Monday, October 6, 2008

பிட்சா பிரக்பாச்ட்

இன்று காலை பிட்சா பிரக்பாச்ட். சண்டே இரவு சுண்டல் சாப்பிட்ட திருப்தி. ஒரு கொலுவுக்கு சென்றோம்.

இருந்தாலும் டின்னெர் என்று ஒன்று பிட்சா வாங்கினோம். வேஜெடரியான். ஜோ வேஜெடரியான். பால் பொருட்கள் கூட கிடையாது. சோயா பால் தான் குடிப்பார். அது அவர் முதல் இந்திய காதலி/நண்பி அபர்ணவிடம் பழகிய ஒன்று.

ப்ரகேபாச்ட் என்றால் அமெரிக்கா வந்த பிறகு சீரியல்ஸ் தான் மேட்டர். பால் விட்டு அவசர அவசரமாக.... அல்லது... சீரியல் பார் என்று ஒரு சோம்பேறிகள் ஐட்டம்... கையில் எடுத்துக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டே நடக்கலாம்...

நியூ யார்க்கில் இன்றும் ப்ரகேபாச்ட் சாப்பிட்டு நடக்கும் மனிதர்களை பார்க்கலாம்... கையில் ஸ்டார்பக்ஸ் காபி.
1997. காதலில் விழுந்தேன்.

தலைப்பு அது தான் கொடுக்க வேண்டும். காலையில் ஒரு பதிவு போட்டதால்... (சென்ற பதிவில் நான் அடையாளம் காட்டிய இன்னொரு பதிவுலும் - லிங்க் - அதை எடிட் செய்து விட்டார்கள்...) இப்போது ஒரு வேலையும் ஓடவில்லை. இங்கே ஆபீஸில் எல்லோருக்கும் ப்ளு காய்ச்சல். சீசன் இது. அரை மணி நேரம் ஒதுக்கி உள்ளேன்...

அப்போது நான் பிட்சா பிரக்பாச்ட் சாப்பிட்ட ஞாபகம். ஜோ தன் காதலை சொன்னார். சீஸ் ஆனியன் பிட்சாவோடு ஒரு கிஸ். மாங்காய் வாசம் போய் வெங்காயம் வந்தது. ஒரு வருடத்திற்கும் மேலாக பழகி இருந்தோம் நண்பர்களாய்.

நண்பர்களாக தான் பழகினோம்... சைவம்..

ஜோ அவருடைய முதல் காதலில் தோல்வி. பாஸ்டன் பேரழகியாம். ஆட்டம் வகுப்பிலிருந்து தோழி. கேம்ப்ரிஜ்காலேஜ். அப்போது தான் ஒரு இன்டியானோடு பழகினாளாம். அறிவாளி - பணக்காரன் என்று ஜோவை டம்ப் செய்துவிட்டாள். எட்டு வருட காதல். அமெரிக்காவில் எல்லாம் அப்படி தான்... பெண்கள் தான் ஜாக்கிரதை என்று சொல்வதை விட ஆண்கள் தான் அப்படி இருக்க வேண்டும். இடையில் ஜோவுக்கு வெறியாக ஒரு இந்திய பெண் தான் வேண்டும் என்று தேடி, அபர்னா கிடைத்தாள். ஒரு வாரத்தில் நண்பர்கள் என்று கட்டுப்பாடு ஆனது. இன்று அபர்னா ஜார்ஜ் புஸுக்கு ஒரு துணை மந்திரி லெவலில் உள்ளாள்.

இன்னொன்று, இந்தியா ஆண்கள் மீது விழுந்து காதல் செய்வார்கள் அமெரிக்கா பெண்கள். கை நிறைய வருமானம். குடும்பம்... அப்புறம் ஒருவனுக்கு ஒருத்தி பண்பாடு... அவர்களுக்கு பிடிக்கும்.

வாம் பேம் தேங்க் யு மேம் எல்லாம் நடக்காது. அது தாங்க மேட்டர்....

என் நியூ யார்க் வீட்டில் யாராவது சொந்தம் வந்தால் காரில் சென்று மேட்டர் முடித்து விட்டு வருவார்கள். காலையில் சென்று க்ளீன் செய்ய ஓடும் அவசரம் பார்த்தல் சிரிப்பு தாங்காது. சாப்பிடும் உணவு அப்படி என்று நினைக்கிறேன். அப்புறம் இந்த டிவி சமாசாரம். மொண்டே டு தர்ஸ்டே எல்லோரும் சுத்த சைவம் ஆக இருப்பார்கள்.

ஜோ என் வீட்டுக்கு வீக் எண்டு வந்தால் ஹாலில் தான் படுத்து கொள்வார். என் ரூம் மேட் சுலக்க்ஷனா, ப்ரோப்ளம் இல்லை என்று சொல்லிவிட்டாள். அவளுடைய ஆண் நண்பன் வேணு வந்தாலும் அதே தான். ஆனால் நைட்டில் அவர்கள் அடிக்கும் கூத்து... பாத்ரூம் ரூமில் கிடையாது... ஹாலில்...அதனால் தாண்டி தான் செல்ல வேண்டும். சிரித்து கொள்வேன். இருமி கொண்டே செல்லவேண்டும். இருவரும் நான்கு குழந்தைகள் பெற்று சான் ஹோசெவில் வாழ்கிறார்கள். காட் ப்ளேஸ் தேம்.

எனக்கு சொந்தங்கள் துயரம். கட்டாயம் அடிக்கடி வந்து விடுவார்கள். யார் என்று கூட தெரியாது. பார்த்திருக்க மாட்டேன். நியூ யார்க் ஊர் சுற்றி காட்ட வேண்டும். செலவு கூட செய்ய வேண்டும். எல்லாம்... தொட்டு தொட்டு பேசுவார்கள். ஊரில் நடக்குமா...

சுஜாதாவின் கதையில் வரும் வசந்த் தான் ஜோ. அசைவ ஜோக் சொல்வார். ஒரு லிமிட்...

அப்புறம் எனக்கு பாலகுமாரன் ரொம்ப பிடிக்கும். சென்னை சென்ற போது தேடி சென்று சந்தித்தேன். அவர் ஆட்டோக்ராப் போட்ட 'இரும்பு குதிரைகள்' இன்னும் உள்ளது.
நான் அட்டோக்ராப் வாங்கிய முதல் எழுத்தாளர். பிற்பாடு ஜோன் க்ரிஷம்.

ஜாக்சன் ஹைட்சில் ஒரு கடையில் குமுதம், விகடன் கிடைக்கும். என் தங்கை லக்ஷ்மி,
ராஜேஷ் குமார் நாவல் அனுப்புவாள். கோவை செல்லும் போது வாங்குவேன். ஒரு முறை கோவை ரயில் நிலையத்தில் எழுத்தாளர் ராஜேஷ் குமார் பார்த்தேன். அப்போது தான் ஒரு கடையில் ஒரு க்ரைம் நாவல் வாங்கியிருந்தேன். பேர் 'திருமரண அழைப்பிதழ்'. வருஷம் நூறு நாவல் எழுதுவேன்னு சொன்னார். போட்டோ எடுக்கவில்லை. சென்னைக்கு நாவல் ஒரு டி.டி.ஆர்.இடம் கொடுத்து அனுப்பினார். பதிப்பாளர் காலையில் வாங்கிக்கொல்வாராம். பேர் என்னவோ ஸ்..ஸ்..ஸ்நேகா? (ராஜேஷ் குமார் சார், இதை படித்தால் எனக்கு ஒரு கமன்ட் போடுங்கள்... பேச வேண்டும்)

அப்புறம் தி.ஜானகி ராமனின் 'மோக முள்' எனக்கு பிடித்த ஒன்று. நாட் போர் செக்ஸ். பட் போர் பேசன்.

ஜோ காதல் சொன்னார். நானும் ஒளிவு மறைவு இல்லாமல் நிதி பற்றி சொன்னேன். குடும்பம் பற்றி சொன்னேன். அமெரிக்கா வாழ்க்கை முறையில், இந்திய மாதிரி ஒருவனுக்கு ஒருத்தி டைப் வேண்டும் என்றான். அப்புறம் கல்யாணம் வரை (ஒரு வருடம் கழித்து செய்யலாம் என்று முடிவு) சைவம் தான் என்றேன். ஒக்கே என்றார்.

சைவம் அசைவம் ஆனது ஒரு தனி கதை.

அப்பா அம்மாவிடம் சொன்னேன். தாம் தூம் என்று குதிக்கவில்லை. கிரீன் கார்டு வேறு, அமெரிக்கா மாபிள்ளை தான் கட்ட வேண்டும். விசா ப்ரோப்லேம். கல்யாணம் என்று ஒன்று செய்தால் சரி. ஆனால் வாழ்க்கை கடைசி வரை வரும் ஆள் பார்த்துக்கொள் என்றார்கள். தங்கைக்கு வேறு கல்யாணம் நிச்சயம் ஆகி இருந்தது அப்போது.

எனக்கும் ஓவர்ரியில் ஒரு சிஸ்ட். கல்யாணத்திற்கு முன் ஆபரேசன் செய்ய வேண்டும்.

அவர்கள் அமெரிக்கா வந்தார்கள்.

ஜோவிடம் பேசினார்கள். நன்றாக பார்த்துக்கொள்வேன் என்றார்.

நாள் நட்சத்திரம் பார்த்து ஒரு சிவில் செரமணி செய்தார்கள். ஆடுத்த வருடம் இந்தியாவில் கல்யாணம்.

அது பற்றி எழுதுகிறேன்.

மீண்டும் சந்திக்கிறேன்.

2 comments:

Ramesh said...

I missed reading this! Great. Nice!

divya said...

Thanks!