Wednesday, October 1, 2008

ரஷித் அலியும் மன நினைவுகளும்என்ன செய்வது... என் நினைவுகளில் முழ்கி போனேன். 1991. அமெரிக்கா. ரஷித் அலி பாடுவது தான். மனதில் கொண்டாட்டம்.

முதல் முறையாக வெளிநாடு. பிராங்க்பர்ட். ஜே.எப்.கே.

அதிர்ஷ்டம். நாற்பது பேர் வேலைக்கு சேர்ந்தோம். மூன்று பேர் மட்டும் வெளிநாடு செல்ல வாய்ப்பு. நான். தி. சந்தோஷ். பம்பாய் அமெரிக்கன் கன்சலடில் கூட்டம். விசா. சந்தோசம். முதல் முறை. அஹா.

ஒரு மாதம் சம்பளம் பம்பாய் டு கோவை சென்று வர ப்ளைட் டிக்கெட் செலவு. பரவாயில்லை. வீட்டில் கல்யாணம் பற்றி பேச்சு. சமாளிக்க வேண்டும். வாழ்க்கை என்ஜோய் பண்ண வேண்டும்.

வேலை சேர்ந்து மூன்று மாதம் ஆகியிருந்தது. செப்டம்பர் முப்பது இன்ட்ரோ. அக்டோபர் ஒன்று ட்ரைனிங். செப்டம்பெர் இருபத்தி ஒன்பது இரவு கிளம்பினோம். இன்றோடு பதினேழு வருடம் முடிந்து விட்டது. அப்போது எங்கள் ஆபிஸ் கனக்டிகட் அவனு அருகில். இப்போது தான் டைம்ஸ் ஸ்கொயர்.

தியும் வந்தாள். இப்போது ரமேஷ் மனைவி. அவளை ஜெஸ்ஸி என்று கூப்பிடுவோம். பி.ஜி.வூட்ஹௌஸ் கதையில் வரும் ஜெஸ்ஸி போல இருப்பாள். ஒரே ரமேஷ் புராணம்தான்.. ஈமெயில் கிடையாது. லெட்டர் எழுதுவாள். தினம் ஒன்று. எனக்கும் ஒரு பேப்பர் வரும், ரமேஷின் அழகான எழுத்து. ஆத்ம நண்பர்கள். ஒரே செட். அமெரிக்கா அவர்களை ஒன்று சேர்த்தது. ரமேஷும் அங்கு வேலைக்கு வந்தார். டாட்டா கன்சல்டன்சி. வேறு வேறுஇடத்தில் தங்கினாலும் (அவர் சொந்த் செலவு, எங்களுக்கு கம்பனி) அவர்கள்நன்றாக சுற்றினார்கள். நானும் ஒரு ஓரமாக செல்வேன். ப்லடோனிக் ரிலசன். இது தான் விதி என்பதா? ஜெஸ்ஸிக்கு குசி.

பெண் அவனு அருகில் ஹோட்டல். நான் மற்றும் தி இருவரும் ஒரே ரூம். அமெரிக்காவிற்கு பாக் செய்வது தனி பதிவு. இன்றும் பொருந்தும்.... (முதல் வெளிநாடு டிக்கெட் இன்னும் உள்ளது).

எனக்கு தான் யாரும் கிடையாதே, சந்தோஷ் ஒருவனை தவிர. ஒரு விதமயக்கம் அவன் மேல். பஞ்சாபி. பிரென்ட் தான். அழகு. மன்மதன். ஒரு அடிதள்ளி தான் நிற்க வேண்டும். தொட்டு தொட்டு பேசுவான். அது பிடிக்கவில்லை.

உணவு தான் மிகுந்த பிரச்சனை. காலையில் களி மாதிரி செரியால்ஸ் சாப்பிடவேண்டும். பால் ஊற்றி. அம்மா செய்து கொடுக்கும் மோர் களி தான் ஞாபகம் வருது. பேர் செய்த சாம்பார். வேஜிடப்லேஸ் கட் செய்து விற்பார்கள் அதில்.
அரிசி கிடைக்கும். கொஞ்சம் எடுத்து சென்று இருந்தோம். பருப்பு ஜாக்சன் ஹைட்ஸ். மதிய உணவும் பருப்பு சாம்பார் தன். சான்ட்விச் பழகவில்லை அப்போது.

இந்த டாய்லட் பிரசனை இருகிறதே. அமெரிக்கர்கள் சில சமயம்
டாய்லட்டில் தான் வாழ்கிறார்கள் என்று தோன்றும். இடியட்ஸ். அவ்வளவு அலங்காரம். கக்கூஸ் கழுவ ஒரு இடம் கிடையாது. பிரியட்ஸ் சமயத்தில் கிழிந்து விடும் அவ்வளவு திஸ்ஸு பேப்பரில் துடைக்க வேண்டும். அண்டி ஜெர்ம் கிரீம் ஒன்றை பூச வேண்டும். தலை எழுத்து. பாட்கள் வீச ஒரு தனி கவர் வேறு கொடுப்பார்கள். கருமம்.

உடம்பு கொழுப்பு தின்று வெயிட் ஏறிவிட்டது. இருபத்தி இரண்டு வயசில் அறுபது கிலோ. குண்டு. சாப்பிடாமல் இருந்தால் பணியில் குளுரில் வேலை ஓடாது. ஆபிஸ் போய் சிரித்துக்கொண்டு வேலை பழக வேண்டும். ஒன்பதுக்கு சென்றால் வீடு திரும்ப எழு மணி. அப்புறம் சாப்பாடு. ஹோம் வர்க். ஒரு வித ஜெயில் வாழ்க்கை.

இதில் வேறு
ட்ரைனிங் வீடியோ வேறு ஒன்று எடுத்தார்கள். ஒரு கோட் மேக்கப் வேறு போட வேண்டும். இன்றும் அரை மணி நேரம் அதற்கு சிலவு. நாடு அப்படி! உலகில் நூற்றுக்கு எழுபத்தி ஐந்து சதவிகிதம் துணி வாங்குவது பெண்கள் தான் தெரியுமா?

ஒரு முறை சந்தோஷ் பார் செல்லெலாம் என்று சொல்ல ஒரு நூடி பாருக்குள் நுழைந்தோம். அம்மணமாய் ஆடிக்கொண்டு இருந்தார்கள் பெண்கள். ஒரே கூச்சம். பாதி கூட்டம் பெண்கள். வழக்கம். பார் டான்ஸ் முதல் முறை பார்த்தேன். அமெரிக்கன்ஸ் எனக்கும் திக்கும் ட்ரிங்க்ஸ் வாங்கி தரட்டுமா என்று கேட்டார்கள். நோ தேங்க்ஸ். சந்தோஷ் வாயெல்லாம் பல். ஒரு மணி நேரத்தில் புகை சூழ வெளியே கிளம்பினோம். கஷ்டகாலம். ஒரு இந்திய பெண் வேறு ஆடிக்கொண்டு இருந்தாள். பாவம்.

மூன்று மாதங்கள் ஓடி விட்டன. கிறிஸ்மஸ் ஷாப்பிங் நியூ ஜெர்சி சென்று செய்தோம். ஆபீஸில் எல்லோருக்கும் ஒரு வாக்மன் பரிசு (ஆமாங்க அந்த காலம்).... இன்னும் வைத்திருக்கிறேன். சோனி ஜிபிஎக்ஸ். ஜோக்கிங் செல்லும் பொது அதை தான் கொண்டு செல்கிறேன்!

நிறைய கிப்ட்ஸ் வாங்கினேன். நல்ல காசு வேறு கொடுத்தார்கள். அலவன்ஸ். சூப்பர்.

அட்லாண்டிக் சிட்டி சென்று வர ஒரு ட்ரிப் ஏற்பாடு செய்தார்கள் ஆபீஸில். சூதாட்டம். அரை நிர்வாண நடனம். காசு சலங் சத்தம். காசு கொட்டும் சத்தம். உற்சாகம். அது ஒரு தனி உலகம். சில வருடம் கழித்து தான் மீண்டும் அங்கு சென்றேன். அரை மில்லியன் பரிசு கிடைத்தது. ஜோவும் என் வாழ்வில் அப்போது தான் வந்தார்.

டிசம்பர் முப்பது அதிகாலை இந்தியா திரும்பினோம். ஒரு வாரம் லீவு. கோவை. குடும்பம். கிப்ட்ஸ். மருதமலை முருகா நன்றி. ஜனவரி ஆறு திரும்பவும் டுடி. சந்தோசமான சமாசாரம் காத்திருந்தது.

மீண்டும் சந்திக்கிறேன்.

2 comments:

ரமேஷ் said...

Nice! 16 more to go in this series... keep going girl!

பெத்தராயுடு said...

//ஒரு இந்திய பெண் வேறு ஆடிக்கொண்டு இருந்தாள். //

May be latinos?