Monday, October 6, 2008

பால் கலர்ஸ்

பால் கலர்ஸ் என்பது ஆடம் - மழைகால சீசனை குறிக்குது. மலை தூறிக்கொண்டே இருக்கும். சயந்திரம் ஆனால் அதிகமாக விழுகும். ஜாகிங் செல்ல முடியாது. வீட்டில் தான் ட்ரேட் மில்லில் ஓட வேண்டும். வெயிட் ஏறுது.

இங்கே பாருங்கள்
இலைகள் எப்படி மஞ்சளாக...

அதுவும் நியூ இங்கிலாந்து என்றுசொல்லும் ஏரியா - காங்நேச்டிகட், ரோட்சிலாந்து, மாசாசுஸத்ஸ் மற்றும் நியூஹம்ப்சைர் அருமை.... அருமை...

கில பாருங்கள் பாஸ்டன்... எப்படி உள்ளது என்று. வார வாரம் செல்வோம். அதுவும் சண் ஞாயிறுகளில் ட்ராபிக் அதிகமாக இருக்கும். காடுகளில் ட்ரெக்கிங் செல்வார்கள்.. டிலாவர் வாட்டேர் கேப் தான் அழகான இடம் ,
ட்ரெக்கிங் செல்ல...

மனம் ரொம்ப இளகி போயிருக்கும். இதை பார்த்த என் அப்பா அம்மா, இங்கேயே வந்து செட்டில் ஆகவேண்டும் என்று கேட்கிறார்கள்.

இந்தியாவில் தொழில்...

அப்பாவின் வயசு.. அதை பார்த்துகவனமாக இருக்க வேண்டும்...

அடுத்த வாரம் வருகிறார்கள்.

அவருடைய சென்னை நண்பரின் மகள்,
இன்டர்நெட் மூலம் ஒரு டாக்டரை திருமணம் செய்துள்ளார். வந்து ஆறு மாதம் ஆயிற்று. அப்பா அம்மாவை அமெரிக்காவிற்கு வர சொல்லி அழைக்கவில்லை. என்ன மகளோ... மாப்பிள்ளைக்கு இன்னும் வருமானம் இல்லை. எப்படியோ வாழ்க்கை ஓடுகிறது.

சில பேர் அப்படி தான். திருத்த முடியாது. எல்லாவற்றிற்கும் அவசரம்.

1998.

எனக்கு
கல்யாணம் நடந்த வருடம். எனக்கு இருபத்தி ஒன்பது வயது. இந்தியாவில் மருதமலை கோவிலில் சிம்பிளாக. நொவெம்பர் மாதம்எல்லோரும் ஆச்சிரியப்பட்டு பார்த்தார்கள். காலையில் அங்கு முகூர்த்தம். பிற்பாடு சூர்யா இண்டர்ணடிஒனால் ஹோட்டலில் லஞ்ச். அங்கு வந்திரெஜிஸ்ட்ரார் பதிவு செய்தார். பிற்பாடு உதவும். (ஏற்கனவே நியூ யார்க் கோர்ட்டில் திருமணம் பதிவு செய்தோம்....)... நானும் தான் கிரீன் கார்டு தனியாக வாங்கிவிட்டேனே. அப்புறம் என்ன பிரச்சனை?

ஏப்ரல் மாதம் நான் மட்டும் சென்று, கல்யாண ஏற்பாடு செய்தேன். தங்கை கல்யாணம் ஆகஸ்டில். அதற்கு மீண்டும் ஒரு பயணம்.

அப்புறம் அந்த வருடம் தான்... பால் கலர்ஸ் ... பாஸ்டன் சென்றேன்... ஜோவின் வீட்டில்... அப்பா அம்மாவோடு தான் இருந்தார். தங்கை கல்யாணம் ஆகி லேயராக இருந்தார். அங்கு தான்...உடல் சங்கமம். மறக்க முடியாது. பயம். குழந்தை. ஓவரி. என்று மனம் ஓடியது. கல்யாணம் தான் ஆகி விட்டதே. அப்புறம் என்ன என்று ஒரு எண்ணம் தான். யாருக்கு தான் இருக்காது!

நொவெம்பர் மாதம் இந்தியாவிற்கு நானும் ஜோவும் சென்றோம். பல கோவில்களுக்கு சென்றோம். எங்கும் அதிசயமாக பார்த்தார்கள். தட்டில் காசு நூறு நூறு ரூபாயாக போட்டார் ஜோ.

அங்கள் சமூகத்தார் வீட்டிற்கு சில இடத்திற்கு சென்றோம்.

அன்னூரில் உள்ள சாந்தி வீட்டிற்கு சென்றோம். அவர்கள் அங்கு சுற்றி உள்ள பல கோவில்களுக்கு அழைத்து சென்றார்கள். துணி கொடுத்தார்கள்.
பட்டு வேட்டிசட்டை. தொழ தொழ சட்டை அங்கு தான் தைத்து கொடுத்தார்கள்...இன்னும் வைத்திருக்கிறார் ஜோ. பட்டு வேட்டி, சர்ட்ஸ் போட்டுகட்டும் அழகு தனி. சாந்தியின் அம்மா என்னிடம் சொன்னது..."விட்டுட்டு போயிரப் பூரான்... பார்த்துமா!"

என் அம்மா என்னிடம் சொன்னது... "பாத்து நடந்துக்கோ... அப்பாவும் மாப்பிள்ளையை உன்னை சுற்றி வர வய்.. அதில் தான் உன் சாமர்த்தியம் அடங்கி இருக்கு...". டிபிகல்.

கோவை மெடிகல் ஹாஸ்பிடலில் ஒரு சிறு சர்ஜரி (ஓவரி சிஸ்ட் சர்ஜரி) எங்களுக்கு தெரிந்த ஒரு டாக்டர் மூலம் செய்தோம். மூன்று வாரம் லீவு பறந்தோடியது.

அந்த வருடம் மற்றும் மூன்று ட்ரிப்புகள். ஒரு மாதம் சம்பளம் இல்லாத லீவு. ஆபிஸ் பரவாயில்லை. அதனால் தான் பதினேழு வருடங்கள் ஒரே கம்பனி. ;-)

அப்புறம் ஜோ நியூ யார்க் ஆபிஸ் மாற்றல் வாங்கி வந்தார் டிசெம்பர் கடைசியில். ஓர் புது வாடகை வீடு. அப்பர் வெஸ்ட் சைடு என்று சொல்லும் ஏரியா.

அந்த சமயம் கிரீன்விச் வில்லேஜ் என்ற இடத்தில் தங்கலாம் என்று முடிவு செய்து, வீடு பார்த்தோம். நான் இந்தியன் என்பதால் மறைமுகமாக இல்ல என்றார்கள். ஒரு வெறி வந்தது. ரேசிச்ட்ஸ். உலகத்தின் பணக்காரர்கள் இருக்கும் இடத்தில் வாங்க வேண்டும் என்று. அப்படி தான் ட்ரம்ப் வேர்ல்ட் டோவர்ஸ் விளம்பரம் பார்த்து கணக்கு போட்டோம். ஒன்றரை மில்லியன் டாலர்கள். சரி பாதி ஆளுக்கு. பணமும் அப்படி தான்... மாதம் பத்தாயிரம் பாங்கிற்கு கட்ட வேண்டும். இரண்டு பெட்ரூம் வீடு வாங்கினோம். குடி புக ஒரு வருடம் இருந்தது. கையில் கிடைத்தது இரண்டு வருடம் கழித்து. நாட் லக்கி. வீடு கொடுக்க இன்டெர்வியு!

இப்போது பக்கத்து வீடு பத்தாயிரம் முதல் பதினைந்துஅயிரம் டாலருக்கு வாடகை மட்டும் செல்கிறது. ஸ்டாடஸ்.

சில சமயம் அதிர்ஷ்டம் இருந்தால் எல்லாம் நல்லபடியாக அமையும்.

எல்லா விசயத்திலும் எனக்கு அதிர்ஷ்டம் இல்லை....

மீண்டும் சந்திக்கிறேன்.

5 comments:

Ramesh said...

very nice! great going.

good flow.

சின்மயி said...

Congrats!

divya said...

Thanks all!

தங்கவேல் மாணிக்கம் said...

திவ்யா, மருதமலை கோயிலிலா திருமணம் செய்தீர்கள் ? முருகன் படத்தைப் பார்த்தவுடன் சொக்கி விட்டேன். அருமையாக எழுதுகின்றீர்கள். வெளி நாடு வாழ் பெண்மணி. சம்பவங்களுக்கு அதிக சான்ஸ் உண்டு. பதிவு செய்யுங்கள். இன்று தான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். வாழ்த்துக்கள்.

divya said...

Nandri Mr Thangavel.

Innum pala episodes undu. Naan ketta kathaigal.