Thursday, October 9, 2008

பெயர் மாற்றங்கள்

திவ்யா ராஜ் நடராஜன் ஆகிய நான் கல்யாணத்திற்கு பிறகு திவ்யா ஜோ என்று மாற்றவில்லை. இது ஒரு தனி மனித சுதந்திரம்.

இங்கே யு.எஸில் சிலர் கணவன் பாமிலி பெயர் எல்லாம் வைத்துகொள்வார்கள். சிலர் ஒரு படி மேலே போய் இரண்டும் சேர்த்து வைத்துகொள்வார்கள்.

நல்ல வேலை மேல் ஜாதி கீழ் ஜாதி என்று
இங்கு இல்லை.

ஹிச்பநிக்ஸ் (ஸ்பானிஷ்), ஆபிரிக்கன் அமெரிக்கன் கறுப்பர்கள் என்று இரு பிரிவு. அதுவும் ஏழை என்று அடையாளம் காட்ட.

அப்புறம் என்னை ஒருவர், சிவாஜியின் வீட்டு மருமகளாம், டெல்லிக்காரர் கேட்டார். அவர்கள் சொந்தமா? இல்லை. அவர்கள் வேறு ஒரு உட்பிரிவு. கேள்வி கேட்டவரும் வேறு ஜாதி மொழி. நல்லது.

கமண்ட்ஸ் போட்டவர்களுக்கு நன்றி.

2001.

அமெரிக்காவில் எவ்வளவு மாற்றங்கள். செப்டம்பர் பதினொன்று மறக்க முடியாது. என் உயிர் தோழி ஆர்த்தி இரண்டாவது கட்டிடத்தில் தான் வேலை செய்தால். அவளை பற்றி ஒன்றும் தெரியவில்லை.

The land of opportunities became, a land of terrible sorrow with terrorist attacks.

பினன்சியால் முறையில் ஒரு மாற்றம் கொண்டு வந்த வருடம் அது.

வென்சர் கபிடலிச்ட் என்பவர்கள் ஒரு ருபாய் போட்டு, நூறு சிறு இன்டர்நெட் தொழில்களில், மூன்றில் முன்னூறு பங்கு பார்த்தார்கள். மூன்று சதவிகித சக்செஸ் ரேட்.

மற்றவர்கள் என்ன ஆனார்கள்? நல்ல சம்பளம் வாங்கி பழகிய கைகள்.

வேண்டிய வரை இஸ்டத்திற்கு செலவு செய்தார்கள்.

ஒரு டாலர் மதிப்பு பொருளை, ஆயிரம் டாலர் கொடுத்து விலைவாசி பணக்காரர்கள் லெவல்) ஏற்றினார்கள்.

பத்தாயிரம் டாலர் கொடுத்து நாங்கள் வாங்கிய எம்.எப்.ஹுசைன் ஓவியம் இன்று 1.2 மில்லியன் டாலர்ஸ். அதற்க்கு தான் ஆர்ட் இன்வேச்த்மன்ட் தேவை.

இந்த மாதிரி பணக்காரர்கள் சமாசாரம் எல்லாம் விலை குறையாது.

மில்லியனில் புழங்கிய கைகள் இன்று கோவர்மன்ட் உதவி, கடைசி சம்பளத்தில் மூன்றில் இரண்டு பங்கு பணம், அதுவும் பதினெட்டு மாதங்களுக்கு தான் வரும், பிற்பாடு குறைந்துக்கொண்டேபோகும். ஒரு கட்டத்தில் வேலை எதுவும் கிடைக்காவிட்டால், தெரு கூட்ட சொல்லுவார்கள். அவர்கள் நடத்தும் பிச்சைக்காரர்கள் இல்லத்தில் தூங்க வைப்பார்கள். இது தான் உண்மை அமெரிக்கா. குருட்டு பூனை விட்டத்தில் பாய்ந்த கதை. எங்கள் ஆயா (பாட்டி) அடிக்கடி சொல்வார்.

Aimless in your aspirations.

ஒரு அமெரிக்கா குடும்பத்தின் சோகம் என்ற பதிவுக்கு காரணம் என்ன? மேலே சொன்னவை தான்.

கார்த்திக் ராஜாராமிற்கு என்ன ஆயிற்று?

கஷ்டப்பட்டு படி படியாக முன்னேறினார். இப்போது கடன். தாங்கமுடியவில்லை. அவர் செத்தாலும், அவர் சொத்தெல்லாம் குடும்ப நிறுவனம்ஆகியிருந்தார். நெவாடா மாநிலத்தில் அப்படி பண்ணலாம். ஷ்டாக்க்சும்விற்கலாம். ஆனால் அதில் உள்ள உறுப்பினர்கள் எல்லாம் அதற்க்குமுதலாளிகள். விலை குறைந்தால், கடன் பட்டால், அவர்கள் தான் ஈடு கட்டவேண்டும். புரிகிறதா? (நீங்கள் தலை ஆட்டிகொள்ளுங்கள்...)

ஸ்டாக் மார்கட்டில் பணம் எல்லாம், சொத்தை விற்று போட்டு, ஆட்டம்ஆடினார். பெரிய லாஸ். அவர் நடத்திய வாழ்க்கை அவரால் விடமுடியவில்லை.

அவரை கட்டாயம் ஒரு சிறு வேலைக்கு அனுப்பினார்கள். மனைவியும் ஒருசிறு வேலைக்கு சென்றார். குடும்ப மானம் கப்ப ஏறியது. அவர் மாமியாரும்அங்கு உட்கார்ந்து கொண்டு, எரிகிற நெருப்பில் எண்ணெய் ஏற்றி உள்ளார்.

அவர் செத்தாலும், அவர் குடும்பம் தான் கட்ட வேண்டும் பணத்தை. அப்புறம்அத்தை எதற்கு. அவர் கம்பனியில் ஒரு டிரெக்டர்.

என் நண்பர் லாஸ் அன்ஜெல்சில் உள்ளார். கோவிலில் அவர்களைபார்த்துள்ளார். அவர் சொன்னது.

இன்று டாலரின் மதிப்பு அதல பாதாளத்தில் போய்க்கொண்டு உள்ளது. அதே டாலர் மீது இந்தியன் பணம் அதிகம் கொடுத்து வாங்க வேண்டும். அப்படியென்றால் இந்தியாவின் நிலைமை? வேறு கரன்சி வைத்துக்கொள்ள வேண்டும். ச்விச்ஸ் பேங்க். யூரோஸ்.

அல் கைதா வந்து தான் இந்தியாவிலிருந்து வெறும் கையில் வந்தவர்களை, வெறும் கையர்கலாய் அமெரிக்கா திருப்பி அனுப்புகிறது. காலத்தின் கொடுமை.

சென்ற வாரம் தான் என் நண்பி ஒருத்தி, இருவரும் சிஷ்கோவில் வேலை, இந்தியா திரும்பினார்கள், கடனாளிகளாய். பாபெர்ஸ். நான் அவர் பெயர் சொல்லவில்லை. மூன்று மில்லியன் டாலர் கடனோடு, பேங்க்ரப்சி. அமெரிக்காவில் வேலை இல்லை. அங்கு எல்லாம் முடிந்தது. கட்டுபடி ஆகாது. இந்தியாவில் இருவருக்கும் வேலை கொடுத்துள்ளார்கள். முடிந்தவரை, பாதி சம்பளம் பணம் கடன் கட்ட வேண்டும். இப்போது பெங்களூரில் அவர்கள் இருக்க போகும் வீடு ஒரு பெட்ரூம் மட்டும். ஐந்தாயிரம் ருபாய் வாடகை. இருவரும் மாதம் இரண்டாயிரம் டாலர்கள் கட்டினால்... கொடுமை எவ்வளவு வருடம் ஆகும். கடன் தள்ளுபடி தான். இருந்தாலும் ஒரு காலத்தில் மீண்டும் உங்களுக்கு கடன் வேண்டும் என்றால்... இப்போது முடிந்தவரை கடன் கட்டுவேன் என்று காட்ட வேண்டும்.

அவர்கள் குழந்தை இருநூறு ருபாய் மாதம் கட்டும் ஒரு சிறு பள்ளியில் சேர்த்துளார்கள். நான் பணம் கட்டுகிறேன், நல்ல ஸ்கூலில் சேர்த்துவிடு என்றால், எங்களுக்கு தெரியும் என்கிறார்கள். சொல்ல முடியாது மாடி வீட்டு ஏழையின் கஷ்டங்கள். அவர்கள் செய்தது தான் சரி.

Try your level best until you die!

எங்கள் கம்பனியும் இருப்பது மேலே சொன்ன நிலைமை தான். மாற்றான் தோட்டத்து மல்லிகையை நம்பாதே. வருட கடைசியில் தெரியும் தொடருவதா வேண்டாமா என்று.

அந்த 2001 வருடம் போனஸ் இல்லாமல் ஓடியது. வானத்தில் பறந்த நான், தரை இறங்கினேன்.

அப்புறம், வருட கடைசியில் ஒரு சிறு விருந்து வைத்து புது வீடு குடி புகுந்தோம்.

மீண்டும் சந்திக்கிறேன்.

3 comments:

தங்கவேல் மாணிக்கம் said...

இந்தியா பரவாயில்லை போல. படோடபமும், பணமும், வசதியும் வேண்டுமானால் வாழ்வினைத் தொலைக்க வேண்டும்போல. எனது நண்பர் ஒருவர் என்னை எப்போது வருகிறாய் யுவெஸ்ஸுக்கு என்று நச்சரித்துக் கொண்டிருக்கிறார். உள்ளே ஒரு நப்பாசை ஓடிக்கொண்டிருந்தது. உங்க பதிவு அதற்கெல்லாம் வேட்டு வைத்து விடும் போல. உங்களிடம் ஒரு சமாச்சாரம் கேட்க வேண்டும். நான் பெட்ரோலியக் கம்பெனி ஒன்றின் மார்க்கெட்டிங் ஏஜெண்டாக இருக்கிறேன். ஆர்டர் கொடுத்தால் எனக்கான பங்களிப்பு கிடைக்கும். இந்தத் தொழிலில் ஏதாவது பிரச்சினை வருமா என்ன ? இதை நம்பி யுவெஸ் வரலாமா ? வருடம் ஒரு ஆர்டர் கிடைக்கும். உங்களது ஆலோசனை என்ன ?

divya said...

Thanks for the question Mr. Thangavel.

I will tell in an analyst way.

If you have the guts and risk taking mentality and "A FALLBACK OPTION", go ahead.

Make sure, you have something back at home.

Wishing you the best of luck.

Atleast I have seen in last 17 years that no Indian helps other here. If your friend in good take it easy, and try!

I dont deal with Petrol products, my limit is more of financial nature. Loan on loans.

But, let me check and let you know.

As of my investment interest, petrol has a vicious spin cycle. You cannot judge the troughs and peaks. Controlled by OPEC.

Look at Anil Ambani, where he is investing. Take a cue!

I will have an English post on this, investment avenue soon.

Regards
Divya

தங்கவேல் மாணிக்கம் said...

திவ்யா, தங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றிகள். கவனத்தில் பதித்துள்ளேன். பார்க்கலாம். நிறைய பதிவுகள் இடுகின்றீர்கள். எனக்கு படிக்க நேரமிருக்காது. காரணம் கோவையில் ஆறு மணி நேரம் பவர் கட் ஆரம்பம் இன்றிலிருந்து. இருப்பினும் தினமும் ஒரு தடவையோ அல்லது இரு தடவையோ விசிட் அடித்து விடுகிறேன். உங்களிடமிருந்து பைனான்சியல் தொடர்பான கட்டுரைகளும், அமெரிக்க உள் சமாச்சாரங்களும் அதிகம் எதிர்பார்க்கிறேன். தருவீர்கள் என்ற நம்பிக்கை அதிகமிருக்கிறது.