Thursday, October 2, 2008

தலைவலிக்கு மருந்து

என்னுடைய முந்தைய பதிவு படித்து இருப்பீர்கள் என நினைக்கிறேன்.

தி (ரமேஷின் மனைவி - முழுப்பெயர் வேண்டாமே) என்று நாங்கள் கூப்பிடும் ஜெஸ்ஸி என்னும் லேடி ஜுலியா பிஷ், எல்ம்ஸ்வர்த்தின் உயரமான அக்கா, பிஜி வூட்ஹவுஸ் கதைகள் பற்றி எங்கள் செட் பேசி கொள்வது. அருமையான ரோமன்ஸ் எழுதுபவர், ஹுமரோடு. ரமேஷ் என்ன கேரக்டர்?

அவருடைய இங்கிலாந்து வீடு, சில வருடங்கள் முன்பு பார்த்தேன்.


அந்த ஜனவரி நாள் ஞாபகம் எனக்கு மிகுந்த ஆச்சிரியம்.... எங்கள் பாஸ் அஞ்சன் லோகன்ட்வாலா.. வந்திருந்தார். இப்போது அவர் டேல் அவிவ் கம்பனி ஒன்றிற்கு முதலாளி. இஸ்ரேலிய பெண் ஒருத்தியை கல்யாணம் செய்து, அந்த யுத்த பூமியில் செட்டில் ஆனார். அவர் அழைப்பிற்கு இணங்க ஒரு முறை அங்கு சென்றேன். பயம். கொழும்பு மாதிரி. கண்டி பரவாயில்லை. முரளிதரன் ஊர். அவர் கட்டினது எங்க வகையிலே தூரத்து சொந்தம்.

1992. ஜனவரி ஐந்தாம் தேதி... நான், சந்தோஷ் மற்றும் தி சாயந்திரம் சந்தித்தோம். எங்கள் கெஸ்ட் ஹவுசில் டின்னெர். மதியம் இந்தியன் ஏர்லைன்ஸ் பிளைட்டில் கோவையில் இரண்டு மணிக்கு கிளம்பி தரை தொடும் போது நான்கு மணி. போகவர பத்தாயிரம் ரூபாய்.

பஸ் பிடித்து (டாக்ஸி செலவு அதிகம்! கடத்தல் பயம்..) மாதுங்கா சென்றேன். ஆபிஸ் நரிமான் பாயிண்ட். தினம் ஒரு மணி நேரம் பயணம். பம்பாய் வாழ்க்கை. பஸ்சில கசக்கி பிழிவார்கள்.
அந்தர் சலோ அந்தர் சலோ என்று சொல்லி எல்லா இடத்திலும் தொடுவார்கள். கையை விட்டு பார்பார்கள். கொடுமை அது. எல்லாம் பொறுத்து கொள்ள வேண்டும். பெண்கள் நகங்கள் பெருசாக வளர்த்துவது கிள்ளுவதற்கு தான். உங்கள் யூகம் என்ன?

எழு மணிக்கு சாப்பாடு ரெடி. இரண்டு பெட்ரூம் அபார்ட்மன்ட். நான்கு பேர். பெண்கள். உணவு சமைத்தால் ஆண்களை அழைத்து பரிமாறுவோம். அப்படிதான் அவரை அழைத்தோம். அவரோடு சரியாக பேசிகொண்டது கூட இல்லை. அவர் தான் பம்பாய் கிளை தலைவர். அப்போது தான் ஒரு பெரிய ஆபிஸ் செட்செய்திருந்தார். அமெரிக்கா பாக் ஆபிஸ். ஆராய்ச்சி ரிபோர்ட்ஸ் அமெரிக்கா செல்லும். அதில் பிடித்த ஸ்டோக்ஸ் வாங்க சொல்லி கிளையான்ட்சுக்கு சொல்வார்கள்.

எங்கள் வேலை ரெசர்ச் அனலிஸ்ட். ஸ்டோக்ஸ் பற்றி ஆராய்ச்சி செய்து, ரிப்போர்ட் கொடுக்க வேண்டும் வெளிநாட்டு முதலீடு செய்பவர்களுக்கு. மன்மோகன் சிங் மூலம் அப்போது தான் இந்தியாவில் பெரும் மாற்றம்... எகனாமிக் லிபரலைசெசன் ... சராசரி வருமானம் மாதம் ஒன்றிற்கு ஒரு எம்பியே படித்தவர் வாங்கியது இரண்டு லட்சம். வெளிநாட்டு கம்பனி ஆதலால்... எங்களுக்கு ஐந்து லட்சம் கொடுத்து வேலை கொடுத்தார்கள். சம்பளத்தில் வீட்டிற்கு மாதம் ஐந்தாயிரம் வாடகை என்று கணக்கு. புல் பர்னிச்டு. கையில் எனக்கு சுமார் இருபதாயிரம் வரும். டாக்ஸ் அப்போது அதிகம். போனஸ் என்று வருட கடைசியில்... ஆறாவது மாதம் என்னுடைய போனஸ்.. சொல்லியதை விட இரு மடங்கு. நான்கு லட்சம். டாக்ஸ் போக இரண்டு லட்சம் சொச்சம்... அந்த விலையில் ஒரு கிரவுண்ட் இடம் கோவை ரேஸ் கோர்ஸில் வாங்கினேன். இன்றும் உள்ளது. இன்றைய மதிப்பு இரண்டு கோடி. வீடு கட்டி வாடகைக்கு விட்டுள்ளோம். அப்பா அம்மா பார்த்து கொள்கிறார்கள். இப்பவும் எங்கள் வீடு அதன் அருகில் தான்.

ஹர்ஷத் மேத்தா பிரபலம் ஆன சமயம். பணமில்லாமல் பொய் நோட் கொடுத்து.... ஸ்டாக் மார்க்கெட் விழுந்தது. ௨00௨ அவர் இறந்து விட்டார். நான் ஒரு முறை அவரை சந்தித்து உள்ளேன். ராகேஷ் சுஞ்சுன்வால என்று ஒருவர் அங்கள் ஆபிசுக்கு அடிக்கடி வருவார். அரசியல் கருப்பு பணம் இன்வெஸ்ட் செய்யும் முதலை என்று சொல்வார்கள்.

அன்று எனக்கு மிகுந்த தலைவலி. தினமும் இங்கே அங்கே என்று அலைச்சல். அஞ்சன் கொடுத்த நியூஸ் மருந்தாக அமைந்தது... நல்ல மருந்து இட்லிக்கு பூண்டு வெங்காயம் சட்னி போல்.

இந்தியா இன்வேச்ட்மன்ட்ஸ் விங் நியூ யார்க்கில் அமைக்க பட உள்ளது. அதில் வேலை செய்ய இரண்டு பேர்... நானும் தீயும் செலக்ட் ஆகியுள்ளோம் என்று சொன்னார். நிச்சயம் திறமைக்கு ஒரு சவால். எங்கள் ட்ரைனிங் நல்லபடியாக போயிற்று அங்கு. கஷ்டப்பட்டு உழைத்ததற்கு பலன்.

சந்தோஷிற்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. ஒரு வருடம் கழித்து சந்தோஷ் வேறு ஒரு கம்பனியில் சேர்ந்து நியூ யார்க் வந்தார். எங்கள் தொழிலில் நியூ யார்க் தான் உலக தலைமை இடம். சந்தோஷ் இன்று ஒரு சாப்ட்வேர் கம்பனி வைத்து போஸ்டனில் நன்றாக இருக்கிறார். அடிக்கடி பேசிகொள்வோம். அவர் மூலம் தான் எனக்கு ஜோ அறிமுகம் ஆனார். கண்டதும் காதல் என்று சொல்ல முடியாது...

ஜனவரி ஆறு 1992. காலையில் டிரான்ச்பர் ஆர்டர் கிடைத்தது. விசா பேப்பர்ஸ் பிஃல் செய்தோம்.


சம்பளம் மாதம் நான்காயிரம் டாலர்கள் மட்டும் இலவச வீடு மற்றும் போனஸ். என்னை நியூ யார்க் ஆபிஸ். திக்கு பிட்ஸ்பர்க். ரமேஷ் நியூ யார்க்கில்...அவளுக்கு அது கொடுமை ஆனது. இருந்தாலும் எட்டு மணி நேரம் கார் ஒட்டி பார்த்தார்கள். ரமேஷ் வாஷிங்க்டன் செல்லும் போது அவளும் நான்கு மணி நேரம் டிரைவ் செய்து வந்தாள். ரமேஷின் அக்கா பிரியா அவளை அன்போடு பார்த்துக்கொண்டார்கள். முதன்முதலில் அவர் கல்யாண விருந்து கொடுத்த போது தான் பார்த்தோம். வெரி சிம்பிள். அவர்கள் காதல் வளர்ந்தது. ஆறு வருடங்கள் கழித்து அங்கே தான் திருமணம் செய்து கொண்டார்கள். ரமேஷும் நானும் தினமும் பேசினோம். நல்ல நட்பு. வெரி ஸ்ட்ரைட் போர்வாத் பர்சன்.

இன்று தி. ஹுமன் ரிசோர்ஸ் தலைமை பொறுப்பில் இருக்கிறாள். ஒரு பெரிய கம்பனி. சந்தோசம் முக்கியம். பணம் பற்றி வருத்தம் இல்லாமல். அது தான் வாழ்க்கைக்கு நிறைவு. ரமேஷ் அவருடைய நண்பர் ஒருவர் நாற்பது லட்சம் ஏமாற்றியது பற்றி சொன்னார். பணம் கிடைத்துவிடும்.

மார்ச் 1992 மாதம் அமெரிக்கா சென்றோம். விசா வர நாள் ஆயிற்று. புது விசா ஆகியதால், வெறும் எட்டு மாதம் வேலை எக்ஸ்பிரியான்ஸ் வைத்து எப்படி கொடுப்பது என்று கேள்வி. ஐஐஎம் படிப்பு இருந்ததால் சுலபம் ஆயிற்று.

எங்களை விட ஐஐபிஎம் மாணவர்கள் நன்றாக வேலை செய்வார்கள். இப்போது தன் கேஸ் ஸ்டடி அப்ரோச் வந்துள்ளது சில வருடங்களாக. நாங்கள் படித்த பொது தியரி ஜாஸ்தி. அவர்கள் எல்லாம் இப்போது சி.ஈ.ஒ. லெவெலில் உள்ளார்கள்.

புது
விசா அப்போது அறிமுகம். எச்.1.பி. முதலில் மூன்று வருடம், பிற்பாடு இன்னும் மூன்று வருடங்களுக்கு. இடையில் கிரீன் கார்டு செய்து கொல்லேலாம். மூன்றாவது வருடம் வாங்கிவிட்டேன்.

அப்பா அம்மாவும் ஒரு முறை வந்து நியூ யார்க்கில் என்னோடு ஒரு மாதம் இருந்தார்கள். தங்கை படிப்பு முடித்து ஆஸ்திரேலியாவிற்கு மேல் படிப்பு செல்ல முயற்சி செய்தாள். இடம் கிடைத்தவுடன் அவள் புறப்பட்டு சென்றாள். நல்ல வாழ்க்கை அங்கு.

என்னை கல்யாணம் செய்துகொள் என்று வற்புறுத்தி கொண்டே இருந்தார்கள். பல மாபில்லைகள். ரமேஷோடு நான் சுற்றுவதை பார்த்து என்னை கல்யாணம் கட்டிகொள், வேண்டுமென்றால் என்று சொன்னார்கள். நான் அவர்களிடம் உண்மை சொன்னேன். திக்கு உள்ள நல்ல உறவு. அப்பா அம்மா இன்றும் பெங்களூர் சென்றால் அவர்கள் வீட்டில் தான் தங்குவார்கள்...

எனக்கு வேலை மீது காதல். குண்டு. கொஞ்சம் மாநிறம் ஆனதால் அப்போதெல்லாம் ஒரு வகை சென்சுவல். என் மீதே பயம். அழகில்லை என்று.

ஜூலை மாதம் தங்கை அமெரிக்கா வந்தாள். ஒரு மாதம் லீவு. சுற்றினோம். அப்போது தான் வைன் குடித்தேன் ஒரு இதுக்காக. பிடிக்கவில்லை. பெண்கள் மட்டும் செல்லும் ஒரு பார் சென்றோம் அப்போது. ஆண்கள் டன்சர்ஸ் அம்மனமாய் ஆடுவார்கள். அதிசயமாய் இருந்தது முதலில் பார்க்க. பல தேசம். பல சைஸ்.

ஒரு வருடம் ஓடியது சுழன்றது என்று சொல்லெலாம். வேலையில் நல்ல முன்னேற்றம். இரண்டு முறை இந்தியா ஆபிஸ் பயணம். அப்படியே கோவை செல்லும் வாய்ப்பு. அந்த வருட கடைசியில் போனஸ் உட்பட என் பேங்க் பாலன்ஸ் ஐம்பதாயிரம் டாலர்கள் தொட்டது. சூப்பர்.

இந்தியாவிலும் அமெரிக்காவிலும் இன்வெஸ்ட் செய்தேன்.

வருட கடைசியில் ஒரு பார்ட்டி. என்னோடு பனி புரிந்த ஒருவர் நரசிம்ம முர்த்தி, நியூ ஜெர்ச்யில் வீடு. மூர்த்தி என்று கூப்பிடுவார்கள். அவர் அழைத்திருந்தார். அவர் மனைவி ஒரு அமெரிக்கன். டீச்சர். பாரில் சந்தித்து பழகினார்களாம். மூர்த்தி இஸ் குட் இன் பெட் என்று எல்லோர் முன்னிலையிலும் கூசாமல் சொல்லுவார். அமெரிக்காவில் நண்பர்கள் வட்டாரத்தில் அப்படி தான்.

அப்போது தான் அது நடந்தது... நித்தி என்கிற நித்தியானந்த பெருமாள் அறிமுகம் ஆனான்.

மீண்டும் சந்திக்கிறேன்.

1 comment:

ரமேஷ் said...

திவ்யா, நீங்க எங்கேயோ போய்டீங்க!

ஆமா, ஆபிஸ்லே வேலை எல்லாம் எப்படி?