Sunday, October 5, 2008

அமெரிக்கா சில இடங்கள், பத்து நாட்கள்

அமெரிக்கா சில இடங்கள் தூரங்கள் ...இதில் சென்ற பதிவில் சென்ற இடங்களின் தூரங்களும் பயணம் செய்த நேரமும் ... ஒரு பார்வை. இது ஒரு அனுபவம். ஒரு பயண கட்டுரை.

சனி இரவு பார்ட்டி ஒன்று முடிந்து படுக்கும் போது... இரவு இரண்டு மணி. என் வீட்டு கம்ப்யுட்டர் எப்போது ஆனில் தான். சில ஈமைல்கள் வந்தன.. நன்றி.

நண்பர் ரமேஷ் சிலாகித்து எழுதினார்... அமெரிக்கா கிராஸ் கன்ட்ரி: திவ்யாவின் அனுபவம்

அதனால் ஒரு அப்டேட். டைம் எல்லாம் சுமார் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

நியூ யோர்க்கில் இருந்து கிளம்பி (ஜூலை 3, ஐந்து மணி)
அட்லாண்டா -
850 மைல்ஸ் - பன்னிரெண்டு மணி நேரம்.
ஆர்லாண்டோ - 430 மைல்ஸ் - ஆறு மணி நேரம்.
மியாமி - கி வெஸ்ட் - 230 மைல்ஸ் - நான்கு மணி நேரம்.
நியூ அர்லேயன்ஸ் - 860 மைல்ஸ் - பன்னிரெண்டு மணி நேரம்.
லிட்டில் ராக் - 420 மைல்ஸ் - ஆறு மணி நேரம்.
டல்லஸ் - 320 மைல்ஸ் - ஐந்து மணி நேரம்.
ஹூஸ்டன் - 240 மில்ஸ் - நான்கு மணி நேரம்.
அல்பரஃவொர்க் - 850 மைல்ஸ் - பன்னிரெண்டு மணி நேரம்.
டூசான் - பீனிக்ஸ் - 460 மைல்ஸ் - எட்டு மணி நேரம்.
லாஸ் வேகஸ் - 290 மைல்ஸ் - ஐந்து மணி நேரம்.
சண் டியாகோ - 340 மைல்ஸ் - ஆறு மணி நேரம்.
லாஸ் அன்ஜெலேஸ் - 130 மைல்ஸ் - இரண்டு மணி
சண் ஹோசே - 320 மைல்ஸ் - ஐந்து மணி நேரம்.
சண் பிரன்ஸ்சிஸ்கோ - 70 மைல்ஸ் - ஒரு மணி நேரம்.
ரெட் வூட் காடுகள் - 220 மைல்ஸ்- நான்கு மணி நேரம்.
கோரவலிஸ் - 420 மைல்ஸ் - ஆறு மணி நேரம்.
சியாட்டில் - 170 மைல்ஸ் மூன்று மணி நேரம்.
சால்ட் லேக் சிட்டி - 760 மைல்ஸ் - பத்து மணி நேரம்.
யேலொவ் ஸ்டோன் பார்க் - 320 மைல்ஸ் - ஐந்து மணி நேரம். (கார்டினேர், மொண்டனா)
டென்வர் - 530 மைல்ஸ் - எட்டு மணி நேரம் (இரவு)
கன்சாஸ் சிட்டி - 610 மைல்ஸ் - பத்து மணி நேரம் (இரவு)
செயின்ட் லூயிஸ் - 260 மைல்ஸ் - நான்கு மணி நேரம்
சிகாகோ - 290 மைல்ஸ் - ஐந்து மணி நேரம். (ஜூலை 12)
அன் ஆர்பர் - எப்சிலாண்டி - 280 மைல்ஸ் - நான்கு மணி நேரம் (ஜூலை 12)
டெட்ரோயட் - 50 மைல்ஸ் - ஒரு மணி நேரம் (ஜூலை 13)
பிட்ட்ச்பர்க் - 280 மைல்ஸ் - ஐந்து மணி நேரம். (ஜூலை 14)
நியூ யார்க் - 330 மைல்ஸ் - ஆறு மணி நேரம். (ஜூலை 14, 9 மணி இரவு)

வண்டி ஒட்டியது ஜோ, நான், நண்பர் மட்டும் ...
நண்பரின் மனைவி ஒட்டவில்லை. ஜாலி!

இரவு ஓட்டும் போது அதிகாலை ஒன்று முதல் நான்கு வரை எங்காவது ரெஸ்ட் ஸ்டொப்பில் தூங்கினோம். நடுகாட்டில் பயம் தான். என்ன செய்வது? கண்ட ஹோட்டல்களில் கஷ்டம். நண்பர்கள் வீட்டில் ஒரு முறை உணவு. இரண்டு இடத்தில் இரவு தங்கல்...

எழுபது மெயில் ஸ்பீட் தான் எப்போதும். சியாட்டில் டு
சால்ட் லேக் சிட்டி போகும் போது என்பது ஈசியாக தொட்டோம். காட்டில் வழி. சொர்க்கம். மொண்டனாவில் ஸ்பீட் லிமிட் இல்லை.

மொத்தம் சுமார் ஒன்பதாயிரம் நூற்றி ஐம்பது மைல்கள் . வண்டியிலே ஒட்டியது நூற்றி நாற்பது மணி நேரம். மொத்தம் இருநூற்றி நாற்பத்தி நான்கு மணி நேரம் பயணம்.

டாட்ஜ் கரவன். 1996 மாடல்.



அப்புறம் நாங்கள் கார் வாடகைகு எடுத்த ஹெர்ட்ஸ், அன்லிமிடெட் மைல்ஸ் ஒரு நாளைக்கு முப்பது டாலர்கள். இன்சூரன்ஸ் பத்து எக்ஸ்ட்ரா. பதினோரு நாட்கள் சார்ஜ். நானூற்றி நாற்பது டாலர்கள் மட்டும் மொத்தம். ஒன்பதாயிரம் நூற்றி ஐம்பது மைல்கள் ஓடியதை பார்த்த அந்த கடைக்காரன் முறைத்த முறைப்பு... சிரிப்பு தான் வருது.



எங்களுக்கு சராசரி மைலேஜ் 24 கிடைத்தது ஒரு காலனுக்கு. இப்போது எப்படி என்று தெரியவில்லை. 380 காலன்ஸ்... காலன் ஒன்று விலை ஒரு டாலர் முதல் ஒன்று இருபத்து (கலிபோர்னியா மற்றும் காடுகளில்). மொத்தம் ஐந்நூறு டாலர்கள் மட்டும் பில் செய்தோம்.

சாப்பாடு ஹோட்டல் என இதர டூர் செலவுகள் இன்னும் ஒரு ஆயிரம். மொத்தம் இரண்டாயிரம். ஆளுக்கு ஐந்நூறு. பரவாயில்லை? இந்த வருடம் சென்றால் நிச்சயம் பத்தாயிரம் டாலர்கள் ஆகும்.

என்னுடைய புதிய பி.எம்.டபிள்யு 328i. ஒரு காலனுக்கு சிட்டியில் இருபது மைல் தான் கொடுக்குது. ஹைவேயில் 28 mpg.

அடுத்த ஜூலை மீண்டும் ஒரு முறை வேறு சில ஊர்கள் வழியாக செல்லலாம் என்று உள்ளோம். ரமேஷ் வந்தால் பரவாயில்லை. பார்க்கலாம், அவர் தான் ஐரோப் செல்ல பிளான் செய்கிறார்.
மே பீ நாங்கள் சென்று அங்கிருந்து அவர்களை அழைத்து வந்தால்... இன்னொரு பயணம்!

பிளான் பண்ணுங்க ரமேஷ், ப்ளீஸ்.


1 comment:

Ramesh said...

Let us plan for a trip next July.

We'll talk about it...