள்ள வேண்டும். ஆனால் சில சமயம், அந்த வேலையே பிரச்சனை ஆனால்? மகாபாரதத்தில் தான் பாஞ்சாலி ஐந்து பேரை கல்யாணம் செய்து வாழ்ந்தாள்...

சிந்திக்க வேண்டும்...

HAPPY THANKSGIVING! What about India?

2 comments:

Vinitha said...

Thanks to God that you are safe, dear friend. I was worried. Happy Thanksgiving.

Indian said...

//வேலை என்பது ஒரு கணவன் போல. ஒன்றை பிடித்தால் பிடித்து கொள்ள வேண்டும். ஆனால் சில சமயம், அந்த வேலையே பிரச்சனை ஆனால்?
//

Divorce and marry again...!!