Saturday, October 4, 2008

அரசியலும் கடவுளும்1996. அமெரிக்காவில் அரசியல் சூடு. மீண்டும் கிளிண்டன் வரலாமாவேண்டாமா என்று பேச்சு. நொவெம்பரில் தேர்தல். அவள் லிட்டில் ராக் என்றஇடத்தில் ஒரு இடத்தில் மனைவ்யுடன், ரோஸ் லா பிர்ம், மக்களை ஏமாற்றிவிட்டார் என்றார்கள். இருந்தாலும் மீண்டும் அவர் வெற்றி பெற்றார். அவர் தன்சிறு குழந்தை செல்சீ (இப்போ இளைஞ்சி) சகிதம் வோட்டு கேட்டது அருமை.
http://clinton1.nara.gov/White_House/Family/html/Life-plain.html
எனக்கு முதல் முறை ஒட்டு கிடைத்தது - வருடம் ௨000. கிரீன் கார்டுகிடைத்த வருடம் 1995. அதிசயம். அமெரிக்கன் இண்டேபெண்டன்ஸ் டே ஜூலை நான்கில் வரும். சில தினங்களுக்கு முன்னால் டூர் நடத்த பிளான் செய்து ஊர் சுற்றுவோம். ஜூலை மூன்று புதன் சாயந்திரம் ஒரு வானில், நான், ஜோ, மற்றும் இன்னொரு இந்தியன் ஜோடி. டென்ட்கள் வாங்கினோம். தேவையானால்... தேவையான சாப்பாடு ... ஜூஸ் கேன்ஸ்.. போகும் வழியில் சாப்பாடு... வாட்டர் ...இரவெல்லாம் ஓட்ட வேண்டும்.

எங்கள் பிளான் ஜூலை பதினாலு திரும்பி வருவது... மொத்தம் பத்து நாட்கள் ... இருநூற்றி நாற்பது மணி நேரம். ஜூலை நான்கு அட்லண்டாவில் இருந்தோம். அப்போது அங்கு ஒரு புது நண்பர் கிடைத்தார். ஒரு பார்க்கில் சாப்பிட்டு கொண்டு இருந்த போது, இந்தியர்கள் என்பதால் வந்து பேசினார். சிவா. சென்னையை சேர்ந்தவர். அதிசயமாய் எங்களை அழைத்து, அவர் வீட்டில் தங்க வைத்தார்... சிறிது நேரம்..இது அமெரிக்காவில் நடக்காத ஒன்று. அவர் மனைவி ரம்யா நன்றாக பார்த்து கொண்டனர். இப்போது அவர்கள் நல்ல நிலைமையில் உள்ளனர்..... வருடம் ஒரு முறை சந்திக்கிறோம். அடுத்த நாள் காலை ப்ளோரிடா கிளம்பினோம்.போகும் வழியில் ... ராக்கி மௌண்டன்ஸ்... ச்மொகி மௌண்டன்ஸ்...ஸ்டோன் மௌண்டன்ஸ்.. மாமொத் கவ்ஸ் ...போன்ற இடங்கள் பார்த்துவிட்டு... டிஸ்நிலந்த் - ஆர்லாண்டோ - ப்ளோரிடா.Southernmost House - roboneal.com

ப்ளோரிடா ஒரு ஓய்வுக்காரர்களின் சொர்கம். ஹிக் ஸ்பீட் ரோட்டில் மெதுவாகஒரு கார் சென்றால் ஓட்டுவது ஒரு கிழவன் அல்லது கிழவி என்றுசொல்வார்கள். மியாமி தாண்டி.. கி வெஸ்ட் என்று சொல்லப்படும் தீவிற்கு சென்றோம். எப்போதும் அதிகம் காற்று. பத்தி முடி அங்கேயே கொட்டிவிடும். ஒரு சிறுலாட்ஜில் தங்கினோம். சூறாவளி வந்தால் எல்லோரும் நனைத்துவிடுவார்கள்... வீட்டிற்குள்ளும் தண்ணீர் வரலாம்.

மைன்லன்டை காங்நேச்ட் செய்யும் மூன்று மயில் பாலம்... காற்றில் ஆடும்.. வண்டி ஓட்டுவதற்கே பயமாக இருக்கும்...

அங்கு இளநீர் ரொம்ப பாமௌஸ். சப்ப டேஸ்ட்.


அப்புறம்... பிரெஞ்சு அதிகம் செலுத்திய நியூ அர்லேயன்ஸ். இப்போது ஒரு வருடம் முன்பு சூறாவளியால் அழிந்த இடம். ஜான் க்ரிஷம் நோவேல்களில் வரும் இடம். சாப்பாடு அருமை. சிறு ஹோடல்கில் தங்கினோம்...போகும் வழி சிறப்பான ஒன்று...வி லவ்ட் இட்!

லிட்டில் ராக் சென்றோம். நார்த். திரும்பவும் அன்றே டல்லஸ். தங்கினோம். எங்கள் ஊர் நண்பர் இருந்தார். அவர்கள் வீட்டில். அன்று ஜூலை எழு, ஞாயிறு ஆனதால்... கோவில் சென்றோம். லட்டு பிரசாதம் கிடைத்தது...மிகுந்த் சந்தோசம். நார்த் இந்தியன்ஸ் கூட்டம்.இப்போது அங்கு பெரிய கோவில்.

ஹூஸ்டன் சென்று ஸ்பேஸ் லான்ச் கன்ட்ரோல் சென்டர் பார்த்தோம். வெளியில் நின்று. அப்புறம் போகும் வழியில் ஆஸ்டின். இன்னொரு சொந்தம். நலம் விசாரிப்புகள். இந்தியா புறப்பட்டார்கள் லீவுக்கு. சிறு கிபித்ஸ்அனுப்பினேன்.. இன்னும் அந்த ச்பூன்ஸ் போன்றவற்றை அம்மா நினைவாய் ஷோ கேசில் வைத்துள்ளார். நாற்பதுக்கும் மேற்பட்டு யுஎஸ் ஸ்டேட் ச்பூன்ஸ் உள்ளன...

நியூ மெக்சிகோ வழியாக... ஜோ நண்பர் அல்பரஃவெர்கில் இருந்தார்... ஒரு நாள் தங்கினோம். பாலைவனம் போன்ற இடம். ஆராய்ச்சி மையம் இருக்கிறது...

அடுத்த நாள்... டூசான் - பீனிக்ஸ் அரிசோனா. ஒரு வறண்ட இடம். ஏசி இல்லாமல் இருக்க முடியாது சம்மரில். தென் இந்தியாவை விடகொடுமை. சென்னை. வைசாக். போல.

லாஸ் வேகஸ்...மறக்க முடியாத இடம். வருடம் ஒரு முறை எதாவது கான்பரன்ஸ் அங்கு. சூதாட்டம். பெண்கள்.... சுற்றுலா... பீவர் டேம் ... இரண்டு நாட்கள் அங்கு. பெண்களை வைத்து நிரே ஷோவ்கள் நடத்துகிறார்கள். இந்தியா பெண்கள் உடல் தொழில் செய்கிறார்கள். ஹாலிவூட் சினிமா கூட்டம் பார்க்கலாம்.

அப்புறம் நேராக... சண் டியாகோ. ஜோவின் நண்பர் பீச் வீடு. ஒரு நாள்... நன்றாக கவனித்து கொண்டார்கள். ஒரு வாரம் ஆகியிருந்தது. ஒரு கரையில் இருந்து மறு கரை. அமெரிக்கா. இரண்டாயிரம் மயில்கள்....

அப்படியே லாஸ் அன்ஜெலேஸ் சென்றோம். ஒரு நாள். உநிவேர்சல் ஸ்டுடியோ... சண்ட மோனிக்கா பீச்... நண்பர் ஒருவர் ... டெல்லிக்காரர்... எலேக்ட்ரநிக்ஸ் தொழில்...அங்கு ஓரஞ் கவுண்டியில் ஒரு கம்பனி வைத்திருந்தார்.. அவர்கள் வீட்டில் தங்கினோம். ஹாலில் எல்லோரும் படுத்துக்கொண்டு இந்தியா ஹிந்தி மியூசிக்... மித்ர் மை பிரன்ட் படத்தில் அந்த வீடு இருக்கும் ரோடு காட்டுவார்கள். அமைதியான ஏரியா. ஹாலிவூட் மலை மீது போட்டோ....

அப்புறம்... சண் ஹோசே. என் எஞ்சினீரிங் காலேஜ் நண்பர் சண் கம்பனியில் இருந்தார். அவர் இப்போது ஒரு கம்பனி சொந்தமாக வைத்துள்ளார். மறக்க முடியாத ஊர். அங்கு ஒரு டர்கிஷ் ஹோட்டல் உள்ளது. பெல்லி டான்ஸ் பார்த்தோம். ஹூக புகை... அப்படியே மேடிட்டரானியன்.

சண் பிரன்ஸ்சிஸ்கோ கோல்டன் கேட் பிரிஜ் பார்த்துவிட்டு... ஐந்து மணி நேரம் டிரைவ்... ரூட் ஒன்.. கடலோரம்.. இப்பவும் உள்ளது... ரெட் வூட் காடுகள்.... நிறைய சினிமாவில் பார்த்திருப்பீர்கள்... ஒரு காடு பங்களாவில் தங்கினோம். அருமை. ஒரு நாள் அங்கு இருந்தோம்... நொவெம்பரில் அங்கு செல்வோம் இப்போது.... தன்க்ச்கிவிங் சமயம் குளிரோடு ஒரு அனுபவம். உலகத்தின் உயரமான மரங்கள் இருக்கும் இடம்...


http://sunnyfortuna.com/explore/redwoods.htm

அப்புறம் அப்படியே போர்ட்லாந்து ஒரேகன் ஸ்டேட். என் நண்பி அங்கு ஒருஉனிவர்சிட்டியில் படித்தால். கோரவலிஸ். அருமையான ஊர். நிறைய ட்ரெக்கிங் செய்யலாம். அப்போதே கிளம்பும் அவசரம் இரவு சியாட்டில் சென்றோம். நண்பர்கள் சிலரை பார்த்து விட்டு... அப்புறம் ஒரு நூடி பாரில் உலகின் பெரிய மார்பு பெண் ஆடுகிறாள் என்று சொன்னதால்.. ஆண்கள்அலைந்து சென்றார்கள்... அக்கிரமமாக இருந்தது... அப்படியும் சில பேர்! மைக்ரோசாப்ட் அலுவலகம் இருந்த இடம் பார்த்தோம்.. ரெட்மண்ட். அழகுக்கு ஒரு பிரதேசம். அங்கு ஒரு சிறிய வீடு இப்போது வாங்கியுள்ளோம்.

வீடு திரும்ப மூன்று நாட்கள் இருந்தன.

அடுத்த நாள் சால்ட் லேக் சிட்டி மோர்மன் சர்ச் பார்த்தோம். அருமையான ஊர்.

கிளம்பி யேலொவ் சடன் பார்க் வழியாக... சுடு நீர் வரும் ஊற்று இருக்கும் ஏரியா சென்று குளித்து விட்டு... ஜோ சொல்கிறார்... நான் கொஞ்சம் கலரானதுஅங்கு குளித்ததினால் தான் என்று.. மட் பாத் எடுத்தோம்... காட்டில் தங்கினோம்.

இரவே காரில் ஒட்டி... டைம் மிச்சம் செய்யும் எண்ணம்...அடுத்த நாள் காலை டென்வர் கொலராடோ சென்றோம். அப்போதும் அச்பேன் மலையில் பனி இருந்தது. ஒரு நாள் முழுவதும் அங்கு ஆடினோம் பணியில். அஜக்ஸ் மலைகள். குளிர். ஒருவரோடு ஒருவர் ஒட்டி இருக்க வேண்டும். அந்த இடம் விட்டு செல்ல அழுகை வந்தது...

அடுத்த நாள் காலை...
கன்சாஸ் சிட்டி... உலகத்தின் பெரிய நூல் உருண்டை அங்கு இருக்கிறது. அதை பார்த்து விட்டு... செயின்ட் லூயிஸ் ஆர்ச் பார்த்தோம்.. இரவே கிளம்பினோம். பிறகு ஒரு சமயம் சென்று காசினோவில் சூதாடினோம்.

சிகாகோ... சனிக்கிழமை.. இரண்டு ஹிந்து கோவில்கள்.. நண்பர் சாய் ராம்நாத்... ஒரு ரியல் எஸ்டேட் முதலை... அவர்கள் வீட்டில் தங்கினோம்... ஒரு நாள் தான் பாக்கி இருந்தது.. சிகாகோ செயர்ஸ் டவர்ஸ் பார்த்துவிட்டு... எட்டு மணிக்கு டின்னெர்...

இரவே கிளம்பி மூன்று மணி நேரம் பயணம்..நாடு இரவில் அன் ஆர்பர், நண்பர் வீட்டில் தங்கினோம். அருமையான ஊர். உனிவர்சிட்டி அப் மிசிகன் உள்ளது... நிறைய இந்தியன்ஸ்... கோவில்... எப்சிலாண்டி.. அரை மணி நேரம் குட்டி விமானத்தில் பறந்தோம்... மக்கினாவ் ஹைலன்ட் வரை சென்று திரும்பினோம்.. வர்றேன் கார் தொழில் ஏரியா பார்த்தோம்.. கண்டோனில் சாப்பாடு..

இரவில் டெட்ரோயட்... அழகான ஊர். ரூட் டோவேல்வ் நேர்கோடு... கோபால் என்று ஒரு நண்பர் வீட்டில் உணவு. அங்கேயே தங்கினோம். அடுத்த நாள் ஞாயிறு காலை ஆறு மணிக்கு கிளம்பினோம்.

மதியம் பன்னிரண்டு மணிக்கு பிட்ட்ச்பர்க் கோவில் தரிசனம். ஜூலை பதினாலு... தி (ஜெஸ்ஸி) வந்திருந்தாள். ரமேஷும் இருந்தார். அங்கேயே புளியோதரை, பொங்கல் சாப்பிட்டு விட்டு மூன்று மணிக்கு கிளம்பினோம். கேஸ் போட்டுகொண்டு ரூட் செவன்ட்டி சிக்ஸ்... முநூற்றி முப்பது மையில்கள்... இரவு ஒன்பது மணிக்கு வீடு. டின்னெர் வழியில்...

அருமையான ட்ரிப் முடித்துவிட்ட திருப்தி.
ஒன்பதாயிரம் மைல்கள். நண்பர் ஜோடி அவர்கள் வீட்டுக்கு கிளம்பினார்கள்.

காலையில் ஜோ எழுந்து ஆறு மணிக்கு கிளம்பினார். அவர் காரில் நன்கு மணி நேரம். ௨00 மைல்ஸ். ஒரு மணி நேரம் லேட்டாக ஆபிஸ். தனியாக வேலை செய்வதால் லேட் என்பது ப்ரோப்ளம் இல்லை...

மீண்டும் சந்திக்கிறேன்...

1 comment:

Ramesh said...

Very nice, Divy.