Saturday, October 11, 2008

கோவை நினைவுகள்

கோவை என்றாலே நினைவிற்கு வருவது கேஜி ராகம். தானம். பல்லவி. அனுபல்லவி என்று ஒன்று பிறகு வந்தது. எப்படி பையர் தேபர்த்மன்ட் சான்றிதல் வாங்கினார்கள் என்று பயம். தீப்பிடித்தால் எல்லோரும் காலி.

அப்புறம் கோட்டை மேடு. டவுன் ஹால். பழைய புத்தகங்கள் வாங்க செல்வோம். காலேஜ் டைம். இருபது வருடம்? இங்கே அமெரிக்காவில் இண்டர்நெட்டில் செகண்ட் ஹான்ட் புக்ஸ் அதிகம் விற்கிறார்கள். பல காப்பி டேபிள் புக்ஸ் நானே வாங்கியுள்ளேன். ஒரு முறை
ஈபேயில், ஒருவர் எனக்கு விற்றார். புக் வந்த போது அட்ரஸ் பார்த்தேன், அவர் எனக்கு மூன்று மாடி கிழே. பத்து டாலர் ஷிப்பிங் என்று வாங்கிவிட்டார். அவரை சந்தித்த போது கேட்டேன். ஈபே பொலிசி என்று சிரித்தார். ;-)

கோவையில் இரண்டு ருபாய் நோட்டு. அது ஒரு தனி கதை. ஒரு காலத்தில் கள்ள நோட்டு அங்கு அரசாங்க அடிப்பது போல் அடித்து பெரியவர்கள் ஆனார்கள் ஒரு குடும்பம் என்று அப்பா சொல்லுவார்.

கடந்த பதினேழு வருடங்கள், கோவை சென்றால்... நிச்சயம் மருதமலை கோவில். சொந்தங்கள் வீடு. அப்புறம் சினிமா. சில சமயம் கீதாலயாவில் கூட பார்த்துள்ளேன். பஸ் ஸ்டாண்ட் தியேட்டர். இப்போது உள்ளதா தெரியாது.

கோவையில் சினிமா பார்ப்பது பெரிய திருவிழா.

மாயி என்று ஒரு படம் 2004 சமயம் பார்த்தேன். சரத்குமார். எந்த தியேட்டர்? நினைவில்லை. இன்றும் நினைத்தால் குஷ்ட ரோகம் என்ற கொடிய நோய் பற்றி இந்தியாவில் விழிப்புணர்வு கம்மி என்று தோன்றுகிறது. மெலிண்டா கேட்ஸ் ஒரு முறை என்னிடம் கேட்டது, இந்தியாவில் ஏன் நோய் பற்றி விழிப்புணர்வு இல்லை என்று? என்னுடைய பதில், வயிற்றுக்கு உணவு என்று ஒன்று வந்த பிறகு தான் மற்றவை பற்றி கவலை படுவார்கள் என்றேன். அவருக்கு கஷ்டமாகிவிட்டது. அவர்கள், இன்னும் இருபது வ்வருடங்களுக்கு ஒரு பில்லியன் டாலர் வரை இந்தியாவில் போல்யோ மற்றும் டிபி நோய் ஒழிப்பிற்கு செலவு செய்வார்கள், அவர்கள் சாரிட்டி மூலம். நன்றி.

அப்புறம், டவுன் பஸ்சில் பயணம் செய்வேன். கொஞ்ச தூரம். த்ரில். இருதயா தியேட்டர் வரை நடப்போம்.

2004.

கோவை சென்ற போது அப்போது தான் ஜோ புது ஜெட் இன்வேச்த்மன்ட் என்ற பெயரில் வாங்கினார். விலை பற்றி எல்லாம் இங்கு எழுதவில்லை.

நாங்கள்
ஏடிஎப் பெட்ரோலுக்கு செலவு செய்த பணம், அங்கு பீளமேடு விமான நிலையத்தில், நிறுத்த செலவு என்று அதே அளவு. இரண்டு நாட்கள் வாடகை மற்றும் லஞ்சம் கோவை - மும்பை ரவுண்டு ட்ரிப் ஏடிஎப் விலை ஆயிற்று! இது தான் இந்தியா. ஜோவிற்கு பிடிக்கவில்லை. மொத்தம் எங்கள் இருவரின் ஒரு வருட நிகர சம்பாத்தியம் (நெட் சேவிங்க்ஸ்) ஒரு ட்ரிப் இந்தியாவிற்கு சொந்த விமானத்தில் போய் வர. அதானால், இப்போதெல்லாம் நாங்கள் பிசினஸ் கிளாசில் வந்து செல்கிறோம்.

அப்பா அம்மா மற்றும் தங்கை குடும்பம் லீவில் இங்கு வந்திருந்தனர். அவர்களும் அமெரிக்காவிற்கு எங்களோடு எங்கள் விமானத்தில் அழைத்து சென்றோம். லண்டனில் இரண்டு நாட்கள். அப்புறம் தங்கை குடும்பம் மட்டும் திரும்பினர், வேறு ப்ளைட் மூலம்.

மகிழ்ச்சியான விஷயங்கள் ஒன்று ஞாபகம் இல்லை.

இரண்டு நாட்கள் சென்னை, ரமேஷின் மகன் ராஜாவின் இரண்டாவது பிறந்த நாள், மற்றும் பெங்களூர் தான் ஞாபகம் உள்ளது. பெங்களூரில் தீபம் என்று ஒரு கடை. மூன்று மடங்கு விலை கொடுத்து வாங்க வேண்டும். மாடல் வைத்து சேலை போட்டு காட்டுவார்கள்.

ஆனால் கோவையில் லக்ஷ்மி கம்ப்லேக்ஸ்யில் ஷாப்பிங். இப்பொது அது தான் பெயரா? தேவி டெக்ஸ்டைல்ஸ் என்று ஒரு கடை அருகில் இருக்கும். துணி நல்ல இருக்கும். நகை கடை. சிறு நகைகள் வாங்கினேன்.

நிறைய கிப்ட்ஸ் தான் வாங்கினோம்.

ஆள் பார்த்து விலை சொல்லும் கலை தமிழ்நாட்டில் தான் உள்ளது. காபி டவரா செட் போல.

அப்புறம் இந்த நகை கடை சேதாரம். அது எதற்கு? துபாயில் நாங்கள் வாங்கினால், கூலி மட்டும் தான் ௨% extra. பெங்களூரில் ரமேஷ் அழைத்து சென்ற ஒரு கடை, பீமாஸ். அங்கும் அப்படி தான் மட்டும் சார்ஜ் பண்ணினார்கள். வெளி நாட்டு கிரெடிட் கார்ட் எடுக்கவில்லை. டாலர் நோட்டுக்கள் அன்றைய விலையில் (ப்ளாக் மார்கெட்?) எடுத்துகொன்டனர். பில் கொடுத்தார்கள்.

அப்புறம் நிறைய இந்திய சாப்பாடு. மூன்று வாரத்தில் மூன்று கிலோ. அதை நியூ யார்க்கில் குறைக்க மூன்று மாதங்கள் ஆகும்.

கோவையில் ஆஷா ராவ். சென்னையில் கமலா செல்வராஜ். மும்பையில் லாரன்ஸ். இப்படி நான் சந்தித்த டாக்டர்கள் பட்டியல் நீளும். குழந்தைக்காக.

அப்புறம் பெங்களூரில் செயின்ட் மார்க்ஸ் ரோட்டில் ஒரு வீடு வாங்கினோம். இரண்டு இரண்டு பெட் ரூம் இணைத்து கட்டியது. நான்கு பெட்ரூம் எனலாம் இப்போ. வாடகை எண்பதாயிரம் கொடுக்கிறார் ஒரு ஜெர்மன். டெலிகாம் கம்பனி சி.ஈ.ஒ.

பெங்களூரில் நடந்த ஒரு நினைவு, ஒரு பார் / பப் சென்றோம். ஒருவரை மீட் செய்தோம். அப்போது, வெளிநாடுக்காறார் கட்டியவள் அல்லது வெள்ளைகாரனை மயக்கியவள் என்று என் காதுபட சில தமிழர் பேசியது கேட்டு மனம் நொறுங்கியது. இந்தியன் என்றாள் கட்டாயம் இந்தியாவில் தான் மாப்பிள்ளை பிடிக்க வேண்டுமா? அதுவும் உங்கள் ஜாதியில்?

இந்த வெயிடர்ஸ் ஐந்நூறு ருபாய் பில்லிற்கு ஐந்நூறு ருபாய் டிப்பிற்கு எதிர் பார்பார்கள். வெளிநாட்டுக்காரர் என்றால். கொடுமை. கிரெடிட் கார்ட் திருடி விடுவார்கள் என்று காஷ் தான் கொடுப்போம்.

எனக்கு ப்லோக் எழுத போர் கிடையாது. கதைகள், எண்ணங்கள் அதிகம் உள்ளன.

இது என் டைரி. என் ஏரியா. நான் விளையாடுகிறேன் என் இஷ்டத்திற்கு.

Smokers ban. I welcome it! இந்தியா இஸ் கிரேட் நொவ்.

அப்புறம், என்னுடைய ப்ளோகில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவு இந்தியர்களும் யுஎஸ் எலெக்சன் முடிவும்.

இது
இந்தியர்களின் அமேரிக்கா மோகம் காட்டுகிறது?

மீண்டும் சந்திக்கிறேன்.

10 comments:

SP.VR. SUBBIAH said...

////சில சமயம் கீதாலயாவில் கூட பார்த்துள்ளேன். பஸ் ஸ்டாண்ட் தியேட்டர். இப்போது உள்ளதா தெரியாது.///

இப்பொது இல்லை. தட்டி விட்டார்கள்
பெரிய வணிக வளாகம் உருவாக்கிக்கொண்டு உள்ளது

/////ஆனால் கோவையில் லக்ஷ்மி கம்ப்லேக்ஸ்யில் ஷாப்பிங். இப்பொது அது தான் பெயரா? தேவி டெக்ஸ்டைல்ஸ் என்று ஒரு கடை அருகில் இருக்கும். துணி நல்ல இருக்கும். நகை கடை. சிறு நகைகள் வாங்கினேன்.////

இப்போதும் அதுதான் பெயர்.
இப்பொது அதன் எதிரில் சென்னை சில்க்ஸ் வந்துவிட்டது.

Ramesh said...

Naan paartha Kovai different!

Suthamaana oor. Like the mariyathai 'ingo' culture.

Pathivubothaiyil eluthiyullen.

divya said...

Thanks sp.vr.subbiah and Ramesh!

Malls everywhere.

வேளராசி said...

இந்த வெயிடர்ஸ் ஐந்நூறு ருபாய் பில்லிற்கு ஐந்நூறு ருபாய் டிப்பிற்கு எதிர் பார்பார்கள். வெளிநாட்டுக்காரர் என்றால் கொடுமை. அருங்காட்சியகங்களில் கூட வெளிநாட்டினர்க்கு அதிக கட்டணம் வாங்குகின்றனர்.நமது தேசத்தை மதித்து வரும் அவர்களை குறைந்த கட்டணத்தில் அனுமதிக்கலாம்.
மேலும் புதிதாக நீங்கள் பார்க்க வேண்டுமென்றால் ஈஸா யோகா மையம் உள்ளது.

Mahesh said...

அட... நீங்களும் கோவையா? நான் உடுமலை.... இதுதான் நுதல் முறையா உங்க பதிவுப் பக்கம் வரேன்... நல்லாவே எழுதறீங்க... ஆனா ஒரு கோர்வையா இல்லாத மாதிரி எனக்கு தோணுது....

நீங்க இன்வெஸ்ட்மென்ட் பாங்கிங் ஏரியாவுல இருக்கிறதால, அதப் பத்தி டெக்னிகலா எதாவது எங்களுக்கு புரியற மாதிரி எழுதலாமே? இது உங்க பெர்ச்னல் பதிவுன்னா அதுக்காக ஒரு புது பதிவு ஆரம்பிக்கலாமே? இது என் ரிக்வெஸ்ட். நன்றி.

divya said...

Thanks Mahesh.

Blog does not have a format like diary.

//ஒரு கோர்வையா இல்லாத மாதிரி எனக்கு தோணுது.... //

That is the beauty of blogging. i think. I type. I enjoy!

இன்வெஸ்ட்மென்ட் பாங்கிங் பற்றி எழுதினால், எனக்கே படிக்க போர் ஆகும்!

divya said...

//வெளிநாட்டுக்காரர் என்றால் கொடுமை. அருங்காட்சியகங்களில் கூட வெளிநாட்டினர்க்கு அதிக கட்டணம் வாங்குகின்றனர்.நமது தேசத்தை மதித்து வரும் அவர்களை குறைந்த கட்டணத்தில் அனுமதிக்கலாம்.//

//மேலும் புதிதாக நீங்கள் பார்க்க வேண்டுமென்றால் ஈஸா யோகா மையம் உள்ளது. //

நொவெம்பரில் அங்கு இருப்பேன்.

வெளிநாட்டினர்க்கு அங்கு சார்ஜ் அதிகம் தான், இந்தியர்களை விட - டொனேசன் என்ற பெயரால். உலகத்தில் எதுவும் சும்மா கிடையாது!

R.Benjamin Ponnaih said...

"//அப்புறம் நிறைய இந்திய சாப்பாடு. மூன்று வாரத்தில் மூன்று கிலோ. அதை நியூ யார்க்கில் குறைக்க மூன்று மாதங்கள் ஆகும்.//"

உங்களை யாருங்க்கா அவ்வளவு சாப்பிட சொன்னது?? இப்ப புரியுதுங்களா, எங்க ஊர் சாப்பாட்டோட மகிமை!!!!!!

அதங்க அக்கா, தொலை தூரத்துல எங்கியோ போயி, கண்ணு காணாத தேசத்துல, கண்டதையும் கடியதையும் திங்கறீங்களா, உங்களுக்கெல்லாம் ஒணத்தி கெட்டுப் போய் கெடக்குமுங்க, அதுதான், எங்கூரு சாப்பாட்டெப் பாத்ததுமு வளுச்சு வாறி தின்னுருப்பீங்க, அப்புறம் வ்குரு பெருசாயி எடை ஏறாம என்ன பண்ணுமுங்க??

ஏண்ணா, எங்கூரு சோத்துலய்ங்க, அதொட ருசியே தனிய்ங்க

divya said...

;-)

மகி் said...

டிசம்பர்ல வர்ரீங்களா வாங்க
பாதி கோவைல மரம் எல்லாம் வெட்டியாச்சு
எல்லாம் அகலபாதைக்காக
அதிகபச்ச டிராபிக்
பாப் வெட்டிவிட்ட மாதிரி இருக்கும்
பாதி தியேட்டர்கள் இப்போது வணிக வாளாகம் ஆகி விட்டது. மக்கள் தொகை, மற்றும் வீட்டிற்கே சினிமா.
உங்க பிளாக்க ஃபவரிட்ல போட்டாச்சி