Friday, November 28, 2008

மும்பையில் மரண பயம்

மும்பையில் மரண பயம் , அமேரிக்காவில் கூட....

காரணம் என்ன?

ஐந்து மணிக்கு எழுந்துவிட்டேன். அரைகுறை தூக்கம்.

டிவி ஆன் செய்தால், இந்த நியூஸ் தான். மும்பையில் மரண பயம். போர்.

இன்னும் பயம் விட்டு அகலவில்லை. போர் நடக்கிறது.

அல் கைதாவின் தாக்குதல் போல உள்ளது என்று சொல்லுகிறார்கள். ப்ளேனட் அட்டாக்?

சில தமிழ் ப்ளாக்ஸ் படித்தேன், எல்லோரும் இந்து / முஸ்லீம் திவிரவாதம் என்று பேசுகிறார்கள். வேறே வேலை இல்லையா?

ஜோவின் நண்பர் ஒருவர் ட்ரைய்தேன்டில் இருந்தார். நாற்பது மணி நேரம் பன்னிர்றேண்டாம் மாடியில் அடைப்பட்டு இருந்தவர்... தப்பித்தார். அவருடைய ரூம் இருந்தது பதின்மூன்றாம் மாடி. மேலே சத்தம் கேட்டு, அறைக்கு ஓடியவர், தப்பான ப்ளோரில் இரங்கி, திறந்த ரூமில் புகுந்துக்கொண்டார்.

ஆயுசு கெட்டி. கிழே இறங்கி வரும் போது, துனிபெட்டி கொண்டு வந்த மும்பை போலிஸ் ஆள், இருக்கும் பணத்தை கொடுத்து விட்டு போங்கள் என்றாராம். கட்டாயம்? காசு என்ன காசு என்று பர்சில் இருந்த முன்னூறு டாலர்கள் கொடுத்துள்ளார்.

டேரரிச்டுகள் இருந்த ரூம்கள்... மேலே மூன்று மாடிகள். ஆண்டவா!

ரிசப்சன் அருகே, அவருடைய சேப் பணம், காலி. யாரோ எல்லாம் காலி செய்துவிட்டார்கள். இன்னொரு நண்பர் மூலம் ஏற்பாடு செய்து, இப்போது ஒ.கே. பெங்களூரில் இருக்கிறார். அவர் பெற்றோர் உடனடியாக அமெரிக்கா வா என்கிறார்கள்.

போலிஸ் ஏற்பாடு செய்த இலவச டாக்சியில், ஏர்போர்ட் செல்ல ஐந்தாயிரம் ருபாய் வாங்கியுள்ளார்கள்! இதை விட நம் இந்திய நாட்டின் (நான் பிறந்த) மானம் வேறு எங்கும் போகாது.

ஆமாம் டிவியில் எதற்கு லைவாக காட்டுகிறார்கள்? அமெரிக்கா மோகமா? இரண்டு பேர் பார்வையாளர்கள் அடிபட்டு இறந்தார்கலாம். கொடுமை.

இங்கே தான், அமேரிக்காவில் யாரவது சுட்டு விட்டால்... அப்போது போய் வெக்கும் காமரா, இரண்டு நாள் டிவியில் ஓடும். நிறைய சேனல்கள் இருப்பதால் இது ஒரு கவலை. அவரவர் வேலை பார்த்துக்கொண்டு போவோம்.

இப்போது தான் சோனால் ஷாவிடம் பேசினேன். ஒபமாவின் டீமில் இருப்பவர்.

அவரும் ஐந்து மணிக்கு எழுந்து டிவி பார்த்துள்ளார். மோடி பேசியது தவறு என்றார். இது அரசியல் பேசும் டைம் இல்லை.

மோடி என்னதான் பேசினார்? மன்மோகன் சிங் சரியாக பேசவில்லை... அவரால் நாட்டுக்கு என்ன நன்மை... போல்.. கேவலம் மோடி சார்.

நன்றாக படித்தவர் நாட்டை ஆள்ந்தால் கோடி நன்மை.

No comments: