Wednesday, October 8, 2008

மேகங்கள் மீது நடப்போம்

Yesterday went by. Today had come. Tomorrow will go. But I am there.

இபோதெல்லாம் நல்ல விரிவான பின்னூட்டங்கள் கமண்ட்ஸ் வருகிறது. நன்றி.

தமிழில் தான் முடிந்தவரை எழுதுகிறேன்... மறக்க கூடாது அல்லவா?

ஜோவும் நான் வீட்டிற்கு வந்தவுடன் ஒரு தனிமை சில நேரம் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவர் அந்த சமயம், தன் அரசியல் நண்பர்களுடன் எலெக்சன் பற்றி பேசுவார். இங்கே இப்போ தேர்தல் நேரம். ஊரில் நடக்கும் கூத்து. அப்பாவிடம் கட்டாய வசூல் எல்லாம் பார்க்கலாம். இங்கு வீடு தேடி வந்து ஒட்டு கேட்பதில்லை.

சிறு வயதில் எம்.ஜி.ஆர். பார்த்துள்ளேன். அப்பா, அம்மா தங்கை மற்றும் நான் ராமாவரம் தோட்டம் சென்றோம். அப்போது அவர்கள் வீட்டில் கேரளா பாயசம் கொடுத்தார்கள். நாக்கு சுட்டுக்கொண்டது நினைவில் உள்ளது. என்னை "நன்றாக படி என்று சொன்னார்". கொஞ்ச நாட்களில்
எம்.ஜி.ஆர். அட்டாக் வந்து அமெரிக்கா சென்றது நினைவில் உள்ளது. அங்கள் அத்தை ஒருவர் ஜோன் ஹாப்கின்ஸில், ப்ரூக்ளின் வேலை செய்தார். அங்கு தான் அட்மிட் ஆகியிருந்தார். போட்டோவெல்லாம் காட்டினார். இப்போது அத்தையும் இல்லை. அவர்கள் குடும்பம் இந்தியா திரும்பியது. நினைவுகள்.

பிளாக்கர் இன்னும் பழகவில்லை. ஆங்கிலம் டைப் அடித்தல் தமிழ் ஆகிறது. சில சமயம் மாற்றுவேன், சில சமயம் தூக்க கலக்கத்தில் ... இது என் டைரி!

அப்புறம், நீங்கள் அமெரிக்காவின் நிதி நிலைமை பற்றி படித்திருப்பீர்கள். அதில் எல்லோரும் ஒரு பங்கு வாங்கினார்கள். தலைவலி.

நீங்களே சொல்லுங்கள், ஒருவருக்கு ஒரு கோடி ருபாய் சம்பாரிக்க வலி செய்து கொடுத்தால், அவர்கள் உங்கள்ளுக்கு ஒரு சிறு தொகை குடுக்கலாம் அல்லவா? அதுவும் கால் பர்சன்ட். இந்தியாவில் ப்ரோகர்ஸ் ஒரு பர்சன்ட் வாங்குகிறார்கள். அதனால் தான் மக்கள் இன்வெஸ்ட் செய்யவில்லை.

2000. மறக்க முடியாத வருடம்.

வாழ்க்கையில் எவ்வளவு சந்தோசங்கள்.

நிறைய நண்பர்கள். அமெரிக்கன்ஸ். தெளிந்தவர்கள்.

இந்தியா நண்பர்கள் சிலர் தான். அவரவர் அவர் வாழ்க்கையில். சந்தோசம் இருந்தாலும் டிஸ்கஸ் செய்ய மாட்டார்கள். கஷ்டம் வந்தாலும் ஆறுதல் சொல்ல விடமாடார்கள்.

At times I feel that I am blessed.

கொஞ்ச நேரம் முன்பு நண்பர் ரமேஷ் பேசினார். அவர் மனைவி, அவரோடு நான் நினைவுக்கு வந்த ஒரு பெண் பற்றி பேசினோம். ஆர்த்தி. அனேகமாக அவர்அந்த கதை எழுதலாம்.

வாழ்க்கை விசித்திரங்கள்.

It reminds me of the movie that we friends saw together. A Walk in the Clouds.

மனித உள்ளதை பிரதிபலிக்கும் ஒரு காவியம். உங்கள் அன்பு, லவ் எங்கிருக்கும் என்று தெரியாது. ஒரு நாள் வரும். படம் கிடைத்தால் நீங்கள் பாருங்கள்.

It stirs your emotions.

தி, ரமேஷ் மற்றும் நான் சென்று பார்த்தோம். 1996 என்று நினைக்கிறேன். அப்போது ஜோ வரவில்லை. நண்பர்கள் வரையறை வேறு.

Definitely you can be friends, with a male without sex. At least with Indians.

ஒரு டேபிநிசன் அது.

2000. ப்ரோமொடின் வந்த வருடம். மானேஜர் லெவல். முதல் மில்லியன். மறக்க முடியாத வருடம்.

அம்மா வந்து ஒரு வருடம் என்னோடு இருந்தார். அப்பா இரண்டு முறை வந்து சென்றார்.

அதிர்ஷ்டம் என்று முந்தைய பதிவுகள் சொன்னேன். அது எனக்கு இல்லை.

குழந்தை ஆகி. மிஸ் காரேஜ். மிகவும் கஷ்டப்பட்டேன். ஜோ மனம் வேதனை அடைந்தார்.

எல்லா பெண்களும் வாழ்க்கையில் இது பற்றி ஆழ்ந்து யோசித்து இருப்பார்கள்.

தத்து எடுத்து கொல்லேலாம் என்று நினைத்தோம். வருடம் ஒரு ட்ரை. இந்த வருடம் ஆகலாம். இன்னும் இரண்டு வருடம் தான் முயற்சி செய்யலாம். நடக்க வேண்டும்.

பிறகு, எனக்கு நீ, உனக்கு நான் என்று நினைத்து கொண்டோம்.

தங்கைகளின் குழந்தைகள் லீவில் அமெரிக்கா வந்து விடுவார்கள். அதனால் கவலை இல்லை.

ஆபிஸ் நண்பர்கள் நன்றாக நடந்து கொண்டனர். ஒரு பெண்.
மானேஜர்.

இரவு எந்த நேரம் வேண்டுமானால் க்லியான்ட் கால் செய்யலாம். எனக்கு இந்தியா தவிர ஜப்பான் பொறுப்பு. கையில் லப்டோபுடன் இருக்க வேண்டும். விவரம் சொல்ல வேண்டும். ஸ்ட்ரெஸ்.

வீடு எப்போது கைக்கு வரும் என்று தெரியவில்லை. அறுபது மாடி தான் கட்டியிருந்தார்கள். எப்படியும் அடுத்த ஏப்ரல் வரும் என்று சொன்னார்கள். அது பற்றி அடுத்த பதிவு.

ஜோ அப்போது தான் ஒரு வேண்டார் பண்டில் சேர்ந்தார். பல மில்லியன்கள் முதலீடு, சிறு கம்பனிகள் தேடுவது. இந்தியாவில் தான் அணைந்து பணம் போட்டார். எல்லாம் இன்டர்நெட் கம்பனிகள். அடுத்த வருடம் என்ன ஆகும் என்று யாருக்கும் தெரியாது.

நாங்கள் எதிர்பார்த்த அல் கோர் வெற்றி பெறவில்லை. ஜார்ஜ் புஷ் தான் வெற்றி பெற்றார். ஜோ அவ்வளவு வேலை செய்தார். மன வருத்தம். சில சமயம் கேடும் ஒருவரால் வரும் என்பது விதி. உலகத்திற்கே தெரியும் பஸ்கள் வார்-மொங்கேர்ஸ். யாருக்கும் அவர்கள் செய்வது புரியாது.

என்ன செய்வது... டாக்ஸ் குறைக்கப்பட்டது. அது மட்டும் பணக்காரர்களுக்கு உதவியது.

மீண்டும் சந்திக்கிறேன்.


5 comments:

Anonymous said...

Divya, I read just now.

I have gone through the same pain.

Thanks for sharing.

Cheers
Shanthi Jaikumar.

Ramesh said...

ரொம்ப நல்லா இருந்துச்சு.

தங்கவேல் மாணிக்கம் said...

திவ்யா, உங்களது டைரி படிக்க பரவசப்படுத்துகிறது. அட்டகாசமாய் பதிவிடுகின்றீர்கள்.

கார்க்கி said...

அருமையா எழுதறீங்க..

divya said...

Thanks to ALL.