Saturday, October 11, 2008

உறவுகளும் மனித உடலும்

2005

எனக்கு ப்ரோமோசன் கிடைத்த வருடம். சம்பளம் பத்து பர்சன்ட் அதிகம்செய்தார்கள். போனஸ் ஒரு புதிய பார்முலாவில் கொடுக்கப்படும். ஸ்டாக்தனி. மகிழ்ச்சி ஒரு புறம். மனம். வருத்தம்.

ஜோவோடு எனக்கு நேரம் கிடைப்பது குறைவானது. வேலை, குழந்தை ஆசை, ஜோவோடு டைம், இப்படி நெருக்கடிகள்.

அப்பாவின் அறுபதாம் கல்யாண நாள் வந்தது. எப்படி இளமையாக இருந்தார். இப்போது நரை வந்து வயதாகி விட்டது. லேட் மார்றேஜ் செய்தவர். ஒரு வாரம் மட்டும் லீவு எடுத்து, நான் மட்டும் தனியாக இந்திய வந்தேன். இரண்டுபெண்கள் மட்டும் தான். மகன் இல்லாத குறை.

வெள்ளி இரவு கிளம்பி ஞாயிறு காலை சுமார் பத்து மணி, கோவையில் இறங்கினேன். மும்பை வழி. வேகம். நல்ல வேலை எப்பவும் போல, லக்கேஜ் ப்ரோப்ளம் இல்லை. நிறைய கிப்த்ஸ் வேற.

பேரூர் கோவிலில் பூஜை என்று சொன்னார்கள். கடைசியில் எங்கள் சின்னஆயா, மகனுக்கு திருக்கடையூர் செல்ல வேண்டும் என்று சொல்லி விட்டார். உடனே ஒரு பெரிய வான் வைத்து, மொத்தம் பன்னிரண்டு பேர் மட்டும்திருக்கடையூர். வந்து இறங்கிய ஐந்து மணி நேரத்தில் கிளம்பினோம். கோவில் அருகே தங்கினோம். சுமாரான லொட்ஜ். அதிகம் காசு. டப்பா பாத்ரூம்.

நான் முடிவு செய்துவிட்டேன், இந்திய என் அறுபதாவது வயது திரும்பியதும், சுற்றுலா தளங்களில் குறைந்த கட்டண ஹோட்டல்ஸ் கட்ட வேண்டும், நல்ல வசதிகளோடு.

திங்கள் காலை பூஜை. அங்கு இருக்கும் ப்ரோகர்கள் ஒரு செட். யானை வைத்துஒரு அழைப்பு. பசு மாடுக்கு ஒரு பூஜை. மண்டபத்தில் வைத்து பூஜை செய்தார்கள். அப்பாவும், அம்மாவும் (கொஞ்சம் நாணம், வெட்கம்) ரொம்ப என்ஜாய் செய்தார்கள்.

அப்புறம் வரும் வழியில் திருகருகாவூர். எனக்காக ஸ்பெஷல் பூஜை. என்னை கொடுத்தார்கள். மூன்று நாள் சாப்பிட வேண்டும் என்று சொன்னார்கள். சக்தியுள்ள சாமி.

நிறைய போட்டோஸ். வீடியோ.

சாயந்திரம் கிளம்பினோம்... நடு இரவில் வீடு வந்து சேர்ந்தோம். வழியெல்லாம் அருமையான ரோடுகள், தஞ்சாவூர் சைட் தவிர. டிவைதேட் ஹைவே வருகிறது. நல்லது. பெட்ரோல் குறைவாக செலவாகும். நிறுத்தி நிறுத்தி செல்ல வேண்டியது இல்லை. முன்னூறு கிலோமீட்டர் ஆறு மணி நேரம் ஆனது.

வெளி உணவு குறைவாக சாப்பிட்டேன். வயிறு கலங்கி விட்டால்? பிரெட் மட்டும் தான். ;-)

இரவு தூங்கியவள், அலைச்சல் எல்லாம் சேர்ந்து உடல் வலி. அடுத்த நாள் மாலை தான் எழுந்தேன். யுஎஸ் டைம் படி? எல்லோரும் சிரித்தார்கள்.

எங்கும் செல்லவில்லை. இரவு ஆபிஸ் விசயங்கள் மெயில்ஸ் என்று ஓடியது.

ஐந்து நாட்கள் போனது தெரியவில்லை. வெள்ளி மருதமலை சென்றோம். ஒவ்வொரு தரிப்பிலும் கண்டிப்பாக ஒரு நாள்.

சனி மதியம் மும்பைக்கு ப்ளைட். ஐந்து மணியில் இருந்து பத்து வரை, மும்பை நண்பர்களோடு அரட்டை. உணவு என்று போனது. இரவு இரண்டு மணிக்கு ப்ளைட். பதினோரு மணிக்கு ஏர்போர்டில் இருக்க வேண்டும்.

என்னோடு என் தோழியும், அவள் கணவனும் வந்தார்கள். இந்தியாவிலேயே செட்டில் ஆன ஆந்திர ஜோடி. அவர்கள் விருப்பம். நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். அவர் தங்கை சுமாரா படித்தவள். அவர்கள் பெற்றோர், அவளை இரண்டாம் தாரமாக (குழந்தை இல்லை) கட்டி வைக்க முயற்சி செய்த கூத்து, மறக்க முடியாது. சென்ற வருடம் அவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை. இந்த வருடமும் ஒரு குழந்தை ரெடி. அவர்களும் திருகருகாவூர் சென்று வந்தார்கள். சந்தோசம்.

வாழ்க்கையில் கல்யாணம் செய்த பிறகு, குழந்தை இல்லாவிட்டால், என்னவெல்லாம் பிரச்னை.

ஜே.எப்.கே. வந்து சேரும் போது ஞாயிறு காலை பத்து மணி, ஜோ வெயிட் செய்துக்கொண்டு இருந்தார். டபுள் பாகிங் செய்த எண்ணெய்... கொட்டவில்லை. பயம். ஹண்ட்பகில் வைத்திருந்தேன்.

ஒரு வாரம் ஆயிற்று உடல் நிலை நல்ல இடத்திற்கு வர.

அந்த வருடம் வேகமாக போய் விட்டது.

முதல் முறையாக ஒரு சம்மர் ட்ரிப் யுரோபுக்கு பிளான் செய்தோம். ஜூலை இரண்டு கிளம்பி பத்தாம் தேதி இரவு தான் வந்தோம். நான்கு நாட்கள் லீவு. ஜூரிச்சில் ஒரு நாள் ஆபிஸ் வேலை. ஜோவும் யுரோ அக்கவுண்ட் ஓபன் செய்தார். டாலர் இறங்கி கொண்டு இருந்தது.

டிபிகல் ச்விச்ஸ். பல முறை வந்து சென்றது. அது பற்றி தனியாக ஒரு பதிவு போடுகிறேன்.

அம்ச்டேர்டம் சென்றோம். காம களியட்டங்களின் ஊர். நியூ யார்கை விட இன்னும் ஒரு படி மேலே. லைவ் ஷோவ்ஸ். ஒரு மணி நேரம் டான்ஸ் மேடை மீது 'அது'. பாவம் அவர்கள். பணத்திற்க்காக! ட்ரக்ஸ் அதிகம் புழக்கம். போலிஸ் அனுமதி? ஜப்பான், சீனா மக்கள் கூட்டம் அதிகம் பார்க்கலாம்.

Are they coming there to experience the uncontrolled freedom?

அப்புறம், லுவேர் , பாரிஸ். ஒரு ஆபெரா பார்த்தோம். புரியாத மொழி. நிறைய இந்தியன்ஸ் டிரஸ் அப் செய்து (கோட் சூட், ஈவேநிங் கவுன்) செய்து வந்தார்கள். armaani, versace...

ரோம், இட்லி. வாடிகன். பொப் உடல் நிலை சரி இல்லாமல் இருந்தார். கட்டிட கலை பார்த்தோம். எங்கள் வீட்டு என்ட்ரன்ஸ் மீது, சில டம்மி தூண்கள் ஆர்டர் செய்து ஒட்டியுள்ளோம். அழகாக உள்ளது.

தாங்க்ஸ்கிவிங் டைம். நிறைய ஆபிஸ் பார்டிகள். வாழ்க்கை பார்டி நினைத்து ஓடியது.

சண் டிஎகோ சென்றோம் டிசம்பர். கொஞ்சம் குளிர் குறைவு. அடுத்த வருடம் ஹவாயிய் என்று ப்ளான் செய்தோம்..

******************

இந்த குட்டிக்கதைகள் பதினேழு சீரீஸ் முடிந்தவுடன், தனி தனியாக கதைகள் எழுதுவேன். சில பெரிய கதைகள் என்னால் முடியாது. என் தமிழ் அப்படி. ரமேஷ் எனக்கு எடிட் செய்ய உதவி, மறக்க மாட்டேன்.

தமிழ்மணத்தில் என் பதிவுகள் இணைத்துள்ளேன். எல்லோரும் படித்து, பயன் பெற. தயவு செய்து கமண்ட்ஸ் போடுவதென்றால், யோசுது நன்றாக போடுங்கள். நன்றி.

கமண்ட்ஸ் வோர்ட் வேரிபிகசன் எடுத்துவிட்டேன். மாடரேட் செய்வேன்.

மீண்டும் சந்திக்கிறேன்.